என் மலர்
கடலூர்
- அதிகாலை 4 மணியளவில் கிளாவடிநத்தம் மெயின் ரோட்டை கடக்க முயன்றார்.
- சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார்.
கடலூர்:
புவனகிரி அடுத்த கிளாவடிநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 70). இவர் நேற்று அதிகாலை 4 மணியளவில் கிளாவடிநத்தம் மெயின் ரோட்டை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியே வந்த கார் செல்வராஜ் மீது மோதியது. இதில் பலத்த காயங்களுடன் சாலையில் விழுந்த செல்வராஜை. அப்பகுதி மக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பான புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிளாவடி நத்தம் மெயின் ரோட்டில் உள்ள தெரு விளக்குகள் எரியாத தால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் அடிக்கடி சாலை விபத்து கள் நடைபெறுவதாக அப்பகுதி மக்கள் புலம்பி வருகின்றனர்.
- அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
- புவனகிரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
கடலூர்:
சேத்தியாத்தோப்பு அருகேயுள்ள தட்டான்ஓடை கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லதுரை (வயது 42). மீன் வியாபாரி. இவர் நேற்று அதிகாலை 3 மணியளவில் மீன் வாங்குவதற்காக புவனகிரிக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். புவனகிரியை அடுத்த சியப்பாடி பஸ் நிறுத்தம் அருகில் வந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி விழுந்த செல்லதுரை மீது வாகனத்தின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே மீன் வியாபாரி துடிதுடித்து இறந்து போனார்.
இது குறித்து அவ்வழியே சென்றவர்கள் புவனகிரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் செல்லதுரையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மருத்துவ சிகிச்சை பெறு வதற்கு காலை முதல் மாலை வரை வந்து செல் கின்றனர்.
- சரியான முறையில் சிகிச்சை அளிக்கப்படு கிறதா? மருந்து மாத்திரை வழங்கப்படுகிறதா
கடலூர்:
நெல்லிக்குப்பத்தில் நகராட்சி மருத்துவமனை செயல்பட்டு வருகின்றன. இங்கு தினந்தோறும் ஏராள மான பொதுமக்கள் மருத்துவ சிகிச்சை பெறு வதற்கு காலை முதல் மாலை வரை வந்து செல் கின்றனர். நகராட்சி மருத்துவ மனையில் மாலைக்கு பிறகு டாக்டர்கள் பணியில் இல்லைஎன கூறப்படுகிறது. நர்சுகள் மட்டும் சிகிச்சை அளித்து வருகின்ற னர். மக்களுக்கு பெரிய அளவிலான பாதிப்பு ஏற்பட்டால் அவர்களை கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை கலெக்டர் அருண் தம்புராஜ் நகராட்சி மருத்து வமனைக்கு நேரில் வந்தார். பின்னர் அங்கு இருந்த வருகை பதிவேடு மற்றும் சிகிச்சைக்கு வந்த மக்களி டம் சரியான முறையில் சிகிச்சை அளிக்கப்படு கிறதா? மருந்து மாத்திரை வழங்கப்படுகிறதா? டாக்டர்கள் பணிக்கு வரு கிறார்களா? மற்றும் மருந்து மாத்திரை சரியான முறை யில் உள்ளதா? என்பதனை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது நகராட்சி மருத்துவமனையில் கழி வறை வசதி இல்லை என சமூக ஆர்வலர் குமரவேல் புகார் தெரிவித்தார். இதனை தொடர்ந்து கலெக்டர் அருண் தம்புராஜ் உடனடியாக கழிவறை வசதி செய்வதற்கு இடத்தை பார்வையிட்டார். அங்கு இருந்த பெரிய அளவிலான மரத்தை வெட்டினால் கழிவறை கட்டலாம் என மருத்துவதுறை அலு வலர்கள் தெரிவித்தனர். அப்போது கலெக்டர் அருண் தம்புராஜ் திட்டவட்ட மாக மரத்தை வெட்டாமல், இருக்கும் இடத்தில் கழிவறை கட்ட வேண்டும் என தெரி வித்ததோடு உடனடியாக நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) மகேஸ்வரிடம் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு மருத்துவமனைக்கு உடனடியாக கழிவறை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தர விட்டார்.
- 4 வழிச்சாலையாக விரி வாக்கம் செய்யப்பட உள்ளது.
