search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "poached in Sathyamangalam forest?"

    • விசாரணையில் புலியின் தோலை பல லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்வதற்காக கொண்டு வந்தது அம்பலமானது
    • இதனை வாங்க வந்த கும்பல் யார் என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் வனத்துறை–யினர் தெரிவித்துள்ளனர்.

     சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட சத்தியமங்கலம் வனச்சரகப்பகுதியில் புலியின் தோல் மற்றும் அதன் உடற்பாகங்களை விற்பனை செய்யும் கும்பல் ஒன்று நடமாடி வருவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் சத்தியமங்கலம் அருகே உள்ள அரசூர் கிராமத்தில், கொட்டகை அமைத்து, அதில் தங்கி இருந்த 4 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை செய்தனர்.

    அப்பொழுது அவர்களிடம் இருந்த பையில் புலியின் தோல் மற்றும் அதன் பற்கள், எலும்புகள் உள்ளிட்ட உடற்கூறுகள் இருப்பது கண்டறியப்பட்டது.

    உடனடியாக அவர்களை கைது செய்த வனத்துறை–யினர், சத்தியமங்கலம் வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர்.

    அதில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ராம்சந்தர் (வயது 50), பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் (வயது 59), மங்கல் (வயது 28), ரத்னா (வயது 40) என்பது தெரியவந்தது.

    இவர்களிடம் நடத்திய விசாரணையில் புலியின் தோலை பல லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்வதற்காக கொண்டு வந்தது அம்பலமானது. மேலும் அதன் பற்கள் மற்றும் எலும்பு கூடுகள் ஆகியவற்றையும் வனத்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

    சுமார் 10 நாட்களுக்கு முன்பு தான் புலி வேட்டையாடப்பட்டது என்பதும் தெரிய வந்துள்ளது.

    இது சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வேட்டை–யாடப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் பகுதியில் வேட்டையாடப்பட்டு, அதன் பொருட்களை சத்தியமங்கலம் பகுதிக்கு கொண்டு வந்து விற்பனைக்காக கொண்டு வந்துள்ளார்களா? என்பது குறித்தும் விசாரணையில் தான் தெரியவரும் எனவும்,

    இவர்கள் பின்னணியில் பெரிய கும்பல் இயங்கி வருவதாகவும், விலை மதிப்பற்ற இந்த புலியின் தோல் மற்றும் உதிரி பாகங்கள் பல லட்சம் ரூபாய்க்கு விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளதாகவும்,

    இதனை வாங்க வந்த கும்பல் யார் என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    புலி வேட்டையாடப்பட்டு அதன் தோல் மற்றும் உடற்கூறுகள் கைப்பற்றப்பட்டதும், வடமாநிலத்தவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×