என் மலர்
செய்திகள்

ஈரோடு பஸ் நிலையத்தில் பயணிகளிடம் ஜேப்படி செய்த வாலிபர் கைது
ஈரோடு பஸ் நிலையத்தில் நேற்று இரவு பயணி ஒருவரின் பர்சை வாலிபர் ஒருவர் ஜேப்படி செய்து தப்பி ஓடினார். அவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு:
ஈரோடு பஸ் நிலையத்தில் பயணிகளிடம் அடையாளம் தெரியாத நபர் கைவரிசை காட்டி வந்துள்ளான். இதனால் பஸ் நிலையத்தில் டவுன் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தி கண்காணித்து வந்தனர்.
நேற்று இரவு பயணி ஒருவரின் பர்சை வாலிபர் ஒருவர் ஜேப்படி செய்து தப்பி ஓட முயன்றார். அந்த நேரம் அங்கு ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்த டவுன் போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
விசாரணையில் அந்த வாலிபர் கருங்கல்பாளையம், ஜெயகோபால் வீதியை சேர்ந்த தீனா என்கிற தினகரன் (வயது23) என தெரிய வந்தது. இவன் மீது ஏற்கனவே திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.
இதையடுத்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து தீனா என்கிற தினகரணை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
Next Story






