என் மலர்
கடலூர்
- காலை முதல் திரண்டு வந்தபடியே இருந்த நிலையில் சில்வர் கடற்கரை முழுவதும் கோலகலமாக காட்சியளித்தது.
- அனைவரையும் கவரும் வகையில் நிகழ்ச்சிகள் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்தார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் நிர்வாகம் சார்பில் போதை பொருட்களுக்கு எதிர்ப்பாக பன் ஸ்ட்ரீட் என்ற நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். அதன்படி இன்று காலை 6 மணி முதல் பன் ஸ்ட்ரீட் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான சிறுவர்கள், இளைஞர்கள் ,இளம் பெண்கள், பெரியவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் ஆர்வமுடன் திரண்டு வந்தனர், இந்த பன் ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் கண் கவரும் விதமாக நாய் கண்காட்சி ,மள்ளர் கம்பம், மல்லர் கயிர் காவல் துறை சார்பில் நாய் சாகச நிகழ்ச்சி, கயிறு இழுக்கும் போட்டி பீச் வாலிபால், சிலம்பம், கபடி உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த பன் ஸ்ட்ரீட் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. மேலும் பொதுவெளியில் மேடை அமைத்து பாடல்கள் ஒளிபரப்பியதன் மூலம் இளம்பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் சாலையில் ஆரவாரமாக குத்தாட்டம் போட்டுக் ஆடி பாடி கொண்டாடினார்கள்.. மேலும் ஒவ்வொரு கேளிக்கை நிகழ்ச்சியையும் அனைவரும் ஆர்வமாக கண்டுகளித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். இந்த நிகழ்ச்சியானது கடலூரில் புதுமையாக இருந்ததால் ஏராளமான பொதுமக்கள் ,இளைஞர்கள் காலை முதல் திரண்டு வந்தபடியே இருந்த நிலையில் சில்வர் கடற்கரை முழுவதும் கோலகலமாக காட்சியளித்தது.
இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் அருண் தம்புராஜ் , அய்யப்பன் எம்.எல்.ஏ.,மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், மாநகர தி.மு.க.செயலாளர் ராஜா மற்றும் கவுன்சிலர்கள் அரசு அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் போதை பொருட்களுக்கு எதிராக அங்கு திரண்டிருந்த மக்கள் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதில் கலெக்டர் அருண் தம்புராஜ் பேசும் போது, கடலூர் மாவட்டம் பிரிக்கப்பட்டு 30 ஆண்டு காலம் ஆகியுள்ளது. இதனை கொண்டாடும் வகையில் கடலூர் 30 என்ற தலைப்பில் 10நாட்கள் ஏராளமான நிகழ்ச்சிகள் புதுவிதமாகவும் அனைவரையும் கவரும் வகையில் நிகழ்ச்சிகள் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்தார்.
- 100 மீட்டர் ஓட்டம்.45 வயதுக்குட்பட்ட ஆடவர் மற்றும் மகளிர் 100 மீட்டர் ஓட்டம்.
- காலை 8 மணிக்கு கடலூர் மாவட்ட விளையாட்டு அலுவலரிடம் ஆஜராகி போட்டிகளில் கலந்துகொள்ளலாம்.
கடலூர்:
கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது - சர்வதேச அளவில் இந்திய தேசத்திற்கு பெருமை சேர்த்த இந்திய ஹாக்கி ஒலிம்பியன் மேஜர் தயான்சந் தை கவுரவிக்கும் வகையில், அவரின் பிறந்தநாளினை நினைவு கூறும் வகையில் இந்த ஆண்டு 29 -ந்தேதி தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுவதால், அதனை நினைவு கூறும் வகையில் கீழ்கண்டவாறு விளையாட்டுப் போட்டிகள் கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெறும்.
