என் மலர்
கடலூர்
கடலூர் மாவட்டத்தில் ஏற்கனவே கலெக்டராக இருந்த பிரசாந்த் மாவட்டத்தில் நடைபெறும் கிராம சபை கூட்டங்களுக்கு அதிகாரிகளுடன் அரசு பஸ்சில் சென்று பரபரப்பை ஏற்படுத்தினார்.
சிக்கன நடவடிக்கையை கையாளுவதற்காக இந்த முறையை கடைபிடித்து வருவதாக கலெக்டர் பிரசாந்த் கூறினார். இந்த நிலையில் அவர் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
அதைத்தொடர்ந்து கடலூர் மாவட்ட புதிய கலெக்டராக தண்டபாணி நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்ற பின்னர் முதன்முதலாக கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கீழத்திருகலிப்பாழை என்ற இடத்தில் இன்று கிராமசபை கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
அதன்படி இன்று காலை மாவட்ட கலெக்டர் முகாம் அலுவலகத்துக்கு கலெக்டர் தண்டபாணி மற்றும் அதிகாரிகள் வந்திருந்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கீழத்திருகலிப்பாழை கிராமத்துக்கு அரசு பஸ்சில் புறப்பட்டு சென்றனர்.
பின்னர் அவர்கள் கீழத்திருகலிப்பாழை கிராமத்தில் நடந்த கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
அங்கு கூடியிருந்த கிராம மக்கள் கலெக்டருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். பின்னர் கூட்டம் தொடங்கியது. இதில் கலந்து கொண்ட கிராம மக்கள் பல்வேறு கோரிக்கைகளை மனுவாக கலெக்டரிடம் வழங்கினர்.
ஏற்கனவே கலெக்டராக இருந்த பிரசாந்த் கடைபிடித்த வழக்கத்தையே தற்போது பொறுப்பேற்றுள்ள புதிய கலெக்டர் தண்டபாணியும் பயன்படுத்தியதால் அவரை பொதுமக்கள் பாராட்டினர்.
நெய்வேலி:
நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தின் சுரங்கம் 1-ஏ பகுதியில் மேல் மண் நீக்கம் பணிக்காக தனியார் ஒப்பந்த நிறுவனம் அமைக்கபட்டு உள்ளது.
இந்த நிறுவனத்தின் உதவியாளராக பீகார் மாநிலத்தை சேர்ந்த சடையேந்திரயாதவ் (வயது 40) என்பவர் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை வழக்கம் போல் சடையேந்திர யாதவ் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரி எதிர்பாரதவிதமாக சடையேந்திர யாதவ் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக என்.எல்.சி பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக புதுவை தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சடையேந்திர யாதவ்க்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர் இருப்பினும் சிகிச்சை பலன் அளிக்கமால் சடையேந்திர யாதவ் இன்று காலை பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து நெய்வேலி டவுன் ஷிப் போலீசில் பகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மேலகுமாரமங்கலம் காலனியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். கூலித் தொழிலாளி. இவரது மகள் சத்யப்பிரியா (வயது 27). இவர் சம்பவத்தன்று வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.
அக்கம் பக்கத்தினர் சத்யப்பிரியாவை மீட்டு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனிக்காமல் இன்று காலை சத்யப்பிரியா பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து பண்ருட்டி போலீசில் சத்யப்பிரியாவின் தாயார் அகிலாண்டம் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
நெய்வேலி:
நெய்வேலியை அடுத்த தெற்கிருப்பு கிராமம் கொக்கன் குப்பத்தை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி கலைச்செல்வி (வயது 26). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கடந்த ஆண்டு குமார் இறந்துவிட்டார். கலைச்செல்வி தனது 2 குழந்தைகளுடன் கொக்கன் குப்பத்தில் வசித்து வந்தார்.
