என் மலர்
ஈரோடு
அதன் தொடர்ச்சியாக கொடுமுடியில் புஷ்பகர விழா நடைபெற்றது. அகில பாரத துறவிகள் பேரவை அமைப்பாளர் ராமனந்த சுவாமிகள் தலைமை தாங்கி விழாவை நடத்தினார். முன்னதாக கொடுமுடி புதுசத்திர மண்டபத்தில் வெளிமாநில துறவிகள் ஒன்று கூடி காவிரி புஷ்பகர குறித்து சொற்பொழிவாற்றினர்.
தொடர்ந்து நெடூர் அமர்நாத் சுவாமிகள், கரூர் பாலமுருக சுவாமிகள், கோவையை சேர்ந்தநிர்மலா மாதா சுவாமிகள், குஜராத்தை சேர்ந்த அம்பாபுரி சுவாமிகள் மற்றும் இந்து மக்கள் கட்சி அர்ஜீன் சம்பத் ஆகியோர் உள்பட பக்தர்கள் அனைவரும் ஊர்வலமாக காவிரி ஆற்றுக்கு வந்தனர்.
அதனை தொடர்ந்து கொடுமுடி ஆதினம் பிரபு சிவாச்சாரியர் வேதங்களை ஓதினார். தொடர்ந்து துறவிகள், சிவாச்சாரி யார்கள், பக்தர்கள், பொதுமக்கள் அனைவரும் காவிரி ஆற்றில் மலர்கள் தூவி வழிபட்டு புனித நீராடினர்கள்.அதன் பின்னர் அனைவரும் அருள்மிகு மகுடேஸ்வரர் கோவிலுக்கு சென்று வழிபட்டனர். மதியம் புதுச்சத்திரம் மண்டபத்தில் அன்னதானம் நடைபெற்றது. இந்நிகழ்சியில் ஏரராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
பவானி கூடுதுறையில் நடைபெறும் காவிரி புஷ்கர விழாவில் கலந்து கொள்வதற்காக பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் ஈரோட்டுக்கு வந்தார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கும் பாரதிய ஜனதாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இதனால் பாரதிய ஜனதாவுக்கு எந்த ஆதாயமும் இல்லை.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், காவிரி பிரச்சனையில் தமிழகத்தின் உரிமையை பெறவும் மத்திய அரசை தமிழக பாரதிய ஜனதா வலியுறுத்தும். நதிகளை இணைக்க மாநில அரசு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
கோர்ட்டு உத்தரவுபடி வருகிற கல்வி ஆண்டு முதல் நவோதயா பள்ளிகளை தமிழத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அமல்படுத்த வேண்டும்.
நீட் தேர்வு விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம். வருகிற கல்வி ஆண்டு முதல் அனைத்து மாவட்டங்களிலும் பயிற்சி மையங்கள் அமைத்து பள்ளி மாணவ- மாணவிகளுக்கு பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு வானதி சீனிவாசன் கூறினார்.
கோபி அடுத்த அரசூர் தட்டாம்புதூரை சேர்ந்தவர் மாரப்பன் (வயது60). கட்டிட மேஸ்திரி வேலை பார்த்து வந்தார். இவருக்கு குடிபழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
தனது மனைவியுடன் மாரப்பன் வசித்து வந்துள்ளார். ஏற்கனவே மாரப்பன் வீட்டில் இருக்கும் போது தற்கொலை செய்வதற்காக முயற்சி செய்துள்ளதாக தெரிகிறது.
வாழ்க்கையில் வெறுப்படைந்த மாரப்பன் சம்பவத்தன்று தனது வீட்டில் கயிற்றை கொண்டு தூக்குப்போட்டு கொண்டார்.
அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அவரை பார்த்து அதிர்ச்சியடைந்து, 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். 108 ஆம்புலன்சு உதவியுடன் கோபி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்து சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
இதுகுறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அணைப் பகுதிகளான அந்தியூர் அருகே உள்ள வரட்டுப்பள்ளம் அணை, டி.என்.பாளையம் அருகே உள்ள குண்டேரிபள்ளம் அணை மற்றும் சத்தியமங்கலம் அருகே உள்ள பெரும்பள்ளம் அணை பகுதிகளிலும் மழை பெய்தது.