இதில் 19 வயதுக்குட்பட்ட ஆடவர் மற்றும் மகளிர் ஹாக்கி மற்றும் 100 மீட்டர் ஓட்டம்.25 வயதுக்குட்பட்ட ஆடவர் மற்றும் மகளிர்கூடைப்பந்து மற்றும் 100 மீட்டர் ஓட்டம்.45 வயதுக்குட்பட்ட ஆடவர் மற்றும் மகளிர் 100 மீட்டர் ஓட்டம். போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் குழு விளையாட்டிற்கு ஒரு குழுவாகவும், தனிநபர் போட்டிக்கு தனியாகவும் தங்களது நுழைவு விண்ணப்பத்தினை 28 -ந்தேதி பிற்பகல் 5 மணிக்குள் கடலூர் மாவட்ட விளையாட்டு அலுவலருக்கு அனுப்பிவைத்து, போட்டி நடைபெறும் அன்று காலை 8 மணிக்கு கடலூர் மாவட்ட விளையாட்டு அலுவலரிடம் ஆஜராகி போட்டிகளில் கலந்துகொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பூலோகநாதர் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும்மகா தீபாராதனை நடைபெற்றது .
- பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற புவனாம்பிகை உடனுறை பூலோகநாதர் மற்றும் அலமேலு மங்கை தாயார் சமேத பிரசன்ன வெங்கடாசலபதி கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேக 14- வது ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு காலையில் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் பூலோகநாதர் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும்மகா தீபாராதனை நடைபெற்றது .
மாலை திருக்கல்யாண விழா கோவில் வளாகத்தில் நடைபெற்றது . இதில் ஸ்ரீதேவி பூதேவி சமேத பிரசன்ன வெங்கடாசலபதிக்கும், புவனாம்பிகை உடனுறை பூலோகநாதர் சாமிக்கும் ஒரே மேடையில் திருக்கல்யாண உற்சவ விழா நடைபெற்றது. பின்னர் பெருமாளுக்கும் தாயாருக்கும் மற்றும் சிவனுக்கும், அம்மனுக்கும் மங்கள வாத்தியத்துடன் திருக்கல்யாணம் நடைபெற்றது. இங்கு பெருமாளுக்கும் மற்றும் சிவனுக்கும் ஒரே மேடையில் திருக்கல்யாணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கதாகும். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர். கலந்து கொண்ட சுமங்கலி பெண்களுக்கு சுமங்கலி பிரசாதம் மற்றும் பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் மகாதேவி மற்றும் பூஜைக்கான ஏற்பாடுகளை குருக்கள் குமார், ஹரி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.
- கதவை திறந்து வைத்து விட்டு வாசல் திரைைய போட்டிருந்தனர்.
- முருகானந்தம் வீட்டின் முன்பு நாட்டு வெடி குண்டை வீசி சென்றது தெரிய வந்தது.
கடலூர்:
கடலூர் அருகே தனியார் ஆஸ்பத்திரி ஊழியர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசப் பட்டது. கடலூர் அருகே உள்ள குட்டியாங்குப்பத்தை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 47). இவரது மனைவி சரளா (44). இவர்கள் 2 பேரும் புதுைவ மாநிலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் ஊழியர்களாக வேலை பார்த்து வருகிறார்கள். இவர்களுக்கு மதுமிதா, ஜனனி ஆகிய 2 பெண் குழந்தைகள் உள்ளன. நேற்று இரவு இவர்கள் வீட்டின் இரும்பு கதவை பூட்டி விட்டு ெமயின் கதவை திறந்து வைத்து விட்டு வாசல் திரைைய போட்டிருந்தனர்.
இவர்கள் அனைவரும் ஹாலில் படுத்து தூங்கி கொண்டிருந்தனர். நள்ளி ரவு 11.30 மணியளவில் மின்சாரம் தடைபட்டது. சற்று நேரத்தில் மின்சாரம் வந்தது. அந்த சமயத்தில் வீட்டிற்கு வெளியே பயங் கர சத்தம் கேட்டது. முருகானந்தம் வீட்டில் இருந்த மின் விசிறி ஏற்கனவே பழுதாகி வீட்டை விட்டு வெளியே வந்தனர். அப்போது வீட்டு வாசலில் சணல், சிறிது சிறிதான ஆணிகள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. மேலும் வீட்டு வாசலில் மாட்டப்பட்டிருந்த திரை சீலையும் கருகி இருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இவர்கள் தூங்கி கொண்டிருந்த போது யாரோ மர்ம நபர்கள் முருகானந்தம் வீட்டின் முன்பு நாட்டு வெடி குண்டை வீசி சென்றது தெரிய வந்தது.