- திடீரென வேகத்தை குறைத்து நிறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் இருந்து அரியலூர் மாவட்டம் மதனத்தூர் வரையிலான 55 கிலோ மீட்டர் சாலை 4 வழிச்சாலையாக விரி வாக்கம் செய்யப்பட உள்ளது. இதனால் விருத்தாசலம் புறவழிச்சாலையில் இருந்து ராஜேந்திரபட்டினம், ஆண்டிமடம், ஜெயங் கொண்டம் வழியாக சாலை அகலப்படுத்தப்படும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விருத்தாசலம் புறவழிச்சாலையில் உள்ள பொன்னேரி 4 முனை சந்திப்பில் சாலையை அகலப்படுத்துவதற்காக, ஒரு புறத்தில் பள்ளங்கள் தோண்டப்பட்டு பணி நடை பெற்று வருகிறது. அப்பகு தியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே ஒருபுறம் சாலை தோண்டப்பட்டுள்ள தால் அந்த இடத்தில் வாக னங்கள் ஒரு வழியில் மட்டுமே வந்து செல்கின்றன. ஆனால் எதிரே வரும் வாகன ஓட்டிகள் அந்த சாலை ஒருவழிச்சாலையாக மாற்றப்பட்டிருப்பது தெரியா ததால் வேகமாக வந்து 4 முனை சந்திப்பில் எதிரில் வரும் வாகனங்க ளுக்கு வழி விடுவதற்காக, குழப்பமடைந்து திடீரென வேகத்தை குறைத்து நிறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து நடை பெறும் அபாயம் உள்ளது. அந்த பகுதியில் பெரும் விபத்து நடைபெறுவதற்கு முன், நெடுஞ்சாலை துறை மற்றும் போலீசார் நடவடிக் கை எடுத்து இந்த பகுதியில் பேரிகார்டு, எச்சரிக்கை பதாகைகள், ரிப்ளக்டர்கள் வைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- தலையில் கொடுவாள் கத்தியால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்தனர்.
- போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரைப் பாண்டியன் வழக்கு பதிவு செய்தனர்.
கடலூர்:
பண்ருட்டி அடுத்த தெற்கு மேல்மாம்பட்டு செட்டி தெருவை சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி மஞ்சுளா(47) இவர்த னக்கு சொந்தமான இடத்தில் குடிநீர் பைப்பு போடும்போது அதே பகுதியை சேர்ந்த மணி வண்ணன், பாலமுருகன், வசந்தி ஆகியோர் எங்களுக்கு பங்கு உண்டு என்று கூறி குடிநீர் பைப் போடும் பணியை தடுத்து நிறுத்தி மஞ்சுளாவின் மகன் விக்னேசை அசிங்கமாக திட்டி தலையில் கொடுவாள் கத்தியால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து காடாம்புலியூர் போலீசில் மஞ்சுளா கொடுத்த புகாரின் பேரில் காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரைப் பாண்டியன் வழக்கு பதிவு செய்து மணிவண்ணன், பால முருகன், வசந்தி ஆகியோ ரை தேடி வருகின்றனர்.
- குணா அந்த பெண்ணை திட்டியதாக கூறப்படுகிறது.
- 4 பேர் திடீரென்று அந்த பெண்ணை தாக்கி மானபங்கம் படுத்தியதாக கூறப்படுகிறது.
கடலூர்:
கடலூர் பகுதியை சேர்ந்த 20 வயது பெண். சம்பவத்தன்று சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்ேபாது அந்த பெண்ணை பின்தொடர்ந்து வந்த கடலூர் ராசாப்பேட்டை பகுதியை சேர்ந்த குணா அந்த பெண்ணிடம் செல்போன் நம்பர் கேட்டு உள்ளார். அதற்கு அந்த பெண் தர மறுத்துள்ளார்.இதனால் குணா அந்த பெண்ணை திட்டியதாக கூறப்படுகிறது.
இதில் அதிர்ச்சி அடைந்த அப்பெண் இதுகுறித்து அவரது தந்தையிடம் நடந்த சம்பவத்தை கூறினார். இதை கேட்ட அந்த பெண்ணின் தந்தை மகளுடன் சேர்ந்து குணாவிடம் சென்று கேட்டுள்ளார். அப்போது குணா அவருடைய நண்பர் திரு என்பவரது வீட்டில் இருந்தார். உடனே வீட்டிலிருந்த திரு உட்பட 4 பேர் திடீரென்று அந்த பெண்ணை தாக்கி மானபங்கம் படுத்தியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அப்பெண் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து கடலூர் துறைமுகம் போலீசார் திரு, குணா உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் என் மனை விக்கு வேலை வேண்டி விண்ணப்பித்திருந்தேன்.
- வேலைக்கு வராமல் வேலை செய்ததாக முறைகேடாக பண பரிவர்த்தனை செய்துள்ளனர்.
