என் மலர்tooltip icon

    கடலூர்

    • 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆமைக்குஞ்சுகளை கடலில் பாதுகாப்பாக விட்டு வந்தனர்.
    • 2நாட்களாக வனத்துறை யினர் அலட்சியத்தால் பராமரிப்பு இல்லாமல் இருந்துள்ளது.

    கடலூர்:

    ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை ஆமைகள் கடற்கரையோரம் முட்டையிட்டு செல்வது வழக்கம். முட்டைகளை கால்ந டைகள் மற்றும் பறவை இனங்கள் இறையாக சாப்பிடு வதால் வனத்துறையினர் உதவியுடன் கடலூர் சமூக வன ஆர்வலர் செல்லா அதிகாலையில் கடற்கரையோரம் பயணித்து ஆமைகள் விட்டுச்செல்லும் முட்டைகளை சேகரித்து அதனை பராமரித்து குஞ்சுகளை பொறித்த பின்னர் பாதுகாப்பாக கடலில் விட்டு வரும் பணியை கடந்த சில ஆண்டுகளாக சரியான முறையில் செய்து வந்ததால் அனைவரும் வெகுவாக பாராட்டினார்கள். இந்த ஆண்டு சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆமை முட்டைகள் கடலூர் கடற்கரையோரம் ஆமைகள் விட்டு சென்ற நிலையில் அதனை பாதுகாப்பாக மீட்டு வனத்துறை அதிகாரி களுடன் வன ஆர்வலர் செல்லா பாதுகாத்து கடந்த ஒரு மாதமாக சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆமைக்குஞ்சுகளை கடலில் பாதுகாப்பாக விட்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த 2நாட்களுக்கு முன்வனத்துறையினர் சமூக வன ஆர்வலரான செல்லாவை பணியில் ஈடுபடக்கூடாது என கூறியதாக தெரிகிறது.

    இதனால் ஆமைக்குஞ்சு பொரிப்பகத்தில் 2நாட்களாக வனத்துறை யினர் அலட்சியத்தால் பராமரிப்பு இல்லாமல் இருந்துள்ளது. இன்று காலை சுமார் 200-க்கும் மேற்பட்ட ஆமைக்கு ஞ்சுகள் வெளியே உயிரிழந்து காணப்பட்டது. இதனை பார்த்த பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்து, சோகத்துடன் உயிரிழந்த ஆமைக்குஞ்சுகளை சேகரித்து வைத்தனர். இதில் உயிருடன் இருந்த ஆமை குஞ்சுகளை தண்ணீரில் விட்டு பின்னர் கடலில் பாதுகாப்பாக விட்டனர். அரிய வகை ஆமைக்கு ஞ்சுகள் அதனுடைய செயல்பா டுகள் என்னென்ன? என்பதனை வன ஆர்வலர் செல்லா அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி அதனை முழுமையாக பாதுகாப்பு படுத்தி வந்த நிலையில், வனத்துறையின் அலட்சியத்தால் 200-க்கும் மேற்பட்ட ஆமைக்குஞ்சுகள் உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தையும், அதிர்ச்சி யையும் ஏற்படுத்தியுள்ளது. ஆகையால் மாவட்ட நிர்வாகம் இதற்கு தனி கவனம் செலுத்தி அரியவகை ஆமை குஞ்சுகளை பாதுகாப்பாக மீட்டு அதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதோடு வன ஆர்வலர் செல்லாவிற்கு வனத்துறை அதிகாரிகள் எந்தவித காரணமும் இன்றி பணி செய்ய விடாமல் ஏற்படுத்தியதை விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • விபத்தில் பலியான தொழிலாளிக்கு நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.
    • கடலூர் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.