இது குறித்து தூக்கணாம் பாக்கம் ேபாலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இந்த சம்பவம் குறித்து கேள்விபட்டதும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராமன் அங்கு வந்தார். அவர் முருகா னந்தம், அவரது மனைவி சரளா மற்றும் மகள்களிடம் விசாரணை நடத்தினார். உங்கள் குடும்பத்தின ருடன் யாருக்கும் முன் விரோதம் உள்ளதா? என் பது குறித்து கேட்டறிந்தார். மேலும் தடயவியல் நிபு ணர்களும் அங்கு வந்தனர். அவர்கள் முருகானந்தம் வீட்டின் முன்பு சிதறி கிடந்த சணல், ஆணிகளை கைப்பற்றி பரிசோதனைக் காக எடுத்துச் சென்றனர். அப்பகுதியில் ஏதேனும் கண்காணிப்பு கேமரா உள்ளதா? அதில் முருகா னந்தம் வீட்டுக்கு வந்த வர்கள் குறித்த காட்சிகள் பதிவாகி உள்ளதா? என் பது குறித்தும் விசாரணை மேற்கொண்டனர்.
முருகானந்தம் வீட்டின் முன்பு நாட்டு வெடிகுண்டு வீசி சென்றவர்கள் யார்? என்று போலீசார் விசா ரணை நடத்தினர். அப்போது அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் உள்பட 3 பேர் சேர்ந்து நாட்டு வெடி குண்டு வீசியது தெரிய வந்தது. போலீஸ் விசாரணை யில் பரபரப்பு தகவல்கள் வெளியானது. முருகா னந்தம் மகளை பிடிபட்ட வாலிபர்களில் ஒருவர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இது முருகானந்தத்துக்கு தெரிய வந்ததும், அவர் அந்த வாலிபரை கண்டித்துள் ளார். இதனால் ஆத்திரம் அடைந்த முருகானந்தத்தை மிரட்டுவதற்காக அவரது வீட்டு முன்பு நாட்டு வெடிகுண்டு வீசியது தெரிய வந்தது.இந்த வெடிகுண்டு எங்கிருந்து கிடைத்தது என்று போலீசார் விசாரணை நடத்திய போது யூடியூப்பை பார்த்து தாங்களே செய்ததாக தெரிவித்தனர். அவர்களி டம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள் ளது.
- கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கி மினி மாரத்தான் போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
- கல்லூரி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு ஓடினர்.
கடலூர்:
தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தால் எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் தொற்றிலிருந்து காத்துக்கொள்ளும் திறனை வளர்ப்பதற்கும் இளைஞர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 26-ந் தேதி சர்வதேச இளைஞர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு கடலூரில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதற்கு கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கி மினி மாரத்தான் போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலரும், சுகாதார பணிகள் துணை இயக்குனருமான மீரா, மருத்துவ பணிகள் இணை இயக்குனர் சாரா செலின் பால், போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகின் மாவட்ட மேற்பார்வையாளர் கதிரவன் வரவேற்றார். மாவட்ட திட்ட மேலாளர் செல்வம் திட்ட நோக்கவுரையாற்றினார். இதையடுத்து கடலூர் டவுன் ஹாலில் இருந்து தொடங்கிய போட்டியானது சில்வர் பீச் வரை சென்றது. இந்த மினி மாரத்தானில் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு ஓடினர். தொடர்ந்து கல்லூரி மாணவர்களிடையே நாடகப்போட்டி, குரும்பட போட்டி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு வினாடி- வினா போட்டியும் நடத்தப்பட்டது.
