என் மலர்
ஈரோடு
- வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் மற்றும் பணம் விநியோகம் தொடர்பாக வரும் புகார்கள் மீதும் உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
- சில இடங்களில் ஒரு கட்சி ஒரு ஓட்டுக்கு ரூ.5 ஆயிரம் வரை கொடுத்ததாக கூறப்படுகிறது.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந்தேதி நடக்கிறது. தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அ.தி.மு.க. சார்பில் கே.எஸ்.தென்னரசு, தே.மு.தி.க. சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இவர்கள் தவிர சுயேச்சை வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். 77 பேர் தேர்தல் களத்தில் உள்ளதால் பிரசாரம் அனல் பறந்து வருகிறது.
25-ந்தேதி மாலை 5 மணியுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைகிறது. பிரசாரம் நிறைவடைய இன்னும் 2 நாட்களே உள்ளதால் தலைவர்கள் தொகுதியில் முகாமிட்டு தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
வருகிற 24, 25-ந்தேதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்கிறார். அதே நாளில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பிரசாரம் செய்கிறார். தற்போது பிரேமலதா விஜயகாந்த், சீமான் ஆகியோரும் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ளதால் தொகுதியில் பறக்கும் படையினர், போலீசார், துணை ராணுவத்தினர் தீவிர வாகன சோதனை நடத்தி வருகிறார்கள்.
மேலும் வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் மற்றும் பணம் விநியோகம் தொடர்பாக வரும் புகார்கள் மீதும் உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். நேற்று முன்தினம் வாக்காளர்களுக்கு குக்கர், வெள்ளி கொலுசு, பட்டுபுடவை, பணம் வழங்கியதாக தகவல் வெளியானது.
இதுகுறித்து வீடியோவும் சமூக வலைதளத்தில் வெளியானதும் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு தேர்தல் அதிகாரிகள் சென்று கண்காணித்தனர். ஆனால் யாரும் அங்கு இல்லை.
இந்த நிலையில் வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் விநியோகம் செய்தது தொடர்பாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் தேர்தல் நெருங்க நெருங்க, வாக்காளர்களுக்கு பணம்பட்டுவாடா செய்யப்படலாம் என்பதால் ஈரோடு கிழக்கு தொகுதியின் அனைத்து பகுதிகளிலும் உள்ளூர் போலீசார் மற்றும் துணை ராணுவனத்தினர் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டு உள்ளனர்.
இதே போல் விடிய விடிய, பறக்கும் படையினர், நிலைக்குழுவினர் 24 மணி நேரமும் கண்காணித்து வந்தனர். இந்த கண்காணிப்புகளை மீறி நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை விடிய விடிய வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இதில் ஒரு கட்சி சார்பில் ஒரு ஓட்டுக்கு ரூ.3 ஆயிரமும், மற்றொரு கட்சி சார்பில் ஒரு ஓட்டுக்கு ரூ.2 ஆயிரமும் பட்டுவாடா செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. மொத்தம் ஒரு ஓட்டுக்கு ரூ.5 ஆயிரம் வரை விநியோகம் செய்யப்பட்டு இருக்கிறது.
இதே போல் சில இடங்களில் ஒரு கட்சி ஒரு ஓட்டுக்கு ரூ.5 ஆயிரம் வரை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
சில இடங்களில் பரிசு பொருட்கள் வாரி வாரி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஒரு பகுதியில் பரிசுப்பொருட்களுடன் மட்டன், சிக்கனும் கொடுத்து இருக்கிறார்கள்.
இந்த பரிசு-பண மழையால் வாக்காளர்கள் இன்ப அதிர்ச்சிக்குள்ளாகி திக்குமுக்காடினார்கள் என்று தெரிய வந்துள்ளது.
இன்று அதிகாலை 4.30 மணிக்குள் தொகுதியில் பணப்பட்டுவாடா செய்து முடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 5 பேர் உள்ள ஒரு குடும்பத்துக்கு 2 கட்சிகளிடம் இருந்து ரூ.25 ஆயிரம் வரை கிடைத்துள்ளது.
