என் மலர்tooltip icon

    ஈரோடு

    • நாதிபாளையம் கிராமத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி நடைபெற்றது.
    • வாழையில் ஊட்டசத்து பானம் தயார் செய்து செயல்விளக்கமாக செய்து காண்பித்தார்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே நாதிபாளையம் கிராமத்தில் வேளாண்மை உழவர் நலத்துறையின் மூலம் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின்கீழ் வேளாண்விளை பொருட்களில் மதிப்புக் கூட்டுதல் தொழில் நுட்பங்கள் பற்றி விவசாயிகளுக்கு பயிற்சி கோபி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் முரளி வழிகாட்டு தலின் படி விவசாயிகள் ஆலோசனைக்குழு தலைவர் ரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது.

    சிறப்பு பயிற்சியாளராக கலந்து கொண்ட வேளாண் அறிவியல் நிலைய மனையில் விஞ்ஞானி சிவா சிறுதானிய சத்துமாவு தயாரித்தல் மற்றும் சிறுதானிய சத்து உருண்டை தயாரித்தல் போன்ற தொழில்நுட்பங்களை எடுத்துக் கூறியதுடன், சிறுதானிய சத்துமாவு கஞ்சி மற்றும் நமது பகுதியில் அதிக அளவில் விளையும் வாழையில் ஊட்டசத்து பானம் தயார் செய்து செயல்விளக்கமாக செய்து காண்பித்தார்.

    இப்பயிற்சியில் வேளாண் அலுவலர் சந்திரசேகரன், வேளாண் பொறியியல் துறை உதவி பொறியாளர் சுப்பிரமணியம், உதவி வேளாண்மை அலுவலர் ஜனரஞ்சனி, உதவி தோட்டக்கலை அலுவலர் சுரேஷ் உள்பட 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை கோபி வட்டார தொழில்நுட்ப மேலாளர் திருவரங்கராஜ், உதவி தொழில்நுட்ப மேலாளர் அன்பழகன் மற்றும் ஆதவன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • அண்ணாமலை தனது பிரசாரத்தின் போது தானும் ஒரு செங்கலை எடுத்து காட்டினார்.
    • உதயநிதி ஸ்டாலின்-அண்ணாமலை செங்கல் காட்டி மாறி, மாறி பிரசாரம் செய்த காட்சிகள் தற்போது சமூக வலை தளங்களில் தி.மு.க.-பா.ஜனதா தொண்டர்களிடையே பகிரப்பட்டு வருகிறது.

    தலைவர்கள் முற்றுகையால் ஈரோடு தேர்தல் களம் அனல் பறக்கிறது. நேற்று தி.மு.க. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்தார்.

    அப்போது அவர் பேசும் போது, கடந்த 2019-ம் ஆண்டு பிரதமர் மோடி மதுரைக்கு வந்த போது ரூ.3 ஆயிரம் கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என்று அறிவித்தார். அந்த எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு ரூ.300 கோடி செலவு செய்ததாக அறிவித்து இருக்கிறார்கள். ரூ.300 கோடியில் கட்டப்பட்ட எய்ம்ஸ் ஆஸ்பத்திரி இது தான் என்று கூறி பொதுமக்கள் மத்தியில் பொட்டல் காடாக காட்சி அளிக்கும் அந்த இடத்தின் படத்தை காட்டினார்.

    மேலும் அங்கு இருந்தது ஒரே ஒரு செங்கல் தான். அதையும் நான் எடுத்து வந்து விட்டேன் என்று கூறி பொதுமக்கள் மத்தியில் செங்கலை காட்டினார். இது தான் பா.ஜனதாவும் அ.தி.மு.க.வும் மதுரைக்கு கட்டிக்கொடுத்த எய்ம்ஸ் மருத்துவமனை என்று கூறினார்.

    இதற்கு பதிலடியாக நேற்று பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தனது பிரசாரத்தின் போது தானும் ஒரு செங்கலை எடுத்து காட்டினார். அப்போது 2019-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் தர்மபுரியில் சிப்காட் அமைக்கப்படும் என்று கூறினீர்களே 14 ஆண்டுகளாகியும் அங்கு ஒரு செங்கலை கூட காணவில்லை. எனவே இந்த ஒரு செங்கலை உதயநிதி ஸ்டாலினுக்கு பார்சல் அனுப்பி வைப்பேன் என்றார்.