இதில் துணை இயக்குனர் (காசநோய்) கனகராஜ், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சிவா, மாவட்ட குருதி பரிமாற்றுக்குழும அலுவலர் குமார், கடலூர் அரசு தலைமை மருத்துவமனை ஏ.ஆர்.டி. மைய முதுநிலை மருத்துவர் தேவ்ஆனந்த், விருத்தாசலம் அரசு மருத்துவமனை, ஏ.ஆர்.டி. மருத்துவ அலுவலர் சாமிநாதன் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கடலூர் அரசு தலைமை மருத்துவமனை ஏ.ஆர்.டி. மைய மருத்துவ அலுவலர் ஸ்ரீதரன் நன்றி கூறினார்.
- சாலையை அகலப்படுத்தாமல் அன்பளிப்பு பெற்றுக் கொண்டு ஒருதலைப் பட்சமாக செயல்படுகின்றனர்.
- நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கடலூர்:
கடலூர் கோண்டூரிலிருந்து மடப்பட்டு வரை ரூ.230 கோடி செலவில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றது. நெல்லிக்குப்பம் பகுதியில் நடக்கும் சாலைப் பணிகளில் சரியான முறையில் அளவீடு செய்யவில்லை. இதனால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. சாலையை அகலப்படுத்தாமல் அன்பளிப்பு பெற்றுக் கொண்டு ஒருதலைப் பட்சமாக செயல்பட்டு வரும் அதிகாரிகளை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இன்று காலை சாலை மறியல் நடைபெற்றது.
மாநில வக்கீல் பிரிவு துணை செயலாளர் குருமூர்த்தி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கடலூர் நெல்லிக்குப்பம் சாலையில் அண்ணா சிலை முன்பு திரண்டனர். நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பி சாலை மறியலில் ஈடுபட்டனர். ்தகவல் அறிந்த நெல்லிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது சாலை விரிவாக்க பணிகளையும், ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியும் சரியான முறையில் செய்யவில்லை என்றால் எங்கள் போராட்டம் தொடரும் என திட்டவட்டமாக தெரிவித்தனர். பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் கடலூர் - நெல்லிக்குப்பம் சாலையில் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
- எழுத்துத் தேர்வு இன்று நடைபெற்றது.
- 4 தேர்வு மையங்களில் 6800 தேர்வர்கள் தேர்வு எழுதினார்கள்.
கடலூர்:
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தால் 750 பணியிடங்களுக்கான சப்-இன்ஸ்பெக்டர் (தாலுக்கா, ஆயுதப்படை, மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை, மற்றும் நிலை அலுவலர், தீயணைப்பு மற்றும் மீட்புப்படை) பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு இன்று நடைபெற்றது. கடலூர் மாவட்டத்தில் செயின்ட் ஜோசப் மேல்நிலைபள்ளி, செயின்ட் ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கிருஷ்ணசாமி மேல்நிலைப்பள்ளி, புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளி ஆகிய 4 தேர்வு மையங்களில் 6800 தேர்வர்கள் தேர்வு எழுதினார்கள்.
முன்னதாக தேர்வு எழுதும் தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு காலை 8.30 மணிக்குள் வந்தனர். பின்னர் அனைவரையும் தீவிர சோதனைக்கு பிறகு அனுமதித்தினர். தொடர்ந்து தேர்வு மையங்களை வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் தலைமையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் நேரில் சென்று ஆய்வு செய்தார். தமிழ் மொழிக்கான தகுதி தேர்வு இன்று மதியம் நடைபெற உள்ளது.
- மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
- சங்க மாவட்ட துணை தலைவர் சிவக்குமார் தலைமையில், வருவாய் துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர்:
கள்ளக்குறிச்சி தாசில்தார் மனோஜ்முனியன் இடைக்கால பணிநீக்கத்தை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. பண்ருட்டி வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட துணை தலைவர் சிவக்குமார் தலைமையில், வருவாய் துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- விஜயகுமார் ரூ.2 லட்சம் ஏலச் சீட்டுகளில் பணம் செலுத்தி வந்தார்.
- அசிங்கமாக திட்டி பணம் கொடுக்க முடியாது என்று கூறி மிரட்டி உள்ளனர்.
