search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நகை பறிப்பு
    X
    நகை பறிப்பு

    ஈரோட்டில் ஓடும் ரெயிலில் பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு

    ஈரோட்டில் இன்று அதிகாலை ஓடும் ரெயிலில் பெண்ணிடம் இருந்து 5 பவுன் நகை பறித்த மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    மன்னார்குடியிலிருந்து கோவைக்கு செம்மொழி எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டிருந்தது. இந்த ரெயில் இன்று அதிகாலை 2.30 மணிக்கு ஈரோடு ரெயில் நிலையத்தில் வந்து நின்றது.

    அங்கு ரெயில் பெட்டிகளில் தண்ணீரை நிரப்பி கொண்டிருந்தனர்.

    பிறகு அதிகாலை 3.30 மணிக்கு மீண்டும் ரெயில் கோவைக்கு புறப்பட்டது. ரெயில் என்ஜின் அருகே உள்ள பொதுபிரிவு பெட்டியில் ஜன்னல் ஓரமாக அமர்ந்திருந்த ஒரு பெண்ணிடம் அங்கு பயணிகளோடு பயணியாக இருந்த மர்ம ஆசாமி திடீரென அந்த பெண்ணின் கழுத்தில் இருந்த 5 பவுன் நகையை பறித்தான்.

    ரெயில் புறப்பட்டதும் அவன் நகையை பறித்து கொண்டு ஈரோடு லோகோ ஷெட் அருகே ரெயில் சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து குதித்த கொள்ளையன் இருட்டில் ஓடி மறைந்து விட்டான்.

    கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தால் நகையை பறிகொடுத்த பெண் திருடன்.. திருடன் என சத்தம் போட்டார்.

    ஆனால் ரெயில் ஈரோட்டிலிருந்து வேகமாக சென்று விட்டது. ரெயில் கோவை சென்றதும் அங்கு ரெயில்வே போலீசாரிடம் நகையை பறி கொடுத்த பெண்பயணி புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோடு-சேலம் வழியில் மாவேலி பாளையம் பகுதியில் பதுங்கி இந்த கும்பல் சிக்னல் பிரச்சனையை சாதகமாக பயன்படுத்தி ரெயில் ஜன்னல் ஓரமாக படுத்திருக்கும் பெண்களிடம் நகையை பறித்து வந்தனர். ரெயில்வே தனிப்படை பிரிவு போலீசார் இந்த கும்பலை கூண்டோடு கைது செய்தனர். 4 வடமாநில வாலிபர்களை பிடித்து ஜெயிலில் அடைத்தனர்.

    இப்போது ஈரோடு- கோவை இடையே ரெயில் கொள்ளையன் மீண்டும் கைவரிசையை காட்டத் தொடங்கி உள்ளான்.
    Next Story
    ×