என் மலர்
கடலூர்
- கடலூரில் கலெக்டர் அலுவலகம் முன் மகனுடன் தாய் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டார்.
- மனு அளித்து தீர்வு காண வேண்டும் என கூறி எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.
கடலூர்:
கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு மகனுடன் தாய் சாலையில் அமர்ந்து திடீரென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கிருந்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அவர் பண்ருட்டி திடீர் குப்பத்தை சேர்ந்த சக்தி (வயது 42). என்இபது தெரிய வந்தது இவரது பாட்டனாருக்கு சொந்தமான நிலம் அதே பகுதியில் இருந்து வந்தது . இதனை எனது தந்தை பராமரித்து வந்த நிலையில் அவர் இறந்த பிறகு அதே பகுதியை சேர்ந்த 5பேர் நிலத்தை அபகரித்து போலி பத்திரம் தயாரித்து அவர்கள் பெயரில் மாற்றிக்கொண்டு பறித்து கொண்டனர். இது குறித்து பலமுறை புகார் அளித்தும் நாள் வரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கு நடவடிக்கை எடுக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும் என சக்தி தெரிவித்தனர். அப்போது அங்கு இருந்த போலீசார் உங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்து தீர்வு காண வேண்டும் என கூறி எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- நெய்வேலியில் காங்கிரஸ் கட்சியினர் அறவழி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
- ஐ.என்.டி.யு.சி. நிர்வாகி ரவிக்குமார், எஸ்.சி. எஸ்.டி பிரிவு தலைவர் ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் நெய்வேலி புதுநகர் மெயின் பஜார் காந்தி சிலை அருகில் ராகுல்காந்தி பதவி நீக்கம் செய்யபட்டதை கண்டித்து அறவழியில் சத்தியா கிரக போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு எம்.எல்.ஏ. எம்.ஆர்.ஆர். ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். நகர காங்கிரஸ் தலைவர் ஸ்டீபன் வரவேற்புரை ஆற்றினார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் இளஞ்செழியன், முன்னாள் மாவட்ட தலைவர் பெரியசாமி, ஐ.என்.டி.யு.சி. நிர்வாகி ரவிக்குமார், எஸ்.சி. எஸ்.டி பிரிவு தலைவர் ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஐ.என்.டி.யு.சி அலுவலக செயலாளர் மைக்கேல் ரவி, பணி தலைவர் குமார் ஆகியோர் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
- போலீசார் நேற்று தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டனர்
- விழமங்கலம் மஞ்சினி நகர் சங்கர் (48), சத்தியமூர்த்தி தெரு அப்துல் குத்தீஸ் (56) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
கடலூர்:
பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் நேற்று தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அரசினால் தடை செய்யப்பட்ட சாராயம் விற்பனையில் ஈடுபட்ட பண்ருட்டி அம்பேத்கர் நகர் கலைவாணன் (47), கண்டரக்கோட்டை சுரேஷ் (36) ஆகியோரையும் புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட பண்ருட்டி ஆர்.எஸ். மணி நகர் முரளி ( 38 ), விழமங்கலம் மஞ்சினி நகர் சங்கர் (48), சத்தியமூர்த்தி தெரு அப்துல் குத்தீஸ் (56) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
- கடலூர் அருகே தனியார் பள்ளி வேன் மோதி 3 வயது குழந்தை பலியானது.
- பள்ளி வேன் மோதி குழந்தை இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர்:
கடலூர் அருகே உள்ள மேற்கு ராமாபுரத்தை சேர்ந்தவர் சீனுவாசன். நெடுஞ்சாலை துறை ஊழியர். இவரது மனைவி தீபா. இவர்களுக்கு தேஜஸ்வரன் (வயது 3) என்ற குழந்தை இருந்தது.
