என் மலர்
ஈரோடு
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் தவிட்டுபாளையத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன். இறந்து விட்டார். இவரது மனைவி லட்சுமி. கூலிதொழிலாளி. இவர்களது மகன் பூபதி (வயது21).
கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பேஷன் டெக்னாலஜி 3-ம் ஆண்டு படித்து வந்தார். பூபதி வீட்டில் வறுமை காரணமாக படித்து கொண்டே, அவ்வப்போது கல்லூரி விடுமுறை நாட்களில் வேலைக்கும் சென்று வந்தார்.
திருமணம் போன்ற விஷேசங்களுக்கு கேட்டரிங் வேலை செய்வாராம். இந்நிலையில் கடந்த 26-ந்தேதி கேட்டரிங் வேலைக்காக பூபதி நண்பர்களுடன் சேர்ந்து மதுரைக்கு ரெயிலில் சென்றுள்ளார்.
பின்னர் பூபதி வேலை முடிந்து நேற்று இரவு தூத்துக்குடி- மைசூர் செல்லும் ரெயிலில் புறப்பட்டு ஈரோட்டுக்கு வந்து கொண்டிருந்தார். இன்று அதிகாலை 1 மணியளவில் ரெயில் சாவடிபாளையம் பகுதியில் வந்து கொண்டிருந்தது.
அப்போது பூபதி தூக்க கலக்கத்தில் எழுந்து ரெயிலின் வாசல் பகுதிக்கு வந்தார். திடீரென அவர் ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்துள்ளார். இதில் அவர் பரிதாபமாக இறந்தார். நண்பர்கள் மற்றும் பயணிகள் உச்சலிட்டனர்.
ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு ஈரோடு ரெயில்வே சப்- இன்ஸ் பெக்டர் சந்தானம் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர்.
அங்கு சாவடிபாளையம் தண்டவாளத்தில் இறந்து கிடந்த பூபதியின் உடலை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பூபதியின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் பொதுமக்களுக்கு ஆதார் அட்டைக்காக புகைப் படம் எடுக்கும் பணி எல்காட் நிறுவனத்தின் மூலமாக நிரந்தர ஆதார் பதிவு மையங்கள் அமைக்கப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
பொதுமக்கள் தங்களது ஆதார் அட்டையில் திருத்தங்கள் ஏதும் செய்ய விரும்பினால் இம்மையங்களுக்குச் சென்று கைரேகை அல்லது கருவிழியினைப் பதிவு செய்து தங்களது பெயர்,பிறந்ததேதி, பாலினம், முகவரி, கைபேசி எண் மற்றும்மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை உரிய ஆதாரங்களுடனும், உரியசேவை கட்டணம் செலுத்தியும் திருத்தம் செய்து கொள்ளலாம்.
மேலும், புகைப்படம், கைவிரல்ரேகை மற்றும் கருவிழி ஆகியவற்றையும் உரியசேவை கட்டணம் செலுத்தி புதுப்பித்துக் கொள்ளலாம். ஞாயிறு விடுமுறை நாள் மற்றும் அரசு விடுமுறை நாட்கள் தவிர பிற நாட்களில் ஆதார் புகைப்படம் எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
ஆதார் பதிவு மையங்களின் விபரம் வருமாறு:-
1. மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஈரோடு.
2. மாநகராட்சி அலுவ லகம், ஈரோடு
3.முதலாவது மண்டல அலுவலகம், சூரியம் பாளையம்
4. இரண்டாவதுமண்டல அலுவலகம், பெரியசேமூர்
5. மூன்றாவது மண்டல அலுவலகம், சூரம்பட்டி
6. நான்காவது மண்டல அலுவ லகம், காசிபாளையம்
7. நகராட்சி அலுவலகம், பவானி
8. நகராட்சி அலுவலகம், கோபிசெட்டிபாளையம்
9. நகராட்சி அலுவலகம், புஞ்சை புளியம்பட்டி
10. நகராட்சி அலுவலகம், சத்தியமங்கலம்.
ஈரோடு:
பஸ் கட்டண உயர்வை முழுமையாக திரும்ப பெற வலியுறுத்தி இன்று (திங்கட்கிழமை) மாநிலம் முழுவதும் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்அறிவித்து இருந்தார்.