கடலூர்:
கடலூர் கலெக்டர் அலு வலகத்தில் இன்று குறைகேட்பு கூட்டம் நடை பெற்றது. குறிஞ்சிப்பாடி கருங்குழி பகுதியை சேர்ந்த ராஜேந்திரன், அவரது மனைவி ஆகியோர் மனு அளிக்க வந்தனர். 100 நாள் வேலை திட்டத்தில் வேலை வழங்க வேண்டும். 18 வயது பூர்த்தி அடையாத சிறுவர்களை வேலையில் அமர்த்திய ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து பதாகைகள் ஏந்தி நின்றிருந்தனர். மேலும் ராஜேந்திரன் சில்வர் பாத்திரம் மற்றும் மண்வெட்டி ஆகியவற்றை மாலையாக கழுத்தில் மாட்டிக் கொண்டிருந்தார். அப்போது அவர் வைத்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எங்கள் கிராமத்தில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் என் மனை விக்கு வேலை வேண்டி விண்ணப்பித்திருந்தேன். ஆனால் இதுநாள் வரை என் மனைவிக்கு இந்த திட்டத்தில் வேலை தர மறுக்கின்றனர். பலமுறை இது சம்பந்தமாக அதிகாரிகளிடம் கேட்டறிந்தும் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. மேலும் வேலை அட்டை பதிவு செய்யவில்லை. ஆனால் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அவரது உறவினர்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையில் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் இந்த வேலை திட்டத்தில் சேர்த்து முறைகேடு செய்துள்ளனர். மேலும் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் வேலைக்கு வராமல் வேலை செய்ததாக முறைகேடாக பண பரிவர்த்தனை செய்துள்ளனர். ஆகையால் இது சம்பந்தமாக உரிய விசாரணை நடத்தி 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் அனைவருக்கும் சமமாக வேலை வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியிருந்தார்.
- எம்.புதுப்பாளையத்தில் அனுமதியின்றி செயல்பட்டு வரும் பிளாஸ்டிக் அரவை ஆலையை மூட வேண்டும்.
- ஒரே நேரத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கலெக்டர் அலுவலகத்தில் குவிந்ததால் அங்கு பரபரப்பு நிலவியது.
கடலூர்:
கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இந்த ஏராளமான பொது மக்கள் வந்து மனுக்களை அளித்தனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள எம்.புதுப்பாளையத்தை சேர்ந்த பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர்.
அவர்கள் எம்.புதுப்பாளையத்தில் அனுமதியின்றி செயல்பட்டு வரும் பிளாஸ்டிக் அரவை ஆலையை மூட வேண்டும். இந்த ஆலையால் சுற்றுச் சூழல் பாதிப்பு ஏற்படுகிறது.
நிலத்தடி நீர் மட்டம் குறைகிறது. ஆழ்துளை கிணறு நீர் மாசுபடுகிறது என்று குற்றம் சாட்டினார். பொதுமக்கள் மனு கொடுக்க வந்த போது கலெக்டர் அங்கு இல்லை. அவர் மற்றொரு அரசு நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார். இதனால் பொதுமக்கள் அங்கேயே காத்திருந்தனர்.
இது குறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-
எம்.புதுப்பாளையத்தில் அனுமதியின்றி பிளாஸ்டிக் அரவை தொழிற்சாலை செயல்படுகிறது. இதனை மூடக்கோரி பஞ்சாயத்து தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலர், மாசு கட்டுப்பாடு அதிகாரிகள், சுகாதார அதிகாரிகள் மற்றும் கலெக்டர் அலுவலகத்திலும் ஏற்கனவே மனு அளித்துள்ளோம். அந்த ஆலைைய மூட அதிகாரிகள் உத்தரவிட்டனர். ஆனாலும் ஆலை நிர்வாகத்தினர் ஆலையை நடத்தி வருகின்றனர். எனவே, இந்த ஆலையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஒரே நேரத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கலெக்டர் அலுவலகத்தில் குவிந்ததால் அங்கு பரபரப்பு நிலவியது.
- தனுஷ் தயாநிதி சிதம்பரத்திலுள்ள ஒரு தனியார் கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பு படித்து வருகிறார்.
- மின்சாரம் பாய்ந்து தூக்கி எறியப்பட்டார்.
கடலூர்:
சிதம்பரம் சிவசிவா நகரைச் சேர்ந்தவர் மாரியப்பன் இவரது மகன் தனுஷ் தயாநிதி (வயது 22). இவர் சிதம்பரத்திலுள்ள ஒரு தனியார் கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இவரது வீட்டிற்கு அருகில் ராம்நாத் என்பவரின் புதிய வீடு கட்டும் பணி நடந்து வருகிறது.அப்போது அந்த இடத்தில் இயங்கிக் கொண்டிருந்த மின்மோட்டாரை தனுஷ் தயாநிதி நிறுத்த சென்ற போது அவர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி எறியப்பட்டார். பின்னர் அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை க்காக சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதையடுத்து தனுஷ் தயாநிதியின் தந்தை மாரியப்பன் கொடுத்த புகாரின் பேரில் சிதம்பரம் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
- இன்று முதல் 31-ம் தேதி வரை நீதிமன்றம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்.