இன்று காலை கிழக்கு ராமாபுரத்தில் உள்ள அவரது தாத்தா வீட்டில் இருந்த தேஜஸ்வரன், சாலையில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அந்த வழியாக வந்த தனியார் பள்ளி வேன் திடீரென தேஜஸ்வரன் மீது மோதியது.
குழந்தையின் தலையில் பள்ளி வேன் சக்கரம் ஏறியதால் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தான். இதனை பார்த்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்து கதறி அழுது துடித்தனர்.
விபத்து குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு விரைந்து வந்து குழந்தை தேஜஸ்வரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பள்ளி வேன் மோதி குழந்தை இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- கர்நாடகா மாநிலத்தில் ராகுல் காந்தி பேசியது தொடர்பாக குஜராத்தில் ஒரு நபர் வழக்கு தொடர்ந்தார்.
- பாராளுமன்றத்தில் ராகுல் காந்தி 4 கேள்விகள் கேட்க வேண்டும் என்று இருந்தார்.
சிதம்பரம்:
ராகுல் காந்தி எம்.பி. பதவி பறிப்பை கண்டித்து சிதம்பரம் காந்திசிலை அருகில் காங்கிரஸ் கட்சி சார்பில் அறவழி போராட்டம் இன்று நடந்தது.
போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சியின் கடலூர் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் சித்தார்த்தன் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கர்நாடகா மாநிலத்தில் ராகுல் காந்தி பேசியது தொடர்பாக குஜராத்தில் ஒரு நபர் வழக்கு தொடர்ந்தார். வழக்கு தொடுத்தவரே இந்த வழக்கை நிறுத்தியநிலையில், பா.ஜ.க. அரசு நீதிபதியை மாற்றி புதிய நீதிபதியை நியமித்து இந்த வழக்கை புதுப்பித்து நீதியை வாங்கி உள்ளனர்.
பொதுவெளியில் ராகுல் காந்தி பேசினால் அதற்கு பிரதமர் பதில் அளிக்கவேண்டிய கட்டாயம் இல்லை. ஆனால் பாராளுமன்றத்தில் ராகுல் காந்தி உட்பட யார் பேசினாலும் அதற்கு பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும் என்பதாலும், இதனால் பல உண்மைகள் வெளிவரும் சூழல் உருவாகும் என்தாலும் ராகுல் காந்திக்கு எதிரான வழக்கில் நீதி வாங்கப்பட்டுள்ளது.
ஜனநாயக நாட்டில் பாராளுமன்றத்தில் எதிர்கட்சிகள் பேசினால் அதற்கு ஆளும்கட்சி பதில் அளிக்க வேண்டும். ஆனால் எதிர்கட்சிகளை பேசவிடாமல் அடக்குமுறையை ஏவிவரும் மோடி அரசு எதிர்கட்சிகளின் குரல்வலையை நெரித்து வருகிறது. பாராளுமன்றத்தில் ராகுல்காந்தி 4 கேள்விகள் கேட்க வேண்டும் என்று இருந்தார்.
1. பிரதமர்மோடி வெளிநாடு செல்லும் போதெல்லாம் அதானி எப்படி உடன் செல்கிறார்? அல்லது அதற்கு முன்பே எப்படி செல்கிறார்? 2. பிரதமர்மோடி வெளிநாட்டில் இருந்து நாடுதிரும்பியபிறகு அதானிக்கு எப்படி முதலீடு வருகிறது. 3. ஒரு நாட்டிற்கு நீங்கள் செல்லும்போது ஒரு தனிமனிதருக்கு மட்டும் தொழில் தொடங்க வாய்ப்பு எப்படி ஏற்படுகிறது. 4. ஷெல் நிறுவனத்திடம் இருந்து ரூ.70 ஆயிரம் கோடி நிதிபரிவர்த்தனை நடந்தது எப்படி, இதற்கு பிரதமர் மோடி பதில் அளித்தால் பல்வேறு உண்மைகள் வெளிப்படும்.
