என் மலர்
கடலூர்
- கணவன்- மனைவி இருவருக்கும் குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
- மருத்துவ செலவுக்காக பணம் வாங்குவதற்கு சென்றார்.
கடலூர்:
நெல்லிக்குப்பம் அடுத்த எழு மேடு அகரத்தை சேர்ந்தவர் மல்லிகா (வயது 50). இவரது வீட்டிற்கு உறவினர்கள் சின்னதுரை மற்றும் அங்காளம்மாள் வந்துள்ளனர். இந்த நிலையில் கணவன்- மனைவி இருவருக்கும் குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று இருவருக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து திடீரென்று அங்காளம்மளுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. அப்போது கணவர் சின்னதுரை தங்கள் உறவினர்களிடம் மருத்துவ செலவுக்காக பணம் வாங்குவதற்கு சென்றார். ஆனால் அங்காளம்மாள் திடீரென்று உயிரிழந்தார். இத்தகவல் அறிந்த நெல்லிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த அங்காளம்மாள் உடலை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருமணம் நடந்த நாளிலிருந்து கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு இருந்துவந்தது.
- 1 லட்ச ரூபாய் பணம் கேட்டு சரண்யாவை அடித்து வீட்டை விட்டு வெளியேற்றினார்.
கடலூர்:
பண்ருட்டி அடுத்த பி.என்.பாளையத்தை சேர்ந்தவர் நடராஜன். இவரது மகள் சரண்யா (வயது 31). இவருக்கும் வடலூர் சேராகுப்பத்தைச் சேர்ந்த ராஜி மகன் பாலகுரு (38) என்பவருக்கும் கடந்த 21-ம்தேதி திருமணம் நடைபெற்றது. திருமணம் நடந்த நாளிலிருந்து கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு இருந்துவந்தது.
இதனால் பாலகுரு வரதட்சணையாக 20 பவுன் நகை 1 லட்ச ரூபாய் பணம் கேட்டு சரண்யாவை அடித்து வீட்டை விட்டு வெளியேற்றினார். பின்னர் சரண்யா பி.என்.பாளையத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்தார். இதுகுறித்து சரண்யா கொடுத்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மணிபாலன், முருகேசன் என்பவரும் சமையல் வேலை செய்து வருகின்றனர்.
- மணி பாலன் மனைவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
கடலூர்:
கடலூர் அடுத்த காரணப்பட்டை மணிபாலன். இவரும் முருகேசன் என்பவரும் சமையல் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் மணிபாலன், முருகேசனை தவறாக பேசியதாக கேள்விப்பட்டு அவரது வீட்டுக்கு தனது நண்பர்களுடன் சென்று உள்ளார். பின்னர் முருகேசன் மற்றும் அவரது நண்பர்கள் மணி பாலன் மனைவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ரெட்டிச்சாவடி போலீஸ் நிலையத்தில் நிலையத்தில் ரமணி கொடுத்த புகாரின் பேரில் முருகேசன், நாகராஜன், புருஷோத்தமன் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து முருகேசனை கைது செய்தனர்.
- பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
- சாதனங்கள் பழுதடைந்தும், சரியான முறையில் சுத்தம் செய்யாமலும் இருந்தது.
கடலூர்:
கடலூர் சிப்காட் பகுதியில் தனியார் தொழிற்சாலைகளை தமிழ்நாடு சட்டமன்றத் பேரவையின் உறுதிமொழி குழு தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ தலைமையில் உறுப்பினர்கள் எம்.எல்.ஏ க்கள் மோகன், ராமலிங்கம், விஸ்வநாதன், சக்கரபாணி, அருள் நேரில் ஆய்வு செய்தனர். அப்போது கடலூர் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் உறுதிமொழி குழு தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ தலைமையில் உறுப்பினர்கள் மற்றும் கலெக்டர் அருண் தம்புராஜ், அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது தொழிற்சாலை வளாகத்தில் சென்று பார்த்தபோது, அங்கிருந்த சாதனங்கள் பழுதடைந்தும், சரியான முறையில் சுத்தம் செய்யாமலும் விபத்து ஏற்படுத்தக்கூடிய நிலையில் இருந்து தெரியவந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறுதிமொழி குழு தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ மற்றும் அதிகாரிகள், இந்த பகுதியில் பெரிய தொழிற்சாலையான இங்கு உரிய பராமரிப்பு இல்லாமல் சாதனங்களை பயன்படுத்தி வந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ஏதேனும் திடீர் விபத்து ஏற்பட்டால் தொழிலாளர்கள் மற்றும் சுற்றுவட்டார கிராமத்தில் உள்ள மக்களின் நிலை என்ன ஆகும் என கேட்டு எச்சரிக்கை விடுத்தனர். இது மட்டும் இன்றி இது போன்ற அஜாகரதியான சூழ்நிலையில் தொழிற்சாலை இயங்கலாமா? என சரமாரியாக கேள்வியும் எழுப்பினார்கள்.