இதுதவிர பணத்துடன் வேட்டி, சேலையும் விநியோகம் செய்து உள்ளனர். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்கள் பண மழையில் நனைந்து வருகிறார்கள். இரவு முழுவதும் பணம் விநியோகம் செய்ததால் மக்கள் கையில் பணப்புழக்கம் அதிகரித்து உள்ளது. இதனால் மளிகை கடைகள், கறிக்கடைகள், மதுக்கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. அனைவரிடமும் 500 ரூபாய் நோட்டுகள் அதிகளவில் சர்வ சாதாரணமாக புழக்கத்தில் உள்ளது. ஏற்கனவே பிரசாரத்துக்கு சென்று வருபவர்களுக்கு தினமும் ரூ.1000 வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ளதால் இறுதி கட்ட பிரசாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.
- 4-வது நாளாக பிரேமலதா விஜயகாந்த் இன்று மாலை கள்ளுக்கடை மேடு பகுதியில் பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ளதால் இறுதி கட்ட பிரசாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.
காங்கிரஸ், அ.தி.மு.க., தே.மு.தி.க., நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அதன் தலைவர்கள் கடந்த சில நாட்களாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தே.மு.தி.க. வேட்பாளரை ஆதரித்து கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கடந்த 2 நாட்களாக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் 4-வது நாளாக பிரேமலதா விஜயகாந்த் இன்று மாலை 5 மணிக்கு கள்ளுக்கடை மேடு பகுதியில் பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார்.
அதனைத்தொடர்ந்து மரப்பாலம் பேபி மருத்துவமனை அருகே பேசுகிறார். பின்னர் மணிக்கூண்டு, ஈஸ்வரன் கோவில் வீதி, ராஜாஜிபுரம் பகுதிகளிலும் வாக்கு சேகரிக்கிறார்.
நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது 2-வது கட்ட பிரச்சாரத்தை நேற்று தொடங்கினார்.
அதனைத்தொடர்ந்து இன்று 2-வது நாளாக மாலை சூரம்பட்டி நால்ரோட்டில் இருந்து வீரப்பன் சத்திரம் பஸ் நிறுத்தம் வரை சீமான் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார். பின்னர் மாலை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.
இதேபோல் அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து நடிகை விந்தியா 3 நாள் பிரசாரத்தை நேற்று தொடங்கினார்.
இன்று 2-வது நாளாக மாலை எஸ்.கே.சி.ரோடு பகுதி, பெரிய வலசு, முனிசி பல் காலனி, அசோகபுரம், சின்ன மாரியம்மன் கோவில் போன்ற பகுதிகளில் பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார்.
இதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பாலகிருஷ்ணன் இன்று மாலை மரப்பாலம், கருங்கல்பாளையம், சம்பத் நகர் போன்ற பகுதிகளில் கை சின்னத்திற்கு ஆதரவு தெரிவித்து வாக்கு சேகரிக்கிறார்.
- பிரேமலதா விஜயகாந்த், சீமான் உள்ளிட்டோர் தொகுதியில் முகாமிட்டு தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.
- தேர்தல் பிரசாரம் வருகிற 25-ந்தேதி மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த 2 வாரமாக தீவிர தேர்தல் பிரசாரம் நடந்து வருகிறது. எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி., கே.எஸ்.அழகிரி, ப.சிதம்பரம், திருநாவுக்கரசு, ஜி.கே.வாசன், அண்ணாமலை, உள்ளிட்ட தலைவர்கள் பிரசாரம் செய்தனர்.
பிரேமலதா விஜயகாந்த், சீமான் உள்ளிட்டோர் தொகுதியில் முகாமிட்டு தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.
இதே போல் அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் என ஏராளமான பேர் தீவிர பிரசாரம் செய்து ஓட்டு வேட்டையாடி வருகின்றனர். தேர்தல் பிரசாரம் வருகிற 25-ந்தேதி மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. எனவே தற்போது தொகுதியில் அனல் பறக்கும் பிரசாரம் நடந்து வருகிறது.
ஒவ்வொரு நிர்வாகிகளும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் இறுதி கட்ட பிரசாரம் செய்து வருகிறார்கள். இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் தொகுதி முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் நிறைந்து காணப்படுகிறது.
