என் மலர்
கடலூர்
- பிச்சாவரம் கடலில், வனத்துறை சார்பில் ஆலிவ் ரிட்லி வகை ஆமைக்குஞ்சுகள் விடப்பட்டன.
- 37 ஆயிரத்து 869 ஆமை முட்டைகள் சேகரம் செய்யப்பட்டு பொரிப்பகத்தில் பாதுகாக்கப்பட்டு பொரிக்கப்பட்ட 10 ஆயிரத்து 337 குஞ்சுகள் கடலில் விடப்பட்டதுள்ளது
கடலூர்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் கடலில், வனத்துறை சார்பில் ஆலிவ் ரிட்லி வகை ஆமைக்குஞ்சுகள் விடப்பட்டன. பிச்சாவரம் வனச்சரகத்தில் கடலூர் மாவட்ட வன அலுவலர் சுமேஷ்சோமன் உத்தரவின்படி கடல் ஆமை முட்டை பொரிப்பகம் அமைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.
பொரிப்பகத்திலிருந்து 531 ஆமை குஞ்சுகள் முட்டையிலிருந்து வெளிவந்ததை பிச்சாவரம் வனச்கரக அலுவலர் கமலக்கண்ணன் ஏற்பாட்டின் படி வனவர் அருள்தாஸ் முன்னிலையில் சிதம்பரம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி, இயற்கை ஆர்வலர் நடராஜ், பிச்சாவரம் வனக்காப்பாளர் ராஜேஷ்குமார் மற்றும் கல்லூரி மாணவர்கள் பத்ரி நாராயணன், ரூபேஷ் மற்றும் வனப் பணியாளர்கள் கலந்து கொண்டு ஆமை குஞ்சுகளை பாதுகாப்பாக கடலில் விட்டனர். இதுவரை 37 ஆயிரத்து 869 ஆமை முட்டைகள் சேகரம் செய்யப்பட்டு பொரிப்பகத்தில் பாதுகாக்கப்பட்டு பொரிக்கப்பட்ட 10 ஆயிரத்து 337 குஞ்சுகள் கடலில் விடப்பட்டதுள்ளது என வனக்காப்பாளர் ராஜேஷ்குமார் தெரிவித்தார்.
- சாக்கடை கழிவு நீர் அகற்றாமல் இருப்பதால் பல்வேறு சுகா தார சீர்கேடுகள் அங்கு வசிக்கும் மக்களுக்கு வந்துள்ளது.
- மக்கள் அச்சத்தை போக்க குறிஞ்சிப்பாடி பேரூராட்சி நிர்வாகம் தனி கவனம் செலுத்த வேண்டும்.
கடலூர்:
குறிஞ்சிப்பாடி பகுதி களில் பல்வேறு தெருக்களில் கழிவுநீர் கால்வாய்களில் கழிவுநீர் அகற்றப்படாததால் கழிவுநீர் தேங்கி உள்ளது. இதனால் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டு வரு கிறது. குறிஞ்சிப்பாடி சிகா மணி ரைஸ் மில் தெருவில் ஒரு மாதமாக சாக்கடை கழிவு நீர் அகற்றாமல் இருப்பதால் பல்வேறு சுகா தார சீர்கேடுகள் அங்கு வசிக்கும் மக்களுக்கு வந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று தாக்கம் குறைந்து தற்போது பல மாவட்ட ங்களில் வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. அது போல நேற்று குறிஞ்சிப்பா டியை அடுத்த கல்குணம் கிராமத்தில் அரசுப் தொடக்க பள்ளியில் படிக்கும் ஒன்றாம் வகுப்பு மாணவி காய்ச்சலால் இறந்து விட்டார்.
இந்நிலையில் பேரூ ராட்சி பகுதிகளில் தெருக்க ளில் செல்லும் வாய்க்கால்க ளில் கழிவு நீர் தேங்கி நிற்ப தால் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்படும் என மக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர். மக்கள் அச்சத்தை போக்க குறிஞ்சிப்பாடி பேரூராட்சி நிர்வாகம் தனி கவனம் செலுத்த வேண்டும். அனைத்து வார்டு பகுதியில் சாக்கடை கழிவு நீர் அகற்ற துப்புரவு பணியாளர்களை துரிதமாக செயல்பட வைக்க வேண்டும் என்பதே குறிஞ்சிப்பாடி பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
- மாநில மற்றும் மாவட்ட அளவில் மணிமேகலை விருது வழங்கப்பட உள்ளது.
- மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.25,௦௦௦ வழங்கப்பட உள்ளது.
கடலூர்:.26-
கடலூர் கலெக்டர் பால சுப்பிரமணியம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறி யிருப்பதாவது:-
ஊரக பகுதிகளில் சிறப்பாக செயல்படும் மகளிர் சுய உதவிக்குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள், வட்டார அளவிலான கூட்ட மைப்பு கள், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் நகர்புற பகுதிகளில் சிறப்பாக செயல்படும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் பகுதி அளவிலான கூட்ட மைப்பு கள், நகர அளவி லான கூட்டமைப்பு களுக்கு மாநில மற்றும் மாவட்ட அளவில் மணிமேகலை விருது வழங்கப்பட உள்ளது.
2022-23 ஆம் ஆண்டிற்கு மாநில அளவில் சிறப்பாக செயல்படும் ஊரகப் பகுதிகளை சார்ந்த மகளிர் சுய உதவிக் குழுக்க ளுக்கு ரூ.1,00,000, ஊராட்சி அள விலான கூட்டமைப்பிற்கு ரூ.3,00,000, வட்டார அளவி லான கூட்டமைப்பிற்கு ரூ.5,00,000, கிராம வறுமை ஒழிப்பு சங்கத்திற்கு ரூ.1,00,000, நகரப் பகுதி களை சார்ந்த மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1,00,000, பகுதி அள விலான கூட்டமைப்பிற்கு ரூ.3,00,000, நகர அளவிலான கூட்டமைப்பிற்கு ரூ.5,00,000, மாவட்ட அள வில் சிறப்பாக செயல்படும் ஊரகப் பகுதிகளை சார்ந்த மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.25,000, ஊராட்சி அளவிலான கூட்டமைப்பிற்கு ரூ.1,00,000, கிராம வறுமை ஒழிப்பு சங்கத்திற்கு ரூ.50,000, நகரப் பகுதிகளை சார்ந்த மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.25,000, பகுதி அளவிலான கூட்ட மைப்பிற்கு ரூ.1,00,000 - மும் வழங்கப்பட உள்ளது.
எனவே சிறப்பாக செயல்படும் ஊரகப் பகுதி களை சார்ந்த தகுதி வாய்ந்த குழுக்கள் மற்றும் கூட்ட மைப்புகள் விண்ணப்ப ங்கள் வட்டார இயக்க மேலாளர் அலுவலகத்தில் பெறப்படுகின்றன. நகரப் பகுதிகளை சார்ந்த குழுக்கள் மற்றும் கூட்ட மைப்புகள் கீழ்கண்ட முகவரிக்கு நாளை (27-ந் தேதி) முதல் ஏப்ரல் மாதம் 25-ந் தேதி மாலை 5 மணிக்குள் மணி மேகலை விருதுக்காக விண்ணப்பித்து பயன்பெற லாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
- கீர்த்தனா கடலூர் பெண்கள் கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
- பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கடலூர்:
பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர் கீழீருப்பு கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் மகள் கீர்த்தனா (வயது 19), இவர் கடலூர் கே.என்.சி. பெண்கள் கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று கல்லூரிக்கு சென்று விட்டு பண்ருட்டி பஸ் நிலையத்தில் இறங்கி வீட்டுக்கு செல்வதாக நண்பர்களிடம் கூறி சென்றார். ஆனால் இரவு வரை வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால் காணாமல் போன கீர்த்தனாவின் தாயார் தேவி, பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- சிறுமி பண்ருட்டி தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகின்றார்
- சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார்.