    உதயநிதி ஸ்டாலின்-அண்ணாமலை செங்கல் காட்டி மாறி, மாறி பிரசாரம் செய்த காட்சிகள் தற்போது சமூக வலை தளங்களில் தி.மு.க.-பா.ஜனதா தொண்டர்களிடையே பகிரப்பட்டு வருகிறது.

    • தேர்தலில் தற்காலிகமாக அனுமதி பெறாமல் இயங்கி வந்த 8 பணிமனைகள் அகற்றப்பட்டன.
    • 14 பணிமனைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன. இதில் அனுமதி பெற்று 4 பணிமனைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. வாக இருந்த திருமகன் ஈவெரா மரணம் அடைந்தார். இதையடுத்து வருகிற 27-ந் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அ.தி.மு.க. சார்பில் கே.எஸ்.தென்னரசு, தே.மு.தி.க. சார்பில் ஆனந்த், நாம்தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் மற்றும் சுயேச்சைகள் உள்பட 77 பேர் போட்டியிடுகின்றனர்.

    தேர்தலையொட்டி மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தப்பட்டு மாதிரி ஓட்டுப்பதிவும் நடத்தப்பட்டு, ஓட்டுப்பதிவுக்கு மின்னணு வாக்கு எந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. தேர்தலுக்கு முந்தைய நாளான 26-ந் தேதி மின்னணு எந்திரங்கள் வாக்கு சாவடிக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படும்.

    தேர்தலையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். காலை 6 மணிக்கு தொடங்கும் பிரசாரம் இரவு 10 மணி வரை நடக்கிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அரசியல் கட்சியினர் ஈரோட்டுக்கு வந்து தேர்தல் பணியாற்றி வருகின்றனர். தேர்தல் பிரசாரம் வருகிற 25-ந் தேதி மாலை 5 மணியுடன் நிறைவு பெறுகிறது.

    இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி சிவகுமார் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 100 சதவீதம் வாக்கு பதிவிற்காக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி இன்று ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி பலூன் பறக்க விடும் நிகழ்ச்சி நடந்தது. இதேபோல் ஏற்கனவே விழிப்புணர்வு நாடகமும் நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து மஞ்சள் பையும் வழங்கப்பட்டது.

    தேர்தலில் தற்காலிகமாக அனுமதி பெறாமல் இயங்கி வந்த 8 பணிமனைகள் அகற்றப்பட்டன. 14 பணிமனைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன. இதில் அனுமதி பெற்று 4 பணிமனைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. தற்போது கிழக்கு தொகுதியில் இருக்கும் பணிமனைகள் அனைத்தும் அனுமதி பெற்று இயங்கி வருகின்றன. இதுவரை தேர்தல் விதிமீறல் தொடர்பாக, கட்டுப்பாட்டு அறைக்கு 455 புகார்கள் வந்துள்ளன. இதில் 50 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    இன்று போலீசாருக்கான தபால் ஓட்டு பதிவு நடந்து வருகிறது. மொத்தம் 58 போலீசார் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். பதட்டமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில் போலீசாருடன் துணை ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

    வரும் 25-ந் தேதி மாலை 5 மணியுடன் பிரசாரம் நிறைவு பெறுகிறது. அன்று மாலை 5 மணிக்கு பிறகு ஈரோட்டில் தங்கியிருக்கும் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த அரசியல் கட்சி நிர்வாகிகள் மற்றும் தேர்தல் பணிக்காக வந்திருக்கும் அனைவரும் ஈரோடு கிழக்கு தொகுதியை விட்டு வெளியேற வேண்டும்.

    அன்று மாலை 5 மணிக்கு மேல் அதனை உறுதிப்படுத்தும் வகையில் ஈரோட்டில் உள்ள அனைத்து விடுதிகளிலும் அதிகாரிகள் சோதனை நடத்துவார்கள்.

