search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Additional Funds"

    • மீன்கள் மீன்பிடி த்தளத்திற்கு கொண்டு வர முடியாமல் மீனவர்கள் தவித்து வருகின்றனர்.
    • சரியான முறையில் பணிகள் நடைபெறவில்லை என மீனவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    கடலூர்:

    தமிழ்நாடு சட்ட பேரவையின் உறுதிமொழிக் குழுத் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் மோகன், ராமலிங்கம், வில்வநாதன், சக்கரபாணி, அருள் ஆகியோர் கடலூர் மாவட்டத்திற்கு வருகை தந்தனர். இக்குழுவினர் கடலூர் எம்.எல்.ஏ., அய்யப்பனுடன் சென்று கடலூர் துறைமு கத்தில் நடைபெறும், தூர்வாரும் பணி, பராமரிப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அய்யப்பன் எம்.எல்.ஏ., கூறுகையில், கடந்த 2006 - 2007 ஆம் ஆண்டு வைத்த கோரிக்கை மற்றும் தற்போது நடைபெற்ற சட்டமன்றத்தில் துறைமுகம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வியின் அடிப்படையில் இக்குழு துறைமுகத்தை ஆய்வு செய்து உள்ளனர். துறைமுகத்தில் நடைபெற்ற பணியில் மோசடி செய்திருந்தால் அதற்குரிய தண்டனை வாங்கி கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையும், துறைமுக வளர்ச்சிக்காக கூடுதல் நிதியை குழு தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ. மற்றும் உறுப்பினர்கள் பெற்று தருவார்கள் என பேசினார்.

    இதனை தொடர்ந்து மீனவர் வாழ்வுரிமை இயக்க சார்பில் ஆய்வுக்குழுவிடனம் மனு அளித்தனர். அந்த மனுவில், கடலூர் துறைமுகம் 135 கோடி செலவில் புனரமைக்கப்பட்டு தூர்வாரப்பட்டு உள்ளது. ஆனால் துறைமுகத்தில் ஒரு பகுதியில் ஆழப்படுத்தியும், மற்றொரு பகுதியில் ஆழப்படுத்தாத நிலை உள்ளது. இதனால் கடலில் பிடிக்க ப்பட்ட மீன்கள் மீன்பிடி த்தளத்திற்கு கொண்டு வர முடியாமல் மீனவர்கள் தவித்து வருகின்றனர். இது சம்பந்தமாக உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஆய்வுக்குழு தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ கூறுகையில், கடலூர் துறைமுகத்தை ஆய்வு செய்வதற்கு முக்கிய காரணம் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பிய அய்யப்பன் எம்.எல்.ஏ.தான். கடலூர் துறைமுகத்தில் சரியான முறையில் பணிகள் நடைபெறவில்லை என மீனவர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இது குறித்து கடலூர் கலெக்டர் தலைமையில் சென்னை ஐ.ஐ.டி. அதிகாரிகள் குழுவை அமைத்து உரிய ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவாதம் அளித்தார். அப்போது கலெக்டர் அருண் தம்புராஜ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • கும்பாபிஷேகம் நடத்துவதற்கு ஏதுவாக வெயிலுகந்தம்மன் கோவிலுக்கு கூடுதல் நிலம் ஒதுக்கி தரவேண்டும்.
    • கள்ளிக்குடி வட்டாட்சியரிடடம் 3 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்துள்ள அரசப்பட்டி, வலையன் குளம், வீர பெருமாள்புரம் ஆகிய கிராமங்களுக்கு பாத்தியப்பட்ட வெயி லுகந்த அம்மன் கோவில் அரச பட்டியில் அமைந்து ள்ளது. இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் 3 கிராமங் களை சேர்ந்த அனைத்து சமுதாய மக்களும் ஒன்று சேர்ந்து சாமி கும்பிட்டு வருகிறார்கள்.

