search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "searching"

    • பூமாலை, சேகர், அஜித், அசோக் ஆகிய 4 பேரும் செல்வராசை தகாத வார்த்தையால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.
    • செல்வராஜை தலையில் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து உள்ளதாக கூறப்படுகிறது

    கடலூர்

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி மேல வீதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 59). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு தரப்பினருக்கும் முன்னதாகவே முன் விரோத தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சம்பவத்தன்று செல்வராசும், அவரது மனைவியும் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது செல்வராஜ் வீட்டிற்கு வந்த அந்த தரப்பை சேர்ந்த கும்பலான பூமாலை, சேகர், அஜித், அசோக் ஆகிய 4 பேரும் செல்வராசை தகாத வார்த்தையால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் பூமாலை கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் செல்வராஜ் வயிற்றில் குத்தியதாக தெரிகிறது. மேலும் அந்த கும்பலில் ஒருவர் இரும்பு பைபால் செல்வராஜை தலையில் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து செல்வராஜ் திட்டக்குடி போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் திட்ட க்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து முன்விரோத தகராறில் செல்வராஜை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து தலைமறைவாக உள்ள பூமாலை, சேகர், அஜித், அசோக் ஆகிய 4 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • கிருஷ்ணகுமாருக்கும் , அதே ஊரை சேர்ந்த ஈசாக் குடும்பத்திற்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.
    • சம்பவத்தன்று ஈசாக் மகன்கள் தாமஸ், தினேஷ் ஆகியோர் கிருஷ்ணகுமார் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து கம்பியால் தாக்கினர்.

    திசையன்விளை:

    உவரி அருகே உள்ள சொக்கலிங்கபுரத்தை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (வயது 25). இவருக்கும் அதே ஊரை சேர்ந்த ஈசாக் குடும்பத்திற்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.

    சம்பவத்தன்று ஈசாக் மகன்கள் தாமஸ் (25), தினேஷ் (23) ஆகியோர் கிருஷ்ணகுமார் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து கம்பியால் தலையில் அடித்து ரத்தகாயம் ஏற்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்ததாக உவரி போலீசில் கிருஷ்ணகுமார் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நதியா வழக்குப்பதிவு செய்து அண்ணன் ,தம்பியை வலைவீசி தேடி வருகிறார்.

    • சந்திப்பு த.மு. சாலையில் உள்ள ஒரு கடையின் முன்பு இன்று காலை மர்ம பை ஒன்று கிடந்தது.
    • ராபர்ட் ஜெபஸ்டியானின் பையை குமார் தவறுதலாக எடுத்துச்சென்றுள்ளார்.

    நெல்லை:

    குடியரசு தின விழாவையொட்டி நெல்லை ரெயில் நிலை யத்தில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சந்திப்பில் இருந்து ரெயில் நிலையம் செல்லும் த.மு. சாலையில் உள்ள ஒரு கடையின் முன்பு இன்று காலை மர்ம பை ஒன்று கிடந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். உடனடியாக கமிஷனர் ராஜேந்திரன் அதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். அதன்பேரில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்த சேகர், நுண்ணறிவு பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் மற்றும் போலீசார் காளிமுத்து, நடராஜன் ஆகியோர் அடங்கிய குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று மர்ம பையை கைப்பற்றி சோதனை நடத்தினர்.

    அதில், துணிகள் வைக்கப்பட்டிருந்தது. அந்த பை யாருடையது? எப்படி அங்கு வந்தது என்பது? குறித்து விசாரணை நடத்தினர். அப்போது நெல்லையை சேர்ந்த குமார் என்பவரும், நாசரேத்தை சேர்ந்த ராபர்ட் ஜெபஸ்டியான் என்பவரும் சென்னையில் இருந்து ஒரே ரெயில் பெட்டியில் பயணம் செய்து இன்று சந்திப்பு ரெயில் நிலையம் வந்துள்ளனர். அப்போது தவறுதலாக ராபர்ட் ஜெபஸ்டியானின் பையை குமார் எடுத்துச்சென்றுள்ளார். பின்னர் த.மு.சாலையில் உள்ள ஒரு டீக்கடையில் டீ குடித்தபோது மறந்து விட்டு அந்த பையை அங்கேயே விட்டுச்சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து அந்த பையை கைப்பற்றிய போலீசார் அதனை ராபர்ட் ஜெபஸ்டியானிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஒற்றை யானை ஒன்று கரும்பு பாரம் ஏற்றி வந்த லாரியை குறுக்கிட்டு கரும்பை பிடித்து இழுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • கர்நாடக மாநிலம் நரசிபுரம் எனும் ஊரிலிருந்து அரிசி லோடு ஏற்றிக்கொண்டு ஈரோடு செல்வதற்காக வந்த லாரியை காரப்பள்ளம் எனும் இடத்தில் ஒற்றை யானை வழிமறித்து கரும்பு இருக்கின்றதா என தேடிப் பார்த்தது.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள மலைப்பாதையில் நாளொன்றுக்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.

