search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "in Chennimalai"

    • ஆசிரிய, ஆசிரியைகள் 50-க்கும் மேற்பட்டோர் கருப்பு பேட்ச் அணிந்து பயிற்சியில் பங்கேற்றனர்.
    • ஆசிரியர்களை முதல்-அமைசசர் மு.க.ஸ்டாலின் அழைத்து பேச வேண்டும்.

    சென்னிமலை:

    சென்னை பள்ளி கல்வி இயக்குனர் அலுவலக வளாகத்தில் பல்வேறு ஆசிரியர்கள் அமைப்பினர் 12 ஆண்டுகளுக்கும் மேலாக பகுதி நேர ஆசிரியராக பணியாற்றுவோரை நிரந்தரம் செய்ய வேண்டும்.

    ஒரே பணி செய்யும் ஆசிரியர்களுக்கு இடையே ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் என்ற கோரிக்கை களை வலியுறுத்தி ஒரு வாரத்திற்கு மேலாக போராடி வருகின்றனர்.

    இந்த ஆசிரியர்களுக்கு ஆதரவு தெரிவித்து சென்னிமலை ஒன்றியத்தில் ஆசிரியர்களுக்கு நடந்த எண்ணும், எழுத்தும் பயிற்சியில் பங்கு பெற்ற ஆசிரிய, ஆசிரியைகள் 50-க்கும் மேற்பட்டோர் கருப்பு பேட்ச் அணிந்து பயிற்சியில் பங்கேற்றனர்.

    பயிற்சிக்கு முன்பாக வளாகத்தில் திரண்டு கோஷம் எழுப்பிய ஆசியர்கள் ஒரு வாரத்திற்கு மேலாக போராடும் ஆசிரியர்களை முதல்-அமைசசர் மு.க.ஸ்டாலின் அழைத்து பேச வேண்டும், கோரிக்களுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என கூறினர்.

    • சென்னிமலை சுப்பிரமணியசுவாமி கோவில் சித்ரா பவுர்ணமி விழா கொண்டாடப்பட்டது.
    • மலை அடிவாரத்தில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை சுப்பிரமணியசுவாமி கோவிலான மலைக்கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு பிற்பகல் 3.30 மணியளவில் சிறப்பு ஹோமமும்,

    அதனைத்தொடர்ந்து மூலவர் முருகப்பெருமானுக்கு சந்தன அபிஷேகமும், மாலை 6 மணிக்கு மஹா தீபாராதனையும், 6.30 மணியளவில் உற்சவர் புறப்பாடும் நடைபெற்றது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மலை அடிவாரத்தில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

    பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் பக்தர்களின் தரிசனத்திற்காக இரவு 10 மணி வரை நடை திறந்திருந்திருந்தது.

    சென்னிமலை நகர மக்கள் குடும்பம், குடும்பமாக தங்கள் வீடுகளில் வித, விதமான உணவு பண்டங்களை தயார் செய்து மலைக்கோவிலுக்கு எடுத்து வந்து சாமி தரிசனம் செய்து கொண்டு சென்ற உணவுகளை உண்டு மகிழ்ந்தனர்.

    விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் சரவணன் மற்றும் அர்ச்சகர்கள் செய்திருந்தனர்.

    இதேபோல் சென்னிமலை அருகே சொக்கநாதபாளையம் மாரியம்மன் கோவிலில் 47-வது ஆண்டு சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே மடவிளாகத்தில் உள்ள ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலுக்கு சென்று தீர்த்தம் எடுத்து வந்தனர்.

    பின்னர் தீர்த்த குடங்களுடன் நொய்யல் ஆற்றங்கரையில் இருந்து ஊர்வலமாக மாரியம்மன் கோவிலுக்கு சென்றனர். அங்கு மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீர்த்த அபிஷேகம் நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    இதேபோல் எக்கட்டாம்பாளையம் மாரியம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் நட்டாற்று ஈஸ்வரன் கோவிலுக்கு சென்று காவிரி தீர்த்தம் கொண்டு வந்தனர்.

    பின்னர் தீர்த்த குடங்களுடன் ஊர்வலமாக மாரியம்மன் கோவிலுக்கு சென்றனர். அங்கு அம்மனுக்கு சந்தன அபிஷேகம், தீப அலங்கார ஆராதனை மற்றும் தீர்த்த அபிஷேகம் நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    சென்னிமலை அடுத்துள்ள மணிமலை மீது அமைந்துள்ள மணி மலை கருப்பராயன் கோவிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், யாக பூஜை நடந்தது.

    இதில்ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • பராமிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என பெருந்துறை செயற் பொறியாளர் தெரிவித்துள்ளார்.
    • இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.

    ஈரோடு:

    பெருந்துறை சிப்காட் துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) பராமரிப்புப்பணி நடைபெற உள்ளது.

    எனவே பெருந்துறை கோட்டத்தைச் சேர்ந்த சிப்காட் வளாகம் தெற்கு பகுதி, கம்புளியம்பட்டி, சரளை, வரப்பாளையம், புளியம்பாளையம்,

    காசிபில்லாம்பாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என பெருந்துறை செயற் பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    இதே போல் சென்னிமலை யூனியன், பெரியாண்டிபாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடப்பதால் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 முதல் மாலை 5 மணி வரை சென்னிமலை யூனியனுக்கு உட்பட்ட ஊத்துக்குளி ரோடு

    மேலப்பாளையம், பள்ளக்காட்டுபுதூர், தொட்டம்பட்டி, பெரியாண்டிபாளையம், பனியம்பள்ளி, செந்தாம்பாளையம், துலுக்கம்பாளையம், வாய்ப்பாடிபுதூர், கவுண்டம்பாளையம், எளையாம்பாளையம், முருகம்பாளையம்

    உத்திராண்டி பாளையம், புலவனூர், வேலாயுதம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.

    ×