    கடலூர்:

    புவனகிரி அருகே உள்ள வில்லியநல்லூரை சேர்ந்த தட்சணாமூர்த்தி மகன் நவீன்ராஜ் (வயது 48), தொழிலாளி. இவர் கடந்த 9.7.2018 அன்று மோட்டார் சைக்கிளில் கடலூர்-பூண்டியாங்குப்பம் சாலையில் சென்ற போது, அவ்வழியாக வந்த விழுப்புரம் போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பஸ் மோதியதில் உயிரிழந்தார். இதனால் அவரது பெற்றோர் மற்றும் சகோதரர்கள் நஷ்டஈடு பெற்று தரக்கோரி கடலூர் மூத்த வக்கீல் சிவமணி, வக்கீல்கள் சரவணன், முகுந்தன், சத்யா ஆகியோர் மூலம் கடலூர் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கடந்த 21.1.2021 அன்று, நவீன்ராஜ் குடும்பத்திற்கு விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்து கழகம் நஷ்டஈடாக ரூ.12 லட்சத்து 4 ஆயிரம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். ஆனால் சம்பந்தப்பட்ட போக்குவரத்து கழகம் நஷ்டஈடு வழங்காததால் நவீன்ராஜ் பெற்றோர், கோர்ட்டில் நிறைவேற்று மனுதாக்கல் செய்தனர்.

    இந்த மனுவை விசாரித்த கடலூர் கூடுதல் மாவட்ட நீதிபதி பிரகாஷ், விபத்தில் இறந்த நவீன்ராஜ் குடும்பத்திற்கு விழுப்புரம் போக்குவரத்து கழகம் வட்டியுடன் ரூ.15 லட்சத்து 4 ஆயிரத்து 311 கொடுக்க வேண்டும், இல்லையென்றால் சம்ப ந்தப்பட்ட போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான அரசு பஸ் ஜப்தி செய்ய ப்படும் என உத்தரவிட்டார். இருப்பினும் நஷ்டஈடு வழங்கப்படவில்லை. இதனால் கடலூர் பஸ் நிலையத்திற்கு வந்த விழுப்புரம் போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான அரசு பஸ்சை கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.

    • அகஸ்தியா புதுவை மாநிலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. நர்சிங் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
    • 3 மாதமாக கடலூர் அரசு மருத்துவமனையில் பயிற்சி பெற்று வருகிறார்.

    கடலூர்:

    புதுச்சேரி பிள்ளையார் குப்பம் சேர்ந்த அகஸ்தியா (வயது 19). இவர் புதுவை மாநிலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. நர்சிங் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 3 மாதமாக கடலூர் அரசு மருத்துவமனையில் பயிற்சி பெற்று வருகிறார். சம்பவத்தன்று அகஸ்தியா தனது வீட்டில் இருந்து கடலூர் அரசு மருத்துவமனைக்கு பயிற்சிக்காக வந்தார். பின்னர் அகஸ்தியா மீண்டும் வீட்டுக்கு செல்லவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் அகஸ்தியாவை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பண்ருட்டி நகரம் முழுவதுமுள்ள தங்கும் விடுதிகளில் நேற்று இரவு பண்ருட்டி போலீசார் சோதனை நடத்தினர்.
    • மது போதையில் வாகனங்களை ஓட்டி வந்த 16 பேர் பிடிபட்டனர்.

    கடலூர்:

    பண்ருட்டியில் ஸ்ட்ரோமிங் ஆபரேஷன் நடந்தது. இதில் பண்ருட்டி நகரம் முழுவதுமுள்ள தங்கும் விடுதிகளில் நேற்று இரவு பண்ருட்டி போலீசார் சோதனை நடத்தினர். பழைய குற்றவாளிகளின் முகத்தை அடையாளம் காட்டும் கேமராவையும் போலீசார் எடுத்துச் சென்றனர். இதன் மூலம் 100 பேர் சோத னைக்கு உட்படுத்தப்பட்டனர். இதில் 2 பழைய குற்றவாளிகள் அடையாளம் காண ப்பட்டனர். இவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அதே நேரத்தில் வாகன சோதனையும் தீவிரமாக நேற்று நடைபெற்றது. சாலையில் சென்ற அனைத்து வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப் பட்டன. இதில் மது போதையில் வாகனங்களை ஓட்டி வந்த 16 பேர் பிடிபட்டனர். இது தவிர விதிமீறல் வாகனங்களும் போலீசாரிடம் சிக்கின. மொத்தம் 172 வாகனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அனைத்து வாகனங்களின் பதிவு எண்கள் சரிபார்க்க ப்பட்டது.