இந்தநிலையில் ஆதன்டார்கொல்லை கிராமத்தில் இருக்கும் தனது தாய் தமிழ்செல்வியின் வீட்டுக்கு கலைச்செல்வி குழந்தைகளுடன் சென்றார். நேற்று மாலை வெளியே சென்றுவிட்டு வருவதாக கூறி குழந்தைகளை வீட்டில் விட்டுவிட்டு தனியாக கலைச்செல்வி சென்றார். ஆனால் வெகுநேரமாகியும் கலைச்செல்வி வீட்டுக்கு வரவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தாய் பல இடங்களில் கலைச்செல்வியை தேடினார். ஆனால் எங்கும் அவர் இல்லை. இதுகுறித்து நெய்வேலி தெர்மல் போலீசில் தமிழ்செல்வி புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வழக்குபதிவு செய்து மாயமான கலைச்செல்வியை தேடி வருகிறார். #tamilnews
பின்னர் மாலை 4 மணிக்கு ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. இதையடுத்து இளையஞானி 3-ம் திருமுறையும், இந்திரா சவுந்திரராஜன் 4-ம் திருமுறையும் பாடி னர். அதனை தொடர்ந்து வெங்கடேசன் ஓதுவார் திருமுறை இன்னிசை வாசித்தார்.
நிகழ்ச்சியில் வெங்கடேசன் தீட்சிதர் உள்பட பொது மக்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த விழா வருகிற 1-ந்தேதி வரை நடைபெற உள்ளது. நிறைவு நாளன்று பிரபல பரத நாட்டிய கலைஞர் பத்மா சுப்பிரமணியன் கலந்து கொண்டு பரதம் ஆட உள்ளார்.
விழாவுக்கான ஏற்பாடுகளை பொது தீட்சிதர்களும் மற்றும் இசையமைப்பாளர் கார்த்திக் ராஜாவும் செய்து வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் பெண்ணாடத்துக்கு நேற்று இரவு தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பிரதமர் நரேந்திரமோடியின் வருகையால் தமிழகம் மற்றும் புதுவையில் மாற்றம் ஏற்படும். புதுவையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு ஊழல் அதிக அளவில் நடக்கிறது.
காங்கிரஸ் ஆட்சியில் புதுவையில் எந்தவிதமான கட்டமைப்பு வசதிகளும் செய்யப்படவில்லை. இதனால் ரூ.1,800 கோடியில் நவீன நகரமாக்கும் திட்டத்தை மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசுதான் கொண்டு வந்துள்ளது.
நடிகர்கள் ரஜினிகாந்த்தும், கமல்ஹாசனும் இப்போதுதான் கட்சியை ஆரம்பித்து இருக்கிறார்கள். அவர்கள் முழுமையாக அரசியலில் இறங்கவில்லை. அவர்கள் முதலில் நடை போடட்டும். அதன் பிறகு நாங்கள் அவர்களை எடைபோடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews
புவனகிரி:
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள மேலகீரப்பாளையத்தை சேர்ந்தவர் சகாதேவன் (வயது 43). காங்கிரஸ் கட்சியின் வட்டார தலைவர். இவரது மனைவி சித்ரா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
கணவன்-மனைவிக்கிடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக சித்ரா கணவரை பிரிந்து திருச்சியில் வசித்து வருகிறார்.
மேலகீரப்பாளையத்தை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி முருகேஸ்வரி (35). கணவன்-மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக முருகேஸ்வரி கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்தார்.
இந்தநிலையில் சகாதேவனுக்கும், முருகேஸ்வரிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அருகில் உள்ள திருப்பணிநத்தம் கிராமத்தில் தனியாக வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்தனர். இதில் முருகேஸ்வரி கர்ப்பம் அடைந்தார்.
தற்போது அவர் 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். சகாதேவனுக்கு கடன் பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் சகாதேவனுக்கும், முருகேஸ்வரிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த சகாதேவன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.
இந்தநிலையில் அவரது வீட்டின் கதவு கடந்த 2 நாட்களாக பூட்டிக்கிடந்தது. மேலும் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசத்தொடங்கியது. இதனால் சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் புவனகிரி போலீஸ்நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
பின்னர் சகாதேவன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு சகாதேவன் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையிலும், முருகேஸ்வரி தரையில் பிணமாக கிடந்தார். 2 பேரின் உடல்களும் அழுகிய நிலையில் காணப்பட்டது. பிரேத பரிசோதனைக்காக உடல்களை மீட்டு போலீசார் சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கர்ப்பிணி கள்ளக்காதலியை கொன்று காங்கிரஸ் பிரமுகர் தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews
பெண்ணாடம்:
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே உள்ள மாளிகைகோட்டம் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 35) விவசாயி. இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர். நேற்று இரவு முருகன் தனது உறவினர் ஒருவருடன் அதே பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது குடிக்க சென்றார்.
