பண்ருட்டி அருகே மின்சாரம் தாக்கி 2 பெண்கள் படுகாயம்:ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

இன்று காலைகரும்புதோட்டத்தில் களை எடுப்ப தற்காக விஜயா (50), சரோஜா (70) ஆகியோர் சென்றனர். அப்போது திடீரென கரும்பு தோட்டத்தின் மேல் சென்ற மின் கம்பி திடீரென அறுந்து களை எடுக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த விஜயா மற்றும் சரோஜா மீது விழுந்தது. இதில் அவர்கள் தூக்கி வீசப்பட்டு காயம் அடைந்தனர்
காயம் அடைந்த சரோஜா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் காட்சி.
காயம் அடைந்த சரோஜா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் காட்சி.
Published on

கடலூர்:

பண்ருட்டி அருேக மின்சாரம் தாக்கி 2 பெண்கள் படுகாயம் அடைந்தனர்.பண்ருட்டி அருகே உள்ள திருவத்தூரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். விவசாயி. இவர் தனது தோட்டத்தில் கரும்பு பயிரிட்டு உள்ளார். இதில் களை எடுப்ப தற்காக அதே பகுதியை சேர்ந்த முனுசாமி மனைவி விஜயா (50), ராஜகோபால் மனைவி சரோஜா (70) ஆகியோர் இன்று காலை சென்றனர். அப்போது திடீரென கரும்பு தோட்டத்தின் மேல் சென்ற மின் கம்பி  திடீரென அறுந்து களை எடுக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த விஜயா மற்றும் சரோஜா மீது விழுந்தது. இதில் அவர்கள் தூக்கி வீசப்பட்டு காயம் அடைந்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அங்கு மயங்கிய நிலையில் இருந்த சரோஜா மற்றும் விஜயாவை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் இருவரும் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனு மதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது குறித்து புதுப்பேட்ைட போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் நந்த குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.    களை எடுக்க சென்ற 2 பெண்கள் மின்சாரம் தாக்கி காயம் அடைந்த சம்பவம் அப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தகவலனுமதிக்க ப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com