என் மலர்
செய்திகள்

பவானிசாகர் அணை ஒரே நாளில் 3 அடி உயர்ந்தது
பில்லூர் அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீரால், பவானிசாகர் அணை நீர்மட்டம் இன்று காலை 9 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்து 74 அடியாக இருந்தது.
ஈரோடு:
பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலையில் கடந்த சில நாட்களாக பலத்த மழை கொட்டி வருகிறது.
ஊட்டியில் உள்ள முக்கிய அணையான பில்லூர் அணை நிரம்பியது. இதையொட்டி அணையிலிருந்து பவானி ஆற்றுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.
அணைக்கு வரும் 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் பவானி ஆற்றுக்கு திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இந்த தண்ணீர் யாவும் பவானிசாகர் அணைக்கு பாய்ந்து வந்து கொண்டிருந்தது.
நேற்று மாலை வரை அணையின் நீர்மட்டம் 71.02 அடியாக இருந்தது. இன்று (திங்கட்கிழமை) காலை 9 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்து 74 அடியாக இருந்தது.
அணைக்கு வினாடிக்கு 14 ஆயிரத்து 291 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதே அளவில் தண்ணீர் வந்தால் அணையின் நீர்மட்டம் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்திருப்பதால் ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. வரட்டுப்பள்ளம் அணை பகுதியில் அதிகபட்சமாக 46 மி.மீட்டர் மழை பதிவாகி இருந்தது.
இதேபோல் வனப் பகுதிகளான சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி பகுதியிலும் பரவலாக மழை பெய்தது.

Next Story