search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bun Street"

    • காலை முதல் திரண்டு வந்தபடியே இருந்த நிலையில் சில்வர் கடற்கரை முழுவதும் கோலகலமாக காட்சியளித்தது.
    • அனைவரையும் கவரும் வகையில் நிகழ்ச்சிகள் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்தார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் நிர்வாகம் சார்பில் போதை பொருட்களுக்கு எதிர்ப்பாக பன் ஸ்ட்ரீட் என்ற நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். அதன்படி இன்று காலை 6 மணி முதல் பன் ஸ்ட்ரீட் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான சிறுவர்கள், இளைஞர்கள் ,இளம் பெண்கள், பெரியவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் ஆர்வமுடன் திரண்டு வந்தனர், இந்த பன் ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் கண் கவரும் விதமாக நாய் கண்காட்சி ,மள்ளர் கம்பம், மல்லர் கயிர் காவல் துறை சார்பில் நாய் சாகச நிகழ்ச்சி, கயிறு இழுக்கும் போட்டி பீச் வாலிபால், சிலம்பம், கபடி உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த பன் ஸ்ட்ரீட் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. மேலும் பொதுவெளியில் மேடை அமைத்து பாடல்கள் ஒளிபரப்பியதன் மூலம் இளம்பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் சாலையில் ஆரவாரமாக குத்தாட்டம் போட்டுக் ஆடி பாடி கொண்டாடினார்கள்.. மேலும் ஒவ்வொரு கேளிக்கை நிகழ்ச்சியையும் அனைவரும் ஆர்வமாக கண்டுகளித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். இந்த நிகழ்ச்சியானது கடலூரில் புதுமையாக இருந்ததால் ஏராளமான பொதுமக்கள் ,இளைஞர்கள் காலை முதல் திரண்டு வந்தபடியே இருந்த நிலையில் சில்வர் கடற்கரை முழுவதும் கோலகலமாக காட்சியளித்தது.

    இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் அருண் தம்புராஜ் , அய்யப்பன் எம்.எல்.ஏ.,மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், மாநகர தி.மு.க.செயலாளர் ராஜா மற்றும் கவுன்சிலர்கள் அரசு அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் போதை பொருட்களுக்கு எதிராக அங்கு திரண்டிருந்த மக்கள் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதில் கலெக்டர் அருண் தம்புராஜ் பேசும் போது, கடலூர் மாவட்டம் பிரிக்கப்பட்டு 30 ஆண்டு காலம் ஆகியுள்ளது. இதனை கொண்டாடும் வகையில் கடலூர் 30 என்ற தலைப்பில் 10நாட்கள் ஏராளமான நிகழ்ச்சிகள் புதுவிதமாகவும் அனைவரையும் கவரும் வகையில் நிகழ்ச்சிகள் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்தார்.

    ×