என் மலர்
கடலூர்
- கிராம மக்கள், வாயக்கால் நடுவே பாலம் கட்டித் தர பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
- கிராம மக்கள் ஒருவரின் சடலத்தை வாயக்காலில் நீந்தியபதி எடுத்து செல்லும் வீடியோ ஒன்று வைரலானது.
கடலூர் வீரசோழபுரம் கிராமத்தில் உள்ள மக்கள் உயிரிழந்தவர்களின் சடலங்களை வாய்க்காலில் நீந்தி கொண்டு சென்று அடக்கம் செய்யும் அவலை நிலையில் உள்ளனர்.
இது மக்களுக்கு பெறும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. கிராம மக்கள், வாயக்கால் நடுவே பாலம் கட்டித் தர பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், கிராம மக்கள் ஒருவரின் சடலத்தை வாயக்காலில் நீந்தியபதி எடுத்து செல்லும் வீடியோ ஒன்று வைரலானது.
இதன் எதிரொலியால், வீரசோழபுரம் கிராமத்தில் மயானத்திற்கு வாய்க்காலை கடந்து செல்ல ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதிய நடைபாலம் அமைக்கப்படும் என்று கடலூர் ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆணை பிறப்பித்துள்ளார்.
மேலும் அவர், மயானத்திற்கு செல்ல ஏதுவாக தற்காலிக பாலம் உடனடியாக அமைக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
- கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
- கடும் தள்ளு முள்ளு ஏற்பட்டு திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.
திண்டிவனம்:
கடலூர் மாவட்டம் புவனகிரி மஞ்ச கொல்லை கிராமத்தில் வன்னியர் சமூகத்தை சேர்ந்த வாலிபர் ஒருவரை வழிமறித்து குறிப்பிட்ட ஒரு சமூகத்தை சார்ந்தவர்கள் குடி போதையில் அந்த வாலிபரை கடுமையாக அடித்தும், காலால் முகத்தில் உதைத்தும் அராஜகம் செய்தாக கூறப்படுகிறது.
அந்த வாலிபர் கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். வாலிபரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பா.ம.க.வினர் சாலை மறியல் செய்தனர்.
இந்த நிலையில் வன்னியர் சமூக மக்களிடம் ஏற்பட்ட பதட்டத்தை தணிக்க அப்பகுதிக்கு சென்று வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி சமாதானம் செய்துள்ளார்.
ஆனால் விடுதலை சிறுத்தைகள் விநிர்வாகி ஒருவர்.தா. அருள்மொழியை கழுத்தை அறுத்து விடுவதாக கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. அது காணொளியாக முகநூலில் வலம் வந்தது.
இந்த நிலையில் வன்னியர் சங்க தலைவர் மீது கொலை மிரட்டல் விடுத்த அந்த நபர் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என திண்டிவனம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்ட 200-க்கும் மேற்பட்ட பா.ம.க.வினர் வந்தனர்.
அப்போது நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் போராட்டம் செய்யவிடாமல் பா.ம.க.வினர் மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகளை போலீசார் தடுத்ததால் அப்பகுதியில் கடும் தள்ளு முள்ளு ஏற்பட்டு திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
- விழுப்புரம் அரசு சட்டக்கல்லூரியில் நடைபெறும் விழாவில் கலந்து கொண்டு பள்ளி மாணவர்களுக்கு அரசு சார்பில் விளையாட்டு உபகரணங்களை வழங்குகிறார்.
- விழுப்புரம் மாவட்டத்தில் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தில் செஞ்சி வட்டத்தில் 60 பஞ்சாயத்துகளில் 70 விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படுகிறது.
விழுப்புரம்:
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், பொதுமக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வரும் பல்வேறு சிறப்புத் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்டம் வாரியாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
ஏற்கனவே கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் ஆய்வு பணிகளை முடித்துள்ளார்.
அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளின் நிலை குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நாளை (புதன்கிழமை) ஆய்வு செய்கிறார். இதற்காக அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் சென்னையில் இருந்து காரில் புறப்படுகிறார்.
