என் மலர்
செய்திகள்

விபத்து
நம்பியூர் அருகே காதல் திருமணம் செய்த வாலிபர் விபத்தில் பலி
நம்பியூர் அருகே காதல் திருமணம் செய்த வாலிபர் விபத்தில் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நம்பியூர்:
நம்பியூர் பள்ளிகூடம் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ்குமார் (வயது 28) டெய்லராக பணிபுரிந்து வந்தார். காதல் திருமணம் செய்தவர். இவருக்கு ஜெயந்தி என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர்.
நேற்று மாலை 5 மணியளவில் பிரகாஷ் குமார் மோட்டார் சைக்கிளில் நம்பியூர்-கோபி ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.
கே.மேட்டுப்பாளையம் பகுதியில் வந்தபோது எதிரே வந்த ஒரு கார் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அவரது உடல் மற்றும் கை-கால் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இந்த விபத்து குறித்து நம்பியூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