இதனால் நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பேசக்கூடாது என்பதற்காக நீதிமன்ற தீர்ப்பை காட்டி பதவி பறிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் எனக்கு வரும்போது நான் கும்பகோணத்துக்கு ரெயிலில் சென்றுகொண்டிருந்தேன். எனது 60 ஆண்டுகால காங்கிரஸ் பயணத்தில் இயற்கையாகவே போராட்ட குணம் கொண்டவன் நான். அதனால் என்னுடன் இருந்த 2 பேருடன் சேர்ந்து ரெயில் மறியலில் ஈடுபட்டேன். கூட்டம் சேர்ந்தால்தான் போராட வேண்டும் என்ற எண்ணம் எனக்கு எப்போதும் இருந்ததில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- ராஜா கூலித் தொழிலாளி இவரை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நாய் கடித்ததாக கூறப்படுகிறது.
- சிகிச்சை பலனன்றி நேற்று பரிதாபமாக இறந்து போனார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த வல்லம்படுகை பவளக்கொடி வீதியைச் சேர்ந்தவர் ராஜா (வயது 46). கூலித் தொழிலாளி. இவரை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நாய் கடித்ததாக கூறப்படுகிறது. இதற்கு இவர் நாட்டு மருந்துகள் மூலமாக சிகிச்சை பெற்றுள்ளார். இதனால் இவர் சோர்வாகவும், வேலைக்கு செல்லாமலும் வீட்டிலேயே இருந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று திடீரென இவரது உடல்நிலை கவலைக்கிடமானது. இதையடுத்து இவர் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனன்றி நேற்று பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து அண்ணாமலை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ராஜ்குமார் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார்.
- சிறுமி சில தினங்களாக சோர்வாக இருந்துள்ளார்.
பண்ருட்டி:
பண்ருட்டி அடுத்த ஏ.ஆண்டிகுப்பம் பகுதியை சேர்ந்த சிறுமி பண்ருட்டி தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகின்றார்.
அதே பகுதியான விலங்கல்பட்டை சேர்ந்த ராஜ்குமார் (வயது 24). அவரது சகோதரி வீட்டில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். இவர் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார்.
இந்நிலையில் சிறுமி சில தினங்களாக சோர்வாக இருந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த சிறுமியின் தாயார் நேற்று மாலை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர் அதிர்ச்சியடைந்து, 3 மாத கர்ப்பிணியாக இருப்பதை அவரது தாயாரிடம் தெரிவித்தார்.
இது குறித்து சிறுமியிடம் அவரது தாயார் விசாரித்தபோது ராஜ்குமார் நடந்து கொண்டதை பற்றி கூறியுள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் பண்ருட்டி மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கண்ணன் போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தார். மேலும், ராஜ்குமாரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- பிச்சாவரம் கடலில், வனத்துறை சார்பில் ஆலிவ் ரிட்லி வகை ஆமைக்குஞ்சுகள் விடப்பட்டன.
- 37 ஆயிரத்து 869 ஆமை முட்டைகள் சேகரம் செய்யப்பட்டு பொரிப்பகத்தில் பாதுகாக்கப்பட்டு பொரிக்கப்பட்ட 10 ஆயிரத்து 337 குஞ்சுகள் கடலில் விடப்பட்டதுள்ளது
கடலூர்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் கடலில், வனத்துறை சார்பில் ஆலிவ் ரிட்லி வகை ஆமைக்குஞ்சுகள் விடப்பட்டன. பிச்சாவரம் வனச்சரகத்தில் கடலூர் மாவட்ட வன அலுவலர் சுமேஷ்சோமன் உத்தரவின்படி கடல் ஆமை முட்டை பொரிப்பகம் அமைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.