ஆனால் வெகு நேரமாகியும் அவர் வீட்டுக்கு திரும்பிவர வில்லை. அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் பல இடங்களில் முருகனை தேடினர். அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்தனர். ஆனால் அவர் பற்றிய தகவல் தெரியவில்லை. இந்த நிலையில் மாளிகைகோட்டத்தில் உள்ள டாஸ் மாக்கடை அருகே வயல்வெளியில் முருகன் இன்றுகாலை பிணமாக கிடந்தார். இதை அந்த வழியாக சென்றவர்கள் இதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர்கள் முருகனின் பிணத்தை பார்த்து கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்து பெண்ணாடம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிணத்தை பார்வையிட்டனர்.
அப்போது முருகன் அணிந்திருந்த வேட்டியால் அவரது கழுத்து இறுக்கப்பட்டிருப்பதையும், கழுத்தில் ரத்தக்காயம் இருந்ததையும் போலீசார் கண்டனர். முருகனை யாரோ கழுத்தை இறுக்கி கொலை செய்தது தெரியவந்தது.
முருகனின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் பெண்ணாடம் போலீசார் வழக்குபதிவு செய்தனர். முருகனை கழுத்தை இறுக்கி கொலை செய்தது யார்? எதற்காக கொலை செய்தனர் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் முருகனுடன் சேர்ந்து மதுகுடிக்க சென்ற அவரது உறவினரையும் போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். அவருக்கும் இந்த கொலைக்கும் தொடர்பு உள்ளதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
சிதம்பரம்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணா மலை பல்கலைக்கழகத்தில் ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.
பல்கலைக்கழக வளாகத்தில் பல விடுதிகள் உள்ளன. அங்குள்ள ரோஜா இல்ல விடுதியில் ஏராளமான மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர்.
இந்த விடுதியில் தரமற்ற உணவுகள் வழங்கப்படுகிறது. விடுதியில் சுகாதாரம் இல்லை. குடிநீர் வசதியும் இல்லை என்று மாணவிகள் புகார் கூறி வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு திடீரென்று மாணவிகள் விடுதி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் இரவு நேர உணவை புறக்கணித்தனர்.
இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளிடம் விடுதி வார்டன்கள் மற்றும் பேராசிரியர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் கூறும்போது, எங்களுக்கு தரமான உணவு, குடிநீர் வழங்கக்கோரி பலமுறை நிர்வாகத்திடம் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால்தான் போராட்டத்தில் ஈடுபட்டோம். எங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றனர்.
இது தொடர்பாக பல்கலைக்கழக உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேராசிரியர்கள் உறுதி அளித்தனர். அதன் பின்னர் மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். #tamilnews
கடலூர்:
தூத்துக்குடியில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில மாநாட்டில் காவல் துறையினர் தாக்குதல் நடத்தினர். இதனைக்கண்டித்து கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நகர செயலாளர் அமர்நாத் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ராஜேஸ்கண்ணன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் ஆறுமுகம் கலந்து கொண்டு பேசினார்.
ஆர்ப்பாட்டத்தின்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில மாநாட்டில் தாக்குதல் நடத்திய காவல் துறையினரை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில குழு உறுப்பினர் மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சுப்புராயன், கருப்பையன், மாவட்ட குழு உறுப்பினர்கள் தட்சிணாமூர்த்தி, பாஸ்கரன், தமிழரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். #tamilnews
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள வேலங்குப் பத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்புவரை உள்ளன.