கடலூர்:
பண்ருட்டி அடுத்த அக்கடவல்லியை சேர்ந்தவர் நாராயணன். இவரது மனைவி தனலட்சுமி. இவர்கள் ஏல சீட்டு நடத்தி வந்தனர். அதேப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலர் இதில் சேர்ந்து பணம் செலுத்தி வந்துள்ளனர். ஒவ்வொருவரும் ரூ.2 லட்சம் ஏலச்சீட்டுகளில் பணம் செலுத்தி வந்தனர். நெய்வேலியை சேர்ந்த விஜயகுமார் என்பவர் ரூ.2 லட்சம் ஏலச் சீட்டுகளில் பணம் செலுத்தி வந்தார். முதிர்வு காலம் முடிந்த பின்னரும் இவருக்கு பணத்தை திருப்பியளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த இவர் கடந்த 24-ந்தேதி நாராயணன் வீட்டுக்கு சென்று சீட்டு கட்டிய பணம் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த நாராயணன், தனலட்சுமி இருவரும் சேர்ந்து விஜயகுமாரை அசிங்கமாக திட்டி பணம் கொடுக்க முடியாது என்று கூறி மிரட்டி உள்ளனர். இதுகுறித்து புதுப்பேட்டை போலீசில் விஜயகுமார் புகார் அளித்தார். புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்கு பதிவு செய்து ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்த நாராயணன், தனலட்சுமி இருவரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.
- தூங்கி கொண்டிருந்த போது யாரோ மர்மநபர்கள் முருகானந்தம் வீட்டின் முன்பு நாட்டு வெடிகுண்டை வீசி சென்றது தெரியவந்தது.
- முருகானந்தம் வீட்டின் முன்பு நாட்டு வெடிகுண்டு வீசி சென்றவர்கள் யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடலூர்:
கடலூர் அருகே உள்ள குட்டியாங்குப்பத்தை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 47). இவரது மனைவி சரளா (44). இவர்கள் 2 பேரும் புதுவை மாநிலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் ஊழியர்களாக வேலை பார்த்து வருகிறார்கள். இவர்களுக்கு மதுமிதா, ஜனனி ஆகிய 2 பெண் குழந்தைகள் உள்ளன.
நேற்று இரவு இவர்கள் வீட்டின் இரும்பு கதவை பூட்டி விட்டு மெயின் கதவை திறந்து வைத்து விட்டு வாசல் திரையை போட்டிருந்தனர்.
இவர்கள் அனைவரும் ஹாலில் படுத்து தூங்கி கொண்டிருந்தனர். நள்ளிரவு 11.30 மணியளவில் மின்சாரம் தடைபட்டது. சற்று நேரத்தில் மின்சாரம் வந்தது. அந்த சமயத்தில் வீட்டிற்கு வெளியே பயங்கர சத்தம் கேட்டது.
முருகானந்தம் வீட்டில் இருந்த மின் விசிறி ஏற்கனவே பழுதாகி இருந்தது. எனவே, மின் விசிறிதான் வெடித்து இருக்கும் என நினைத்து தூங்கி கொண்டிருந்தனர்.
சற்று நேரத்தில் மீண்டும் பயங்கர சத்தம் கேட்டது. உடனே 4 பேரும் பயந்தபடி வீட்டை விட்டு வெளியே வந்தனர். அப்போது வீட்டு வாசலில் சணல், சிறிது சிறிதான ஆணிகள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. மேலும் வீட்டு வாசலில் மாட்டப்பட்டிருந்த திரை சிலையும் கருகி இருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இவர்கள் தூங்கி கொண்டிருந்த போது யாரோ மர்மநபர்கள் முருகானந்தம் வீட்டின் முன்பு நாட்டு வெடிகுண்டை வீசி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து தூக்கணாம்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
இந்த சம்பவம் குறித்து கேள்விபட்டதும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராமன் அங்கு வந்தார். அவர் முருகானந்தம், அவரது மனைவி சரளா மற்றும் மகள்களிடம் விசாரணை நடத்தினார்.
உங்கள் குடும்பத்தினருடன் யாருக்கும் முன் விரோதம் உள்ளதா? என்பது குறித்து கேட்டறிந்தார். மேலும் தடயவியல் நிபுணர்களும் அங்கு வந்தனர். அவர்கள் முருகானந்தம் வீட்டின் முன்பு சிதறி கிடந்த சணல், ஆணிகளை கைப்பற்றி பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர்.