தொகுதி முழுவதும் மேளதாளம் முழங்க பிரசாரம் நடந்து வருகிறது.
- அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகத்துக்கு ரூ.5 லட்சம் கோடி கடனை வைத்து விட்டு சென்றார்கள்.
- மிக விரைவில் ஓ.பன்னீர்செல்வம் ஏதேனும் ஒரு மாநிலத்துக்கு கவர்னர் ஆக்கப்படுவார்.
ஈரோடு :
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கை சின்னத்தில் போட்டியிடுகிறார். அவருக்கு தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் 2-வது நாளாக நேற்று பல்வேறு இடங்களுக்கும் வீதி வீதியாக சென்று வாக்குகள் சேகரித்தார்.
அப்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:-
நான் இந்த தொகுதியில் பார்த்தவரைக்கும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். இந்த தொகுதி மக்களாகிய நீங்கள் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அவரை வெற்றி பெறச்செய்தால், மாதம் தோறும் ஒரு நாள் நான் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வந்து உங்களுடன் இருப்பேன் என்ற உறுதியை இந்த நேரத்தில் அளிக்கிறேன்.
அ.தி.மு.க. சார்பில் ஒரு வேட்பாளர் நிற்கிறார். அவரை தொகுதிக்குள் பல இடங்களில் விடாமல் மக்கள் துரத்துகிறார்கள். அந்த விரக்தியில் இங்கு பிரசாரத்துக்கு வந்த முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏதோதோ பேசி இருக்கிறார். மீசை வச்ச ஆம்பளயா என்கிறார். மீசை இருந்தால் சவரம் செய்வாரோ என்னவோ... எடப்பாடி பழனிசாமியை போல நான் தரம்தாழ்ந்து பேச முடியாது. அப்படி பேசினால் அவரால் தாங்க முடியாது.
வேட்டியை பற்றி பேசிய அவர் எப்படி முதல்-அமைச்சர் ஆனார். கூவத்தூரை மறந்து விட்டீர்களா?. ஒரு எம்.எல்.ஏ. விட்டால் போதும் என்று பஸ் ஏறி தப்பித்து ஓடினாரே. ஒருவர் சுவர் ஏறி குதித்தாரே... அங்கே நீங்கள் எப்படி முதல்-அமைச்சர் ஆனீர்கள். இதோ இப்படித்தான் (சசிகலா காலில் எடப்பாடி பழனிசாமி நெடுஞ்சாண் கிடையாக விழுந்த படத்தை எடுத்துக்காட்டினார்). இவரை தெரிகிறதா... மீசை தெரிகிறதா... வேட்டி தெரிகிறதா...
நீங்கள் ஆட்சியில் இருந்தபோது இதுவரை வரலாற்றில் அல்லாத வகையில் தலைமை செயலகத்தில் சி.பி.ஐ. சோதனை நடந்ததே. அப்போது உங்கள் மீசை என்ன செய்தது. தூத்துக்குடியில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டபோது டி.வி.யில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன் என்றீர்களே அப்போது உங்கள் மீசை என்ன செய்தது. ஜெயலலிதா அம்மையார் இறந்த பிறகு கொடநாட்டில் 3 கொலைகள், தொடர் கொள்ளைகள் நடந்ததே அப்போது உங்கள் மீசை என்ன செய்தது.
அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகத்துக்கு ரூ.5 லட்சம் கோடி கடனை வைத்து விட்டு சென்றார்கள். ரூ.5 லட்சம் கோடி கடன் இருந்த சூழலிலும், கொரோனா நிவாரண நிதியாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.4 ஆயிரம் வழங்கப்பட்டது. கொரோனா நிவாரணமாக 12 பொருட்கள் கொடுக்கப்பட்டது. பெண்களுக்கு பஸ்சில் கட்டணமில்லா பயணம் செயல்படுத்தப்பட்டது.