கடலூர்:
பண்ருட்டி அடுத்த ஏ.ஆண்டிகுப்பம் பகுதியை சேர்ந்த சிறுமி பண்ருட்டி தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகின்றார். அதே பகுதியான விலங்கல்பட்டை சேர்ந்த ராஜ்குமார் (வயது 24). அவரது சகோதரி வீட்டில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். இவர் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார்.
இந்நிலையில் சிறுமி சில தினங்களாக சோர்வாக இருந்ததுள்ளார். இதனால் சந்தேகமடைந்த சிறுமியின் தாயார் நேற்று மாலை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர் அதிர்ச்சியடைந்து, 3 மாத கர்ப்பிணியாக இருப்பதை அவரது தாயாரிடம் தெரிவித்தார். இது குறித்து சிறுமியிடம் அவரது தாயார் விசாரித்த போது ராஜ்குமார் நடந்து கொண்டதை பற்றி கூறியுள்ளார். இது குறித்து சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் பண்ருட்டி மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கண்ணன் போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தார். மேலும், ராஜ்குமாரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்
- திருப்பணி வேலைகளுக்கு உதவுமாறு கோவில் பக்தர்கள் டி.டி.வி. தினகரனிடம் கோரிக்கை விடுத்தனர்.
- அமமுக செயலாளர் ஆடிட்டர் சுந்தர மூர்த்தியை அழைத்தார். அவரிடம் கோவில் முகப்பு கோபுரத்தை சொந்த செலவில் கட்டித்தருவதாக உறுதியளித்தார்.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ளம் திருத்துறையூர் கிராமத்தில் சிஷ்ட குருநாதர் கோவில் அமைந்துள்ளது.
இக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு நேற்று மாலை சாயரட்சை பூஜை நடந்தது. இதில் அம்மா மக்கள் முன்னேற்றகழக பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் அவரது மனைவி மற்றும் மகளுடன் கலந்து கொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து வேண்டுதல் நிறைவேறவும், நேர்த்தி கடனுக்காகவும் 1008 சகஸ்கர நாம அர்ச்சனை செய்தனர்.
முன்னதாக அவரை அ.ம.மு.க. நிர்வாகிகள், கோவில் நிர்வாகத்தினர், ஊர் பிரமுகர்கள், கோவில் அர்ச்சகர்கள் திரண்டு வந்து வரவேற்றனர். திருப்பணி வேலைகளுக்கு உதவுமாறு கோவில்பக்தர்கள் டி.டி.வி. தினகரனிடம் கோரிக்கை விடுத்தனர். உடனடியாக அருகில் இருந்த கடலூர் மாவட்ட அ.ம.மு.க. செயலாளர் ஆடிட்டர் சுந்தர மூர்த்தியை அழைத்தார். அவரிடம் கோவில் முகப்பு கோபுரத்தை சொந்த செலவில் கட்டித்தருவதாக உறுதியளித்தார். அதற்கான பூர்வாங்க பணிகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு ஆடிட்டர் சுந்தர மூர்த்திடம் தெரிவித்தார்.
இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- நிலை தடுமாறி சாலையின் நடுவே இருந்த தடுப்புக்கட்டையில்பயங்கர சத்தத்துடன் மோதியது.
- சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது.
கடலூர்:
புதுவையில் இருந்து சேலத்திற்கு பண்ருட்டி வழியாக லாரி ஒன்றுஇரும்பு லோடு ஏற்றிக்கொண்டு நேற்று இரவு சென்று கொண்டிருந்தது. அந்த லாரி பண்ருட்டி திருவதிகை யூனியன் அலுவலகம் அருகே வந்த போது நிலை தடுமாறி சாலையின் நடுவே இருந்த தடுப்புக்கட்டையில்பயங்கர சத்தத்துடன் மோதியது. அதிஷ்டவசமாக லாரி டிரைவர், எதிரே வந்த வாகன ஓட்டிகள் காயமின்றி தப்பினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது. இரவு ரோந்து பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் சம்பவத்துக்கு விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்து இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பண்ருட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதி தொழிலாளி பலியானார்.