    • 230 கோடி ரூபாய் செலவில் சாலை விரிவாக்க பணி நெல்லிக்குப்பம் பகுதியில் நடைபெற்று வருகிறது.
    • சாலை விரிவாக்க பணி மற்றும் கால்வாய் கட்டும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    கடலூர்:

    கடலூர் கோண்டூர் - மடப்பட்டு வரை 230 கோடி ரூபாய் செலவில் சாலை விரிவாக்க பணி நெல்லிக்குப்பம் பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அதிகாரிகள் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், சாலை விரிவாக்க பணி மற்றும் கால்வாய் கட்டும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இதனை கண்டித்து அரசியல் கட்சி நிர்வாகிகள், சமூக அமைப்பினர்கள் மற்றும் கவுன்சிலர்கள் பொதுமக்கள் வடிகால் வாய்க்கால் கட்டும் பணியை தடுத்து நிறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட னர். 

    இந்த நிலையில் நெல்லிக்குப்பம் கிராம நிர்வாக அலுவலர் தர்மராஜ் கொடுத்த புகாரின் நெல்லிக்குப்பம் போலீசார் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன் உட்பட 20 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் நெல்லிக்குப்பம் பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டு வருகிறது.

    • பிரதமர் மோடி பெயர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றம் 2ஆண்டு சிறை தண்டனை விதித்தது.
    • இதுகுறித்து கடலூர் புதுநகர் போலீசார் 12 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

    கடலூர், மார்ச்.24-

    பிரதமர் மோடி பெயர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றம் 2ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதன் காரணமாக மத்திய அரசை கண்டித்து கடலூர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் வக்கீல் கலையரசன் தலைமையில் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் கடலூர் காமராஜர் சிலை அருகே திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.       

     இதில் சிறப்பு அழைப்பாளராக காங்கிரஸ் கட்சி மாநில செயலாளர் வக்கீல் சந்திரசேகரன் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றி கோஷம் எழுப்பினார்.  இதனை தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராகவும், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகவும் கோஷம் எழுப்பி மோடி உருவ பொம்மைக்கு தீ வைத்து எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இத்தகவல் அறிந்த புது நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உருவ பொம்மையை அங்கிருந்து அப்புறப்படுத்தி தீயை அணைத்தனர். இதில் ஓ.பி.சி.அணி ராமராஜ், மீனவரணி கடல் கார்த்திகேயன், ஆட்டோ வேலு, விக்கி, ஆறுமுகம் உள்பட இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதுகுறித்து கடலூர் புதுநகர் போலீசார் 12 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

    • இன்று காப்பு கட்டும் உற்சவம் நடக்கிறது.
    • 3-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.

    விருத்தாசலம் மணவாளநல்லூரில் பிரசித்தி பெற்ற கொளஞ்சியப்பர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்தாண்டுக்கான விழா நாளை மறுநாள்(ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    இதை முன்னிட்டு இன்று(வெள்ளிக்கிழமை) இரவு 7 மணிக்கு கிராம தேவதைகளான அய்யனார் மற்றும் செல்லியம்மன் சாமிகளுக்கு காப்பு கட்டும் உற்சவம் நடக்கிறது. அதனை தொடர்ந்து நாளை மறுநாள் காலை 9 மணி அளவில் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம் நடக்கிறது. 10 நாட்கள் நடைபெறும் விழாவில் தினசரி சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், சாமி வீதிஉலாவும் நடைபெற உள்ளது.

    விழாவில் வருகிற 3-ந்தேதி தேரோட்டமும், 4-ந்தேதி பங்குனி உத்திர திருவிழாவும் நடைபெற உள்ளது. இதையொட்டி 4-ந்தேதி அதிகாலையில் உற்சவமூர்த்திகள் விருத்தாசலம் திருமுதுகுன்றத்தில் எழுந்தருள உள்ளனர். அங்கு சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெறுகிறது.