அதன்படி இன்று தமிழகம் முழுவதும் தி.மு.க.வினரும், கூட்டணி கட்சியினரும் மறியல் போராட்டம் நடத்தினர். ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் உள்பட மாநகரில் 8 இடங்களிலும், ஒன்றிய பகுதிகளான பெருந்துறை, சென்னிமலை ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி உள்பட 7 இடங்கள் என 15 இடங்களிலும், ஈரோடு வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட கோபி, பவானி, அம்மாபேட்டை உள்பட 24 இடங்களிலும் என ஈரோடு மாவட்டம் முழுவதும் 39 இடங்களில் மறியல் போராட்டம் நடந்தது.
இதில் தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகளும்,தொண்டர்களும் கலந்து கொண்டனர். கூட்டணி கட்சியை சேர்ந்த காங்கிரஸ், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, விடுதலைசிறுத்தைகள் கட்சி, ம,தி.மு.க, முஸ்லிம் லிக், இந்திய கம்யூனிஸ்ட்டு உள்பட கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் பங்கேற்றனர்.
கோபியில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் கோபி பஸ் நிலையம் முன்பு மறியல் போராட்டம் நடத்தினர். பஸ்களை வழி மறித்து அவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்ட னர். போராட்டத்தில் தி.மு.க. நகர செயலாளர் நாகராஜன், முன்னாள் நூற்பாலை தலைவர் காளிப்பட்டி மணி, மருத்துவர் அணி டாக்டர் செந்தில்நாதன், மாவட்ட அவைத்தலைவர் பெருமாள்சாமி, ம.தி.மு.க. மேற்கு மாவட்ட செயலாளர் கந்தசாமி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி வக்கீல் நந்தகுமார், தி.மு.க. பொறியாளர்அணி கமலக்கண்ணன் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டவர் கள்கலந்து கொண்டனர். 100 பேர் கைது செய்யப் பட்டனர்.
அந்தியூர் பஸ் நிலையத்தில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஏ.ஜி.வெங்கடாசலம்தலை மையில் மறியல் நடந்தது. இதில் மாவட்ட சிறுபான்மையினர் நலஉரிமை பிரிவு அமைப்பாளர் சோபியா சேக், பேரூர் கழக துணை செயலாளர் ஏ.சி.பழனிச் சாமி, அவைத்தலைவர் காளிமுத்து மாவட்ட சிறு பான்மை பிரிவுதுணை அமைப்பாளர் ஜெபஸ்டி யான்,முன்னாள் எம்.எல்.ஏ. குருசாமி,மாவட்ட வர்த்தகர் அணி அமைப் பாளர் மகாலிங்கம், பச்சாம் பாளையம் ஊராட்சி முன்னாள் தலைவர் முத்துநாதன், அத்தாணி பேரூர் கழக செயலாளர் செந்தில்கணேஷ், கெட்டி சமுத்திரம் ஊராட்சி கிளை செயலாளர் நாக ராஜசோழன், ஒன்றிய இளை ஞரணி அமைப்பாளர் வைத்தீஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மொத்தம் 100 பேர் கைது செய்யப்பட்டனர்.
அம்மாபேட்டையில் உள்ள மேட்டூர்-பவானி மெயின் ரோட்டில் அந்தியூர் பிரிவு சந்திப்பில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர்மறியலில்ஈடுபட்டனர். தி.மு.க. ஒன்றிய செயலாளர் சரவணன் தலைமை தாங்கி னார். முன்னாள் ஒன்றிய செயலாளர் என்.பி. சேகர், பேரூர் கழக செயலாளர் பெரியநாயகம், மாநில பொதுக்குழு உறுப்பினர் சம்பத்குமார், மாவட்ட துணை தலைவர் எம்.பி. அறிவானந்தம் உள்பட 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
சத்தியமங்கலம் அருகே கள்ளிப்பட்டியில் தி.மு.க. வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் திரளான தி.மு.க.வினர் பங்கேற்றனர். கள்ளிப்பட்டியில் மாவட்ட விவசாய பிரிவு துணை அமைப்பாளர் மயில்சாமி தலைமையிலும், டி.ஜி.புதூரில் பேரூர் கழக செயலாளர் ரங்கசாமி தலைமையிலும், டி.என். பாளையத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. சுப்பிரமணியம் தலைமையிலும் மறியல் நடந்தது. 3 இடங்களிலும் சேர்த்து 172 பேர் கைது செய்யப்பட்டனர்.