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 19 மசோதாக்கள் கவர்னரின் கையெழுத்துக்காக அவரது அலுவலகத்தில் காத்திருக்கின்றன. தமிழக உரிமை சார்ந்த இந்த மசோதாக்களை கையெழுத்து போட்டு புதுடெல்லிக்கு அனுப்பி வைக்கும் கோரிக்கையுடன் எப்போதாவது எடப்பாடி கவர்னரை சந்தித்து இருக்கிறாரா... அவரும் ஓ.பன்னீர்செல்வமும் கவர்னரையும், பிரதமர் மோடியையும் சந்திப்பது தமிழக உரிமை சார்ந்த பிரச்சினைகளுக்காக அல்ல, அவர்களின் கட்சி பிரச்சினை சார்ந்தது.
பா.ஜனதா என்பது ஆடியோ, வீடியோ வைத்து நடக்கிற கட்சி. உன் வீடியோ என்னிடம் இருக்கு, உன் ஆடியோ என்னிடம் இருக்கு என மிரட்டி கட்சி நடக்கிறது. அதுமட்டுமின்றி அது கவர்னர் பயிற்சி மையமாக உள்ளது. முன்பு இல.கணேசன், அக்காள் தமிழிசை சவுந்தரராஜன், இப்போது சி.பி.ராதாகிருஷ்ணன் கவர்னர்களாக மாறி இருக்கிறார்கள். மிக விரைவில் ஓ.பன்னீர்செல்வம் ஏதேனும் ஒரு மாநிலத்துக்கு கவர்னர் ஆக்கப்படுவார். அவருக்கு இப்போதே நமது வாழ்த்துகள். எடப்பாடி பழனிசாமி தமிழக பா.ஜனதா தலைவர் ஆகிவிடுவார். அ.தி.மு.க.வை பா.ஜனதாவில் இணைத்து விடுவார். இவர்கள் எப்படி தமிழக மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பார்கள்?.
உங்களை அன்பாக, பணிவாக, பண்பாக, உரிமையாக, தலைவரின் மகனாக, அதைவிட கருணாநிதியின் பேரனாக கேட்கிறேன். தந்தை பெரியாரின் பேரனுக்கு, கருணாநிதியின் பேரன் நான் கேட்கிறேன். ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு கை சின்னத்தில் வாக்களியுங்கள். நன்றி.
இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
அவருடன் அமைச்சர்கள் எ.வ.வேலு, சு.முத்துசாமி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இளைஞர் அணி துறை செயலாளர் கே.ஈ.பிரகாஷ் மற்றும் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- திம்பம் வனப்பகுதியில் கடும் பனி பொழிவு நிலவி வருகிறது.
- வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டப்படியே சென்று வருகிறது.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தாளவாடி, திம்பம் மலை ப்பகுதி அமைந்துள்ளது. மைசூர்- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையான இந்த மலைப்பகுதி 27 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட அடர்ந்த வனப்பகுதியாக திகழ்ந்து வருகிறது.
அடர்ந்த வனப்பகுதியான தாளவாடி, ஆசனூர், திம்பம், தலமலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் காலை மற்றும் மதிய நேரங்களில் கடும் வெயில் வாட்டி வருகிறது.
ஆனால் இந்த வனப்பகுதியில் அடிக்கடி இரவு நேரங்களில் சாரல் மழையும் பெய்து வருகிறது. இதனால் இங்கு எப்போதும் குளிர்ந்த காற்று வீசி வருகிறது. மேலும் அடர்ந்த வனப்பகுதியான இந்த பகுதி பச்சை பசேலென காட்சி அளித்து வருகிறது.
இதை காண்பதற்காகவே தினமும் பொது மக்கள் பலர் கார், வேன், இருசக்கர வாகனங்களில் வந்து இயற்கை அழகை ரசித்து செல்கிறார்கள்.
இதேபோல் மாலை மற்றும் இரவு நேரங்களில் திம்பம் வனப்பகுதியில் கடும் பனி பொழிவு இருந்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக திம்பம் வனப்பகுதியில் கடும் பனி பொழிவு நிலவி வருகிறது. மேலும் அதிகாலை நேர ங்களில் ரோடுகள் தெரியாத வகையில் பனி பொழிகிறது. காலை 8 மணி வரை பனி பொழிவு உள்ளதால் இரு ட்டாக காட்சி அளிக்கிறது.
