திட்டக்குடியில் முன்விரோத தகராறில் வாலிபருக்கு கத்திகுத்து: 4 பேர் மீது வழக்கு

பூமாலை, சேகர், அஜித், அசோக் ஆகிய 4 பேரும் செல்வராசை தகாத வார்த்தையால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.செல்வராஜை தலையில் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து உள்ளதாக கூறப்படுகிறது
திட்டக்குடியில் முன்விரோத தகராறில் வாலிபருக்கு கத்திகுத்து:  4 பேர் மீது வழக்கு
Published on

கடலூர்

கடலூர் மாவட்டம் திட்டக்குடி மேல வீதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 59). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு தரப்பினருக்கும் முன்னதாகவே முன் விரோத தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சம்பவத்தன்று செல்வராசும், அவரது மனைவியும் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது செல்வராஜ் வீட்டிற்கு வந்த அந்த தரப்பை சேர்ந்த கும்பலான பூமாலை, சேகர், அஜித், அசோக் ஆகிய 4 பேரும் செல்வராசை தகாத வார்த்தையால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் பூமாலை கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் செல்வராஜ் வயிற்றில் குத்தியதாக தெரிகிறது. மேலும் அந்த கும்பலில் ஒருவர் இரும்பு பைபால் செல்வராஜை தலையில் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து செல்வராஜ் திட்டக்குடி போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் திட்ட க்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து முன்விரோத தகராறில் செல்வராஜை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து தலைமறைவாக உள்ள பூமாலை, சேகர், அஜித், அசோக் ஆகிய 4 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com