- பண்ருட்டி வழியாக சென்னை செல்லும் அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
கடலூர்:
பண்ருட்டி அடுத்த வேகாக்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (வயது 48). கூலித் தொழிலாளியான இவர் மோட்டார் சைக்கிள் பண்ருட்டிக்கு வந்தார். பண்ருட்டியில் வேலையை முடித்துக் கொண்டு வீடு திரும்பினார். சென்னை -கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை கொஞ்சிக்குப்பம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற போது கும்பகோணத்தில் இருந்து பண்ருட்டி வழியாக சென்னை செல்லும் அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த சந்தோஷ்குமார் பண்ருட்டி அரசு மருத்துவமனையி்ல் சேர்க்கபட்டு, பின் மேல்சிகிச்சைசக்கு கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இது குறித்து காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 50 ஏக்கர் நிலத்தில் இருந்த செம்மண் எடுக்கப்பட்டுள்ளது.
- இடுபொருள் மானியம் உள்ளிட்ட நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடலூர்:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்ட நகர ஒன்றிய வட்ட செயலாளர்கள் கூட்டம் கடலூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் மாவட்ட குழு உறுப்பினர் ராஜா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட செயலாளர் மாதவன் , மாநில குழு உறுப்பினர் ரமேஷ் பாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உதயகுமார், ரவிச்சந்திரன், அசோகன், தேன்மொழி, ராஜேஷ் கண்ணன் , தண்டபாணி, பாலமுருகன், ஜெயபாண்டியன், ஏழுமலை, விஜய், பஞ்சாசரம், அன்பழகன், ஆழ்வார் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பண்ருட்டி ஒன்றியத்தில் உள்ள சேதமைடைந்த முந்திரி பயிர்களை தோட்டக்கலைத் துறை ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுப்பு செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு இடுபொருள் மானியம் உள்ளிட்ட நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடலூர் எம். புதூர், திருவந்திபுரத்தில் செம்மண் குவாரிகள் அமைக்கப்பட்டு 50 ஏக்கர் நிலத்தில் இருந்த செம்மண் எடுக்கப்பட்டுள்ளது. தற்போது கொண்டங்கி ஏரி உள்ள பகுதியில் நடுவீரப்பட்டு உள்ளிட்ட இடங்களில் தினசரி நூற்றுக்கணக்கான லாரிகளில் செம்மண் பாதுகாப்பு இன்றி எடுத்துச் செல்லப்படுகிறது. இதற்கு முறையாக அனுமதி பெற்றுள்ளதா என்பதை சுரங்கத்துறையும் மாவட்ட நிர்வாகமும் தெளிவுப்படுத்த வேண்டும். எனவே இதனை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் முறைகேடுகளாக நடக்கும் மண் குவாரிகளை இழுத்து முடவும் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக மண் எடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- சூறைக்காற்றுடன் திடீர் மழைபெய்ததால் அந்தப் பகுதியில் இருந்த ஏராளமான முந்திரிமரங்கள்சாய்ந்து விழுந்தன.
- மாவட்ட நிர்வாகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் .
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி ,காடாம்பு லியூர், பாவைகுளம்,சிறுதொண்டமாதேவி, சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று சூறைக்காற்றுடன் திடீர் மழைபெய்தது.இதனால் அந்தப் பகுதியில் இருந்த ஏராளமான முந்திரிமரங்கள்சாய்ந்துவிழுந்தன. 100 ஏக்கருக்கு மேற்பட்ட மா, பலா, வாழை மரங்கள் சாய்ந்தது. இதன் காரணமாக விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். பாதிப்படைந்த இடங்களை மாவட்ட நிர்வாகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஒன்றிய குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் கடலூர் கலெக்டருக்கு அனுப்பியுள்ள கோரிக்கைமனுவில்கோரியுள்ளார்.
- கோவிலுக்கு வரும் மக்கள்கத்திபோடும் திருவிழாவை நடத்துவது வழக்கம்.
- காயங்களின் மீதுதிருமஞ்சனப் பொடியை வைத்துக்கொண்டு, ஆடிக்கொண்டே சென்றனர்.