மேலும் தொழிற்சா லைகளை சரியான முறையில் பராமரித்து உயிர் பலி ஏற்படாத வகையில் அனைத்து நடவடிக்கையும் விரைவில் ஏற்படுத்த வேண்டும். இதனை உறுதி மொழி குழுவினரால் மீண்டும் சில நாட்களில் திடீர் ஆய்வு செய்யப்படும். அப்போதும் இது போன்ற நிலை நீடித்தால் அதிகாரிகள் கொண்ட குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர். மேலும் தொழிற்சாலை வளாகத்தில் புதிதாக கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றது. இதில் ஏதேனும் தொழிற்கூடங்கள் அல்லது வேறு ஏதேனும் தொடங்கினால் உரிய அனுமதி பெற்று தொடங்க வேண்டும் என்று கூறினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.
- குற்றப்புலனாய்வு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- அதே பகுதியை சேர்ந்த பிச்சை என்பவரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்கும் விதமாக குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திட்டக்குடி தாலுகா மேல் கல் பூண்டி தனியார் மில்லில் ரேஷன் அரிசி மூட்டைகள் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஏழுமலை, போலீஸ்காரர்கள் முருகானந்தம், ராஜா, பவானி ஆகியோர் மாவு மில்லுக்கு நேரில் சென்றனர்.
அங்கு சோதனை மேற்கொண்டபோது, 30 சாக்கு மூட்டைகளில் 1200 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த பிச்சை (வயது 63) என்பவரை போலீசார் கைது செய்தனர். பறிமுதல் செய்த ரேஷன் அரிசியை நுகர் பொருள் வாணிபக் கழகத்தில் போலீசார் ஒப்படைத்தனர்.
- பூமாலை, சேகர், அஜித், அசோக் ஆகிய 4 பேரும் செல்வராசை தகாத வார்த்தையால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.
- செல்வராஜை தலையில் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து உள்ளதாக கூறப்படுகிறது
கடலூர்
கடலூர் மாவட்டம் திட்டக்குடி மேல வீதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 59). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு தரப்பினருக்கும் முன்னதாகவே முன் விரோத தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சம்பவத்தன்று செல்வராசும், அவரது மனைவியும் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது செல்வராஜ் வீட்டிற்கு வந்த அந்த தரப்பை சேர்ந்த கும்பலான பூமாலை, சேகர், அஜித், அசோக் ஆகிய 4 பேரும் செல்வராசை தகாத வார்த்தையால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் பூமாலை கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் செல்வராஜ் வயிற்றில் குத்தியதாக தெரிகிறது. மேலும் அந்த கும்பலில் ஒருவர் இரும்பு பைபால் செல்வராஜை தலையில் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து செல்வராஜ் திட்டக்குடி போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் திட்ட க்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து முன்விரோத தகராறில் செல்வராஜை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து தலைமறைவாக உள்ள பூமாலை, சேகர், அஜித், அசோக் ஆகிய 4 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.
- கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த புத்தேரி கிராம பொதுமக்கள் ஏற்பாடு செய்து வருவதாக கூறப்படுகிறது.
- கும்பாபிஷேகம் நடத்துவதற்கு தன்னிச்சை யாக செயல்பட்டு வருவதா கவும் கூறினார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்துள்ள தொளார் ஊராட்சிக்கு உட்பட்ட புத்தேரி கிராமத்தில் செல்வ விநாயகர் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில்உள்ளது. இதில் செல்வ விநாயகர் கோவிலுக்கு கும்பாபி ஷேகம் நடைபெற்று சுமார் 12 ஆண்டுகள் ஆகிவிட்டதால் தற்பொழுது மீண்டும் கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த புத்தேரி கிராம பொதுமக்கள் ஏற்பாடு செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலை யில் அதே கிராமத்தை சேர்ந்த ராதா கிருஷ்ணன் மனைவி தமிழ்மணி தான் பரம்பரை அறங்காவலராக உள்ளதாகவும். சிலர் தன்னிச்சையாக இந்து அறநிலையத்துறையிடம் அனுமதி ஏதும் பெறாமல், பொதுமக்களிடம் வரி வசூல் செய்து கோவிலை இடித்து விட்டு புதியதாக திருப்பணி மேற்கொண்டு கும்பாபிஷேகம் நடத்துவதற்கு தன்னிச்சை யாக செயல்பட்டு வருவதா கவும் கூறினார்.