    அப்போது யாரேனும் தங்கி இருப்பது உறுதி செய்யப்பட்டால் தேர்தல் நடத்தை விதிமுறைப்படி நடவடிக்கை எடுக்கப்படும். பறக்கும் படையினர், நிலை கண்காணிப்பு குழுவினர் தொகுதி முழுவதும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். உரிய ஆவணங்கள் இன்றி ரூ.50 ஆயிரத்திற்க்கு மேல் கொண்டு வரப்படும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து நட்சத்திர பேச்சாளர்களும், சினிமா பிரபலங்களும் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
    • நடிகை விந்தியா இன்று மாலை பல்வேறு இடங்களில் பிரசாரம் மேற்கொண்டு பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ந்தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே இருப்பதால் வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க., அ.தி.மு.க., தே.மு.தி.க., நாம் தமிழர் கட்சியின் தலைவர்கள் முற்றுகையிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தி.மு.க. கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து இளைஞர் அணி மாநில செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று முதல் நாள் பிரசாரத்தை மேற்கொண்டார். கிட்டத்தட்ட 9-க்கும் மேற்பட்ட இடங்களில் பேசினார்.

    அதனைத்தொடர்ந்து இன்று மாலை 2-வது நாளாக தனது பிரசாரத்தை தொடங்குகிறார். மாலை 5 மணிக்கு எஸ்.கே.சி.ரோடு அர்ஜுனா சுவிட்ஸ் கடை அருகே பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார். அதனைத் தொடர்ந்து ஆலமரத்து மெயின் ரோடு சமாதானபுரத்தில், அண்ணா டெக்ஸ்மேடு பகுதியில் பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார். பின்னர் கருங்கல்பாளையம் சின்ன மாரியம்மன் கோவில் அருகே பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார்.

    இதேபோல் தே.மு.தி.மு.க. சார்பில் போட்டிடும் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கடந்த 2 நாட்களாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பொதுமக்கள் மத்தியிலும் பேசினார். இந்நிலையில் 3-வது நாளான இன்று மாலையும் பிரேமலதா விஜயகாந்த் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார். குமலன் குட்டை மாரியம்மன் கோவில் அருகே பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார். அதைத் தொடர்ந்து சம்பத் நகர் பகுதியில் பேசுகிறார். தொடர்ந்து சூரம்பட்டி நால்ரோடு பகுதியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

    இதேபோல் அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ஏற்கனவே தனது முதல் கட்ட பிரசாரத்தை மேற்கொண்டார். இந்நிலையில் இன்று மாலை தனது 2-வது கட்ட பிரசாரத்தை ஜி.கே.வாசன் மேற்கொள்கிறார். வெட்டுக்காட்டு வலசு, நாராயண வலசு, டவர் லைன் காலனி, சம்பத் நகர், பெரிய வலசு நால்ரோடு, இடையன்காட்டு வலசு, என்.எம்.எஸ்.காம்பவுண்ட், பெரியார் நகர் போன்ற பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    இதனைத்தொடர்ந்து அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து நட்சத்திர பேச்சாளர்களும், சினிமா பிரபலங்களும் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

    அந்த வகையில் இன்று மாலை நடிகை விந்தியா பல்வேறு இடங்களில் பிரசாரம் மேற்கொண்டு பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார். இதனைத் தொடர்ந்து நாளை மற்றும் நாளை மறுநாள் என தொடர்ந்து 3 நாட்கள் நடிகை விந்தியா அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து பிரசாரம் மேற்கொள்கிறார். இறுதி கட்ட பிரசாரம் நெருங்கி வருவதால் தேர்தல் களம் அனல் பறக்கிறது.

