search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "on value addition of"

    • நாதிபாளையம் கிராமத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி நடைபெற்றது.
    • வாழையில் ஊட்டசத்து பானம் தயார் செய்து செயல்விளக்கமாக செய்து காண்பித்தார்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே நாதிபாளையம் கிராமத்தில் வேளாண்மை உழவர் நலத்துறையின் மூலம் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின்கீழ் வேளாண்விளை பொருட்களில் மதிப்புக் கூட்டுதல் தொழில் நுட்பங்கள் பற்றி விவசாயிகளுக்கு பயிற்சி கோபி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் முரளி வழிகாட்டு தலின் படி விவசாயிகள் ஆலோசனைக்குழு தலைவர் ரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது.

    சிறப்பு பயிற்சியாளராக கலந்து கொண்ட வேளாண் அறிவியல் நிலைய மனையில் விஞ்ஞானி சிவா சிறுதானிய சத்துமாவு தயாரித்தல் மற்றும் சிறுதானிய சத்து உருண்டை தயாரித்தல் போன்ற தொழில்நுட்பங்களை எடுத்துக் கூறியதுடன், சிறுதானிய சத்துமாவு கஞ்சி மற்றும் நமது பகுதியில் அதிக அளவில் விளையும் வாழையில் ஊட்டசத்து பானம் தயார் செய்து செயல்விளக்கமாக செய்து காண்பித்தார்.

    இப்பயிற்சியில் வேளாண் அலுவலர் சந்திரசேகரன், வேளாண் பொறியியல் துறை உதவி பொறியாளர் சுப்பிரமணியம், உதவி வேளாண்மை அலுவலர் ஜனரஞ்சனி, உதவி தோட்டக்கலை அலுவலர் சுரேஷ் உள்பட 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை கோபி வட்டார தொழில்நுட்ப மேலாளர் திருவரங்கராஜ், உதவி தொழில்நுட்ப மேலாளர் அன்பழகன் மற்றும் ஆதவன் ஆகியோர் செய்திருந்தனர்.

    ×