மாலை 4 மணியளவில் விழுப்புரம் மாவட்டத்தின் எல்லையான ஓங்கூர் மற்றும் திண்டிவனம், விக்கிரவாண்டி சுங்கச்சாவடி ஆகிய இடங்களில் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பொன்முடி, தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் டாக்டர் பொன்.கவுதமசிகாமணி ஆகியோர் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.
இதையடுத்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அங்கிருந்து திருவெண்ணெய்நல்லூர் செல்கிறார். அங்கு மரகதம் கந்தசாமி மண்டபத்தின் முன்பு புதியதாக நிறுவப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 3 அடி உயரமுள்ள வெண்கல சிலையை திறந்து வைத்து பேசுகிறார்.
அதன் பின்னர் விழுப்புரம் அரசு சட்டக்கல்லூரியில் நடைபெறும் விழாவில் கலந்து கொண்டு பள்ளி மாணவர்களுக்கு அரசு சார்பில் விளையாட்டு உபகரணங்களை வழங்குகிறார்.
விழுப்புரம் மாவட்டத்தில் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தில் செஞ்சி வட்டத்தில் 60 பஞ்சாயத்துகளில் 70 விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படுகிறது.
காணை வட்டத்தில் 50 பஞ்சாயத்துகளில் 60 விளையாட்டு உபகரணங்களும், கண்டமங்கலம் வட்டத்தில் 46 பஞ்சாயத்துகளில் 63 விளையாட்டு உபகரணங்களும், கோலியனூர் வட்டத்தில் 42 பஞ்சாயத்துகளில் 54 உபகரணங்களும் வழங்கப்படுகிறது.
மேலும் மயிலம் வட்டத்தில் 47 பஞ்சாயத்துகளில் 58 விளையாட்டு உபகரணங்களும், மரக்காணம் வட்டத்தில் 56 பஞ்சாயத்துகளில் 66 விளையாட்டு உபகரணங்களும், மேல்மலையனூர் வட்டத்தில் 55 பஞ்சாயத்துகளில் 65 விளையாட்டு உபகரணங்களும், முகையூர் வட்டத்தில் 48 பஞ்சாயத்துகளில் 65 விளையாட்டு உபகரணங்களும், ஒலக்கூர் வட்டத்தில் 52 பஞ்சாயத்துகளில் 55 விளையாட்டு உபகரணங்களும், திருவெண்ணைநல்லூர் வட்டத்தில் 50 பஞ்சாயத்துகளில் 61 விளையாட்டு உபகரணங்களும், வல்லம் வட்டத்தில் 66 பஞ்சாயத்துகளில் 68 விளையாட்டு உபகரணங்களும், வானூர் வட்டத்தில் 65 பஞ்சாயத்துகளில் 76 விளையாட்டு உபகரணங்களும், விக்கிரவாண்டி வட்டத்தில் 51 பஞ்சாயத்துகளில் 62 விளையாட்டு உபகரணங்களும் என மொத்தம் 688 பஞ்சாயத்துகளில் 825 விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படுகிறது.
இந்நிகழ்ச்சிகளை முடித்து விட்டு இரவில் விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் தங்குகிறார்.
இதையடுத்து நாளை (புதன்கிழமை) காலை 9.30 மணியளவில் விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலையில் எம்.ஆர்.ஐ.சி. ஆர்.சி. பள்ளியின் எதிரே விழுப்புரம் சட்டமன்ற தொகுதி இளைஞரணி சார்பில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு விழா நூலகத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
அதனைத் தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அரசின் அனைத்துத்துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்று, விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்துத்துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள், அதன் முன்னேற்றங்கள் குறித்து ஆய்வு செய்கிறார். இதற்கான முன்னேற்பாடு பணிகளில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
- பல ஆண்டுகளாக வெயில், மழையால் சேதமடைந்து இருப்பதால், அதற்கு பதிலாக புதிய கொடிமரம் வைக்க முடிவு.
- இதற்காக நேற்று கொடி மரத்திற்கு படையல் செய்து வழிபட்டனர்.
சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில் தில்லை கோவிந்தராஜ பெருமாள் சன்னதி அமைந்துள்ளது. இங்கு பிரமோற்சவம் நடத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த சூழலில் தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் உள்ள கொடிமரம் பல ஆண்டுகளாக வெயில், மழையால் சேதமடைந்து இருப்பதால், அதற்கு பதிலாக புதிய கொடிமரம் வைக்க வேண்டும் என்று கோவில் நிர்வாக அறங்காவலர் சுதர்சன் மற்றும் பட்டாச்சாரியார்கள் முடிவு செய்தனர். இதற்காக நேற்று கொடி மரத்திற்கு படையல் செய்து வழிபட்டனர்.
இதுபற்றி அறிந்ததும் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் ஒன்று திரண்டு, தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் நிர்வாகிகளிடம் இக்கோவிலில் பிரமோற்சவம் நடத்துவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இதனால் இங்குள்ள கொடி மரத்தை புதுப்பிக்கவோ, மாற்றவோ கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
இதுபற்றி அறிந்ததும் சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக் தலைமையில், சிதம்பரம் இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து பட்டாச்சாரியர்கள் மற்றும் தீட்சிதர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர்.
இச்சம்பவத்தால் நடராஜர் கோவில் வளாகத்தில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கோவிந்தராஜ பெருமாள் கோயில் கொடி மரத்தை, தற்போது உள்ளதைப் போலவே மாற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை எனவும், கொடி மரத்தில் புதிதாக வளையம் போன்றவற்றை வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் தீட்சிதர்கள் தெரிவித்தனர்.
- தவெக-வை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பாமகவில் இணைந்துள்ளனர்.
- இளைஞர்கள் திண்டிவனத்தில் ராமதாஸை சந்தித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து விலகி 50க்கும் மேற்பட்டோர் பாமகவில் இணைந்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் காடாம்புலியூர் பகுதி தவெக-வை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பாமகவில் இணைந்துள்ளனர்.
தைலாபுரம் தோட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவன தலைவர் ராமதாஸை தவெக-ல் இருந்து விலகிய இளைஞர்கள் நேரில் சந்தித்தனர்.
மேலும், தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்பாடுகள் பிடிக்காத காரணத்தால், பாமகவில் இணைந்ததாக இளைஞர்கள் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
விக்கிரவாண்டி வி.சாலையில் மாநாடு நடைபெற உள்ள நிலையில், திண்டிவனத்தில் ராமதாஸை சந்தித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- நீ எந்த செல்லுக்கு வேண்டுமானாலும் போன் பண்ணு... போடா... என்று கூறுகிறார்.
- டோக்கன் வாங்குவதற்காக அங்கு நின்றிருந்த ஒருவர் ஒன்றரை மணி நேரமாக காத்திருப்பதாக கூறினார்.
கடலூர்:
கடலூர் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவில் டோக்கன் கொடுக்கும் பணியாளர் நீண்ட நேரமாக பணியில் இல்லாததால் நோயாளி ஒருவர் கேள்வி எழுப்பினார்.
டோக்கன் கொடுப்பவர் வெளியே சென்றுள்ளதாக கூறிய தூய்மைப்பணியாளர், தொடர்ந்து அநாகரிகமாக பேசினார்.
கேள்வி கேட்ட நோயாளிக்கு, ஒருமையிலும் திமிராகவும் தூய்மைப் பணியாளர் பதில் அளித்தார்.
சிஎம் செல்லுக்கு போன் செய்து கூறுவதாக அந்த நோயாளி கூற,
நீ எந்த செல்லுக்கு வேண்டுமானாலும் போன் பண்ணு... போடா... என்று கூறுகிறார்.
100-க்கு போன் செய்தால் போலீஸ் வரும் என்று அவர் கூற...
100 போலீஸ்... 2000 போலீஸ் பார்ப்பேன் என்று அந்த தூய்மைப்பணியாளர் கூறுகிறார்.
டோக்கன் வாங்குவதற்காக அங்கு நின்றிருந்த பெண் ஒருவர் ஒன்றரை மணி நேரமாக காத்திருப்பதாக கூறினார்.
இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
- சண்முகத்தின் உறவினர் கடைசியில் இருந்த போது வாடிக்கையாளர் ஒருவர் வந்து அரிசி கேட்டுள்ளார்.
- சிறிது நேரத்திற்கு பிறகு கடைக்கு வந்த சண்முகம் அந்த அரிசி மூட்டை இல்லாததை கண்டு திடுக்கிட்டுட்டார்.
'கொசுவுக்கு பயந்து வீட்டைகொளுத்துன' பழமொழியை நாம் கேள்விபட்டு இருக்கோம். அதுபோல திருடனுக்கு பயந்து அரிசி மூட்டைக்குள் ரூ.15 லட்சத்தை கடை உரிமையாளர் மறைத்து வைத்திருந்தார். இதனை அறியாத அவரது உறவினர் அந்த அரிசி மூட்டையை வாடிக்கையாளருக்கு விற்பனை செய்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள சண்முகா அரிசி மண்டி உள்ளது. இந்த கடையின் உரிமையாளர் சண்முகம். இவர் கடையில் வசூலான ரூ.15 லட்சம் பணத்தை திருட்டுக்கு பயந்து அரிசி மூட்டைக்குள் ரூ.10 லட்சத்தை ஒரு பையிலும், ரூ.5 லட்சத்தை மற்றொரு பையிலும் போட்டு மறைத்து வைத்து மற்ற அரிசி மூட்டைகளுடன் சேர்த்து வைத்துள்ளார். இதனை அடுத்து மறுநாள் காலையில் சண்முகத்தின் உறவினர் கடைசியில் இருந்த போது வாடிக்கையாளர் ஒருவர் வந்து அரிசி கேட்டுள்ளார். அப்போது அவர் ரூ.15 லட்சம் மறைத்து வைத்திருந்த அரிசி மூட்டையை எடுத்து விற்பனை செய்துள்ளார்.
சிறிது நேரத்திற்கு பிறகு கடைக்கு வந்த சண்முகம் அந்த அரிசி மூட்டை இல்லாததை கண்டு திடுக்கிட்டுட்டார். இதுகுறித்து விசாரித்த போதுதான், விபரம் தெரியவந்தது. உடனே வாடிக்கையாளரின் முகவரி தேடி சென்று விசாரித்த போது அந்த மூட்டைக்குள் ரூ.10 லட்சம் தான் இருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த சண்முகம் இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார். போலீசார் உரிய முறையில் விசாரித்து ரூ.5 லட்சத்தை மீட்டு தர வேண்டும் என்று சண்முகம் கோரிக்கை விடுத்துள்ளார்.
- மாநாட்டுக்கு வரும் வாகனங்களை நிறுத்த கூடுதலாக ஒரு வாகன நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது.
- வாகன நிறுத்தும் இடம் மாநாடு திடலில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.
விக்கிரவாண்டி:
நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து உள்ளார்.
இக்கட்சியின் முதல் மாநில மாநாடு, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி. சாலையில் வருகிற 27-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. பல்வேறு துறைகளில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள் பலர், விஜய் கட்சியில் ஐக்கியமாகியுள்ளனர்.
அரசியல் அனுபவமிக்கவர்கள், விஜய் கட்சி ஆதரவாளர்கள் மாநாட்டுக்கு ஆலோசனை வழங்கி வருகின்றனர். மாநாடு பணிகள் தொடங்கிய முதல் வாரத்தில், ஓய்வுபெற்ற ஏ.டி.ஜி.பி., ராஜேந்திரன் மாநாட்டு திடலினை நேரில் வந்து பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார்.
மாநாட்டுக்கு வரும் வாகனங்களை நிறுத்த கூடுதலாக ஒரு வாகன நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக விக்கிரவாண்டி அருகே உள்ள கீழக்கொல்லை பகுதியில் 120 ஏக்கர் பரப்பளவில் உள்ள தனியாருக்கு சொந்தமான நிலத்தை குத்தகைக்கு எடுத்து உள்ளனர்.
அந்த இடத்தில் வாகனங்கள் நிறுத்துவதற்கு ஏதுவான வகையில் பொக்லைன் எந்திரம் மூலம் சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த வாகன நிறுத்தும் இடம் மாநாடு திடலில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. அங்கிருந்து தொண்டர்கள் நடந்து தான் மாநாடு திடலுக்கு வர வேண்டு. மாநாடு பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், துபாய், பாதுகாப்பு நிறுவனத்தை சேர்ந்த பவுன்சர்கள், மாநாட்டு திடலில் இரு அடுக்கு பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
மாநாட்டு திடல் முழுவதும் 700-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேடை அலங்கரிக்கும் பணியை மாநில செயலாளர் மாநில புஸ்ஸி ஆனந்த் பார்வையிட்டு உள் வடிவமைப்பு குறித்து ஆலோசனை வழங்கினார். மழை சற்று ஓய்ந்துள்ள நிலையில், மாநாட்டு பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
- கனமழையால் சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
- நீர்வரத்து சீரான பின்னர் அனுமதி வழங்கப்படும்
கூடலூர்:
தேனி மாவட்டம் கம்பம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள சுருளி அருவிக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். மேலும் சபரிமலை சீசனின் போது ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் சுருளி அருவியில் நீராடி செல்கின்றனர்.
அமாவாசை உள்ளிட்ட தினங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ஏராளமான பொதுமக்கள் இங்கு குவிவார்கள்.
மேகமலை, தூவானம் உள்ளிட்ட இடங்களில் பெய்த கனமழையால் சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பாதுகாப்பு கருதி சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் அருவி பகுதிக்கு செல்லவும், குளிக்கவும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். நீர்வரத்து சீரான பின்னர் அனுமதி வழங்கப்படும் என தெரிவித்தனர்.
இன்று விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் ஐப்பசி மாத பிறப்பையொட்டி ஏராளமான அய்யப்ப பக்தர்கள் கோவிலுக்கு செல்லும் வழியில் சுருளி அருவிக்கு வந்தனர். குளிக்க தடை விதிக்கப்பட்டதால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
- பொதுப்பணித்துறை அதிகாரிகள் வீராணம் ஏரியை தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
- நாளை முதல் தண்ணீர் வெளியேற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்து வருகின்றது.
இந்த நிலையில் காட்டுமன்னார்கோவில் அடுத்துள்ள வீராணம் ஏரியில் தற்போது தண்ணீர் தேங்கி வருகின்றது. கடந்த 3 தினங்களுக்கு முன்பு 46 அடி அளவில் தண்ணீர் நிரம்பி இருந்தது. இந்த நிலையில் தொடர் மழை காரணமாக தற்போது வீராணம் ஏரி முழு கொள்ளவான 47.5 அடி அளவில் தண்ணீர் முழுமையாக நிரம்பியது.
இந்த நிலையில் இன்று காலை வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் வீராணம் ஏரியை தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். நாளை முதல் தண்ணீர் வெளியேற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
- மாநாட்டிற்கு வருகிற வாகனங்களை நிறுத்த சாலையின் இருபுறமும் தனியார் நிலம் 87 ஏக்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
- விஜய் மாநாடு மேடைக்கு வர தனிவழி அமைக்கப்பட்டு வருகிறது.
விக்கிரவாண்டி:
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதியக்கட்சியை தொடங்கியுள்ளார். இதற்கான கொடியும் அறிமுகப்படுத்த உள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வருகிற 27-ந்தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்துள்ள வி.சாலையில் நடைபெறவுள்ளது. மாநாட்டிற்கு வருகிற வாகனங்களை நிறுத்த சாலையின் இருபுறமும் தனியார் நிலம் 87 ஏக்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் வாகனங்கள் நிறுத்து இடம் போதாது கூடுதல் இடம் தேவை.
மாநாட்டிற்கு வரும் வாகனங்களால் சாலை போக்குவரத்துக்கு இடையூறு இருக்க கூடாது. நடிகர் விஜய் மாநாடு மேடைக்கு வர தனிவழி ஏற்படுத்த வேண்டும் என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். இதனை தொடர்ந்து நடிகர் விஜய் மாநாடு மேடைக்கு வர தனிவழி அமைக்கப்பட்டு வருகிறது.
போலீசாரின் அறிவுறுத்தலை தொடர்ந்து தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் கூடுதல் இடம் தேடினர். அப்போது விக்கிரவாண்டி அடுத்த கீழகொந்தை பைபாஸ் கிழக்கு பகுதியில் கேரளா மாநிலத்தை சேர்ந்தவரும் தற்போது சென்னை அண்ணாநகரில் வசித்து வருபவருமான பொதுவால் என்பவருக்கு சொந்தமான 120 ஏக்கர் நிலத்தை தேர்வு செய்து அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.
விக்கிரவாண்டி அடுத்த ஏழாய் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன்(வயது36) பெயிண்டர். தமிழக வெற்றிக் கழக தொண்டராகவும் இருந்து வருகிறார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர் நேற்று மாலை 6 மணியளவில் தனது மகன்கள் அரவிந்த், அஸ்வின் மற்றும் அவரது தம்பி மகன் கவின் ஆகியோருடன் வி.சாலை மாநாடு திடலுக்கு வந்தார். அங்கு அகல் விளக்கேற்றி வழிப்பட்டார். இது குறித்து பாண்டியன் கூறும்போது, த.வெ.க. மாநாடு மழையால் பாதிக்கக்கூடாது. மாநாடு நடைபெறும் வரை மழை இருக்ககூடாது என வேண்டி வழிப்பட்டேன் என்றார்.
- கொள்ளிடம் ஆற்றில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரை சேமிக்கும் வகையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் வீராணம் ஏரியில் தண்ணீரை சேமித்து வருகின்றனர்.
- வீராணம் ஏரியில் 47.5 அடி அளவிற்கு தண்ணீர் இருப்பு வைத்துக் கொள்ளலாம்.
கடலூர்:
வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் கல்லணையில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு கீழணைக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இதனால் கீழணையின் மொத்த நீர்மட்டமான 9 அடியில் தற்போது அணை 8.5 அடியை எட்டியது. தொடர்ந்து அணைக்கு தண்ணீர் வருவதாலும், தொடர் மழை காரணமாகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கீழணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு 4 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இதனால் தற்போது கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. எனவே வெள்ள பாதிப்பு ஏற்படாமல் இருக்க கொள்ளிடம் கரையோரம் வசிக்கும் கிராம மக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ, மீன்பிடிக்கவோ கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது இந்த நிலையில் கொள்ளிடம் ஆற்றில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரை சேமிக்கும் வகையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் வீராணம் ஏரியில் தண்ணீரை சேமித்து வருகின்றனர்.
வீராணம் ஏரியில் 47.5 அடி அளவிற்கு தண்ணீர் இருப்பு வைத்துக் கொள்ளலாம். அதன்படி ஏற்கனவே 44 அடி தண்ணீர் இருந்து வந்த நிலையில் கொள்ளிடம் ஆற்றில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரில் வீராணம் ஏரிக்கு 2 அடி தண்ணீர் நிரப்பி தற்போது 46 அடி தண்ணீர் கொள்ளளவு வைக்கப்பட்டுள்ளது. மேலும் வீராணம் ஏரியிலிருந்து வடவாறு வழியாக சேத்தியாத்தோப்பு அணைக்கு தண்ணீர் அனுப்பப்பட்டு தற்போது 7.5 அடி முழு கொள்ளளவு எட்டப்பட்டு உள்ளது.
இதன் மூலம் சேத்தியாதோப்பு அணையில் இருந்து 3வாய்க்கால் வழியாக பரங்கிப்பேட்டை பகுதிக்கு தண்ணீர் அனுப்பப்பட்டு வருகின்றது. இதன் மூலம் அந்த பகுதியில் விவசாய பணிகளுக்கு தண்ணீர் பயன்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
மேலும் கடலூர் மாவட்டம் முழுவதும் தொடர் மழை காரணமாக ஆறுகள், ஏரிகள் போன்றவற்றை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.