- மத்திய அரசின் சட்டங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடலூர்:
மத்திய அரசு தாக்கல் செய்த புதிய சட்ட மசோதாக்களை திரும்ப பெறக் கோரி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல் சங்கத்தின் கூட்டமைப்பு சார்பில் இன்று முதல் 31-ம் தேதி வரை நீதிமன்றம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி பண்ருட்டி அனைத்து வக்கீல்கள் சங்கத்தின் சார்பில் பண்ருட்டி வக்கீல்கள் இன்று காலை 10 மணியளவில் பண்ருட்டியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு மத்திய அரசின் சட்டங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- தெருக்களில் சுற்றித் திரியும் ஆடு, மாடு, நாய் உள்ளிட்ட கால்நடைகளை கட்டுப்படுத்த அரசு எச்சரிக்கை விடுத்தது.
- உணவு பைகளை கீழே போட்டு போட்டுவிட்டு அருகில் உள்ள வீடுகளில் தஞ்சம் அடைகின்றனர்.
கடலூர்:
சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன் பள்ளி மாணவியை நெடுஞ்சாலையில் சுற்றி திரிந்த மாடு முட்டியது. அதில் அவர் படுகாயம் அடைந்தார்.இதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் தெருக்களில் சுற்றித் திரியும் ஆடு, மாடு, நாய் உள்ளிட்ட கால்நடைகளை கட்டுப்படுத்த அரசு எச்சரிக்கை விடுத்தது.
ஆனால் இதனை கால்நடை வளர்ப்போர்கண்டு கொள்ளவே இல்லை. இந்த நிலையில் வடலூர் மற்றும் குறிஞ்சிப்பாடி பகுதிகளில் தெரு நாய்களின் நடமாட்டம் மிகவும் அதிகரித்துள்ளது. அதிகாலை நேரத்திலேயே 10-க்கும் மேற்பட்ட நாய்கள் கூட்டம் கூட்டமாக தெருக்களில் உலா வரத் தொடங்குகிறது .நடைப்பயிற்சி செல்வோர் பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள் பணிகளுக்கு செல்வோர் சாலையில் பயணிக்கும் போது இந்த நாய்கள் அவர்களை சுற்றி குறைப்பதோடு கடிக்கவும் முற்படுகிறது .
இதனால் அவர்கள் அச்சத்துடன் ஓட வேண்டி உள்ளது. இதனை தவிர்க்க நடைப்பயிற்சி மேற்கொள்வோர் கைகளில் தடியுடன் நடக்க வேண்டி உள்ளது. பள்ளி மாணவ -மாணவிகள் தங்களது உணவு பைகளை கீழே போட்டு போட்டுவிட்டு அருகில் உள்ள வீடுகளில் தஞ்சம் அடைகின்றனர்.இரவு நேரங்களில் தனியாக தெருக்களில் நடந்து வருவோரை இந்த நாய்களின் கூட்டம் குறைத்துக் கொண்டே துரத்துவதும் வாடிக்கையாக உள்ளது இதனால் பலர் அச்சமடைந்து குரல் எழுப்பிய படி அங்கும் எங்கும் ஓடி தங்களை நாய்க்கடிகளில் இருந்து காத்துக் கொள்கின்றனர். இது போன்ற இடையூர்களை போக்க நகராட்சி மற்றும் பேரூராட்சி நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுத்து நாய்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தமிழ்செல்வி சிதம்பரம் நகர போலீசில் புகார் செய்தார்.
- போலீசார் வழக்குபதிவு செய்து நிதிநிறுவன உரிமையாளர் வெங்கடேசனை கைது செய்தனர்.
சிதம்பரம்:
சிதம்பரம் கோவிந்தசாமித் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ்கண்ணன். இவரது மனைவி தமிழ்செல்வி (வயது 50). இவர் சிதம்பரத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் கடந்த 2002-ம் ஆண்டு ரூ.22 ஆயிரம் கடன் வாங்கினார். இதுவரை ரூ.79 ஆயிரம் வரை செலுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நிதிநிறுவன உரிமையாளர் வெங்கடேசன் (34), ஊழியர் சபரீஷ் ஆகியோர் தமிழ்செல்வி வீட்டுக்கு வந்து மேலும் ரூ.40 ஆயிரம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. மேலும் ஆபாச வார்த்தைகளால் திட்டி உள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த தமிழ்செல்வி சிதம்பரம் நகர போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்குபதிவு செய்து நிதிநிறுவன உரிமையாளர் வெங்கடேசனை கைது செய்தனர். அவரிடம் இருந்து கையெழுத்திட்ட ஏராளமான வெற்று பத்திரத்தை பறிமுதல் செய்தனர். சிதம்பரத்தில் கந்துவட்டி தொல்லை அதிகரித்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.






