search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "businessman arrested"

    • விக்கிரவாண்டி பகுதியில் குட்கா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக ரகசிய தகவல் வந்தது.
    • வீட்டில் மூட்டை மூட்டையாக குட்கா மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டுக்கு விக்கிரவாண்டி பகுதியில் குட்கா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக ரகசிய தகவல் வந்தது. அதன்படி விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயக முருகன், பெரிய தச்சூர் சப்-இன்ஸ்பெக்டர் மருது தங்கபாண்டியன் மற்றும் போலீசார் நாரேரிகுப்பத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அதே கிராமத்தை சேர்ந்த சிவா (வயது 46). வியாபாரி. இவரது வீட்டில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அவரது வீட்டில் மூட்டை மூட்டையாக குட்கா மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சிவாவை கைது செய்து அவரிடமிருந்து 200 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.

    தக்கலையில் வாகன சோதனையில் இன்ஸ்பெக்டருடன் தகராறு செய்த தொழில் அதிபர் கைது செய்யப்பட்டார்.
    தக்கலை:

    தக்கலை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையிலான போலீசார் தக்கலை பழைய பஸ் நிலைய பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த கார், இருசக்கர வாகனங்களை தடுத்து நிறுத்தி உரிய ஆவணங்கள் உள்ளதா? ஹெல்மெட், சீட் பெல்ட் அணிந்து போக்குவரத்து விதிமுறைகளை கடை பிடிக்கிறார்களா? என்று சோதனை செய்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அந்த காரில் ரீத்தாபுரம் பகுதியைச் சேர்ந்த கிங்சிலிராஜ்(வயது34) என்ற தொழில் அதிபர் இருந்தார். அவர் சீட் பெல்ட் அணியாமல் காரை ஓட்டி வந்ததால் அவரிடம் இன்ஸ்பெக்டர் நடராஜன் அது பற்றி கேட்டார். மேலும் ஆவணங்களையும் அவர் சோதனை செய்தார்.

    இதனால் இன்ஸ்பெக்டருக்கும், தொழில் அதிபருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தொழில் அதிபரின் கார் நடு வழியில் நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இது பற்றி இன்ஸ்பெக்டர் நடராஜன் தக்கலை போலீசில் புகார் செய்தார். அந்த புகாரில் தான் வாகன சோதனையில் ஈடுபட்ட போது கிங்சிலிராஜ் தன்னை அவதூறாக பேசி அரசு பணி செய்ய விடாமல் தடுத்துகொலை மிரட்டல் விடுத்ததாக கூறி இருந்தார்.

    இந்த புகாரின் பேரில் தக்கலை போலீசார் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தொழில் அதிபர் கிங்சிலிராஜை கைது செய்தனர். மேலும் அவர் பயணம் செய்த காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம்பற்றி தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
    ஒட்டன்சத்திரம் அருகே உடல் வீரியத்துக்காக மயில்களை வேட்டையாடிய தொழிலதிபர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் முயல், மான், மயில் போன்றவை தொடர்ந்து வேட்டையாடப்பட்டு வந்தன. குறிப்பாக இது போன்ற வன விலங்குகளை உடல் மினுமினுப்புக்காகவும், வீரியத்துக்காகவும் வேட்டையாடி வனப்பகுதியிலேயே சிலர் சமைத்து சாப்பிடுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்படி சின்னக்காம்பட்டி பகுதியில் நேற்று வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது வனப்பகுதியில் தீ மூட்டி இறைச்சி சமைத்து 2 பேர் சாப்பிட்டுக் கொண்டு இருந்தது தெரிய வந்தது.

    வனத்துறையினர் அவர்கள் 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தியதில் ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த பழனிச்சாமி (வயது 60) என்பதும் பாபு (55) என்பதும் தெரிய வந்தது. பழனிச்சாமி ஒட்டன்சத்திரத்தில் பைனான்ஸ் தொழில் நடத்தி வரும் தொழிலதிபர் ஆவார். பாபு என்பவரை வேட்டைக்காக அவர் அழைத்து வந்து மயிலை வேட்டையாடி சமைத்து சாப்பிட்டது தெரிய வந்தது.

    அவர்கள் இருவரையும் பிடித்து வேடடைக்கு பயன்படுத்திய நாட்டு துப்பாக்கி மற்றும் மயில் இறைச்சியையும் கைப்பற்றி ஒட்டன்சத்திரம் கோர்ட்டில் ஒப்படைத்தனர். #tamilnews
    வாலிபர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த தொழிலதிபரை போலீசார் கைது செய்தனர்.
    ஆறுமுகநேரி:

    காயல்பட்டினம் பூந்தோட்டத்தை சேர்ந்தவர் காட்டான் என்ற மணிகண்டன் (வயது 27). சென்னையில் வசித்து வந்த இவர் சில மாதங்களாக அடைக்கலாபுரத்தில் தனது மனைவி பேச்சியம்மாளுடன் வசித்து வந்தார். இவர் மீது ஆறுமுகநேரி போலீசில் அடி தடி வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் மணிகண்டன் கடந்த மாதம் 23-ந் தேதி ஆறுமுகநேரி ஜெயின்நகர் அருகே மெயின் ரோட்டில் காரில் வந்த ஒரு கும்பலால்  வெட்டி கொலை செய்யப்பட்டார்.

    ஆறுமுகநேரி பேயன் விளையை சேர்ந்த சுப்பையா மகன் ஜெயசங்கர் பேயன்விளை புதூரில் ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து லாரிகள் மூலம் தண்ணீர் விற்பனை செய்துள்ளார். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு  ஆதரவாக  பேயன்விளை புதூரை சேர்ந்த சிவக்குமார், விக்னேஷ் ஆகியோர் இருந்துள்ளனர். இதனால் ஏற்பட்ட பகையில்  ஜெயசங்கருக்கு அடியாளாக செயல்பட்ட மணிகண்டன், சிவக்குமார் மற்றும் விக்னேஷ் ஆகியோரிடம் தகராறு செய்து மிரட்டி உள்ளார்.

    இதனை தொடர்ந்தே சிவக்குமார், விக்னேஷ் உள்ளிட்ட  கும்பல் மணிகண்டனை கொலை செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த சிவக்குமார், கார் டிரைவரான புதூர் சந்திரசேகர், ஆழ்வார்தோப்பு பெரியசாமி ஆகிய 3 பேர் கடந்த 25-ந் தேதி மதுரை வாடிப்பட்டி கோர்ட்டில் சரண் அடைந்தனர். 

    சிவக்குமாரின் தம்பியான தொழிலதிபர் விக்னேஷ் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார். இந்த நிலையில் ஆறுமுகநேரி இன்ஸ்பெக்டர் சம்பத், சப்-இன்ஸ்பெக்டர் மாடசாமி ஆகியோர் விக்னேசை கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×