இது குறித்து ஒரு தர ப்பினர் ஆவினங்கு டிபோலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் ஆவினங்குடி போலீ சார் திட்டக்குடி இன்ஸ்பெக்டர் சீனிபாபு, அறநிலை துறை ஆய்வாளர் தமிழ்ச்செல்வி ஆகியோர் இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை செய்தனர். பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் இன்று திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் முன்னிலையில் இருதரப்பி னரையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தப்படும் என தெரிவித்தனர். அதுவரை எந்த பிரச்சனை யும் ஈடுபடக்கூடாது என இரு தரப்பினரிடமும் எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு உருவானது.
- மீன்கள் மீன்பிடி த்தளத்திற்கு கொண்டு வர முடியாமல் மீனவர்கள் தவித்து வருகின்றனர்.
- சரியான முறையில் பணிகள் நடைபெறவில்லை என மீனவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
கடலூர்:
தமிழ்நாடு சட்ட பேரவையின் உறுதிமொழிக் குழுத் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் மோகன், ராமலிங்கம், வில்வநாதன், சக்கரபாணி, அருள் ஆகியோர் கடலூர் மாவட்டத்திற்கு வருகை தந்தனர். இக்குழுவினர் கடலூர் எம்.எல்.ஏ., அய்யப்பனுடன் சென்று கடலூர் துறைமு கத்தில் நடைபெறும், தூர்வாரும் பணி, பராமரிப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அய்யப்பன் எம்.எல்.ஏ., கூறுகையில், கடந்த 2006 - 2007 ஆம் ஆண்டு வைத்த கோரிக்கை மற்றும் தற்போது நடைபெற்ற சட்டமன்றத்தில் துறைமுகம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வியின் அடிப்படையில் இக்குழு துறைமுகத்தை ஆய்வு செய்து உள்ளனர். துறைமுகத்தில் நடைபெற்ற பணியில் மோசடி செய்திருந்தால் அதற்குரிய தண்டனை வாங்கி கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையும், துறைமுக வளர்ச்சிக்காக கூடுதல் நிதியை குழு தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. மற்றும் உறுப்பினர்கள் பெற்று தருவார்கள் என பேசினார்.
இதனை தொடர்ந்து மீனவர் வாழ்வுரிமை இயக்க சார்பில் ஆய்வுக்குழுவிடனம் மனு அளித்தனர். அந்த மனுவில், கடலூர் துறைமுகம் 135 கோடி செலவில் புனரமைக்கப்பட்டு தூர்வாரப்பட்டு உள்ளது. ஆனால் துறைமுகத்தில் ஒரு பகுதியில் ஆழப்படுத்தியும், மற்றொரு பகுதியில் ஆழப்படுத்தாத நிலை உள்ளது. இதனால் கடலில் பிடிக்க ப்பட்ட மீன்கள் மீன்பிடி த்தளத்திற்கு கொண்டு வர முடியாமல் மீனவர்கள் தவித்து வருகின்றனர். இது சம்பந்தமாக உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஆய்வுக்குழு தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ கூறுகையில், கடலூர் துறைமுகத்தை ஆய்வு செய்வதற்கு முக்கிய காரணம் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பிய அய்யப்பன் எம்.எல்.ஏ.தான். கடலூர் துறைமுகத்தில் சரியான முறையில் பணிகள் நடைபெறவில்லை என மீனவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இது குறித்து கடலூர் கலெக்டர் தலைமையில் சென்னை ஐ.ஐ.டி. அதிகாரிகள் குழுவை அமைத்து உரிய ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவாதம் அளித்தார். அப்போது கலெக்டர் அருண் தம்புராஜ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
- முகாமில் பங்கேற்றவர்களுக்கு இலவச கண் கண்ணாடி வழங்கும் விழா கடலூர் மஞ்சக்குப்பத்தில் நடைபெற்றது.
- ஏற்பாடுகளை நிர்வாகிகள் சிவகுருநாதன், ராஜகுரு, சக்திவேல், முருகன், அமுதா செய்திருந்தனர்.
