வீடு புகுந்து பணம் திருட்டு

இரவு தூங்க சென்ற அவரது தாயார் காலை எழுந்து பார்த்தபோது வீட்டின் முன்புற கதவு உடைக்கப்பட்டு இருந்ததுபெருந்துறை எஸ்ஐ சந்தானம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
வீடு புகுந்து பணம் திருட்டு
Published on

பெருந்துறை:

பெருந்துறை அடுத்துள்ள விஜயமங்கலம், மேட்டுப்புதூர் பகுதியை சார்ந்தவர் ஜனகராஜ் என்பவரது மகன் சந்தோஷ் குமார் (27).

தனியார் மில்லில் பிட்டராக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தனது தாயார் ஜெயந்தியை வீட்டில் விட்டுவிட்டு இவரும் இவரது மனைவி தாரணியும் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று உள்ளனர். வீட்டில் அவரது தாயார் மட்டும் இருந்துள்ளார்.

இரவு தூங்க சென்ற அவரது தாயார் காலை எழுந்து பார்த்தபோது வீட்டின் முன்புற கதவு உடைக்கப்பட்டு இருந்தது. பின்னர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது படுக்கை அறையில் இருந்த பீரோ லாக்கரும் உடைக்கப் பட்டு இருந்தது.

அதில் இருந்த பணம் ரூ.10 ஆயிரம் காணாமல் போயிருந்தது. உடனடியாக அவரது மகனுக்கு தகவல் தெரிவித்தார். வீட்டிற்கு வந்து பார்த்த சந்தோஷ் குமார்

இது தொடர்பாக பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

பெருந்துறை எஸ்ஐ சந்தானம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com