    • இருசக்கர வாகனங்கள் முதல் கனரக வாகனங்கள் வரை அனைத்தும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.
    • கிழக்கு தொகுதி முழுவதும் ஆங்காங்கே போலீசாரும், துணை ராணுவனத்தினரும் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான உடனேயே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. இதையடுத்து உரிய அனுமதியின்றி ரூ. 50 ஆயிரத்துக்கு மேல் கொண்டு சென்றால் அவை பறக்கும் படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

    அதோடு இல்லாமல் ரூ. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பரிசு பொருட்களும் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்றால் அவையும் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே இருப்பதால் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. வாகன சோதனையில் பறக்கும் படையினருடன் போலீசார் மற்றும் துணை ராணுவனத்தினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம் மற்றும் பரிசு பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறதா? என்று தீவிரமாக விடிய, விடிய கண்காணித்து வருகிறார்கள். மேலும் சந்தேகத்துக்கு இடமானவர்களை நிறுத்தி சோதனை நடத்தி வருகின்றனர்.

    இருசக்கர வாகனங்கள் முதல் கனரக வாகனங்கள் வரை அனைத்தும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. கிழக்கு தொகுதி முழுவதும் ஆங்காங்கே போலீசாரும், துணை ராணுவனத்தினரும் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட சக்தி நகர் பகுதிக்கு நேற்று காலை ஒரு வேன் வந்தது. அதில் இருந்து வேட்டி சட்டை அணிந்து இருந்த ஒருவர் வாக்காளர் பட்டியலுடன் கீழே இறங்கினார். பின்னர் அவர் அந்த பகுதியை சேர்ந்த 5 குடும்பத்தினருக்கு புதிய குக்கர்களை வழங்கினார்.

    பின்னர் அவர் டோக்கன் விநியோகம் செய்து குறிப்பிட்ட இடத்தில் ஒரு குடோன் இருப்பதாகவும் அங்கு வந்து மற்றவர்கள் குக்கர் பெற்று செல்லுங்கள் என்று கூறி டோக்கன் விநியோகம் செய்ததாக கூறப்படுகிறது.

    இதுப்பற்றி தெரியவந்ததும் அந்த பகுதியை சேர்ந்த மாற்றுக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் அங்கு திரண்டு வந்து எதிர்ப்பு தெரிவித்தனர். வாக்காளர்கள் புதிய குக்கருடன் இருக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியானது. இதே போல் மற்றொரு வீடியோவில் வயதான தம்பதியினர் குக்கர் பெற்று கொண்டவர்களிடம் குறிப்பிட்ட ஒரு கட்சியின் சின்னத்தை காட்டி வாக்களிக்கும் படி கேட்பதும் பதிவாகி இருந்தது.

    இதே போல் 53-வது வார்டுக்கு உட்பட்ட காளமேகம் தெரு, அகஸ்தியர் தெரு, மீரான் முகைதீன் தெரு மற்றும் சொக்கலிங்கம் பிள்ளை தெரு ஆகிய குறுகலான பகுதிகளுக்கு வேட்டி-சட்டை அணிந்த ஒருவர் ஸ்கூட்டரில் வந்து அந்த பகுதிகளில் உள்ள வீடுகளின் கதவுகளை தட்டி உள்ளார்.

    பின்னர் அந்த வீட்டில் உள்ள பெண்களின் எண்ணிக்கை குறித்து கேட்டு பட்டுபுடவையும், ரூ. 500-ம் கொடுத்து உள்ளார். மேலும் பட்டு புடவை வேண்டாம் என்றால் கூடுதலா ரூ. 1000 வழங்கி உள்ளார். இது தவிர மளிகை பொருட்கள், சிக்கன் பிரியாணியும் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுவதாக புகார் எழுந்து உள்ளது. இது குறித்து தேர்தல் அதிகாரிகள் மற்றும் பறக்கும்படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் வந்து பார்த்த போது யாரும் இல்லை.

    இதே போல் மற்றொரு கட்சி சார்பில் ஈரோடு சிந்தன் நகர் பகுதியில் வாக்காளர்களுக்கு வெள்ளி கொலுசு வழங்கப்பட்டதாகவும், மற்ற இடங்களில் டோக்கன் விநியோகம் செய்து இருப்பதாகவும் தகவல் வெளியானது. இதையடுத்து அங்கும் தேர்தல் அதிகாரிகள் மற்றும் பறக்கும் படையினர் சென்று கண்காணித்தனர். அங்கும் யாரும் இல்லை.