வரட்டுப்பள்ளம் அணைப்பகுதியில் 46 மி.மீ., பெரும்பளளம் அணைப் பகுதியில் 24 மி.மீ. குண்டேரிபள்ளம் அணைப்பகுதியில் 12மி.மீ.,கொடிவேரி அணைப் பகுதியில் 12.2மி.மீ. மழையும் பெய்தது.
இந்த மழையால் அணைகளுக்கு தண்ணீர் வருகை இல்லாவிட்டாலும் வனப் பகுதி உள்ளே நீரோடை களில் தண்ணீர் ஓடுகிறது. வன விலங்குகளின் குடிநீர் பஞ்சமும் தீர்ந்து உள்ளது.
அந்தியூர்:
அந்தியூர் அருகே உள்ள வெள்ளி திருப்பூர் அடுத்த சிந்தாகவுண்டனூரை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 62) இவரது மனைவி பெயர் தவசியம்மாள்(55).
இவர்களுக்கு செந்தில் குமார்(35),குமார்(30) என்ற 2 மகன்களும், சக்தி (28) என்ற ஒரு மகளும் உள்ளனர்.
பழனிசாமிக்கு வனப்பகுதியையொட்டி 2 ஏக்கர் தோட்டம் உள்ளது. தோட்டத்தில்அவர் கம்பு பயிரிட்டிருந்தார். இரவில் காவல் பணிக்காக தோட்டத்தில் படுத்துக் கொள்வாரம் காலையில் எழுந்து வீட்டுக்கு சென்று விடுவார். நேற்றும் வழக்கம்போல் விவசாயி பழனிசாமி தோட்டத்துக்கு சென்றார். அங்கேயே இரவில் படுத்துக் கொண்டார்.
இன்று அதிகாலை 1 மணியளவில் காட்டு யானை ஒன்று புகுந்தது. யானை பிளிறல் சத்தம் கேட்டதும் பழனி சாமி கண்விழித்தார்.அருகே யானை நின்று கொண்டிருப்பதை கண்டு திடுக்கிட்டார். யானையிடமிருந்து தப்பிக்க எழுந்து ஓடினார். ஆனால் யானை அவரை விரட்டி துதிக்கையால் தூக்கி வீசியது.இதில் படுகாயம்அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பிறகு அந்த யானை தோட்டத்தில் மேய்ந்து விட்டு அங்கிருந்து சென்றுவிட்டது.
காலை அங்கு சென்ற பார்த்தபோது பழனிசாமி இறந்துகிடந்ததை கண்டு திடுக்கிட்டனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் வெள்ளி திருப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர் பிறகு பழனிசாமி உடலை மீட்டு அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டையில் உள்ள அரசு நிதி உதவி பெறும் பெரியசாமி தொடக்கப் பள்ளியில் மாநிலங்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.27 லட்சம் மதிப்பில் பள்ளி கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளது.
இதன் திறப்பு விழா நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கினார். முதன்மை கல்வி அதிகாரி பாலமுரளி முன்னிலை வகித்தார். சத்தியபாமா எம்.பி. குத்துவிளக்கேற்றி வைத்தார்.
விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் கலந்து கொண்டு பள்ளி கட்டிடங்களை ரிப்பன் கத்தரித்து திறந்து வைத்தனர்.
படிக்கும் மாணவர்களுக்கு எதிர்காலத்தில் ஒரு உத்திரவாதத்தை தரும் வகையில் பள்ளி கல்வி துறையில் பல்வேறு மாற்றங்களை உருவாக்க இருக்கிறோம்.
மத்திய அரசு கொண்டு வரும் எந்த தேர்வாக இருந்தாலும் அதை சந்திக்க தயாராக இருக்கிறோம். மாணவர்கள் அந்த தேர்வை சந்திக்கும் வகையில் சிறந்த கல்வியாளர்களை கொண்டு சிறந்த கல்வியாளர்கள் மூலம் பயிற்சி அளிப்போம். சென்னையில் இருந்து இணை இயக்குனர்களை ஆந்திரா, ராஜஸ்தான், குஜராத் போன்ற மாநிலங்களுக்கு அனுப்பி வைத்துள்ளோம். அங்கு மத்திய அரசின் தேர்வை சந்திக்கும் வகையில் சிறந்த பயிற்சி அளிக்கும் பேராசிரியர்களை தேர்வு செய்து வரவழைப்போம். இந்த மாத இறுதிக்குள் இந்த பணிகளை தொடங்கி விடுவோம்.
தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரம் ஒன்றியம், நகரங்கள் வாயிலாக 412 மையங்கள் அமைத்து வீடியோ கான்பரன்சிங் மூலம் பயிற்சி அளிக்கவும் ஏற்பாடு செய்து உள்ளோம். இந்திய அளவில் தமிழகத்தை கல்வி துறையில் முன்னோடி மாநிலமாக திகழ பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
விழாவில் ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் என்.கிருஷ்ணராஜ் உள்பட அரசு அதிகாரிகள் அ.தி.மு.க. நிர்வாகிகள் மாணவர்கள் பெற்றோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக பெரியசாமி பள்ளி கல்வி தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான என்.ஆர்.கோவிந்தராஜ் வரவேற்றார். முடிவில் தொடக்க கல்வி அதிகாரி முத்து கிருஷ்ணன் நன்றி கூறினார்.
விழாவில் பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடந்தது.
ஈரோடு:
ஈரோடு பெருந்துறை ரோடு வீரப்பம் பாளையம் பிரிவு கணபதி நகரில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது தலையில் கல்லால் பலமாக தாக்கி உள்ளனர். இதனால் தலை முழுவதும் சிதைந்து ரத்தம் வடிந்து கொண்டு இருந்தது.
இன்ற காலை 9 மணியளவில் தான் அவர் கொலை செய்யப்பட்டிருக்க கூடும் என தெரிகிறது.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு வீரப்பன்சத்திரம் போலீசார் விரைந்து சென்றனர். கொலை செய்யப்பட்டு கிடந்த முதியவர் உடலை பார்த்து அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்தனர்.
கொலை செய்யப்பட்ட முதியவர் யார்? என்று உடனடியாக தெரியவில்லை. அவர் வெள்ளை கலர் கோடு போட்ட முழுக்கை சட்டையும், மெரூன்கலர் பேண்டும் அணிந்திருந்தார். அவர் அந்த பகுதியை சேர்ந்தவரா? அல்லது வெளியூரை சேர்ந்தவரா? என தெரியவில்லை.
அவரை கொலை செய்த மர்ம ஆசாமிகள் யார்? என்றும் தெரியவில்லை. முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு காரணம் ஏதும் உண்டா? என போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் துப்பறியும் போலீஸ் மோப்ப நாய் வைதேகி வரவழைக்கப்பட்டது. அதுகொலை நடந்த இடத்திலிருந்து 1½ கிலோ மீட்டர் தூரம் ஓடியது. பிறகு ஒரு ஆட்டோவை சுற்றி வந்தது. மீண்டும் கொலை நடந்த இடத்துக்கே வந்து விட்டது.
இதனால் கொலையாளிகள் ஆட்டோவில் ஏறி தப்பி சென்றார்களா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொலை செய்யப்பட்ட முதியவர் உடல் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலையில் கடந்த சில நாட்களாக பலத்த மழை கொட்டி வருகிறது.
ஊட்டியில் உள்ள முக்கிய அணையான பில்லூர் அணை நிரம்பியது. இதையொட்டி அணையிலிருந்து பவானி ஆற்றுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.
அணைக்கு வரும் 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் பவானி ஆற்றுக்கு திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இந்த தண்ணீர் யாவும் பவானிசாகர் அணைக்கு பாய்ந்து வந்து கொண்டிருந்தது.
நேற்று மாலை வரை அணையின் நீர்மட்டம் 71.02 அடியாக இருந்தது. இன்று (திங்கட்கிழமை) காலை 9 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்து 74 அடியாக இருந்தது.
அணைக்கு வினாடிக்கு 14 ஆயிரத்து 291 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதே அளவில் தண்ணீர் வந்தால் அணையின் நீர்மட்டம் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்திருப்பதால் ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் அதிகபட்சமாக 46 மி.மீட்டர் மழை பதிவாகி இருந்தது.