பொரிப்பகத்திலிருந்து 531 ஆமை குஞ்சுகள் முட்டையிலிருந்து வெளிவந்ததை பிச்சாவரம் வனச்கரக அலுவலர் கமலக்கண்ணன் ஏற்பாட்டின் படி வனவர் அருள்தாஸ் முன்னிலையில் சிதம்பரம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி, இயற்கை ஆர்வலர் நடராஜ், பிச்சாவரம் வனக்காப்பாளர் ராஜேஷ்குமார் மற்றும் கல்லூரி மாணவர்கள் பத்ரி நாராயணன், ரூபேஷ் மற்றும் வனப் பணியாளர்கள் கலந்து கொண்டு ஆமை குஞ்சுகளை பாதுகாப்பாக கடலில் விட்டனர். இதுவரை 37 ஆயிரத்து 869 ஆமை முட்டைகள் சேகரம் செய்யப்பட்டு பொரிப்பகத்தில் பாதுகாக்கப்பட்டு பொரிக்கப்பட்ட 10 ஆயிரத்து 337 குஞ்சுகள் கடலில் விடப்பட்டதுள்ளது என வனக்காப்பாளர் ராஜேஷ்குமார் தெரிவித்தார்.
- சாக்கடை கழிவு நீர் அகற்றாமல் இருப்பதால் பல்வேறு சுகா தார சீர்கேடுகள் அங்கு வசிக்கும் மக்களுக்கு வந்துள்ளது.
- மக்கள் அச்சத்தை போக்க குறிஞ்சிப்பாடி பேரூராட்சி நிர்வாகம் தனி கவனம் செலுத்த வேண்டும்.
கடலூர்:
குறிஞ்சிப்பாடி பகுதி களில் பல்வேறு தெருக்களில் கழிவுநீர் கால்வாய்களில் கழிவுநீர் அகற்றப்படாததால் கழிவுநீர் தேங்கி உள்ளது. இதனால் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டு வரு கிறது. குறிஞ்சிப்பாடி சிகா மணி ரைஸ் மில் தெருவில் ஒரு மாதமாக சாக்கடை கழிவு நீர் அகற்றாமல் இருப்பதால் பல்வேறு சுகா தார சீர்கேடுகள் அங்கு வசிக்கும் மக்களுக்கு வந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று தாக்கம் குறைந்து தற்போது பல மாவட்ட ங்களில் வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. அது போல நேற்று குறிஞ்சிப்பா டியை அடுத்த கல்குணம் கிராமத்தில் அரசுப் தொடக்க பள்ளியில் படிக்கும் ஒன்றாம் வகுப்பு மாணவி காய்ச்சலால் இறந்து விட்டார்.
இந்நிலையில் பேரூ ராட்சி பகுதிகளில் தெருக்க ளில் செல்லும் வாய்க்கால்க ளில் கழிவு நீர் தேங்கி நிற்ப தால் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்படும் என மக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர். மக்கள் அச்சத்தை போக்க குறிஞ்சிப்பாடி பேரூராட்சி நிர்வாகம் தனி கவனம் செலுத்த வேண்டும். அனைத்து வார்டு பகுதியில் சாக்கடை கழிவு நீர் அகற்ற துப்புரவு பணியாளர்களை துரிதமாக செயல்பட வைக்க வேண்டும் என்பதே குறிஞ்சிப்பாடி பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
- மாநில மற்றும் மாவட்ட அளவில் மணிமேகலை விருது வழங்கப்பட உள்ளது.
- மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.25,௦௦௦ வழங்கப்பட உள்ளது.
கடலூர்:.26-
கடலூர் கலெக்டர் பால சுப்பிரமணியம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறி யிருப்பதாவது:-
ஊரக பகுதிகளில் சிறப்பாக செயல்படும் மகளிர் சுய உதவிக்குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள், வட்டார அளவிலான கூட்ட மைப்பு கள், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் நகர்புற பகுதிகளில் சிறப்பாக செயல்படும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் பகுதி அளவிலான கூட்ட மைப்பு கள், நகர அளவி லான கூட்டமைப்பு களுக்கு மாநில மற்றும் மாவட்ட அளவில் மணிமேகலை விருது வழங்கப்பட உள்ளது.
