என் மலர்
நீங்கள் தேடியது "girl friend killed"
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள தச்சமலை என்ற கரடு பகுதியில் கடந்த மாதம் 29-ந் தேதி முகம் சிதைந்த நிலையில் ஒரு பெண் பிணம் கிடந்தது. இது குறித்து போலீசாருக்கு தகவல் வரவே அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
அவரது புகைப்படத்தை சமூக ஊடகங்களில் வெளியிட்டு யார்? என விசாரிக்கப்பட்டது. விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் திண்டுக்கல் அருகே உள்ள தோட்டனூத்தைச் சேர்ந்த மலர்க்கொடி (வயது 35) என தெரியவந்தது.
மேலும் இக்கொலையில் தொடர்புடையவர்கள் யார்? என போலீசார் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. மலர் கொடி கடந்த சில மாதங்களாக நத்தத்தில் ஒரு தனியார் டிபாட்மெண்ட் ஸ்டோரில் வேலை பார்த்து வந்தார். அப்போது சிங்கம்புணரியைச் சேர்ந்த முருகன் (47) என்பவர் கோழிப்பண்ணையில் வேலை பார்க்க நத்தத்துக்கு வந்தார்.
அப்போது அவர்களுக்குள் பழ்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. மலர்க்கொடி இறந்ததற்கு பிறகு தலைமறைவாக இருந்த முருகனை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். போலீசில் அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருந்ததாவது:-
மலர்கொடிக்கு 2 முறை திருமணமாகி கணவர்களுடன் ஏற்பட்ட தகராறில் பிரிந்து வந்து விட்டார். அதன் பிறகு நத்தத்தில் வேலை பார்த்த போது எனக்கு அறிமுகமானார். நான் தினசரி சிங்கம்புணரிக்கு சென்று வர முடியாது என்பதால் நத்தம் அருகே உள்ள செந்துறையில் தனியாக வீடு பிடித்து குடியிருந்து வந்தோம். டிபாட்மெண்ட் ஸ்டோரில் வேலை பார்த்து வந்த மலர்க்கொடி திடீரென வேலையை விட்டு நின்று விட்டார். இதனால் என்னிடம் தினமும் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்தார்.
இது மட்டுமின்றி அவருக்கு வேறு சில ஆண்களிடமும் தொடர்பு இருந்தது. இதனால் மலர்கொடியின் பழக்கத்தை துண்டித்துவிட முடிவு எடுத்தேன். சம்பவத்தன்று தச்சமலைக்கு அழைத்துச் சென்று அவருக்கு மது வாங்கி கொடுத்தேன். பின்னர் இருவரும் உல்லாசமாக இருந்தோம். மயங்கிய நிலையில் கிடந்த அவரின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்தேன். முகம் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு சிதைத்து விட்டு அங்கிருந்து வந்து விட்டேன்.
எனது சொந்த ஊருக்கு புறப்பட தயாராகி இருந்தபோது போலீசார் கணடுபிடித்து விட்டனர் என்று தெரிவித்தார். இதனையடுத்து போலீசார் முருகனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே நிலக்கோட்டை கொங்கர்குளத்தை சேர்ந்தவர் பிரசாந்த்(வயது27). தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார். அதேபகுதியை சேர்ந்த நாகராஜ் மனைவி பாலாம்பிகா(25). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. பிரசாந்துக்கும் பாலாம்பிகாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது.
நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இந்த விசயம் தெரியவரவே ஊர்பெரியவர்கள் இருவரையும் கண்டித்து அறிவுரை வழங்கினர். இருந்தபோதும் கள்ளக்காதல் ஜோடி தனிமையில் சந்தித்து வந்ததுள்ளனர்.
கடந்த 10-ந்தேதி வீட்டைவிட்டு வெளியேறிய ஜோடி திண்டுக்கல் பஸ்நிலையம் அருகே உள்ள லாட்ஜில் அறைஎடுத்து தங்கியுள்ளனர். இருவரும் அங்கே உல்லாசம் அனுபவித்துள்ளனர். அதன்பின்பு பிரசாந்துக்கும், பாலாம்பிகாவுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் தனது கள்ளக்காதலியை கழுத்தை அறுத்து கொலை செய்ய முடிவு செய்தார். அதன்படி பிரசாந்த் தான் வைத்திருந்த கத்தியால் காதலி பாலாம்பிகா கழுத்தை ஆட்டை அறுப்பதுபோல் அறுத்தார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் பிணமானார்.
பின்னர் அதிர்ச்சியுடன் எப்படியும் தன்னை போலீசார் பிடித்து விடுவார்கள் என்று கருதிய பிரசாந்த் தற்கொலை செய்ய முடிவு செய்தார். அதன்படி ஏற்கனவே வாங்கிவந்த விஷத்தை குடித்து தற்கொலை செய்தார்.
அறைக்கதவு கடந்த 2 நாட்களாக பூட்டியே கிடந்ததால் ஊழியர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே விடுதி ஊழியர்கள் அறை கதவு தட்டியும் திறக்கப்படவில்லை.
எனவே திண்டுக்கல் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து அறைகதவை உடைத்து உள்ளே சென்றனர்.
அப்போது படுக்கையில் வாயில் நுரைதள்ளியபடி பிரசாந்த் இறந்துகிடந்துள்ளார். பாலாம்பிகா கழிவறையில் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
சம்பவ இடத்திற்கு மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