இதேபோல் வனப் பகுதிகளான சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி பகுதியிலும் பரவலாக மழை பெய்தது.
அம்மாபேட்டை:
ஈரோடு மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் இன்னும் குறையவில்லை. இதுவரை 26-க்கும் மேற்பட்டவர்கள் டெங்கு நோய்க்கு பலியாகி உள்ளனர்.
மேலும் நூற்றுக்கணக்கான பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இப்போது மேலும் ஒரு பள்ளி மாணவி டெங்கு நோய்க்கு பலியாகி உள்ளார்.
ஈரோடு மாவட்டம் வெள்ளிதிருப்பூர் அருகே உள்ள மூளையூரை சேர்ந்தவர் செந்தில்குமார் இவரது மகள்சுதர்ஷினி (வயது 9) இவள் அருகே உள்ள விராலி காட்டூர் அரசு பள்ளியில் 4-ம் வகுப்புபடித்து வந்தாள்.
மாணவி சுதர்ஷினிக்கு கடந்த ஒருவாரமாக காய்ச்சல் அடித்தது. உள்ளூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தாள்.
அங்கு அவளுக்கு டெங்கு அறிகுறி தென்படவே உடனே மேல்சிகிச்சை அளிக்க அறிவுறுத்தினர். நேற்று இரவு மழை பெய்ததால் இன்று காலையில் ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்க முடிவு செய்திருந்தனர்.
அதன்படி இன்று அதிகாலை 5 மணியளவில் மாணவியை ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் மாணவி சுதர்ஷினி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மகளின் உடலை கண்டு பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதகாட்சி பரிதாபமாக இருந்தது.
ஈரோடு மாவட்டத்தில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் டெங்கு நோயை பரப்பும் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தி ஆகும் எனவே முக்கிய இடங்களில் கொசுக்களை ஒழிக்க கொசு மருந்து புகை அடிக்க வேண்டும் டெங்கு நோயை கட்டுப்படுத்த வேண்டும் என ஈரோடு மாவட்ட மக்கள் உள்ளாட்சி நிர்வாகத்தை கேட்டுக்கொண்டுள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு பெரியார்நகர் அ.தி.மு.க.சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு பகுதியில் நடந்தது. கூட்டத்துக்கு மாநகர் மாவட்ட செயலாளர் கே.வி.ராமலிங்கம் தலைமை தாங்கினார். எம்.பி.செல்வகுமார சின்னையன், பகுதி செயலாளர்கள் பெரியார் நகர் மனோகரன், சூரம்பட்டி ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளரும், நடிகருமான சிங்கமுத்து கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது.-
நடிகர் கமலஹாசன் கடந்த சில நாட்களாக அ.தி.மு.க.வை தொடர்ந்து குறை கூறிவருகிறார். இவர் பேசுவதில் அண்ணன் விஜயகாந்தை போன்றவர்.காரணம் இரண்டு பேரும் பேசுவது யாருக்கும் புரியாது.
கமல் அரசியலுக்கு தாராளமாக வரலாம். ஆனால் மக்கள் பணியாற்றும் இந்த அரசை குறை கூறுவதை நிறுத்தி கொள்ள வேண்டும். முதலில் நீங்கள்(நடிகர் கமலஹாசன்) களத்தில் இறங்கி மக்கள் பணியாற்றுங்கள். அப்புறம் அரசியல் பணியாற்றலாம். இது போதாதது என்று ரஜினியையும் தன்னுடன் அரசியலில் இணைந்து கொள்வேன் என்கிறார்.
ஜனநாயக நாட்டில் மக்கள் ஓட்டு போட்டால் யாரும் வேண்டுமானாலும் முதல்-அமைச்சர் ஆகலாம். தமிழ்நாட்டில் அ.தி.மு.க.வை தவிர மக்கள் வேறு யாருக்கும் வாக்களிக்க மாட்டார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த நாட்டுக்கு தேவையா?.

நடிகர் ரஜினிகாந்த இளம் வயதில் ரத்த ஓட்டம் இருக்கும் போது நடிக்க போய்விட்டார்.இப்போது வயதாகி முதுமை கண்டு விட்டார். இனி அவர் அரசியலுக்கு வந்து எந்த பலனும் இல்லை.
