என் மலர்
செய்திகள்

விபத்து
ஈரோடு ரெயில் நிலையம் முன்பு மயங்கி கிடந்த முதியவர் மரணம் - போலீசார் விசாரணை
ஈரோடு ரெயில் நிலையம் முன்பு மயங்கி கிடந்த முதியவர் உயிரிழந்ததையடுத்து அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு ரெயில் நிலையம் முன்பு உள்ள பஸ் நிறுத்தம் பகுதியில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மயங்கி கிடப்பதாக ஈரோடு சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அந்த முதியவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அந்த முதியவருக்கு ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இறந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற எந்த விவரம் தெரியவில்லை.
இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story