பவானி அந்தியூர் பிரிவு பகுதியில் தி.மு.க. நகர செயலாளர் ப.சீ.நாராஜன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.

இதில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டு சாலை அமர்ந்து மறியல் செய்தனர். இதில் கலந்து கொண்ட 70-க்கும் மேற்பட்ட வர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதே போல பவானி மேட்டூர் ரோடு குருப்ப நாயக்கன்பாளையத்தில் மாவட்ட தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் கே.ஏ.சேகர் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.
இந்த சாலை மறியல் போராட்டத்தில் காங்கிரஸ் உள்பட கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டு சாலை அமர்ந்து பஸ் கட்டண உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
கோபி அருகே கொளப்ப லூரில் கோபி ஒன்றிய செயலாளர் முருகன் தலைமையில் சாலை மறியல் நடந்தது. 100 பேர் கைது செய்யப்பட்டனர்.
நம்பியூர் பஸ் நிலையம் முன்பு தி.மு.க.வினர் ஒன்றிய செயலாளர் சென்னிமலை தலைமையில மறியல் நடத்தினர். 200 பேர் கைது செய்யப்பட்டனர்.
கவுந்தப்பாடி நால்ரோட் டில் தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம் தலைமையில் மறியல் நடந்தது. சுமார் 200 பேர் கலந்து கொண்டனர். முன்னாள் அமைச்சர் ராஜா, ஒன்றிய செயலாளர் துரை, மாணவர் அணி செயலாளர் சிவபாலன், கம்யூனிஸ்டு கட்சி அய்யாவு உள்ளிட்டோர் பங்கேற்றனர். அவர்களை கவுந்தப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தமூர்த்தி கைது செய்தார்.
ஆப்பக்கூடல் நால் ரோட்டில் தி.மு.க.வினர் மறியலில் ஈடுபட்டனர். 5 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 59 பேர் கைது செய்யப்பட்டனர்.
கொடுமுடி புதிய பஸ் நிலையம் முன்பாக பஸ் கட்டண உயர்வினை கண்டித்து திமுக கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்ட னர். கொடுமுடி திமுக.ஒன்றிய கழக செயலாளர் சின்னக்குட்டி தலைமையில் நடுரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
காங்கிரஸ் கட்சி முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.எம்.பழனிசாமி, திமுகவை சேர்ந்த இளஞ்செழியன், மதிமுகவை சேர்ந்த குழந்தைவேலு, திமுக மகளிரணியை சேர்ந்த மகளிரணி நிர்வாகி சுப்புலட்சுமி இளங்கோ உள்பட 135 பேரை போலீசார் கைது செய்தனர்.
புஞ்சைபுளியம்பட்டி பஸ் நிலையம் முன்பு தி.மு. க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தி.மு.க. நகர செயலாளர் சிதம்பரம் தலைமை தாங்கினார்.
முன்னாள் நகராட்சி தலைவர் அன்பு, முன்னாள் பவானிசாகர் ஒன்றியத்தலைவர் விசுவநாதன், விடுதலை சிறுத்தைகள் கட்சி ராமசந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ராஜேந்திரன், சி.பி.ஐ. எம்.ஜெகநாதன் உள் ளிட்ட 100-க்கும் மேற்பட்டேர் கலந்து கொண்டனர். சாலை மறியலில்ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடுமாவட்டம் முழுவதும் நடந்த மறியல் போராட்டத்தில் 2500-க்கும் மேற்பட்ட தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் கைது செய்யப்பட்டனர். #tamilnews
கோபி:
கோபி அருகே உள்ள லா.தொட்டிபாளையத்தை சேர்ந்தவர் மாரிச்சாமி (வயது48) விவசாயி. இவர் நேற்று மாலை கோபி அருகே உள்ள நல்ல கவுண்டன்பாளையம் பால் சொசைட்டிக்கு பால் ஊற்ற மொபட்டில் சென்றார். அவருடன் அதே பகுதியை சேர்ந்த சகுந்தலா என்பவரும் சென்றார். லா. தொட்டிபாளையம் ரோட் டில் சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த மினிவேனும், மொபட்டும் மோதிக்கொண்டன.