இதனால் திம்பம் வனப்பகுதி வழியாக வரும் வாகன ஓட்டிகள் காலை நேரங்களிலும் முகப்பு விளக்குகளை எரிய விட்டப்படியே சென்று வருகிறது.
கடும் பனி பொழிவு கார ணமாக வனப்பகுதி கிராம ங்களில் வசிக்கும் பொது மக்கள் குல்லா ஸ்சுவட்டர் அணிந்த படியே சென்று வருகிறார்கள்.
- சுவாமி கையில் அணிவிக்கப்பட்டு இருந்த வெள்ளி மோதிரத்தை பக்தர் ஒருவர் ஏலம் எடுத்தார்.
- அனைத்து பக்தர்களுக்கும் வாழைப்பழம் பிரசாதமாக வழங்கப்பட்டது.
சிவகிரி:
ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளக்கேத்தி, புது அண்ணாமலை பாளை யத்தில் பழந்தின்னி கருப்ப ண்ண ஈஸ்வர் என்ற பெயரில் சித்தர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மகா சிவராத்திரி விழா தொடங்கி நடந்து வருகிறது.
இைதயொட்டி பக்தர்கள் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து சாமிக்கு அபிசேகம் செயய்யப்பட்டது. இதை தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து சாமிக்கு 1008 வாழைப்பழ ங்கள் படைத்து பூஜை செய்யப்பட்டது.
இரவு கோவிலில் 108 இலைகளில் பச்சைபயறு பரிமாறி பெரிய பூஜை செய்யப்பட்டது. விழாவைக் காண வந்திருந்த ஆயிரக்க ணக்கான பக்தர்க ளுக்கு அன்ன தானம் வழங்கப்ப ட்டது.
இதை தொடர்ந்து பழந்தின்னி கருப்பண்ண ஈஸ்வர் முன்பு பூஜையில் வைக்கப்பட்ட எலுமிச்சை பழம் ஏலம் விடப்பட்டது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு எலுமிச்சை பழத்தை ஏலம் எடுக்க போட்டி போட்டனர்.
இதை தொடர்ந்து முடிவில் பக்தர் ஒருவர் ரூ.21 ஆயிரத்துக்கு ஒரு எலுமிச்ைச பழத்தை ஏலம் எடுத்தார். அதை தொடர்ந்து சாமி நெற்றியில் வைக்க ப்பட்ட 10 கிராம் வெள்ளி க்காசை மற்றொரு பக்தர் ரூ.27 ஆயிரத்திற்கு ஏலம் எடுத்தார்.
அதேபோல் சுவாமி கையில் அணிவிக்கப்பட்டு இருந்த 15 கிராம் எடை யுள்ள வெள்ளி மோதிரத்தை பக்தர் ஒருவர் ரூ.32 ஆயிரத்துக்கு ஏலம் எடுத்தார்.
விழாவில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் வாழைப்பழம் பிரசாதமாக வழங்கப்பட்டது.
- லாரி மோதியதில் மொபட்டில் சென்ற மணியும், அவருடைய உறவினரும் கீழே விழுந்தனர்.
- சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மணி பரிதாபமாக இறந்தார்.
ஈரோடு, பிப். 21-
ஈரோடு சூரம்பட்டி கிராமடை பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 55). தொழிலாளி. இவர் தனது உறவினர் ஒருவருடன் மொபட்டில் ஈரோடு ஈ.வி.என்.ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.
லாரி மோதி விபத்து
அவர்கள் ஸ்டோனிபாலம் பகுதியில் சென்ற போது முன்னால் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக லாரி மோதியதில் மொபட்டில் சென்ற மணியும், அவருடைய உறவினரும் கீழே விழுந்தனர்.
இதில் மணியின் மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மணி பரிதாபமாக இறந்தார். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு அரசு ஆஸ்பத்திரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
பின்னர் மணியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோ–தனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து லாரியின் டிரைவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- வேலை வாங்கி தருவதாக கூறி சரஸ்வதியுடம் மோசடி ெசய்தது தெரிய வந்தது.
- இது குறித்து பவானி போலீசில் புகார் செய்தார்.