    ஏற்கனவே பிரசாரத்துக்கு செல்லும் பெண்களுக்கு தினமும் ரூ. 1000 வழங்கப்படுவதாக தகவல் வெளியான நிலையில் தற்போது தேர்தல் நெங்குவதால் அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பரிசு பொருட்களை வழங்கி வருவதாக வெளியான வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

    • பராமிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என பெருந்துறை செயற் பொறியாளர் தெரிவித்துள்ளார்.
    • இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.

    ஈரோடு:

    பெருந்துறை சிப்காட் துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) பராமரிப்புப்பணி நடைபெற உள்ளது.

    எனவே பெருந்துறை கோட்டத்தைச் சேர்ந்த சிப்காட் வளாகம் தெற்கு பகுதி, கம்புளியம்பட்டி, சரளை, வரப்பாளையம், புளியம்பாளையம்,

    காசிபில்லாம்பாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என பெருந்துறை செயற் பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    இதே போல் சென்னிமலை யூனியன், பெரியாண்டிபாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடப்பதால் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 முதல் மாலை 5 மணி வரை சென்னிமலை யூனியனுக்கு உட்பட்ட ஊத்துக்குளி ரோடு

    மேலப்பாளையம், பள்ளக்காட்டுபுதூர், தொட்டம்பட்டி, பெரியாண்டிபாளையம், பனியம்பள்ளி, செந்தாம்பாளையம், துலுக்கம்பாளையம், வாய்ப்பாடிபுதூர், கவுண்டம்பாளையம், எளையாம்பாளையம், முருகம்பாளையம்

    உத்திராண்டி பாளையம், புலவனூர், வேலாயுதம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.

    • விசாரணையில் புலியின் தோலை பல லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்வதற்காக கொண்டு வந்தது அம்பலமானது
    • இதனை வாங்க வந்த கும்பல் யார் என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் வனத்துறை–யினர் தெரிவித்துள்ளனர்.

     சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட சத்தியமங்கலம் வனச்சரகப்பகுதியில் புலியின் தோல் மற்றும் அதன் உடற்பாகங்களை விற்பனை செய்யும் கும்பல் ஒன்று நடமாடி வருவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் சத்தியமங்கலம் அருகே உள்ள அரசூர் கிராமத்தில், கொட்டகை அமைத்து, அதில் தங்கி இருந்த 4 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை செய்தனர்.

    அப்பொழுது அவர்களிடம் இருந்த பையில் புலியின் தோல் மற்றும் அதன் பற்கள், எலும்புகள் உள்ளிட்ட உடற்கூறுகள் இருப்பது கண்டறியப்பட்டது.

    உடனடியாக அவர்களை கைது செய்த வனத்துறை–யினர், சத்தியமங்கலம் வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர்.

    அதில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ராம்சந்தர் (வயது 50), பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் (வயது 59), மங்கல் (வயது 28), ரத்னா (வயது 40) என்பது தெரியவந்தது.

    இவர்களிடம் நடத்திய விசாரணையில் புலியின் தோலை பல லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்வதற்காக கொண்டு வந்தது அம்பலமானது. மேலும் அதன் பற்கள் மற்றும் எலும்பு கூடுகள் ஆகியவற்றையும் வனத்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

    சுமார் 10 நாட்களுக்கு முன்பு தான் புலி வேட்டையாடப்பட்டது என்பதும் தெரிய வந்துள்ளது.

    இது சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வேட்டை–யாடப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் பகுதியில் வேட்டையாடப்பட்டு, அதன் பொருட்களை சத்தியமங்கலம் பகுதிக்கு கொண்டு வந்து விற்பனைக்காக கொண்டு வந்துள்ளார்களா? என்பது குறித்தும் விசாரணையில் தான் தெரியவரும் எனவும்,

    இவர்கள் பின்னணியில் பெரிய கும்பல் இயங்கி வருவதாகவும், விலை மதிப்பற்ற இந்த புலியின் தோல் மற்றும் உதிரி பாகங்கள் பல லட்சம் ரூபாய்க்கு விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளதாகவும்,

    இதனை வாங்க வந்த கும்பல் யார் என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    புலி வேட்டையாடப்பட்டு அதன் தோல் மற்றும் உடற்கூறுகள் கைப்பற்றப்பட்டதும், வடமாநிலத்தவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • எதிர்பாராத விதமாக தவறி தென்னை மரத்தில் இருந்து கீழே விழுந்தார்.
    • மேல் சிகிச்சை க்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனையில் சேர்த்தனர்.