    பின்னர் மாலையில் மணிமுக்தாற்றில் தீர்த்தவாரியும், அதைத்தொடர்ந்து கொடி இறக்கமும் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சந்திரன், செயல் அலுவலர் பழனியம்மாள், சரக ஆய்வர் கோவிந்தசாமி மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

    • கூர்நோக்கு இல்லத்தில் பாதுகாப்பு பணியில் காவலர் இருந்து வந்தார். நேற்று இரவு இல்லத்தில் இருந்த 6 சிறுவர்கள் திடீரென்று மாயமானார்கள்.
    • கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த சாவடி பகுதியில் கூர்நோக்கு இல்லம் உள்ளது. இங்கு பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட 18 வயதுக்குட்பட்ட 13 சிறுவர்கள் இருந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கூர்நோக்கு இல்லத்தில் பாதுகாப்பு பணியில் காவலர் இருந்து வந்தார். நேற்று இரவு இல்லத்தில் இருந்த 6 சிறுவர்கள் திடீரென்று மாயமானார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த காவலாளி 6 சிறுவர்களை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தார்.

    கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது கூர்நோக்கு இல்லத்தில் இருந்து எப்படி தப்பித்து சென்றார்கள்? என்று விசாரித்தனர்.

    இதில் எந்த பொருளையும் உடைக்காமலும், சாதாரணமாக 6 சிறுவர்கள் தப்பித்து சென்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கரிக்கால் பாரிசங்கர் தலைமையில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

    கடலூர் கம்மியம்பேட்டை பகுதியில் போலீசார் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது 2 சிறுவர்கள் நடந்து வந்து கொண்டிருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, அவர்கள் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பித்து வந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து 2 சிறுவர்களை போலீசார் மீட்டனர்.

    மேலும் மீதம் உள்ள 4 சிறுவர்கள் எந்த ஊரை சேர்ந்தவர்கள்? என்னென்ன வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளார்கள்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களது பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த சம்பவம் கடலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கரும்பூர் கிராமத்தைசேர்ந்தவர் பார்த்தசாரத(37).,நேற்று இரவு தூங்கி க்கொண்டிருந்த போதுவீட்டின் பின்பக்க கதவை உடைத்து வீட்டினுள்நுழைந்த மர்மஆசாமிகள்பீரோவில் இருந்த 6 1/2பவுன்நகைகளை கொள்ளையடித்து சென்றனர். .
    • இதே போல பக்கத்தில் இருந்த ராமதாஸ் (60)வீட்டுக்குள் நுழைந்துபீரோவில் இருந்த பட்டு புடவைகள் திருடி சென்றனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த கரும்பூர் கிராமத்தைசேர்ந்தவர் பார்த்தசாரதி (37). இவர் புதுவையில் உள்ள தனியார்நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.இவர் நேற்றுஇரவு குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார்.அப்போதுவீட்டின் பின்பக்க கதவை உடைத்து வீட்டினுள்நுழைந்த மர்மஆசாமிகள்பீரோவில் இருந்த 6 1/2பவுன்நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.      இதே  போல பக்கத்தில் இருந்த ராமதாஸ் (60)வீட்டுக்குள் நுழைந்துபீரோவில் இருந்த பட்டு புடவைகள் திருடி சென்றனர்.

    இது பற்றி தகவல் அறிந்ததும் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம ஆசாமிகளை தேடிவருகிறார். பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணையை முடுக்கி விட்டார். கடலூரில் இருந்து கைரேகை நிபுணர்கள்,தடய ய அறிவியல் நிபுணர்கள் போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது.போலீஸ் மோப்பநாய்சம்பவ இடத்திலிருந்து மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடியது யாரையும் கல்வி பிடிக்கவில்லை.

    • சிதம்பரத்தை சேர்ந்தவர் ஜெயச்சந்திர ராஜா. ரேஷன் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். நேற்று சென்று கொண்டிருந்தார்.
    • , மர்ம நபர்கள் சிலர் அவரை வழிமறித்து, பீர் பாட்டிலால் தாக்கியுள்ளனர். இதில் தலையில் படுகாயமடைந்த மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    கடலூர்:

    சிதம்பரத்தை சேர்ந்தவர் ஜெயச்சந்திர ராஜா. இவர் சிதம்பரம் கூட்டுறவு விற்பனை நிலையத்தில் உள்ள ரேஷன் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். மேலும் தமிழ்நாடு நியாய விலைக் கடை பணியாளர் சங்கத்தின் மாநில தலைவராகவும் உள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். சிதம்பரம் மானாசந்து பள்ளி அருகே சென்ற போது, மர்ம நபர்கள் சிலர் அவரை வழிமறித்து, பீர் பாட்டிலால் தாக்கியுள்ளனர். இதில் தலையில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதற்கிடையே மாநில தலைவர் தாக்கப்பட்டதை கண்டித்து கடலூர் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட விற்பனையாளர்கள் முடிவு செய்தனர் 

    அதன்படி ஏராளமான விற்பனையாளர்கள் விடுப்பு எடுத்து போரா ட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மாவட்டத்தில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளையும் அடைத்தனர். தொடர்ந்து விற்பனையாளர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக சிதம்பரம் சென்றனர். அங்கு கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு திரண்டு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மாநிலத் தலைவர் ஜெயச்சந்திர ராஜாவை தாக்கிய மர்ம நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்.  மேலும் விற்பனையாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினர். இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • இன்று காலைகரும்புதோட்டத்தில் களை எடுப்ப தற்காக விஜயா (50), சரோஜா (70) ஆகியோர் சென்றனர். அப்போது திடீரென கரும்பு தோட்டத்தின் மேல் சென்ற மின் கம்பி திடீரென அறுந்து களை எடுக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த விஜயா மற்றும் சரோஜா மீது விழுந்தது.
    • இதில் அவர்கள் தூக்கி வீசப்பட்டு காயம் அடைந்தனர்

    கடலூர்:

    பண்ருட்டி அருேக மின்சாரம் தாக்கி 2 பெண்கள் படுகாயம் அடைந்தனர்.பண்ருட்டி அருகே உள்ள திருவத்தூரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். விவசாயி. இவர் தனது தோட்டத்தில் கரும்பு பயிரிட்டு உள்ளார். இதில் களை எடுப்ப தற்காக அதே பகுதியை சேர்ந்த முனுசாமி மனைவி விஜயா (50), ராஜகோபால் மனைவி சரோஜா (70) ஆகியோர் இன்று காலை சென்றனர். அப்போது திடீரென கரும்பு தோட்டத்தின் மேல் சென்ற மின் கம்பி  திடீரென அறுந்து களை எடுக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த விஜயா மற்றும் சரோஜா மீது விழுந்தது. இதில் அவர்கள் தூக்கி வீசப்பட்டு காயம் அடைந்தனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அங்கு மயங்கிய நிலையில் இருந்த சரோஜா மற்றும் விஜயாவை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் இருவரும் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனு மதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது குறித்து புதுப்பேட்ைட போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் நந்த குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.    களை எடுக்க சென்ற 2 பெண்கள் மின்சாரம் தாக்கி காயம் அடைந்த சம்பவம் அப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தகவலனுமதிக்க ப்பட்டுள்ளனர்.

    • பானிபூரி விற்பனை செய்பவர் உள்ளிட்ட 3 பேர் பள்ளி மாணவர்க ளிடம் கஞ்சாவிற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
    • இதனை அடுத்து பாணி பூரி விற்பனை செய்யும் 3 பேரையும் போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.


    கடலூா:

    சிதம்பரத்தில் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு வந்த தகவலின் பேரில் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் தனிப்படை உதவியாளர் நாகராஜ் மற்றும் போலீசார் இன்று திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி அருகே பானிபூரி விற்பனை செய்பவர் உள்ளிட்ட 3 பேர் பள்ளி மாணவர்க ளிடம் கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

    இதனை அடுத்து பாணி பூரி விற்பனை செய்யும் சிதம்பரம் தொப்பையான் தெருவில் வசிக்கும் உத்திர பிரதேசத்தை சேர்ந்த கல்லு மகன் அஜய் லாலு (வயது 19), மற்றும் ஒமக்குளம் ஜமால்நகர் முஸ்தபா(எ)சுல்தான் (22 ), சீர்காழி ராதா நல்லூர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த கருணாமூர்த்தி (20), ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். மேற்கண்ட 3 பேரிடமிருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    ×