இதில் மாரிச்சாமி, சகுந்தலா ஆகிய 2 பேரும்தூக்கி வீசப்பட்டனர். 2 பேரும் மீட்கப்பட்டு கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
செல்லும் வழியிலேயே மாரிச்சாமி பரிதாபமாக இறந்தார். சகுந்தலாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக் கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு:
ஈரோடு சம்பத் நகரை சேர்ந்தவர் ரவீந்திரன். கார் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ஸ்ரீஜா(வயது 32).
இவர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் வரவேற்பாளராக வேலை பார்த்து வந்தார். இவர்களது மகன்கள் பிரனித்(6), சதீஸ் (4).
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் ரவீந்திரன் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். ஸ்ரீஜா தனது மகன்களுடன் அதே வீட்டில் வசித்து வந்தார்.
ஸ்ரீஜா வீடு நேற்று முழுவதும் பூட்டியே இருந்தது. இதனால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அருகில் வசிப்பவர்கள் ஸ்ரீஜா வீட்டின் கதவை தட்டினர்.
ஆனால் எந்த பதிலும் வரவில்லை. இதனால் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது வீட்டிற்குள் ஸ்ரீஜாவும், மகன்கள் பரனித், சதீஸ் ஆகியோரும் மயங்கிய நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ஸ்ரீஜா, பிரனித், சதீஸ் ஆகிய 3 பேரும் இறந்து விட்டதாக கூறினர்.
இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
அப்போது ஸ்ரீஜா தனது 2 மகன்களையும் விஷ ஊசி போட்டு கொலை செய்து விட்டு, தானும் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
இதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்தனர். அப்போது கள்ளக்காதலனுடன் ஏற்பட்ட தகராறில் மகன்களை கொன்று ஸ்ரீஜா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
ஸ்ரீஜா வேலை செய்த தனியார் ஆஸ்பத்திரியில் வேலை பார்க்கும் வாலிபர் ஒருவருடன் ஸ்ரீஜாவுக்கு பழக்கம் ஏற்பட்டதாகவும், இந்த நெருக்கம் அதிககமாகி அவர்கள் கணவன்-மனைவி போல் வாழ்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் அந்த வாலிபருக்கு திருமண ஏற்பாடுகள் நடந்தது. இதனைத் தொடர்ந்து அந்த வாலிபர் ஸ்ரீஜாவுடனான பழக்கத்தை குறைத்துக்கொண்டதாக தெரிகிறது.
இது பற்றி அந்த வாலிபரிடம் ஸ்ரீஜா கேட்டார். இதன் தொடர்ச்சியாக 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஸ்ரீஜா சில நாட்களாக மன வேதனையுடன் காணப்பட்டார்.
இதில் ஏற்பட்ட விரக்தியில் தான் ஸ்ரீஜா தனது மகன்களை கொன்று தற்கொலை செய்து கொண்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து வீரப்பன்சத்திரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
கோபி:
கோபி அருகே எலத்தூரை சேர்ந்தவர் பிரான் சிஸ் (வயது 30). இவர் செம்மாண்டம்பதியில் பட்டாசு தொழிற்சாலை நடத்தி வருகிறார்.
இங்கு எலத்தூர், பெரிய கள்ளிப்பட்டி பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கடந்த 25-ந் தேதியும் அவர்கள் பட்டாசு தயாரித்துக் கொண்டு இருந்தனர். அப்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ அங்கிருந்த பட்டாசுகள் மீது பட்டது. இதனால் அந்த பட்டாசுகள் சத்தத்துடன் வெடித்தன. இதில் இருந்து எழுந்த தீப்பொறிகள் பறந்து விழுந்ததால் தீ மளமளவென கொழுந்துவிட்டு எரிந்தது.