பவானி:
பவானி மேற்கு தெரு 3-வது வீதிைய சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மனைவி சரஸ்வதி. பவானி கீரைக்கார வீதியை சேர்ந்தவர் முகமது. இவரது மகன் சலீம் (28).
இந்த நிலையில் சலீம், சரஸ்வதியிடம் ஈரோடு மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் உதவி அலுவலர் பணி வாங்கி தருவதாக கூறி ரூ.4 லட்சம் வாங்கியதாக கூறப்படுகிறது.
இைதயடுத்து சலீம் பல மாதங்களாகியும் வேலை வாங்கி தரவில்லை எனவும், சரஸ்வதி, சலீமிடம் தான் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டும் அவர் கொடுக்க வில்லை என சரஸ்வதி புகார் கூறினார்.
இது குறித்து சரஸ்வதி பவானி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டனர். இதில் சலீம் ஈரோடு மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் உதவி அலுவலர் பணி வேலை வாங்கி தருவதாக கூறி சரஸ்வதியுடம் மோசடி ெசய்தது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் மோசடி செய்த குற்றத்தி ற்காக சலீமை கைது செய்தனர். இதையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி ேபாலீசார் பவானி கிளை சிறையில் அடைத்தனர்.
- சிறுத்தை திடீரென காரின் முன்பு பாய்ந்து சென்றது.
- வாகன ஓட்டிகள் தங்களது செல்போனில் சிறுத்தையை படம் பிடிக்க ஆரம்பித்தனர்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்ச ரகங்கள் உள்ளன. இந்த வனப்பகுதிகளில் யானை. சிறுத்தை, மான், கரடி உள் பட பல்வேறு வன விலங்கு கள் வசித்து வருகிறது.
மைசூர்- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையாக உள்ளதால் இந்த வனப்பகுதி ரோட்டில் தமிழகம் மற்றும் கர்நாடகாவுக்கு தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகிறது.
இந்த பகுதியில் உள்ள யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி வெளியேறி வருகிறது. ரோட்டில் உலா வரும் யானைகள் அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகளை துரத்தும் சம்பவங்களும் நடக்கிறது.
மேலும் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் சிறுத்தைகளும் அடிக்கடி வனப்பகுதியை விட்டு வெளியேறி ரோட்டில் சுற்று கிறது. அதே போல் அந்த பகுதி ரோட்டில் மேடான பகுதிகளில் அமர்ந்து கொள்வது வாடிக்கையாக இருந்து வருகிறது.
இந்த ரோட்டில் பண்ணாரி சோதனை சாவடியும், பிரசித்தி பெற்ற பண்ணாரி கோவிலும் உள்ளதால் பக்தர்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது.
இந்த நிலையில் சத்தியமங்கலம் வனச்சரக த்துக்கு உட்பட்ட பண்ணாரி கோவில் அருகே உள்ள சத்தியமங்கலம்- மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று காலை பட்டப்பகலில் சிறுத்தை வனப்பகுதியை விட்டு வெளியேறி ரோட்டுக்கு வந்தது.
அப்போது சத்தியமங்கல த்தில் இருந்து தாளவாடிக்கு ஒரு கார் சென்று கொண்டிருந்தது. இதையடுத்து அந்த பகுதியில் இருந்த சிறுத்தை திடீரென காரின் முன்பு பாய்ந்து சென்றது.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த காரில் வந்தவர்கள் உடனே காரை நிறுத்தினர். அந்த வழியாக வந்த மற்ற வாகன ஓட்டிகள் தங்களது செல்போனில் சிறுத்தையை படம் பிடிக்க ஆரம்பித்தனர்.
இதை ெதாடர்ந்து சிறுத்தை அங்கேயே நின்று கொண்டு இருந்தது. சிறிது நேரத்துக்கு பிறகு சிறுத்தை வனப்பகுதிக்குள் சென்றது. பட்ட பகலில் சிறுத்தை நட மாட்டத்தால் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்ச த்துடன் சென்று வருகின்ற னர்.
- வீட்டிலிருந்து வெளியில் சென்ற ஆறுமுகன் அதன் பின் வீடு திரும்பவில்லை.
- மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தது தெரிய வந்தது.