கடலூர்:
தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு, தி.மு.க., சார்பில் கடலுார், மஞ்சக்குப்பம் வரதம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த இலவச கண் சிகிச்சை முகாமில் 10 பேருக்கு கண்புரை அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. முகாமில் பங்கேற்ற வர்களுக்கு இலவச கண் கண்ணாடி வழங்கும் விழா கடலூர் மஞ்சக்குப்பத்தில் நடைபெற்றது.விழாவிற்கு டாக்டர் பிரவீன் அய்யப்பன் தலைமை தாங்கினார். விழாவில் அய்யப்பன் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 100 பேருக்கு 1 லட்சம் ரூபாய்க்கு மேல் மதிப்பிலான கண் கண்ணாடிகளை வழங்கி னார். விழாவில், முன்னாள் மாவட்ட பொருளாளர் குணசேகரன், மாநகராட்சி கவுன்சிலர்கள் கீதா குண சேகரன், பிரகாஷ், சரத் தினகரன், தமிழரசன், சுமதி ரங்கநாதன், மகேஸ்வரி விஜயன், ராதிகா பிரேம்குமார், கீர்த்தனா ஆறுமுகம், பாரூக் அலி, கர்ணன், அரசு காண்டிராக்டர் ராஜசேகர், முன்னாள் ஊராட்சித் தலைவர் சுதாகர் ஆகியோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை நிர்வாகிகள் சிவகுருநாதன், ராஜகுரு, சக்திவேல், முருகன், அமுதா செய்திருந்தனர்.
- சுரங்கம்-2ன் வெட்டு முகத்திலிருந்து வெகு அருகில், அதாவது, 60 மீட்டர் தொலைவில்தான் உள்ளது.
- அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் மேலும் அதிகரிக்கவும் இது உதவும்.
கடலூர்:
என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின், சுரங்கம்-2 பகுதியில், நீண்ட காலமாக நிலுவையில் இருந்த, பரவனாற்றுப் பாதையை நிரந்தரமாக மாற்றி அமைக்கும் மிக முக்கியமான பணி நிறைவடைந்தது. பரவனாற்றுப் பாதையின், மொத்தமுள்ள 12 கி.மீ. நீளத்தில், 10.5 கி.மீ. நீளத்திற்கான ஆற்றுப் பாதை அமைக்கும் பணி, ஏற்கனவே முடிக்கப்பட்டிருந்த நிலையில் மீதி இருந்த 1.5 கி.மீ. பகுதியில் பாதை அமைக்கும் பணியை என்.எல்.சி. நிறுவனம், கடந்த 26-ந் தேதி தொடங்கியது. பரவனாற்றுப் பாதையின் தற்காலிக சீரமைப்புப் பணி நடைபெறும் இடமானது சுரங்கம்-2ன் வெட்டு முகத்திலிருந்து வெகு அருகில், அதாவது, 60 மீட்டர் தொலைவில்தான் உள்ளது. இந்த பரவனாறு, சுரங்கம்2-ன், வட மேற்கு மற்றும் தெற்கு பகுதிகளில் இருந்து 100 சதுர கிலோ மீட்டருக்கும் அதிகமான நீர் பிடிப்பு பகுதியில் இருந்து கிடைக்கப்பெறும் மழை நீரை கையாள வேண்டும். இந்த பகுதியில் பல கிராமங்களும், அந்த கிராமங்களைச் சுற்றி வயல்வெளிகளும் உள்ளன.இடைவிடாத மற்றும் கனமழையின் போது ஏற்பட க்கூடிய வெள்ளப் பெருக்கில் இருந்து, கிராம மக்களையும், விவசாய நிலங்களையும் பாதுகாத்திட வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். இதற்கான அவசியத்தையும், தேவை யையும் கருத்தில்கொண்டு என்.எல்.சி. இந்தியா நிறுவனம்அ தற்கான ஒரு நிரந்தரத் தீர்வாக, பரவனாற்றுப் பாதையை நிரந்தரமாக மாற்றியமைக்கும் முக்கிய பணியை மேற்கொண்டது.
மொ த்தம் 12 கி.மீ நீளமுள்ள பரவனாற்றின் பாதையை நிரந்தரமாக மாற்றியமை ப்பதற்கான, தோராயமான பரப்பளவு 18ஹெக்டேர் ஆகும். ஏற்கனவே என்.எல்.சி. ஐ. எல்.சுரங்கங்கள் மூலம் பரவனாறு நீரால், ஆண்டு முழுவதும் பல ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. தற்போது பரவனாறு நிரந்தர மாற்றுப் பாதை அமைக்கப்படுவதால், பல ஏக்கர், கூடுதல் பரப்பளவிலான விவசாய நிலங்களுக்கு பாசன வசதி கிடைக்கும். மேலும், பரவனாறு ஆற்றில் தொடர்ந்து இருந்து வரும் நீர் இருப்பின் காரணத்தால், அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் மேலும் அதிகரிக்கவும் இது உதவும். என்.எல்.சி.இந்தியா நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்பட்ட இந்த பரவனாறு நிரந்தர மாற்றுப் பாதைக்கான கால்வாய் அமைக்கும் பணியானது அனைத்து கிராம மக்கள் மற்றும் அவர்களது பிரதிநிதிகள், கிராமத் தலைவர்கள், மாவட்ட வருவாய் அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் மற்றும் அவர்களது குழுக்கள், கடலூர் மாவட்ட கலெக்டர், தமிழக அரசு, நிலக்கரி அமைச்சகம், இந்திய அரசு மற்றும் அனைத்து பங்குதாரர்கள் ஆகியோர் வழங்கிய ஆதரவு மற்றும் ஒத்துழைப்பினால் வெற்றிகரமாக செயல்படுத்த ப்பட்டதுஎன என்.எல்.சி. நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- புதியதாக அங்கன்வாடி மையத்தை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.