    பெருந்துறை:

    பெருந்துறையை அடுத்துள்ள ஆயிகவுண்டன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணி (வயது 48). இவருக்கு கன்னியம்மாள் என்ற மனைவியும் மற்றும் 3 மகள்களும் உள்ளனர். சுப்பிரமணி தென்னை மரம் ஏறும் வேலை செய்து வந்தார்.

    இவர் சம்பவத்தன்று வழக்கம் போல் தேங்காய் பறிப்பதற்காக பெருந்துறை வாய்க்கால் மேடு, பள்ள க்காட்டு தோட்டம் பகுதியில் உள்ள ஒருவரது தோட்ட த்திற்கு சென்றார்.

    தொடர்ந்து அவர் அங்கு தென்னை மரத்தில் ஏறிக் கொண்டிருந்தார். அப் போது அவர் எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார்.

    இதில் அவருக்கு முதுகு பகுதியில் பலத்த அடிபட்டு படுகாயம் அடைந்தார். தொடர்ந்து மயக்கம் அடைந்தார்.

    இதை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கார் மூலம் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்த னர். பின்னர் மேல் சிகிச்சை க்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனையில் சேர்த்தனர்.

    அங்கு அவர் சிகிச்சை பலனின்றிபரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • ராமு அங்கு தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார்.
    • அந்தியூர் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    அந்தியூர்:

    அந்தியூர் தவிட்டுப்பாளை யம் பகுதியைச் சேர்ந்தவர் ராமு (52). கூலித் தொழி லாளி. இவருக்கு திருமணம் ஆகி மகேஸ்வரி என்ற மனைவியும், 2 மகள்கள் உள்ளனர். 2 மகள்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது.

    ராமுவுக்கு மது பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படு கிறது. ராமுவின் அண்ணன் மகன் குணசேகரன் (37)என்பவர் அந்தியூர் அருகே அரசு பணிமனை அருகே குடியிருந்து வருகின்றார்.

    குணசேகரனுக்கு ராமு போன் செய்து நான் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ளப் போகி றேன். நான் இறந்த பிறகு எனக்கு நீ, தான் காரியம் செய்ய வேண்டும் என்று பேசி விட்டு போனை வைத்து விட்டார்.

    இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த குணசேகரன் ராமுவின் வீட்டுக்கு சென்று கதவை தட்டினார். அப்போது கதவு உள் பக்க மாக மூடப்பட்டு இருந்தது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார்.

    அப்போது ராமு அங்கு தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். ெபாதுமக்கள் அவரை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கன வே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    தற்கொலை செய்து கொண்ட ராமு இதே போன்று பலமுறை விளை யாட்டாக போன் செய்து தற்கொலை செய்து கொள்வதாக கூறி வந்ததாக கூறப்படுகிறது.

    அதே போல் விளை யாட்டாக அவர் பேசி வரு கிறார் என அவரது குடும்பத்தினர் நினைத்துக் கொண்டார்கள். ஆனால் தற்போது விளையாட்டு வினையாக முடிந்து விட்டது.

    இது குறித்து அந்தியூர் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • இரவு தூங்க சென்ற அவரது தாயார் காலை எழுந்து பார்த்தபோது வீட்டின் முன்புற கதவு உடைக்கப்பட்டு இருந்தது
    • பெருந்துறை எஸ்ஐ சந்தானம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    பெருந்துறை:

    பெருந்துறை அடுத்துள்ள விஜயமங்கலம், மேட்டுப்புதூர் பகுதியை சார்ந்தவர் ஜனகராஜ் என்பவரது மகன் சந்தோஷ் குமார் (27).