ஈரோடு:
திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலை அடுத்துள்ள ராமலிங்க புரத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (46). சலவைத் தொழிலாளி.
இவரது மனைவி பாப்பா (41). கடந்த ஆண்டு ஏற்பட்ட வாகன விபத்தில் ஆறுமுகத்துக்கு தலையில் அடிப்பட்டது. தொடர்ந்து ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
விபத்துக்கு பின்னர் அவருக்கு மன நல பாதிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் அடிக்கடி வீட்டை விட்டு வெளியில் சென்றுவிடுவார். பின்னர் அவராகவே திரும்பி வந்து விடுவார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டிலிருந்து வெளியில் சென்றவர் அதன் பின் வீடு திரும்பவில்லை. ஆறுமுகத்தின் மனைவி பாப்பா மற்றும் உறவினர்கள் அவரை தேடி வந்த நிலையில் அவர் கொடுமுடி பஸ்சில் சென்றது தெரிய வந்தது.
இதையடுத்து கொடுமுடி பகுதியில் அவரை தேடி வந்த போது கொடுமுடி காவிரி ஆற்றங்கரை இரும்பு பாலம் அருகில் மரத்தில் ஆறுமுகம் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தது தெரிய வந்தது.
இது குறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- இதுவரை 20 சதவீதம் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்பட்டு விட்டது.
- இன்னும் 3 நாட்களுக்குள் பூத் சிலிப் வழங்கி முடிப்பார்கள்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதியில் 238 ஓட்டுச்சாவடிகளில் வரும் 27-ந் தேதி இடைதேர்தல் நடக்கிறது. இத்தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,11,025 பேர், பெண் வாக்காளர்கள் 1,16,497 பேர், மற்றவர்கள் 25 பேர் என 2 லட்சத்து 27,547 வாக்காளர்கள் உள்ளனர்.
வாக்காளர்கள் தகவல் சீட்டு எனப்படும் பூத் சிலிப் ஓட்டுச்சாவடி நிலை அலுவ லர்கள் நேற்று முன்தினம் முதல் வீடு, வீடாக சென்று வழங்கி வருகின்றனர்.
இச்சீட்டில், வாக்காளர் பெயர், வாக்காளர் அடையாள அட்டை எண், வாக்காளர் பெயர் இடம் பெற்றுள்ள பாகத்தின் பெயர், பாகம் எண், வரிசை எண், ஓட்டுச்சாவடியின் பெயர், தேர்தல் நாள், ஓட்டுப்பதிவு நேரம் ஆகியவை இருக்கும்.
இதுபற்றி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமார் கூறுகையில், இதுவரை 20 சதவீதம் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்பட்டு விட்டது. இன்னும் 3 நாட்களுக்குள் பூத் சிலிப் வழங்கி முடிப்பார்கள்.
வாக்காளர்கள் வீட்டில் இல்லை உள்ளிட்ட காரணத்துக்காக பூத் சிலிப்பை வழங்க இயலா விட்டால் ஓட்டுச்சாவடியில் மீதமுள்ள பூத் சிலிப் வைக்கப்பட்டிருக்கும். ஓட்டுப்பதிவின்போது வாக்காளர்கள் வந்தால் அவர்களுக்கு வழங்கப்படும் என்றார்.
- தலைமை ஆசிரியை சாந்தி ஸ்டேசனரி பொருட்கள் வாங்க கரூர் சென்றவர் அதன்பின் வீடு திரும்பவில்லை.
- கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அடுத்த சாலைப்புதூர் மெயின் வீதியை சேர்ந்தவர் சாந்தி (52). இவர் வடுகனூர் அரசு ஆரம்ப பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் பள்ளிக்கு தேவையான ஸ்டேசனரி பொருட்கள் வாங்கி வருவதற்காக கரூர் சென்று வருவதாக சம்பவத்தன்று கூறி சென்றுள்ளார். ஆனால் அதன்பின் அவர் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை எனத்தெரிகிறது.
இதையடுத்து சாந்தியின் மகன் சூர்யா (26) அளித்த புகாரின் பேரில் கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சாந்தியைத் தேடி வருகின்றனர்.






