search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "attention"

    • 38-வது தேசிய கண்தான இருவார விழிப்புணர்வு நிகழ்ச்சி கடைபிடிக் கப்படு கிறது.
    • கலெக்டர் அருண் தம்புராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்து பேசி னார்.

    கடலூர்:

    தேசிய கண்தான விழிப்பு ணர்வு நிகழ்ச்சி ஆண்டு தோறும் ஆகஸ்டு 25-ந் தேதி முதல் அடுத்த மாதம் (செப்டம்பர்) 8-ந் தேதி வரை கடைபிடிக் கப்படு கிறது. கடலூரில் 38-வது தேசிய கண்தான இருவார விழிப்புணர்வு நிகழ்ச்சி கலெக்டர் அருண் தம்பு ராஜ் தலைமையில் செவிலி யர்கள், மருத்துவர்கள், கண் மருத்துவர்கள் அனை வரும் கண்தானம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர். மேலும், கண்தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் அருண் தம்புராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்து பேசி னார். அப்போது அவர் பேசிய தாவது:-

    பொதுமக்கள் அனை வரும் கண்தானம் விழிப் புணர்வை ஏற்றுக்கொண்டு இந்தியாவில் பலகோடிக் கணக்கான மக்கள் பார்வை இழப்புடன் இருக்கிறார்கள். விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் அதனை சரி செய்வதற்கு நாம் ஒவ்வொருவரும் இறந்த பிறகு நமது 2 கண்களை தானமாக கொடுத்தோமானால் கருவிழி மாற்று அறுவை சிகிச்சை மூலம் 4 பேருக்கு பார்வை கிடைக்கும். எனவே நாம் அனைவரும் இந்த உறுதிமொழியை ஏற்றுக்கொண்டு தாங்க ளும் தங்கள் குடும்பத்தி னர்களுக்கும், நண்பர்க ளுக்கும் கண்தானத்தின் அவசியத்தை எடுத்து கூறி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) மதுபாலன், இணை இயக்குநர் நலப்பணிகள் டாக்டர் சாரா செலின் பால் , துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் மீரா , தலைமை கண் மருத்துவர் கேசவன், மருத்துவமனை கண்காணிப்பாளர் அசோக்பாஸ்கர் மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர். 

    • கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தினர் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் வட்டத்தலை வர் தியாகராஜன் தலை மையில் நடைபெற்றது.
    • 6 ஆண்டுகளில் 30 சதவீதம் என்பதை 3 ஆண்டுகளில் 50 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கை கள் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தினர் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் வட்டத்தலை வர் தியாகராஜன் தலை மையில் நடைபெற்றது. பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறை படுத்த வேண்டும், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஈட்டிய விடுப்பு, அகவிலைப்படி வழங்க வேண்டும், பயணப்படி ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும், கிராம நிர்வாக அலுவலர்க ளுக்கான பதவி உயர்வு 6 ஆண்டுகளில் 30 சதவீதம் என்பதை 3 ஆண்டுகளில் 50 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கை கள் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் வி.ஏ.ஓ.க்கள் முருகன், செந்தில்குமார், ஜனார்த்தனன், தேவராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.

    • தமிழக அரசு பழைய ஓய்வூதியதிட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும்.
    • பயிற்சிக்கு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களை பயன்படுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலுயுறுத்தப்பட்டது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் 12 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் கிட்டப்பா நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

    மாவட்ட தலைவர் ஆதீஸ்வரன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர்கள் செல்வம், முருகன், திருஞா னசம்பந்தம், மாவட்ட இணைச் செயலாளர் இளங்கோ ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

    மாவட்ட செயலாளர் ஜவகர் வரவேற்றார். மாநிலத் துணைத் தலைவர் அசோக்குமார் சிறப்புரையாற்றினர்.

    ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசு பழைய ஓய்வூதியதிட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும். ஜூலை 1-ல் இருந்து முடித்து வைக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வு மற்றும் நிலுவை தொகையை வழங்க வேண்டும்.

    தொடக்க கல்வித்து றையில் நடைபெறும் எண்ணற்ற எழுத்தும் பயிற்சி மற்றும் சி.ஆர்.சி. பயிற்சிக்கு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களை பயன்படுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலுயுறுத்த ப்பட்டது.

    முடிவில் மாவட்ட பொருளாளர் விஸ்வநாதன் நன்றி கூறினார்.

    • மக்கள் படும் துன்பத்தை அரசுகளின் கவனத்திற்கு உரிய முறையில் கொண்டு சேர்க்க வேண்டும்.
    • ஜி.எஸ்.டி. தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட வணிகர் சங்க பேரவை ஆலோசனை கூட்டம் நிறுவனர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ரவி வரவேற்றார்.

    அவைத்தலைவர் ஜெயபால், நகரதலைவர் நசீர், ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், நகரசெயலாளர் பார்த்தசாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இக்கூட்டத்தில் மத்திய மாநில அரசுகளின் ஜி.எஸ்.டி. வரி விகித உயர்வுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

    மாதாமாதம் மாற்றி மாற்றி வரியை உயர்த்தி கொண்டு போவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது, ஜி.எஸ்.டி. கவுன்சில் தீர்மானங்களுக்கு மாநில அரசு எதிர்ப்பு தெரிவித்து அரிசி, பால் போன்றவற்றிற்கு வரியை குறைக்க செய்ய வேண்டும்.

    சமூகத்தின் மீது உண்மையான அக்கறை கொண்டோர் ஒவ்வொருவரும் மக்கள் படும் துன்பத்தை அரசுகளின் கவனத்திற்கு உரிய முறையில் கொண்டு சேர்க்க வேண்டியது கடமை ஆகும்.

    தஞ்சை வணிகர் சங்கபேரவையின் சார்பில் சென்னையில் உள்ள ஜி.எஸ்.டி. தலைமை அலுவலகம் முன்பு வரும் வருகிற 29-ம் தேதி தஞ்சையின் 52 வணிகர் சங்க வட்ட செயலாளர்களும் சென்று ஆர்ப்பாட்டம் செய்திடுவது.

    இதற்கான ஏற்பாடுகளை செய்திட மாநிலநிர்வாகிகளை கேட்டு கொள்வது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இந்த கூட்டத்தில் சங்க நிர்வாகிகள்ஆத்மநாதன், சுந்தரமூர்த்தி, காசிநாதன், சபிக்முகமது, பிரகாஷ், துணைச் செயலாளர் சீதாராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகரசெயலாளர் பார்த்தசாரதி நன்றி கூறினார்.

    • மேட்டூர் பூங்கா அருகே கருப்பு பட்டை அணிந்து தமிழக அரசின் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • இதில் ஏராளமான சங்க நிர்வாகிகளும், உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள்.

    மேட்டூர்:

    தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை அரசு ஊழியர் சங்கத்தின் மேட்டூர் கிளை சார்பில் மேட்டூர் பூங்கா அருகே கருப்பு பட்டை அணிந்து தமிழக அரசின் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு சேலம், நாமக்கல் மாவட்ட செய லாளர் ஆரோக்கியராஜ் தலைமை வகித்தார். பொதுப்ப ணித்துறையில் தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு குடும்ப நல நிதி சேமநல நிதியினை சம்ப ளத்தில் பிடித்து குடும்பத்திற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் .காலியாக உள்ள 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட களப்பணியாளர்கள் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்டு பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் ஏராளமான சங்க நிர்வாகிகளும், உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள்.

    ×