2022-23 ஆம் ஆண்டிற்கு மாநில அளவில் சிறப்பாக செயல்படும் ஊரகப் பகுதிகளை சார்ந்த மகளிர் சுய உதவிக் குழுக்க ளுக்கு ரூ.1,00,000, ஊராட்சி அள விலான கூட்டமைப்பிற்கு ரூ.3,00,000, வட்டார அளவி லான கூட்டமைப்பிற்கு ரூ.5,00,000, கிராம வறுமை ஒழிப்பு சங்கத்திற்கு ரூ.1,00,000, நகரப் பகுதி களை சார்ந்த மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1,00,000, பகுதி அள விலான கூட்டமைப்பிற்கு ரூ.3,00,000, நகர அளவிலான கூட்டமைப்பிற்கு ரூ.5,00,000, மாவட்ட அள வில் சிறப்பாக செயல்படும் ஊரகப் பகுதிகளை சார்ந்த மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.25,000, ஊராட்சி அளவிலான கூட்டமைப்பிற்கு ரூ.1,00,000, கிராம வறுமை ஒழிப்பு சங்கத்திற்கு ரூ.50,000, நகரப் பகுதிகளை சார்ந்த மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.25,000, பகுதி அளவிலான கூட்ட மைப்பிற்கு ரூ.1,00,000 - மும் வழங்கப்பட உள்ளது.
எனவே சிறப்பாக செயல்படும் ஊரகப் பகுதி களை சார்ந்த தகுதி வாய்ந்த குழுக்கள் மற்றும் கூட்ட மைப்புகள் விண்ணப்ப ங்கள் வட்டார இயக்க மேலாளர் அலுவலகத்தில் பெறப்படுகின்றன. நகரப் பகுதிகளை சார்ந்த குழுக்கள் மற்றும் கூட்ட மைப்புகள் கீழ்கண்ட முகவரிக்கு நாளை (27-ந் தேதி) முதல் ஏப்ரல் மாதம் 25-ந் தேதி மாலை 5 மணிக்குள் மணி மேகலை விருதுக்காக விண்ணப்பித்து பயன்பெற லாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
- கீர்த்தனா கடலூர் பெண்கள் கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
- பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கடலூர்:
பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர் கீழீருப்பு கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் மகள் கீர்த்தனா (வயது 19), இவர் கடலூர் கே.என்.சி. பெண்கள் கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று கல்லூரிக்கு சென்று விட்டு பண்ருட்டி பஸ் நிலையத்தில் இறங்கி வீட்டுக்கு செல்வதாக நண்பர்களிடம் கூறி சென்றார். ஆனால் இரவு வரை வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால் காணாமல் போன கீர்த்தனாவின் தாயார் தேவி, பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- சிறுமி பண்ருட்டி தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகின்றார்
- சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார்.
கடலூர்:
பண்ருட்டி அடுத்த ஏ.ஆண்டிகுப்பம் பகுதியை சேர்ந்த சிறுமி பண்ருட்டி தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகின்றார். அதே பகுதியான விலங்கல்பட்டை சேர்ந்த ராஜ்குமார் (வயது 24). அவரது சகோதரி வீட்டில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். இவர் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார்.
இந்நிலையில் சிறுமி சில தினங்களாக சோர்வாக இருந்ததுள்ளார். இதனால் சந்தேகமடைந்த சிறுமியின் தாயார் நேற்று மாலை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர் அதிர்ச்சியடைந்து, 3 மாத கர்ப்பிணியாக இருப்பதை அவரது தாயாரிடம் தெரிவித்தார். இது குறித்து சிறுமியிடம் அவரது தாயார் விசாரித்த போது ராஜ்குமார் நடந்து கொண்டதை பற்றி கூறியுள்ளார். இது குறித்து சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் பண்ருட்டி மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கண்ணன் போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தார். மேலும், ராஜ்குமாரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்