இப்போது முடிந்தால் மக்களுக்கு சேவை செய்வேன் என்று ரஜினி கூறுகிறார். நீங்கள் சம்பாதித்த பணத்தில் இது வரை எவ்வளவு பணத்தை மக்களுக்காக செலவு செய்தீர்கள்?. நீங்கள் நடியுங்கள், சம்பாதிங்கள். ஆனால் ஆட்சி செய்ய ஆசைப்படாதீர்கள். இல்லை என்றால் சொத்துகளை எல்லாம் ஏழைகளுக்கு எழுதி வைத்து விட்டு அரசியலுக்கு வாருங்கள்.
நடிகர்கள் கமலஹாசன், ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் மக்கள் ஏற்க மாட்டார்கள். தமிழக மக்கள் தன்மானம் மிக்கவர்கள். இனி தமிழ்நாட்டை தமிழன் தான் ஆள்வான்.
இவ்வாறு நடிகர் சிங்கமுத்து பேசினார்.
டி.என்.பாளையம்:
அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு சத்தியமங்கலத்தில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. அதில் சிறப்புரையாற்ற பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வந்தார்.
முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வரும் கல்வியாண்டு முதல் மாற்றியமைக்கப்பட்ட பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும். மாநிலம் முழுவதும் நடைபெற்ற ஆய்வில் 10 சதவீதம் மாணவ-மாணவிகள் கற்றல் குறைபாடு உள்ளவர்களாக கண்டறியப்பட்டுள்ளது.
எதிர் வரும் காலங்களில் எந்த தேர்வானாலும் சந்திக்கும் வகையில் மாநிலம் முழுவதும் 412 பயிற்சி மையங்கள் ஏற்படுத்தப்படும்.
சி.பி.எஸ்.இ பாடத் திட்டத்திற்கு இணையாக தமிழர் பண்பாடு, கலாச்சாரம், தொன்மை மாறாமல் பாடத்திட்டம் மாற்றி அமைக்கும் பணி தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. நவம்பர் மாத இறுதிக்குள் முடிவு பெறும்.
மேலும் அனந்த கிருஷ்ணன் தலைமையிலான கல்விக் குழுவினர் 6 மாநிலங்களுக்கு சென்று பாடத்திட்டத்தை ஆய்வு செய்யும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது சிட்கோ முன்னாள் வாரியத் தலைவர் சிந்து ரவிச்சந்திரன், நம்பியூர் தம்பி சுப்ரமணியம், ஈரோடு புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் அந்தியூர் எஸ்.பி.ரமேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.
ஈரோடு:
மத்திய அரசின் நீட் தேர்வை கண்டித்து தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இந்த நிலையில் அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாரதீய ஜனதா கட்சியினர் இன்று தமிழகம் முழுவதும் நீட் தேர்வுக்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஈரோட்டில் ஜவான்பவன் முன்பு பாரதிய கட்சியினர் நீட் தேர்வுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மாவட்ட தலைவர் சிவ சுப்பிரமணியன் தலைமை தாங்கி பேசினார். மாவட்ட பொதுச் செயலாளர் குரு குணசேகரன் முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் சிவகாமி பரமசிவம் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். மேலும் மாநில வக்கீல் அணி பொறுப்பாளர் ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தலைமை தாங்கிய மாவட்ட தலைவர் சிவ சுப்பிரமணியன் பேசும்போது, ‘‘காங்கிரஸ் கட்சி காமராஜர் வளர்த்த கட்சி. ஆனால் இப்போது குஷ்பூ, நக்மா போன்ற நடிகைகளை நம்பி தான் உள்ளது. தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறது. கல்வி தரம் உயர்த்துவது தான் நீட் தேர்வு’’ என்று கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், ‘‘போடாதே போடாதே தி.மு.க.வே இரட்டை வேடம் போடாதே’’. ‘‘வேண்டும் வேண்டும் விசாரணை வேண்டும் ஏழை மாணவி அனிதா சாவுக்கு விசாரணை வேண்டும்’’ உள்பட பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.