- கலெக்டர் அருண் தம்புராஜ் முன்னிலை வகித்தார்.
கடலூர்:
குறிஞ்சிப்பாடி சட்டமன்ற மேம்பாட்டு நிதியிலிருந்து கடலூர் பச்சையாங்குப்பம் ஊராட்சி சொத்திக்குப்பம், காரைக்காடு, அன்னவல்லி, சாத்தங்குப்பம் ஆகிய பகுதிகளில் ரூ.56 லட்சம் மதிப்பீட்டில் ரேஷன் கடை, குடிகாடு, புதுக்குப்பம், ஆண்டிக்குப்பம் பகுதியில் புதிய பகுதி நேர ரேஷன் கடை, பெரியகாரைக்காடு கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி நிதியின் கீழ் ரூ.13.57 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக அங்கன்வாடி மையத்தை வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.
புதுக்குப்பம் பகுதியில் கடலூர்- ராமாபுரம் ( வழி கண்ணாரப்பேட்டை, வழி சோதனைப்பாளையம்) வரை இயங்கி வந்த அரசு பஸ் சேவையை, புதுக்குப்பம் வரை நீட்டிக்கப்பட்ட வழித்தடத்திலான பஸ் சேவையை அமைச்சர் எம்.ஆர். கே.பன்னீர்செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தார் . பின்னர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் 14 மகளிர் சுய உதவிக் குழுக்களில் மொத்தம் 176 நபர்களுக்கு ரூ.91 லட்சத்து 24 ஆயிரம் மதிப்பீட்டில் கடன் உதவிக்கான காசோலை களை வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வழங்கினார். இதில் கலெக்டர் அருண் தம்புராஜ் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) மதுபாலன், , கூட்டுறவு இணை பதிவாளர் நந்தகுமார், ஒன்றிய தி.மு.க செயலாளர்கள் காசிராஜன், சுப்பிரமணியன், விஜயசுந்தரம், மாநகர தி.மு.க செயலாளர் ராஜா மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- எருமனூர் ஊராட்சிப் பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
- அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் இதுநாள் வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கடலூர்:
விருத்தாசலம் அருகே எருமனூர் பகுதியில் 10 நாட்களாக குடிநீர் வினியோகம் இல்லாததை கண்டித்து 50-க்கும் மேற்பட்ட பெண்கள் இன்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே எருமனூர் ஊராட்சிப் பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு மினிடேங் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மினிடேங்கிற்கு தண்ணீர் மின்மோட்டார் மூலம் நிரப்பப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக மினிடேங்கிற்கு தண்ணீர் நிரப்பும் மின்மோட்டாரில் பழுது ஏற்பட்டது. இதன் காரணமாக மினி டேங்கிற்கு தண்ணீர் நிரப்புவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் தங்களது அன்றாட தண்ணீர் தேவைக்காக அருகில் உள்ள பகுதிக்கு சென்றும், விவசாய நிலத்தில் உள்ள தண்ணீரை பிடித்து வந்தும் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலை 10-நாட்களுக்கு மேலாக நீடித்தது. இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் மின்மோட்டாரில் உள்ள பழுதை சரிசெய்து தண்ணீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் இதுநாள் வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் இன்று காலை ஒன்று திரண்டனர். பின்னர் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் காலிகுடங்களுடன் விருத்தாசலம்- முகாசபரூர் செல்லும் சாலையில் அந்த வழியாக வந்த அரசு பஸ்சை மறித்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்லும் அனைத்து வாகனங்கள் அந்த வழியாக செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன. இந்த சாலை மறியல் ஒரு மணி நேரம் நடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த விருத்தாசலம் போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இந்த பிரச்சனைக்கு அதிகாரிகள் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததின்பேரில் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதி பரபரப்பாக இருந்தது.