    இதில் தற்போது தாளவாடியில் இருந்து சத்தியமங்கலத்தில் இருக்கும் கரும்பு ஆலைக்கு கரும்புகள் ஏற்றி லாரிகள் தினமும் அடர்ந்த வனப்பகுதியை கடந்து வருகின்றது.

    இதில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஒற்றை யானை ஒன்று கரும்பு பாரம் ஏற்றி வந்த லாரியை குறுக்கிட்டு கரும்பை பிடித்து இழுத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    அதேபோல் நேற்று இரவு 8 மணியளவில் கர்நாடக மாநிலம் நரசிபுரம் எனும் ஊரிலிருந்து அரிசி லோடு ஏற்றிக்கொண்டு ஈரோடு செல்வதற்காக வந்த லாரியை காரப்பள்ளம் எனும் இடத்தில் ஒற்றை யானை வழிமறித்து கரும்பு இருக்கின்றதா என தேடிப் பார்த்தது. பின்னர் அருகே இருக்கும் வாகனங்களை விரட்ட ஆரம்பித்தது.

    ஒரு கட்டத்தில் யானை ரோட்டின் நடுவே நீண்ட நேரம் நின்று விட்டது. பிறகு மெல்ல, மெல்ல யானை நகர்ந்து காட்டிற்குள் சென்றதால் வாகனங்கள் நகர ஆரம்பித்தன.

    இதனால் சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கரும்பு பாரம் ஏற்றி வரும் லாரிகளை அடர்ந்த வனப்ப–குதிக்குள் எங்கேயும் நிறுத்த வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

    வாலிபர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த தொழிலதிபரை போலீசார் கைது செய்தனர்.
    ஆறுமுகநேரி:

    காயல்பட்டினம் பூந்தோட்டத்தை சேர்ந்தவர் காட்டான் என்ற மணிகண்டன் (வயது 27). சென்னையில் வசித்து வந்த இவர் சில மாதங்களாக அடைக்கலாபுரத்தில் தனது மனைவி பேச்சியம்மாளுடன் வசித்து வந்தார். இவர் மீது ஆறுமுகநேரி போலீசில் அடி தடி வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் மணிகண்டன் கடந்த மாதம் 23-ந் தேதி ஆறுமுகநேரி ஜெயின்நகர் அருகே மெயின் ரோட்டில் காரில் வந்த ஒரு கும்பலால்  வெட்டி கொலை செய்யப்பட்டார்.

    ஆறுமுகநேரி பேயன் விளையை சேர்ந்த சுப்பையா மகன் ஜெயசங்கர் பேயன்விளை புதூரில் ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து லாரிகள் மூலம் தண்ணீர் விற்பனை செய்துள்ளார். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு  ஆதரவாக  பேயன்விளை புதூரை சேர்ந்த சிவக்குமார், விக்னேஷ் ஆகியோர் இருந்துள்ளனர். இதனால் ஏற்பட்ட பகையில்  ஜெயசங்கருக்கு அடியாளாக செயல்பட்ட மணிகண்டன், சிவக்குமார் மற்றும் விக்னேஷ் ஆகியோரிடம் தகராறு செய்து மிரட்டி உள்ளார்.

    இதனை தொடர்ந்தே சிவக்குமார், விக்னேஷ் உள்ளிட்ட  கும்பல் மணிகண்டனை கொலை செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த சிவக்குமார், கார் டிரைவரான புதூர் சந்திரசேகர், ஆழ்வார்தோப்பு பெரியசாமி ஆகிய 3 பேர் கடந்த 25-ந் தேதி மதுரை வாடிப்பட்டி கோர்ட்டில் சரண் அடைந்தனர். 

    சிவக்குமாரின் தம்பியான தொழிலதிபர் விக்னேஷ் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார். இந்த நிலையில் ஆறுமுகநேரி இன்ஸ்பெக்டர் சம்பத், சப்-இன்ஸ்பெக்டர் மாடசாமி ஆகியோர் விக்னேசை கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×