search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொதுமக்கள் அனைவரும் கண்தானத்தின் அவசியத்தை கூறி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்: கலெக்டர் அருண் தம்புராஜ் பேச்சு
    X

    விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் கொடியசைத்து ெதாடங்கி வைத்தார். அருகில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) மற்றும் திட்ட இயக்குனர் மதுபாலன் மற்றும் பலர் உள்ளனர்.

    பொதுமக்கள் அனைவரும் கண்தானத்தின் அவசியத்தை கூறி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்: கலெக்டர் அருண் தம்புராஜ் பேச்சு

    • 38-வது தேசிய கண்தான இருவார விழிப்புணர்வு நிகழ்ச்சி கடைபிடிக் கப்படு கிறது.
    • கலெக்டர் அருண் தம்புராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்து பேசி னார்.

    கடலூர்:

    தேசிய கண்தான விழிப்பு ணர்வு நிகழ்ச்சி ஆண்டு தோறும் ஆகஸ்டு 25-ந் தேதி முதல் அடுத்த மாதம் (செப்டம்பர்) 8-ந் தேதி வரை கடைபிடிக் கப்படு கிறது. கடலூரில் 38-வது தேசிய கண்தான இருவார விழிப்புணர்வு நிகழ்ச்சி கலெக்டர் அருண் தம்பு ராஜ் தலைமையில் செவிலி யர்கள், மருத்துவர்கள், கண் மருத்துவர்கள் அனை வரும் கண்தானம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர். மேலும், கண்தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் அருண் தம்புராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்து பேசி னார். அப்போது அவர் பேசிய தாவது:-

    பொதுமக்கள் அனை வரும் கண்தானம் விழிப் புணர்வை ஏற்றுக்கொண்டு இந்தியாவில் பலகோடிக் கணக்கான மக்கள் பார்வை இழப்புடன் இருக்கிறார்கள். விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் அதனை சரி செய்வதற்கு நாம் ஒவ்வொருவரும் இறந்த பிறகு நமது 2 கண்களை தானமாக கொடுத்தோமானால் கருவிழி மாற்று அறுவை சிகிச்சை மூலம் 4 பேருக்கு பார்வை கிடைக்கும். எனவே நாம் அனைவரும் இந்த உறுதிமொழியை ஏற்றுக்கொண்டு தாங்க ளும் தங்கள் குடும்பத்தி னர்களுக்கும், நண்பர்க ளுக்கும் கண்தானத்தின் அவசியத்தை எடுத்து கூறி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) மதுபாலன், இணை இயக்குநர் நலப்பணிகள் டாக்டர் சாரா செலின் பால் , துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் மீரா , தலைமை கண் மருத்துவர் கேசவன், மருத்துவமனை கண்காணிப்பாளர் அசோக்பாஸ்கர் மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×