அப்பகுதியில் ஏதேனும் கண்காணிப்பு கேமரா உள்ளதா? அதில் முருகானந்தம் வீட்டுக்கு வந்தவர்கள் குறித்த காட்சிகள் பதிவாகி உள்ளதா? என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டனர்.
முருகானந்தம் வீட்டின் முன்பு நாட்டு வெடிகுண்டு வீசி சென்றவர்கள் யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- சம்பவத்தன்று பூங்கொடியின் மகளைதிடீரென்று காணவில்லை.
- சிலர் அடிக்கடி சந்தித்து பேசி வந்ததாக தெரிய வருகிறது.
கடலூர்:
கடலூர் அடுத்த எம்.புதூைர சேர்ந்தவர் பழனிவேல். இவரது மனைவி பூங்கொடி (வயது 34). இவர்களுக்கு 11-ம் வகுப்பு படிக்கும் மகள் இருந்து வருகிறார். சம்பவத்தன்று பூங்கொடியின் மகளைதிடீரென்று காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பூங்கொடி மற்றும் அவரது உறவினர்கள் தனது மகளை தேடிய போது அவரது தந்தை ஆரங்கி வீட்டில் மகள் இருந்தது தெரிய வந்தது.
இது குறித்து கடலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பூங்கொடி கொடுத்த புகாரில், எனது தந்தை அரங்கிடம் பணம் கொடுத்திருந்தேன். அந்த பணம் தொடர்பாக கேட்டபோது பணம் தரவில்லை. இந்த நிலையில் எங்களுக்கு தெரியாமல் எனது மகளை ஆரங்கி மற்றும் சிலர் அடிக்கடி சந்தித்து பேசி வந்ததாக தெரிய வருகிறது. சம்பவத்தன்று எனது மகளை காணவில்லை என்று தேடிய போது எனது தந்தை ஆரங்கி மற்றும் சகோதரர்கள் வீட்டில் கடத்தி வைத்துள்ளது தெரிய வந்தது. இது தொடர்பாக எனது கணவர் பழனிவேல் கேட்டதற்கு அவரையும் என்னையும் தாக்கி கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்து மானபங்கம் படுத்தினர். இவ்வாறு புகாரில் கூறி இருந்தார். சம்பவத்தின் போது தாக்கியதில் பூங்கொடி அவரது கணவர் பழனிவேல் ஆகியோர் காயம் அடைந்தனர். இது குறித்து கடலூர் அனைத்து மகளிர் போலீசார் ஆரங்கி, அவரது மகன்கள் பாண்டித்துரை, முருகவேல் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அடையாளம் தெரியாத வாகனம் தனசேகர், அவரது மகள் மதுவினா மீது வேகமாக மோதியது.
- சிகிச்சை பலனின்றி தனசேகர், அவரது மகள் மதுவினா பரிதாபமாக உயிரிழந்தனர்.
கடலூர்:
கடலூர் அருகே வாகனம் மோதி தந்தை, மகள் பலியானார்கள். கடலூர் முதுநகர் அடுத்த தொண்டமாநத்தம் பகுதியை சேர்ந்தவர் தனசேகர் (வயது 41). கூலி வேலை செய்து வந்தார். இவரது மகள் மதுவினா (6). அதே பகுதியில் அரசு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று நள்ளிரவு தனசேகர் அவரது மகள் மதுவினாவை கடலூர் - விருத்தாச்சலம் சாலை எஸ்.என். நகரில் அழைத்து சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையை கடந்து செல்லும் போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் தனசேகர், அவரது மகள் மதுவினா மீது வேகமாக மோதியது.
இந்த விபத்தில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். இவர்களது சத்தம் கேட்டு அப்பகுதி பொதுமக்கள் அங்கு வந்து பலத்த காயமடைந்த 2 பேரையும் மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி தனசேகர், அவரது மகள் மதுவினா பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட வாகனத்தை யார் ஓட்டியது ? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தந்தை- மகள் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