இந்த தீ விபத்தில் பட் டாசு தொழிற்சாலை உரிமையாளர் பிரான்சிஸ், அவரது மனைவி பிரேமா, தொழிலாளர்களான எலத்தூர் செட்டி பாளையத்தை சேர்ந்த செல்லப்பன் (54) மற்றும் முருகன், ஆராயி, குருசாமி, குமாரசாமி, அமுதா, சிவபிரகாஷ், கதிர்வேல் ஆகியோர் சிக்கி உடல் கருகினர்.
கோபி தீயணைப்பு நிலைய அதிகாரி ஜெகதீசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
காயம் அடைந்த 10 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். செல்லப்பன் உள்பட 7 பேர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்ட னர்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் செல்லப்பன் இன்று பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து கோபி போலீஸ் இன்ஸ்பெக்டர் பால முரளி சுந்தரம் வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
அப்போது தீ விபத்துக்கான காரணம் தெரியவந்தது. தயாரான பட்டாசுகளை தொழிற்சாலையின் முன்வு காயப்போடுவது வழக்கம். அப்படி நேற்று முன்தினமும் போடப்பட்டு இருந்தன.
அதிக நேரம் காய போட் டிருந்ததால் வெயிலில் அதிக சூடாகி தீப்பிடித்து இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
பெருந்துறை:
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்துள்ள பணிக்கம்பாளையம் மேற்கு காலனி பகுதியில் தங்கவேல் என்பவருக்கு சொந்தமான 7 வீடுகள் உள்ளன.
இந்த வீடுகளின் மேற் கூரை தென்னை ஓலை மற்றும் தகர ஷீட்டால் வேயப்பட்டிருந்தன. அனைத்து வீடுகளிலும் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் வாடகைக்கு வசித்து வருகிறார்கள்.
ஒரு வீட்டில் மேற்கு வங்காள மாநிலம் பிங்கல் கன்ச் தாலுகா திம்நகர் பகுதியை சேர்ந்த வர்ஷின் மண்டல் (வயது 46), அவரது மனைவி நோமிதா (40) ஆகியோர் வசித்தனர்.
இவர்கள் பெருந்துறை பகுதியில் உள்ள துணி தயாரிப்பு கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர். நேற்று இரவு இவர்கள் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தனர்.
நள்ளிரவு 11 மணி அளவில் இவர்களது வீட்டில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. தென்னை ஓலை, தகர ஷீட் மேற்கூரை என்பதால் தீ மளமளவென பரவியது.
தீ பயங்கரமாக எரிந்ததால் வர்ஷின் மண்டல், அவரது மனைவி நோமிதா ஆகியோரால் வெளியே வர முடியவில்லை. உள்ளே தீயில் சிக்கி உடல் கருகினர்.
வர்ஷின் வீட்டில் பிடித்த தீ மளமளவென அங்கிருந்த 7 வீடுகளுக்கும் பரவியது. இதில் 7 வீடுகளும் தீப்பற்றி எரிந்தன. வர்ஷின் வீட்டின் அருகில் வசித்த புல்புல்மண்டல், அவரது மனைவி பாருதி ஆகியோரின் உடலிலும் தீப்பிடித்தது.
உடலில் பிடித்த தீயுடன் அவர்கள் வெளியே ஓடி வந்தனர். மற்ற வீடுகளில் வசித்தவர்களும் வீடு தீப்பிடித்து எரிந்ததால் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்து சத்தமிட்டனர்.
இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக பெருந்துறை தீயணைப்பு நிலையத்துக்கு தக வல் தெரிவிக்கப்பட்டது.
தீயணைப்பு நிலைய அலுவலர் நாகேஸ்வரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
சுமார் ஒரு மணி நேரம் போராடி தீ அணைக்கப்பட் டது. முதலில் தீப்பிடித்த வர்ஷினின் வீடு பூட்டியிருந்தது. வீட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது வர்ஷின் மண்டலும், அவரது மனைவி நோமிதாவும் தீயில் கருகி பரிதாபமாக இறந்து கிடந்தனர். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த புல்புல்மண்டல், அவரது மனைவி பாருதி ஆகியோர் உடனடியாக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு ஆபத்தான நிலையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கோபி வாய்க்கால் ரோட்டில் டாஸ்மாக் மதுக்கடை ஒன்று உள்ளது.