    தனியார் மில்லில் பிட்டராக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தனது தாயார் ஜெயந்தியை வீட்டில் விட்டுவிட்டு இவரும் இவரது மனைவி தாரணியும் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று உள்ளனர். வீட்டில் அவரது தாயார் மட்டும் இருந்துள்ளார்.

    இரவு தூங்க சென்ற அவரது தாயார் காலை எழுந்து பார்த்தபோது வீட்டின் முன்புற கதவு உடைக்கப்பட்டு இருந்தது. பின்னர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது படுக்கை அறையில் இருந்த பீரோ லாக்கரும் உடைக்கப் பட்டு இருந்தது.

    அதில் இருந்த பணம் ரூ.10 ஆயிரம் காணாமல் போயிருந்தது. உடனடியாக அவரது மகனுக்கு தகவல் தெரிவித்தார். வீட்டிற்கு வந்து பார்த்த சந்தோஷ் குமார்

    இது தொடர்பாக பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    பெருந்துறை எஸ்ஐ சந்தானம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • வெயிலின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் காயர் மேட் போட்டுள்ளனர்.
    • இது வெயிலுக்கு இதமாக இருப்பதாகவும் அதிக சூடு தாக்குவது இல்லை எனவும் பக்தர்கள் தெரிவித்தனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை முருகன் கோவிலில் தினமும் ஆறு கால பூஜைகள் நடக்கிறது, மேலும் தொடர்ந்து திருவிழா நடந்து வருகிறது.

    உள்ளூர், வெளியூர் பக்தர்கள் பள்ளி விடுமுறை தினம் என்பதால் குழந்தை களுடன் வந்து பூஜைகளில் பங்கேற்று சாமி தரிசனம் செய்கின்றனர்.

    இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வரும் பக்தர்கள், வாகனங்களை நிறுத்தி விட்டு வெகு தூரம் நடக்க வேண்டும்.

    இந்த இடத்தில் தார் ரோடு வெட்ட வெளியாக உள்ளதால், தற்போது வெயில் தாக்கத்தில், சூடாகி நடக்க பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

    மேலும் கோவில் பரிகாரத்திலும் நடைபாதை கற்கள் சூடாகி, பக்தர்களின் பாதங்களை பதம் பார்த்தது.

    இதனால் குறிப்பாக முதியவர்கள், குழந்தைகள் மிகவும் சிரமப்பட்டனர்.

    இதையறிந்த கோவில் நிர்வாகம், வெயிலின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் காயர் மேட் போட்டுள்ளனர்.

    இது வெயிலுக்கு இதமாக இருப்பதாகவும் அதிக சூடு தாக்குவது இல்லை எனவும் பக்தர்கள் தெரிவித்தனர்.

    • அரசு மது பானத்தை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக 3 பெண்கள் உள்பட ௨௬ பேரை போலீசார் கைது செய்தனர்.
    • அவர்களிடம் இருந்து 328 மது பாட்டில்களையும் போலீ சார் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்க ஈரோடு மாவட்ட போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி போலீசார் தங்கள் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் தீவிர கண்கணிப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர்.

    அதன்படி கடத்தூர், புளியம்பட்டி, ஆப்பக்கூடல், அம்மா பேட்டை, கோபி, திங்களூர், வரப்பாளையம், அந்தியூர், பவானி, சித்தோடு, மொடக்குறிச்சி, சிவகிரி, பெருந்துறை, கருங்கல் பாளையம், கொடுமுடி.

    ஈரோடு தாலுகா, சத்திய மங்கலம், ஈரோடு வடக்கு, அறச்சலூர், ஈரோடு டவுன், ஈரோடு தெற்கு, மலைய ம்பாளையம், சென்னிமலை போலீசார் தங்கள் காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் நேற்று தீவிர கண்காணிப்பு மற்றும் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அரசு மது பானத்தை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக 3 பெண்கள் உள்பட 26 பேர் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களை கைது செய்த னர்.

    மேலும் அவர்களிடம் இருந்து 328 மது பாட்டில்களையும் போலீ சார் பறிமுதல் செய்தனர்.

    ×