இங்கு 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் ஆசிரியைகள் லட்சுமி, ஐசென்ட் ஆகியோர் பணியாற்றி வருகிறார்கள். இந்த நிலையில் ஆசிரியை லட்சுமி என்பவர் பள்ளிக்கு வந்து மாணவ-மாணவிகளுக்கு பாடம் சொல்லிக்கொடுக்காமல் மாதந்தோறும் சம்பளத்தை மட்டும் பெற்றுவந்தார்.
இதற்கிடையே ஆசிரியை ஐசென்ட் மட்டும் 1 முதல் 5-ம் வகுப்புவரை பாடம் நடத்தி வந்தார். ஆசிரியை பற்றாக்குறையால் மாணவ-மாணவிகள் அவதியடைந்து வந்தனர்.
ஆசிரியை லட்சுமி பள்ளிக்கு வராமல் மாதந்தோறும் சம்பளம் பெற்றுசெல்லும் சம்பவம் வேலங்குப்பம் கிராம மக்களுக்கு தெரியவந்தது. பள்ளியில் ஆசிரியை இல்லாததால் தங்கள் குழந்தைகள் பள்ளியில் கல்வி பயிலமுடியாமல் இருப்பதை அறிந்து வேதனை அடைந்தனர்.
இன்று காலை ஆசிரியை ஐசென்ட் மட்டும் வழக்கம்போல் பள்ளிக்கு வந்தார். பின்பு அவர் மாணவர்களுக்கு வகுப்பறையில் அமர்ந்து பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது திடீர் என்று முன்னாள் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பாஸ்கரன் தலைமையில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு திரண்டுவந்தனர். பின்னர் அவர்கள் வகுப்பறையில் இருந்த மாணவ-மாணவிகளை வெளியே அழைத்தனர்.
அதன்பின்பு அவர்கள் ஆசிரியை ஐசென்டை அறையில் வைத்து பூட்டி சிறைவைத்தனர். இந்த தகவல் அறிந்ததும் காடாம்புலியூர் போலீசார் மற்றும் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் திலகம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
ஆசிரியை அறையில் வைத்து பூட்டி சிறைவைத்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் கூறும்போது, தொடக்கப்பள்ளியில் ஒரு ஆசிரியை மட்டும் மாணவ-மாணவிகளுக்கு பாடம் நடத்தி வருகிறார். மற்றொரு ஆசிரியை சம்பளம் வாங்கி கொண்டு பள்ளிக்கு வராமல் உள்ளார். இதனால் மாணவ-மாணவி களின் கல்வித்தரம் பாதிக்கப்படுகிறது.
இதைத்தொடர்ந்து இந்த பள்ளிக்கு கூடுதல் ஆசிரியை நியமிக்கவேண்டும். மேலும் பள்ளிக்கு வராமல் இருக்கும் ஆசிரியையை சஸ்பெண்டு செய்யவேண்டும் என்றனர். இதையடுத்து பொதுமக்களிடம் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆசிரியையை அறையில் வைத்து பொதுமக்கள் பூட்டிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
ஸ்ரீமுஷ்ணம்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள கந்தகுமாரன் பகுதியை சேர்ந்தவர் தங்கமணி டீக்கடை நடத்தி வருகிறார்.
இவரது மனைவி இந்திரா காந்தி இவர் மகள் தங்க மீனா(வயது 1 ½) இந்த குழந்தையை அழைத்து கொண்டு அந்த பகுதியில் உள்ள கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார்.
அங்கு சாமி தரிசனத்தை முடித்து விட்டு அவர்கள் 2 பேரும் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். இந்திராகாந்தி தனது மகளை சாலையோரத்தில் நடத்தியே அழைத்து வந்தார்.
அப்போது அந்த வழியாக சிதம்பரத்திலிருந்து காட்டுமன்னார் கோவில் நோக்கி வந்த தனியார் பஸ் ஒன்று எதிர்பராதவிதமாக சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்த குழந்தை தங்க மீனா மீது மோதியது.
இதில் பஸ் சக்கரத்தில் சிக்கிய தங்க மீனா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
விபத்தில் இறந்த தங்க மீனாவின் உடலை பார்த்து அவரது தாய் இந்திராகாந்தி கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.
இது குறித்து புத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் இறந்த தங்க மீனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் தாய் கண் முன்னே மகள் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews






