என் மலர்tooltip icon

    கடலூர்

    • கூடலூர் சாலையில் செல்வராஜ் நகரில் நாகத்தம்மன் கோவில் உள்ளது. இன்று காலை கோவிலை திறக்க வந்த போது கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு தனியாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • கொள்ளையர்கள் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை எடுத்து விட்டு உண்டியலை அங்கேயேபோட்டு விட்டு சென்றது தெரிய வந்தது.

    கடலூர்:

    விருத்தாசலத்தில் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு நடைபெற்றுள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் - காட்டுக் கூடலூர் சாலையில் செல்வராஜ் நகரில் நாகத்தம்மன் கோவில் உள்ளது. இக் கோவிலில் உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு கோவில் பூசாரி பூஜை முடிந்தவுடன் கோவிலை பூட்டி விட்டு சென்றார். இன்று காலை கோவிலை திறக்க வந்த போது கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு தனியாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.           கோவில் கிரில் கேட்டை உடைத்து உள்ளே சென்ற கொள்ளையர்கள் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை எடுத்து விட்டு உண்டியலை அங்கேயேபோட்டு விட்டு சென்றது தெரிய வந்தது.

    உண்டியலில் ரூ. 5 ஆயிரம் வரை பணம் இருந்து இருக்கலாம் என தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து விருத்தாசலம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.    மேலும் கைரேகை நிபுணர்களும் வந்து அங்கு பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர். கோவில் அமைந்துள்ள பகுதியில் சி.சி.டி.வி. கேமிராக்கள் எதுவும் இல்லை. மெயின் ரோடு பகுதியில் தான் சி.சி.டி.வி. கேமிரா உள்ளது அதில் பதிவாகி உள்ள காட்சிகளை வைத்து திருடர்களை போலீசார் தேடி வருகிறார்கள். கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்ட சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

    • ஆற்றின் கரையோரம் மீன் பிடிக்க செல்வது வழக்கம்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பம் சேர்ந்தவர் பிலவேந்திரன் (வயது 53). பெயிண்டர். இவர் பெயிண்டிங் வேலை இல்லாத சமயத்தில் அப்பகுதியில் உள்ள சங்கராபரணி ஆற்றின் கரையோரம் மீன் பிடிக்க செல்வது வழக்கம். இவருக்கு வலிப்பு நோய் இருந்து வந்தது. சம்பவத்தன்று வழக்கம் போல் மீன் பிடிக்க அங்காளன்குப்பம் சங்கராபரணி ஆற்றின் கரையோரம் சென்ற போது தண்ணீரில் மூழ்கி இறந்த நிலையில் மிதந்து கிடந்தார். இத்தகவல் அறிந்த ரெட்டிச்சாவடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த நிலையில் இருந்த பிலவேந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பண்ருட்டி அருகே மதில் சுவரில் மோதி முதியவர் பலியானார்.
    • தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    கடலூர்:

    பண்ருட்டி தாலுகா காடாம்புலியூர் பி.ஆண்டிகுப்பத்தை சேர்ந்தவர் கமலக்கண்ணன் (வயது 57). இவர் நேற்றிரவு 10 மணிக்கு மாம்பட்டு வினித் கார்டன் எதிரே மெயின் ரோட்டில் தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறி வினித் கார்டன் எதிரே உள்ள பள்ளத்தில் விழுந்து, மதில் சுவரில் மோதி சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிர் இழந்தார்.

    இது பற்றி தகவலறிந்த காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன் வழக்கு பதிவு செய்து கமலக்கண்ணன் உடலை கைப்பற்றி பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்.

    • குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு தலைமறைவாக தங்கி உள்ளார்களா? என்பதை போலீசார் ஆய்வு செய்தனர்.
    • இந்த தீவிர சோதனை ஏதுவாக அமைந்துள்ளது என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் குற்றச்செயல் மற்றும் வாகன விதிமீறல்களை தடுக்க வேண்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் கடலூர், பண்ருட்டி, விருத்தாச்சலம், நெய்வேலி, சேத்தியாதோப்பு, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் ஆகிய 7 உட்கோட்டத்திற்குட்பட்ட பகுதியில் நேற்று 18-ந்தேதி முதல் வருகிற 23-ந்தேதி வரை தீவிர வாகன சோதனை, குற்றவாளிகளின் நடவடிக்கைகள் கண்காணிப்பு, சந்தேகப்படும் நபர்களை பிடித்து விசாரணை, தலைமறைவு குற்றவாளிகள், ரவுடிகளை கண்காணிப்பது போன்ற பணிகளில் போலீசார் தீவிர ஈடுபட வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி கடலூர் மாவட்டம் முழுவதும் நேற்று மாலையிலிருந்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இதில் கடலூர் மாவட்டம் முழுவதுமுள்ள 89 லாட்ஜ்களில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது குற்ற செயலில் ஈடுபடும் நபர்கள், வேறு மாவட்டங்களில் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு தலைமறைவாக தங்கி உள்ளார்களா? என்பதை போலீசார் ஆய்வு செய்தனர். இதனை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் போலீசார் விடிய விடிய தீவிரமாக 2100 வாகனகளில் சோதனை செய்தனர். அப்போது குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், ஆவணங்கள் இன்றி வாகனம் ஓட்டுதல், அதிக பாரங்கள் ஏற்றி செல்லுதல், செல்போனில் பேசி செல்லுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் 1777 வழக்கு பதிவு செய்து அபராத தொகை வசூல் செய்தனர்.

    இது மட்டும் இன்றி மாவட்டம் முழுவதும் குற்ற செயல்களில் ஈடுபடும் 260 பழைய குற்றவாளிகள், 196 ரவுடிகளை அதிரடியாக நேரில் சென்று அவர்கள் சொந்த ஊரில் உள்ளனரா? வீட்டில் உள்ளார்களா? தற்போது வெளியூரில் இருந்தால் என்ன வேலை செய்கிறார்கள்? தற்போது என்னென்ன நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்? என்பதனை அதிரடியாக சோதனை செய்தனர். இதில் தலைமறைவாக இருந்த 4 குற்றவாளிகளையும், 2 ரவுடிகளையும் போலீசார் கைது செய்தனர். மேலும் 32 நபர்கள் மீது சந்தேக வழக்கு பதிவு செய்து அவர்களின் கைரேகை, முழு விலாசம், தற்போது காரணம் இன்றி வெளியில் சுற்றுதல்? உள்ளிட்டவைகள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புதுவை மாநிலத்தில் இருந்து சாராயம் மற்றும் மது கடத்தல் தொடர்பாக 26 வழக்கில் செய்து 27 மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளன. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் தொடர் குற்ற சம்பவங்கள், வாகன விதிமீறல்களை தடுப்பது, அடிக்கடி வாகன விபத்தால் ஏற்படும் இறப்பு சதவீதத்தை குறைப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கு இந்த தீவிர சோதனை ஏதுவாக அமைந்துள்ளது என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    • பேனர்களை அதிரடியாக அகற்றி தடை விதித்தும் வருகின்றனர்.
    • உரிய அனுமதி பெற்று பேனர்கள் வைக்க வேண்டும்

    கடலூர்:

    பொது இடங்கள் மற்றும் சாலைகளின் ஓரத்தில் பேனர்கள் வைப்பதால் அடிக்கடி விபத்து சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதன் மூலம் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இவற்றை கட்டுப்படுத்தும் விதமாக போலீசார் அவ்வப் போது விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதோடு பேனர்களை அதிரடியாக அகற்றி தடை விதித்தும் வருகின்றனர். கடலூர் மாநகராட்சி பகுதியில் பேனர்கள் வைக்க வேண்டும் என்றால் மாநகராட்சி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு அதன் மூலம் உரிய அனுமதி பெற்று பேனர்கள் வைக்க வேண்டும் என உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் பொதுமக்களுக்கு இடையூராகவும், போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் பேனர் வைக்க கூடாது என அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா அறிவுறுத்தலின் பேரில் மாநகராட்சி ஆணையாளர் நவேந்திரன் உத்தரவின் பேரில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட கடலூர் மஞ்சக்குப்பம், செம்மண்டலம், திருப்பாதிரிப்புலியூர், முதுநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகள் ஓரம் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் அதிரடியாக அகற்றப்பட்டன. மேலும் மாநகராட்சி ஊழியர்கள் பேனர்கள் அகற்றும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்ததால் பரபரப்பாக காணப்பட்டது. மேலும் தி.மு.க. தலைமை அறிவுறுத்தியதை தொடர்ந்து கடலூர் மாநகரில் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த தி.மு.க.வினர் பேனர்களும் அதிரடியாக அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். 

    • போக்குவரத்து விதிகளை மீறி பெங்களூரில் இருந்து வந்த காரை நிறுத்தி சோதனைசெய்தனர்.
    • இவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.

    கடலூர்:

    பண்ருட்டியில் போலீசார் வாகன சோதனையின் போது ேபாதை பொருட்கள் மூட்டை, மூட்டையாக சிக்கியது. பண்ருட்டி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பரமேஸ்வர பத்மநாபன், சிறப்பு சப்.இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் மற்றும் போக்குவரத்து போலீசார் பண்ருட்டி ராஜாஜி சாலையில் போக்குவரத்தை சீரமைக்கும்பணியில்ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு வழி பாதையில் போக்குவரத்து விதிகளை மீறி பெங்களூரில் இருந்து வந்த காரை நிறுத்தி சோதனைசெய்தனர்.

    காரில் அரசினால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் மூட்டை ,மூட்டையாக இருந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து காரை ஓட்டி வந்த திருச்செந்தூரை சேர்ந்த விக்னேஷ் காரில் பயணம் செய்த மணிக்குமார் ஆகிய இருவரையும் பண்ருட்டி போலீசில்ஒப்படைத்தனர். பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து இவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • விழுப்புரம் மாவட்டம், திருவண்ணாமலை மாவட்டம், புதுவை மாநிலம் என 7 ஆயிரம் பேர் பணம் கட்டிவந்துள்ளனர்.
    • 9 பேரை சேர்த்து மொத்தம் ரூ.55 லட்சம் பணத்தை கட்டியுள்ளனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் விநாயக புரத்தைச் சேர்ந்த மாயக் கிருஷ்ணன் அவரது மனைவி பிரபாவதி மற்றும் மஞ்சுளா, கவுதம், மதி வாணன், முருகன், வீரமணி, செந்தில்குமார், அன்பு ஆகியோர் சேர்ந்து கடந்த 2021 -ம் ஆண்டு த கிரேட் இந்தியா மார்கெட்டிங் கம்பெனி என்ற தனியார் நிதி நிறுவனம் ஒன்றை தொடங்கி நடத்தி வந்தனர். அதில் ரூ.50 ஆயிரம் செலுத்தினால் 10 மாதத்தில் ரூ.90 ஆயிரம் வழங்கப்படும்.ரூ.2லட்சம் செலுத்தினால் ரூ.3.60 லட்சம் வழங்கப்படும் என்று ஆசை வார்த்தைகளை கூறினர். இதனை நம்பி விழுப்புரம் மாவட்டம், திருவண்ணாமலை மாவட்டம், புதுவை மாநிலம் என 7 ஆயிரம் பேர் பணம் கட்டிவந்துள்ளனர். இதனை நம்பிய திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள வேளாந்தாங்கல் கிராமத்தை ேசர்ந்த மன்னுலிங்கம் அவருக்கு தெரிந்த 9 பேரை சேர்த்து மொத்தம் ரூ.55 லட்சம் பணத்தை கட்டியுள்ளனர்.

    இதற்காக வாரந் தோறும் திண்டிவனத்தில் உள்ள அலுவலகத்தில் நடை பெறும் கூட்டத்தில் பங்கேற்று இந்த தவணைகளை செலுத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் மாயா கிருஷ்ணன் நடத்தி வந்த அலுவலகம் கடந்த நவம்பர் மாதம் திடீரென பூட்டப் பட்டது. அதன் பின்னர் நிதி நிறுவன உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் உள்பட 9 பேரும் தலைமறைவாகி விட்டனர். அப்போது தான் இரட்டிப்பு பணம் தருவகதாகக்கூறி ஆசை வார்த்தைகளை கூறி பல கோடி மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இது குறித்து மன்னு லிங்கம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதாவிடம் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்த போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவிட்டார். அதன்படி போலீசார் நடத்திய விசாரணையில், இவர்களைப் போன்று சுமார் 7 ஆயிரம் பேரிடம் ரூ.85 கோடி வரை பெற்றுக் கொண்டு தலைமறை வாகிவிட்டது தெரியவந்தது. இது குறித்து மாயா கிருஷ்ணன் உள்ளிட்ட 9 பேர் மீதும் விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் நிதி நிறுவன ஊழியர்கள் வீரமணி, செந்தில் குமார் ஆகியோரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

    இதனிடையே தலைமறை வாக இருந்த நிதிநிறுவன நிர்வாக இயக்குனர் மாய கிருஷ்ணன் மனைவி பிரபா வதி (36)மாயகிருஷ்னன் சகோதர் அன்பு (50) இரு வரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 2பேரும் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்டு சிறையில் அடைக் கப்பட்டனர். மேலும் நிதிநிறு வன மேலான் இயக்குனர். மாயகிருஷ்ணன் உள்ளிட்ட மற்ற 5 பேரை தேடி தனிப்படை போலீசார் சென்னை சென்றுள்ளனர். அவர்களும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர். 

    • மாவட்ட கல்வி அலுவலகங்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலங்களில் .ஏற்பட் டுள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.என .கலெக்டர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது
    • மாநில பொதுக்குழு உறுப்பினர் சகாய தேவதாஸ் வர வேற்றார். மாநில துணை செயலாளர் செல்வி தொடங்கி வைத்தார்

    கடலூர்:

    தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும். தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு 6, 7-வது மத்திய ஊதியக்குழு ஊதியத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை முற்றிலும் களைத்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட வேண்டும். மாவட்ட கல்வி அலுவலகங்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலங்களில் ஏற்பட் டுள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    மாவட்ட தலைவர் பிரபாகரன் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் சகாய தேவதாஸ் வர வேற்றார். மாநில துணை செயலாளர் செல்வி தொடங்கி வைத்தார். போராட்டத்தில் மாநில பொருளாளர் குமார், மாவட்ட செயலாளர் அந்தோணி ஜோசப், முன்னாள் மாவட்ட செயலாளர் நாராயணன் ஆகியோர் விளக்க உரை ஆற்றினார்கள். இதில் நிர்வாகிகள் ஹரி கிருஷ்ணன், ஏழுமலை, சுரேஷ், சின்னதுரை, சத்திய பிரியா உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

    • நெல்லிக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் தினந்தோறும் சேகரிக்கப்படும் குப்பைகளை நகராட்சி பகுதியில் கொட்டுவதற்கு இடம் இல்லாமல் இருந்து வருகின்றது.
    • கமிஷனர் (பொறுப்பு) மகேஸ்வரி பொதுமக்களுடன் நேரில் சென்று குப்பைகள் கொட்டி இருக்கும் இடத்தை பார்வையிட்டார்

    கடலூர்

    நெல்லிக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் தினந்தோறும் சேகரிக்கப்படும் குப்பைகளை நகராட்சி பகுதியில் கொட்டுவதற்கு இடம் இல்லாமல் இருந்து வருகின்றது.  இதன் காரணமாக நகராட்சி ஊழியர்கள் ஆறுகள் ஓரமாகவும் மற்றும் மக்கள் அதிகம் வசிக்காத பகுதிகளில் குப்பைகளை கொட்டி எரித்து வருவதாக தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் புகார் இருந்து வந்தன. இந்த நிலையில் தற்போது வைடிப்பாக்கம், மோரை எவரட்புரம் பகுதியில் அகற்றப்படும் குப்பைகளை நகராட்சி ஊழியர்கள் கொட்டி வருகின்றனர். இதில் மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து அதனை சரிப்படுத்தும் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.   இந்த நிலையில் இன்று காலை சரவணபுரம் பகுதியில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என்பதனை தரம் பிரித்து பொதுமக்கள் வழங்குவது குறித்து நெல்லிக்குப்பம் நகராட்சி சார்பில் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  இதற்காக நெல்லிக்குப்பம் கமிஷனர் (பொறுப்பு) மகேஸ்வரி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். அப்போது 25, 26, 27 ஆகிய வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் திடீரென்று கமிஷனர் மகேஸ்வரி வாகனத்தை சூழ்ந்து முற்றுகையிட்டனர பின்னர் எந்தவித அனுமதியும் இல்லாமல் குப்பைகள் கொட்டி வருவதால் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றோம். மேலும் குப்பைகளை எரித்து வருவதால் மூச்சு திணறல், வாந்தி போன்ற பாதிப்புகளும் ஏற்பட்டு வருவதால் நாங்கள் மிகுந்த அவதி அடைந்து வருகிறோம். இது தொடர்பாக நீங்கள் நேரில் இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து இதற்கு மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து கமிஷனர் (பொறுப்பு) மகேஸ்வரி பொதுமக்களுடன் நேரில் சென்று குப்பைகள் கொட்டி இருக்கும் இடத்தை பார்வையிட்டார். பின்னர் இதற்கு மாற்று நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களிடம் உறுதி அளித்தார் . இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது 

    • 24 வயது இளம்பெண். சென்னை தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகின்றார். கடந்த 6 மாதமாக வீட்டில் இருந்தபடி வேலை செய்து வருகின்றார்.
    • சம்பவத்தன்று வீட்டில் இருந்து கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு வெளியில் சென்ற இளம்பெண் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை‌

    கடலூர்:

    கடலூர் முதுநகரை சேர்ந்த 24 வயது இளம்பெண். சென்னை தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகின்றார். கடந்த 6 மாதமாக வீட்டில் இருந்தபடி வேலை செய்து வருகின்றார். சம்பவத்தன்று வீட்டில் இருந்து கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு வெளியில் சென்ற இளம்பெண் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சிடைந்த பெற்றோர் இளம்பெண்ணை தேடினர். எங்கும் கிடைக்கவில்லை. இது குறித்து கடலூர் துறைமுகம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருநாவலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட களமருதூர் காலனி பெரியார் நகரில் பல மாதங்களாக குடிநீர் குழாய் அமைக்கப்பட்டு சரிசெய்யாததால்கு டிதண்ணீர் அந்தப் பகுதிக்கு செல்லாமல் மக்கள் அப் பகுதிகளில் உள்ள விவசாய மோட்டாருக்கு சென்று பிடித்து வந்தனர்.
    • எந்த விதமான நடவடிக்கையும் இல்லா ததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஒன்று கூடி சாமறியலில் ஈடுபட்டனர்.

    கடலூர்:

    உளுந்தூர் பேட்ைட அருேக குடிநீர் ேகட்டு ெபாதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.   கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா திருநாவலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட களமருதூர் காலனி பெரியார் நகரில் பல மாதங்களாக குடிநீர் குழாய் அமைக்கப்பட்டு சரிசெய்யாததால்கு டிதண்ணீர் அந்தப் பகுதிக்கு செல்லாமல் மக்கள் அப் பகுதிகளில் உள்ள விவசாய மோட்டாருக்கு சென்று பிடித்து வந்தனர்.

    ஊராட்சி மன்ற தலைவருக்கும் தகவல் தெரிவித்தும் எந்த விதமான நடவடிக்கையும் இல்லா ததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஒன்று கூடி சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தனர். இதனை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். மறியல் காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • வி.எம். சுந்தர் (30). இவர் பூச்சி மருந்துகடை நடத்தி வருகிறார். வழக்கம் போல இரவு 9.30 மணிக்கு கடையை பூட்டிவிட்டு, மறுநாள் காலைவந்தபோது ,அதிர்ச்சியடைந்தார்
    • உள்ளே டிராயரில் வைக்கப்பட்டு இருந்த பணம் ரூ.5 லட்சம் கொள்ளை போனது தெரியவந்தது.

    கடலூர்:

    பண்ருட்டி எல்.என். புரத்தை சேர்ந்தவர் வி.எம். சுந்தர் (30). இவர் பண்ருட்டி 4முனை சந்திப்பில் நகராட்சிக்கு சொந்தமான காந்தி பூங்கா காம்ப்ளக்சில் பூச்சி மருந்துகடை நடத்தி வருகிறார். இவர் கடந்த 9ம் தேதி வழக்கம் போல இரவு 9.30 மணிக்கு கடையை பூட்டி சென்று விட்டு மறுநாள் காலை 8.30 மணி அளவில் மருந்து கடையை திறக்க வந்த போது ஷட்டர் பூட்டை உடைத்து கடையில்கொள்ளை போனது தெரிய வந்தது.உள்ளே டிராயரில் வைக்கப்பட்டு இருந்த பணம் ரூ.5 லட்சம் கொள்ளை போனது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சுந்தர் பண்ருட்டி போலீசில் புகார் கொடுத்தார். பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேலு, மற்றும் குற்றப்பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்

    . துணை போலிஸ் சூப்பிரண்டு சபியுல்லா நேரில் விரைந்து சென்று கொள்ளை யர்களை பிடிக்க சப்.இன்ஸ்பெக்டர்கள் தங்கவேலு தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணையை முடுக்கிவிட்டார். பண்ருட்டியில்இந்த கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தனிப்படை போலீசார் தொடர் நடவடிக்கை மூலம்கொள்ளையன் கேரள மாநிலம் திருவனந்தபுரம் நேமம் பகுதியை சேர்ந்த ஷாகுல் ஹமீத்(60) என தெரியவந்தது. இதனை தொடர்ந்து கேரளாவுக்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார்அவனை சுற்றி வளைத்து கைது செய்து பண்ருட்டி அழைத்து வந்தனர். விசாரணையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் கைவரிசை காட்டி கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.பூச்சி மருந்து கடையில் கொள்ளையடித்த கொள்ளையனை ஒரு வாரத்தில் துப்பு துலக்கியபண்ருட்டி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தங்கவேலு மற்றும் போலீசார் ஆனந்த் அன்பு ராஜி ஆகியோரை கடலூர் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் பாராட்டினார்.

    ×