என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் மாவட்டத்தில் நள்ளிரவில் பெய்த மழை சாலையில் தண்ணீர் தேங்கியது
    X

    கடலூர் மாவட்டத்தில் நள்ளிரவில் பெய்த மழை சாலையில் தண்ணீர் தேங்கியது

    • பல்வேறு இடங்களில் ஆங்காங்கே மழை பெய்த வண்ணம் இருந்தது.
    • பல்வேறு நோய் தாக்கும் அபாயமும் அதிகமாக ஏற்பட வாய்ப்பு இருந்தது.

    கடலூர்:

    தமிழகத்தில் தென்மேற்கு பருவமழையொட்டி பல்வேறு இடங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதன்படி சில நாட்களுக்கு முன்பு விழுப்புரம், கள்ளக்குறிச்சி, உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆங்காங்கே மழை பெய்த வண்ணம் இருந்தது. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகல்நேரத்தில் வெயில் சுட்டெரித்து வந்தது.

    இதனால் பொதுமக்கள் அன்றாட வேலைக்காக வெளியில் செல்வோர், சாலையில் நடந்து செல்வோர் வெயிலில் தாக்கத்தை தாங்க முடியாமல் அக்னி வெயில் இன்னும் முடியவில்லையா என்று புலம்பிக்கொண்டு சென்றனர். இது ஒருபுறம் இருக்க இந்த வெப்பத்தால் பொதுமக்களின் உடலில் அலற்சி உள்பட பல்வேறு நோய் தாக்கும் அபாயமும் அதிகமாக ஏற்பட வாய்ப்பு இருந்தது.

    இந்நிலையில் நேற்று கடலூர் மாவட்டம் முழுவதும் காலை முதல் மாலை வரை வெயில் சுட்டெரித்தது. மேலும் நேற்று வாரவிடுமுறை தினம் என்பதால் வெப்பத்திலிருந்து தப்பிக்க ஏராளமனோர் சில்வர் பீச்சில் குவிந்தனர். பின்னர் மாலை நேரத்தில் குளிர்ந்த காற்று வீசி நள்ளிரவு மழை பெய்தது. இந்த மழையால் கடலூர் மாவட்டத்தில் உள்ள வீடுகளில் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. இந்த மழை காலை வரை சாரல் மழையாக நீடித்தது. இதனால் காலையில் பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்வோர் சாரல் மழையில் நனைந்தபடியும், குடை பிடித்தபடியும் சென்றனர். விடிய விடிய பெய்த மழையால் கடலூர் மாவட்டம் முழுவதும் சாலையில் குண்டும் குழிகளில் தண்ணீர் தேங்கியது. இந்த மழை கடலூர், நெல்லிக்குப்பம், மேல்பட்டாம்பாக்கம், நடுவீரப்பட்டு, குண்டுஉப்பலவாடி, பண்ருட்டி, மந்தாரக்குப்பம், சேத்தியாதோப்பு, விருத்தாசலம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்தது.

    Next Story
    ×