கடலூர்:
பண்ருட்டி கொம்பு செட்டி பாளையத்தில் பிரசித்தி பெற்ற ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் அம்ம னை அழைப்பதற்காக, இந்தக்கோவிலுக்கு வரும் மக்கள்கத்திபோடும் திருவிழாவை நடத்துவது வழக்கம். அதேபோல நேற்று அம்மன் அழைப்பு நிகழ்ச்சி நடந்தது.அய்யனார் கோவில் குளத்தில் இருந்து ஊர்வலமாக வந்து அம்மன் சக்தி அழைப்பு நிகழ்ச்சி நடந்தது.பக்தர்கள் கத்தியால் தங்கள்கைகளில் வெட்டிக் கொண்டேஅம்மனை அழைத்தனர். இதனால் அந்த பக்தர்களின் உடலில் ரத்தம் வழிந்து ஓடியது. அப்போது இளைஞர்கள் கத்தி போடும் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் 200-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டு தங்கள் கைகள், நெஞ்சு பகுதியில் வெட்டிக்கொண்டு அம்மனை அழைத்துச் சென்றனர். கத்தி போடும்போது ஏற்பட்ட வெட்டுக் காயங்களின் மீதுதிருமஞ்சனப் பொடியை வைத்துக்கொண்டு, ஆடிக்கொண்டே சென்றனர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து இருந்தனர்.
- புதுப்பேட்டை அருகே கோட்டலாம்பாக்கம் சித்த வட மடம் சிதம்பரேஸ்வரர் கோவில் உள்ளது.
- பல்வேறு வீடுகளின் முன்பாக மை பூசப்பட்ட மண் ஓடு கிடந்தது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி, புதுப்பேட்டை அருகே உள்ளது கோட்டலாம்பாக்கம் சித்த வட மடம் சிதம்பரேஸ்வரர் கோவில் உள்ளது. கோவிலில் இருந்து இருந்து 100 மீட்டர்கள் தூரத்தில் உள்ள வீதியில் ஒரு வீட்டின் முன் மனித உடலின் மண்டை ஓடு கிடந்தது. இந்த மண்டை ஓட்டில் மை பூசப்பட்டு இருந்தது. இந்த மண்டை ஓட்டை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக பக்கத்து வீட்டில் உள்ளவரிடம் கூறலாம் என்று சென்ற போது அங்கும் இதே பொருட்கள் கிடந்துள்ளது. இதே போல அந்த வீதியில் இருந்த பல்வேறு வீடுகளின் முன்பாக மை பூசப்பட்ட மண் ஓடு கிடந்தது. சில வீடுகளின் முன்பு கால் எலும்புகளும் கிடந்தன.
அப்போது அங்கு வந்த மாற்றுத் திறனாளி சங்கர், சாலையில் கிடந்த எலும்புகளை சேகரித்து அருகில் இருந்த ஏரியில் வைத்து எரித்தார். இதையடுத்து அந்த வீதியில் வசிக்கும் பொது மக்கள் புதுப்பேட்டை போலீசில் புகார் அளித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையிலான போலீசார் இது தொடர்பாக விசாரணை செய்தனர். மர்ம நபர்கள், விஷமிகள் யாராவது இப்படி செய்து இருக்கலாம். மந்திரம், தந்திரம் தெரிந்த நபர்கள் இப்படி செய்து இருக்கலாம். மக்களை அச்சுறுத்த வேண்டும். பயமுறுத்த வேண்டும் என்று இவர்கள் இப்படி செய்து இருக்கலாம் என்று போலீசாரால் சந்தேகிக்கப்படுகிறது.
மேலும், மாற்றுத்திறனாளி சங்கரை அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏரியில் எரிக்கப்பட்ட மண்டை ஓடு, எலும்புகளை கைப்பற்றி ஆய்து செய்து வருகின்றனர். கடலூரில் இருந்து மோப்ப நாய், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், இந்த சம்பவத்தை கேள்விப்பட்டு பல்வேறு வீதிகளில் வசிப்பவர்கள் அங்கு குவிந்தனர். இதனால் அந்த வீதியே போர்க்களம் போல காணப்பட்டது. இதனால் பண்ருட்டி பகுதியே பரபரப்பாக காணப்படுகிறது.