இந்த கடையில் அந்த பகுதி மக்கள் குறிப்பாக பெண்கள் பாதிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மதுக்கடையால் ‘‘போதை’’ ஏற்றிக் கொண்டு வீட்டு வாசலில் மயங்கி கிடப்பதாகவும் பொதுமக்கள் புகார் கூறினர்.
இதனால் அந்த மதுக்கடையை அப்புறப்படுத்தக் கோரி அந்த பகுதி மக்கள் மாவட்ட கலெக்டர், ஆர்.டி.ஓ. மற்றும் பல அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.
இந்த நிலையில் இன்று குடியரசு தின விழாவையொட்டி மதுக்கடைக்கு எதிரிப்பு தெரிவித்தும் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும் அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளின் முன் கருப்பு கொடி கட்டி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
சுமார் 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்பு கொடி ஏற்றப்பட்டிருந்தது. #Tamilnews
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கொடுமுடி வட்டக்கிளை சார்பில் தமிழக அரசு பஸ் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி வட்டத்தலைவர்.எம். கண்ணன் தலைமையில் கொடுமுடி தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தை ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின்மகளிர் துணைக் குழுவைச் சேர்ந்த காந்திமதி, சத்துணவு ஊழியர் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் தட்சிணாமூர்த்தி, ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கம் கொடுமுடி வட்டார தலைவர் ரவி ஆகியோர் கோரிக்கையை விளக்கி பேசினர்.
மாவட்ட தலைவர் பாஸ்கர்பாபு அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். ஆர்ப்பாட்டத்தில் பஸ் கட்டண உயர்வினை தமிழக அரசு கிரும்பப்பெற கோரி வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஊரக வளர்ச்சிதுறை, வருவாய்த்துறை, சத்துணவு ஊழியர்கள், நெடுஞ்சாலைத் துறை என 60-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். வட்டச்செயலாளர் அ. நிஜாம் நன்றி கூறினார்.
ஈரோடு பஸ் நிலையத்தில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தத்தில் பா.ம.க. சார்பில் மாநில துணை பொதுச்செயலாளர் ஆறுமுகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஈரோடு சூரம்பட்டி போலீஸ் நிலையம் அருகே பாரதீய ஜனதா சார்பில் பஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
பட்டு நூல் விலை உயர்வை கண்டித்து ஈரோடு, கோவை, திருப்பூர், நாமக்கல் மாவட்ட கைத்தறி நெசவாளர்கள் கடந்த 15-ந் தேதி முதல் வேலை நிறத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களது போராட்டம் இன்று 10-வது நாளாக தொடர்கிறது. இதனால் கைத்தறி நெசவாளர்கள் வேலையின்றி உள்ளனர்.
அவர்களுக்கு கோரா பட்டு சேலை தயாரிக்க பாவு, நூல் ஆகியவற்றை உற்பத்தியாளர்கள் வழங்காததால் பட்டு சேலை தயாரிப்பு நடக்கவில்லை. இதனால் தினமும் ரூ. 2½ கோடி அளவுக்கு உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஆனால் தற்போது வேலை நிறுத்தம் நடப்பதற்கு முக்கிய கோரிக்கையான பட்டு நூல் விலை உயர்வை குறைப்பது குறித்து இதுவரை யாரும் கைத்தறி உற்பத்தியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை.
எனவே அடுத்த கட்ட போராட்டம் நடத்த கைத்தறி உற்பத்தியாளர்கள் முடிவு செய்தனர். கைத்தறி நெசவாளர்களை திரட்டி சத்தியமங்கலம் வடக்கு பேட்டையில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 20 ஊர்களில் இருந்த கைத்தறி நெசவாளர்கள், உற்பத்தியாளர்கள், திரளாக கலந்து கொண்டனர். ஏராளமான பெண்களும் பங்கேற்றனர்.
ஆனால் இந்த போராட்டத்தில் அந்தியூர், தவிட்டுப்பாளையம் பகுதி கைத்தறி நெசவாளர்கள் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கும் அந்தியூர், தவிட்டுப்பாளையம் பகுதி கைத்தறி நெசவாளர்களை அழைத்து செல்ல 2 பஸ்கள் வந்திருந்தன.