    தற்போது கோவில் இருக்கும் இடத்தை சுற்றிலும் புறம்போக்கு பகுதியாக உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்தி 70 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது. எனவே 3 கிரா மங்களை சேர்ந்த பொது மக்கள் ரூ.2 ஆயிரம் வரி கொடுத்து கோவில் கும்பா பிஷேகம் நடத்த முடிவு செய்தனர். ஆனால் கோவில் பெய ரில் நிலம் இல்லாததால் சுற்றுச்சுவர் எழுப்புவ தற்கும், கும்பாபி ஷேகம் செய்ய முடிய வில்லை. இந்து அறநிலை யத்துறை மற்றும் வரு வாய்த்துறை அதிகாரி களிடம் கோவில் பெயரில் நிலத்தை மாற்றிக் கொடு ப்பதற்கு பலமுறை மனு கொடுத்தும் எந்த ந டவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. கடந்த சில வருடங்களுக்கு முன்பு அரசு நிதி உதவி மூலம் ரூ.7 லட்சம் பெற்று கோவில் புனர மைப்பு செய்யப்பட்டது.

    தற்போது கோவில் பெயரில் குறைந்தது 50 சென்ட் நிலம் பதிவு செய்து தர வேண்டும் என கள்ளிக்குடி வட்டாட்சி யரிடடம் 3 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மனு கொடுத்தனர். சாமி கும்பிடுவதற்காக நிலங்கள் ஒதுக்கி தர நடவடிக்கை எடுக்கப்படும் என கள்ளிக் குடி வட்டாட்சியர் தெரிவித்தார்.

    • நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியை நேரில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கினார்.
    • முதல்-அமைச்சரின் கிராம சாலை திட்டத்தின் கீழ் ராதாபுரம் யூனியனுக்கு வழங்கப்படும் நிதி மிகவும் குறைவாக உள்ளது .எனவே அந்த நிதியை அதிகரித்து வழங்க வேண்டும்’’ என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    திசையன்விளை:

    நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியை நேரில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கினார்.

    அதில், ''ராதாபுரம் பஞ்சாயத்து யூனியனில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு கூடுதல் நிதி வழங்கிட வேண்டும். முதல்-அமைச்சரின் கிராம சாலை திட்டத்தின் கீழ் ராதாபுரம் யூனியனுக்கு வழங்கப்படும் நிதி மிகவும் குறைவாக உள்ளது.

    எனவே அந்த நிதியை அதிகரித்து வழங்க வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. ராதாபுரம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஜோசப் பெல்சி, அலெக்ஸ் அப்பாவு, தலைமை பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்ய ப்பன், கனகராஜ், நாங்குநேரி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆரோக்கிய எட்வின், மாவட்ட கவுன்சிலர் சாலமோன் டேவிட், கல்லிடைக்குறிச்சி பேரூர் செயலாளர் இசக்கி பாண்டியன், முன்னாள் மாவட்ட பிரதிநிதி ஐ.ஆர்.ரமேஷ், திசையன்விளை பேரூராட்சி கவுன்சிலர் கண்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    போபால் விஷவாயு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதலாக ரூ.7,800 கோடி இழப்பீடு கேட்டு மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. #BhopalGas #Victims #Compensating #SupremeCourt
    புதுடெல்லி:

    மத்திய பிரதேசத்தின் போபாலில் செயல்பட்டு வந்த யூனியன் கார்பைடு நிறுவனத்தில் இருந்து கடந்த 1984-ம் ஆண்டு டிசம்பர் 2-ந் தேதி நள்ளிரவில் மெத்தில் ஐசோசயனேட் என்ற விஷவாயு கசிந்தது. இதை சுவாசித்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் செத்து மடிந்தனர். 1 லட்சத்துக்கும் அதிகமானோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

    மிகப்பயங்கர பேரழிவாக கருதப்படும் இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொடிய சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு யூனியன் கார்பைடு நிறுவனம் ரூ.715 கோடியை இழப்பீடாக வழங்கியது. அமெரிக்காவை சேர்ந்த இந்த நிறுவனத்தை தற்போது டவ் கெமிக்கல்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.

    இந்த நிலையில் விஷவாயு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்க யூனியன் கார்பைடு மற்றும் பிற நிறுவனங்களுக்கு உத்தரவிடக்கேட்டு மத்திய அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஏற்கனவே வழங்கிய ரூ.715 கோடிக்கு மேல் கூடுதலாக ரூ.7,844 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

    தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் நீதிபதி சஞ்சிவ் கண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவை நீதிபதிகள் விசாரணைக்கு ஏற்பதாக அறிவித்தனர். இந்த மனு மீது ஏப்ரல் மாதம் விசாரணை நடத்தப்படும் என்றும் அவர்கள் கூறினர். #BhopalGas #Victims #Compensating #SupremeCourt 
    ×