ஆனால் கைத்தறி நெசவாளர்கள் அதில் ஏறி சத்தியமங்கலத்துக்கு செல்லவில்லை. இதற்கு காரணம் கேட்டபோது அவர்கள் கைத்தறி உற்பத்தியாளர்கள் மீது குற்றச்சாட்டு கூறினர்.
நாங்கள் உற்பத்தி செய்து கொடுக்கும் பட்டு சேலை ரகத்துக்கு உரிய, சரியான, நியாயமான கூலியை கைத்தறி உற்பத்தியாளர்கள் நிர்ணயிக்கவில்லை. போனசும் கொடுக்கவில்லை.
15-ந் தேதி முதல் போராட்டம் என அறிவித்து விட்டு எங்களுக்கு பாவு, நூல் கொடுக்காமல் வேறு ஊரில் உள்ள கைத்தறி கூடத்தில் பாவு, நூல் கொடுத்து பட்டு சேலை உற்பத்தி செய்துள்ளனர்.
இது எங்களை ஏமாற்றுவதுபோல உள்ளது. எனவே தான் நாங்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள செல்லவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இவர்கள் ஆர்ப்பாட்டத்துக்கு செல்லாமல் புறக்கணித்ததால் அந்தியூரில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. பாதுகாப்புக்காக சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
கோபி:
தமிழகத்தில் அரசு பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. இதற்கு தமிழகம் முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
அரசியல் கட்சியினரும், கல்லூரி மாணவ-மாணவிகளும் பஸ் கட்டண உயர்வை கண்டித்து தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு மாவட்டத்திலும் பல இடங்களில் ஆர்ப்பாட் டம் உள்ளிட்ட போராட்டம் நடந்து வருகிறது. கோபியிலும், சத்தியமங்கலத்திலும் கல்லூரி மாணவ-மாணவிகள் நேற்று திடீரென போராட்டத்தில் குதித்தனர்.
கோபி கரட்டடிபாளையத்தில் உள்ள கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் கல்லூரி அருகே திரண்டு சாலை மறியல் செய்தனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர்.
இந்த நிலையில் கரட்டடிபாளையத்தில் உள்ள கலை அறிவியல் கல்லூரி மாணவ-மாணவிகள் பஸ் கட்டண உயர்வை கண்டித்து இன்று 2-வது நாளாக கல்லூரி அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நேற்று நடந்த மறியல் போராட்டத்தில் 500 மாணவ-மாணவிகள் மட்டுமே பங்கேற்றனர். ஆனால் இன்று நடந்த சாலை மறியலில் 2 ஆயிரம் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்கள் பஸ் கட்டண உயர்வுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இந்த போராட்டம் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் கிடைத்ததும் போலீஸ் துணை சூப்பிரண்டு செல்வம், கோபி போலீஸ் இன்ஸ்பெக்டர் பால முரளி சுந்தரம் மற்றும் போலீசார் வந்தனர். அவர்கள் மாணவ- மாணவிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
ஆனாலும் போராட்டம் முடிவுக்கு வரவில்லை. இன்று மதியம் வரை மாணவ-மாணவிகளின் போராட்டம் நீடித்தது.
ஈரோடு:
ஈரோடு பஸ் நிலையத்தில் பயணிகளிடம் அடையாளம் தெரியாத நபர் கைவரிசை காட்டி வந்துள்ளான். இதனால் பஸ் நிலையத்தில் டவுன் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தி கண்காணித்து வந்தனர்.
நேற்று இரவு பயணி ஒருவரின் பர்சை வாலிபர் ஒருவர் ஜேப்படி செய்து தப்பி ஓட முயன்றார். அந்த நேரம் அங்கு ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்த டவுன் போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
விசாரணையில் அந்த வாலிபர் கருங்கல்பாளையம், ஜெயகோபால் வீதியை சேர்ந்த தீனா என்கிற தினகரன் (வயது23) என தெரிய வந்தது. இவன் மீது ஏற்கனவே திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.
இதையடுத்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து தீனா என்கிற தினகரணை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews






