என் மலர்tooltip icon

    கடலூர்

    • ராம்குமார் (வயது 32). சம்ப வத்தன்று ராம்குமார் தனது பாட்டி வேதவள்ளி இறந்து விட்டதை தொடர்ந்து அடக்கம் செய்து விட்டு தனது உறவிர்களுடன் நடந்து வந்து கொண்டி ருந்தார்.
    • இதில் காயம் அடைந்த ராம்குமார் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    கடலூர்:

    கடலூர் வழிசோதனை பாளையம் சேர்ந்தவர் ராம்குமார் (வயது 32). சம்ப வத்தன்று ராம்குமார் தனது பாட்டி வேதவள்ளி இறந்து விட்டதை தொடர்ந்து அடக்கம் செய்து விட்டு தனது உறவினர்களுடன் நடந்து வந்து கொண்டி ருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த 3 பேர் குடி போதையில் திடீரென்று ராம்குமார் மற்றும் அவரது சகோதரர் கண்ணன் ஆகியோரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த ராம்குமார் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் அதே பகுதியை சேர்ந்த புஷ்பராஜ், கிருஷ்ணமூர்த்தி, கிருஷ்ண ராஜ் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் புதுமைப்பெண் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
    • தற்போதுவரை இத்திட் டத்தின் வாயிலாக முதற்கட்ட மாக 4008 மாணவிகளும், 2-ம் கட்டமாக 1956 என 5964 மாணவிகள் பயன டைந்துள்ளனர்

    கடலூர்:

    :கடலூர் கலெக்டர் பால சுப்ரமணியம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறி யிருப்பதாவது-

    தமிழ்நாடு முதல்- அமைச்சர் உயர்கல்வி பயி லும் அரசு பள்ளி மாணவி களின் சேர்க்கை விகிதம் மிக குறைவாக இருப்பதை அதிகரிக்கவும், பொருளா தாரத்தில் பின்தங்கிய சூழ்நிலையில் உள்ள மாணவி களுக்கு உயர்கல்வியை ஊக்குவிக்கும் விதமாக, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலமாக உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் புதுமைப்பெண் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

    இத்திட்டத்தின் வாயி லாக மாணவிகளுக்கு உயர் கல்வி வழங்குவதால், பாலின சமத்துவத்தை ஏற்படுத்துதல், குழந்தை திருமணத்தை தடுத்தல், பெண் குழந்தைகளின் கல்வி இடைநிற்றல் விகி தத்தை குறைத்தல், குடும்பச் சூழ்நிலை மற்றும் வறுமை காரணமாக மேற்படிப்பு படிக்க இயலாத மாணவி களுக்கு பொருளாதார ரீதியாக உதவுதல், மேலும் பெண்களின் சமூக மற்றும் பொருளாதார பாது காப்பை உறுதி செய்தல் போன்றவற்றின் மூலம் நல்ல சமுதாயத்தை உரு வாக்க வழிவகை செய்யப்படு கிறது. கடலூர் மாவட்டத்தில் தற்போதுவரை இத்திட் டத்தின் வாயிலாக முதற்கட்ட மாக 4008 மாணவிகளும், 2-ம் கட்டமாக 1956 என 5964 மாணவிகள் பயன டைந்துள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அருட்செல்வர் கலையரங்கில் நடைபெற்றது. இதற்கு சைபர் குற்ற இன்ஸ்பெக்டர்கவிதா தலைமை தாங்கினார்.
    • ஓ.பி.ஆர்.கல்வி நிறுவனங்களின் செயலாளரும் தாளாளருமான டாக்டர். இரா.செல்வராஜ் முன்னிலை வகித்தார்.

    கடலூர்:

    வடலூர் ஓ.பி.ஆர். நினைவு செவிலியர் கல்லூரி மாணவிகள் பங்கேற்ற சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம் அருட்செல்வர் கலையரங்கில் நடைபெற்றது. இதற்கு சைபர் குற்ற இன்ஸ்பெக்டர்கவிதா தலைமை தாங்கினார். ஓ.பி.ஆர்.கல்வி நிறுவனங்களின் செயலாளரும் தாளாளருமான டாக்டர். இரா.செல்வராஜ் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியை ஓ.பி.ஆர். நினைவு கல்வி நிறுவனங்களின் நிர்வாக அலுவலர் லதா ராஜாவெங்கடேசன் ஒருங்கிணைந்து விளக்கவுரையாற்றினார். இதில் உதவிப் பேராசிரியர்கள் மலர்விழி, நித்தியபிரியா, மங்கலம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து கடலூரில் நடைபெற்ற சைபர் குற்ற கருத்தரங்கில் பங்கேற்ற, வடலூர் ஓ.பி.ஆர். நினைவு செவிலியர் கல்லூரி மற்றும் செவிலியர் பயிற்சிப் பள்ளி மாணவிகளான சந்தோஷிகா, செல்வராணி, நந்தினி, கனிமொழி, கார்மேல் நிர்மல் ரோஷி, லாவன்யாஸ்ரீ, மரியா பாஷ்டினா ஆகியோர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    • ஆச்சி என்கிற நிவேதா (வயது 28). இவர் கடந்த 25-ந்தேதி பகல் 11 மணி அளவில் வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
    • இவர் கணவர் பல இடங்களில் இவரைத் தேடியும் எங்கும் கிடைக்காதால் பண்ருட்டி போலீசில் புகார் கொடுத்தார்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த மேல் கவரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சுபாஷ் சந்திர போஸ். இவரது மனைவி ஆச்சி என்கிற நிவேதா (வயது 28). இவர் கடந்த 25-ந்தேதி பகல் 11 மணி அளவில் வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் இவரைத் தேடியும் எங்கும் கிடைக்காதால் பண்ருட்டி போலீசில் புகார் கொடுத்தார். இது குறித்து பண்ருட்டி போலீசார் கண்ணன் வழக்கு பதிவு செய்து காணாமல் போன நிவேதாவை தேடி வருகின்றனர்.

    • புவனகிரி பகுதியில் உள்ள வெவ்வேறு இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டாட்டா ஏசி உள்ளிட்ட 407 வாகனத்தில் பேட்டரி திருடியவர் கைது செய்யட்டார்.
    • வாகனத்தில் இருந்து பேட்டரி திருடிய போது ரோந்து போலீசாரிடம் கையும் களவுமாக பிடிப்பட்டார்.

    கடலூர்:

    புவனகிரி பகுதியில் உள்ள வெவ்வேறு இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டாட்டா ஏசி உள்ளிட்ட 407 வாகனத்தில் பேட்டரி திருடியவர் கைது செய்யப்பட்டார். வனகிரி அடுத்த பரங்கிப்பேட்டை வண்ணாரபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி மகன் கலைச்செல்வம் (வயது 46). இவர் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் இருந்து பேட்டரி திருடிய போது ரோந்து போலீசாரிடம் கையும் களவுமாக பிடிப்பட்டார்.

    இவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்த போது புவனகிரி பகுதியில் உள்ள இரண்டு வாகனங்களில் பேட்டரி திருடியது தெரிய வந்தது. மேலும், இவர் பல்வேறு பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் 407 வாகனங்களில் இருந்து பேட்டரியை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து வழக்கு பதிவு செய்து கலைச்செல்வத்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • சீட்டுப்பணத்தில் பணத்தை முதலீடு செய்தால் அதிக வட்டி கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறினார்கள்.
    • கடந்த 3 ஆண்டுகளாக சீட்டு பணம் மற்றும் தீபாவளி பண்டு என பலர் ரூ.1 கோடியே 40 லட்சம் பணம் செலுத்தி உள்ளோம்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு கடலூர் புதுப்பாளையத்தைச் சேர்ந்த ஜெயமாலினி தலைமையில் 15-க்கும் மேற்பட்ட பெண்கள் நேரில் வருகை தந்தனர். பின்னர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நாங்கள் அனைவரும் புதுப்பாளையத்தை சேர்ந்த துணி சலவை கடையில் கூலி வேலை செய்து வருகின்றோம். கடந்த 2018-ம் ஆண்டு கடலூர் புதுப்பாளையம் மற்றும் வன்னியர் பாளையம் சேர்ந்த 2 நபர்கள் எங்களை அணுகி வங்கி மற்றும் தபால் துறையில் முதலீடு செய்யலாம். எங்களுக்கு தெரிந்த நபர்கள் சீட்டு நடத்தி வருகின்றனர். மாதந்தோறும் தீபாவளி பண்டும் நடத்தி வருகிறார். ஆகையால் சீட்டுப்பணத்தில் பணத்தை முதலீடு செய்தால் அதிக வட்டி கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறினார்கள்.

    மேலும் சீட்டு எடுத்தவுடன் உடனடியாக பணம் வழங்கி விடுவோம். தீபாவளி சீட்டு கட்டினால் 20 நாட்களுக்கு முன்பு பொருட்கள், தங்க நாணயம் ஆகியவை வழங்கப்படும் என உறுதி அளித்தனர். இதனை நம்பி கடந்த 3 ஆண்டுகளாக சீட்டு பணம் மற்றும் தீபாவளி பண்டு என பலர் ரூ.1 கோடியே 40 லட்சம் பணம் செலுத்தி உள்ளோம்.

    அவர்களிடம் தொடர்ந்து பணம் கேட்டு வந்ததால், பணம் தராமல் ஏமாற்றி வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக தலைமறைவாக உள்ளனர். மேற்கண்ட நபர்கள் குறித்து விசாரித்த போது சென்னை திருவெற்றியூரைச் சேர்ந்த கும்பல் பல்வேறு இடங்களில் பணத்தை ஏமாற்றி வீடு மற்றும் நிலம் வாங்கியுள்ளதும், கண்டெய்னர்கள் வாங்கி உள்ளதும் தெரிய வந்துள்ளது.

    இது குறித்து சம்பந்தப்பட்ட நபர்களை தொடர்பு கொண்டால் அடியாட்களை வைத்து கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். ஆகையால் ரூ.1 கோடி 40 லட்சம் ஏமாற்றிய நபர்களை உடனடியாக கண்டுபிடித்து எங்கள் பணத்தை மீட்டுத் தந்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. 

    • பண்ருட்டி மாளிகம்பட்டு பஜனை கோயில் தெருவில் வசிப்பவர் செல்வம் (வயது 28).
    • ஒரு மூட்டையுடன். அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனையிட்டனர்

    கடலூர்:

    பண்ருட்டி மாளிகம்பட்டு பஜனை கோயில் தெருவில் வசிப்பவர் செல்வம் (வயது 28). இவர் அதே ஊரில் உள்ள அய்யனார் கோயில் அருகே மோட்டார் சைக்கிளில் ஒரு மூட்டையுடன். அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அந்த மூட்டையில் ஆற்று மணல் இருந்ததை போலீசார் பார்த்தனர். இதனைத் தொடர்ந்து ஆற்று மணலை திருடிய குற்றத்திற்காக செல்வத்தை காடாம்புலியூர் போலீசார் கைது செய்தனர்.

    • ராமதாஸ். இவர் இன்று காலை அங்கிருந்த சாலையில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார்.
    • இதனால் 2 பேருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்,

    கடலூர்:

    கடலூர் மாவட்டம்  பண்ருட்டி அடுத்த மணம் தவழ்ந்தபுத்தூரை சேர்ந்தவர் ராமதாஸ். இவர் இன்று காலை அங்கிருந்த சாலையில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அதே பகுதியை சேர்ந்த பகத்சிங் என்பவர் ஏன் வழியில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி உள்ளாய் என்று கேட்டு தகராறில் ஈடுபட்டார்.

    இதனால் 2 பேருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். அப்போது ராமதாசுக்கு ஆதரவாக அதே பகுதியை சேர்ந்த செல்வம் என்பவர் மோதலில் ஈடுபட்டு பகத்சிங்கை தாக்கினார். இதனால் அங்கு சிறிது நேரம் பதட்டமான நிலை அங்கு உருவானது. இது பற்றி தகவல் அறிந்த புதுப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.

    • மகன் மித்ரன்(3). நேற்று முன்தினம் இவரது வீட்டின் தோட்டத்தில் மித்ரன் விளையாடிக் கொண்டிருந்தான்.
    • அப்போது பாம்பு கடித்தது.

    கடலூர்:

    சிதம்பரம் அடுத்த துணிசரமேடு பகுதியை சேர்ந்தவர் திருஞானம் (வயது 37) இவரது மகன் மித்ரன்(3). நேற்று முன்தினம் இவரது வீட்டின் தோட்டத்தில் மித்ரன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது பாம்பு கடித்தது. உடனடியாக சிதம்பரம் அரசு காமராஜ் மருத்துவமனைக்கு கொண்டு வந்து பரிசோதனை செய்தபோது அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இது குறித்து சிதம்பரம் தாலுக்கா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தமிழரசன். மனைவி ஆனந்தி (வயது 35). அதே ஊரை சேர்ந்தவர் மூர்த்தி (40). கூலி தொழிலாளி. ஆனந்தி நேற்று முன்தினம் வயல் வெளியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அவரை பின் தொடர்ந்து வந்த மூர்த்தி, ஆனந்தியிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து மூர்த்தியை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த கரும்பூரை சேர்ந்தவர் தமிழரசன். இவரது மனைவி ஆனந்தி (வயது 35). அதே ஊரை சேர்ந்தவர் மூர்த்தி (40). கூலி தொழிலாளி. ஆனந்தி நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் வயல் வெளியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த மூர்த்தி, ஆனந்தியிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.

    இது குறித்த புகாரின் பேரில் புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து மூர்த்தியை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • மணி (25), கொத்தனார். திருமணம் ஆகாதவர். மணி (25), இவர் திருத்துறையூர் - கயப்பாக்கம் செல்லும் சாலையில் உள்ள புளிய மரம் ஒன்றில் நைலான் கயிற்றால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இதுகுறித்து வழக்கு பதிவு செய்து இவர் எதற்காக தூக்குபோட்டு இறந்தார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த திருத்துறையூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் துளசிங்கம் மகன் மணி (25), கொத்தனார். திருமணம் ஆகாதவர். இவர் திருத்துறையூர் - கயப்பாக்கம் செல்லும் சாலையில் உள்ள புளிய மரம் ஒன்றில் நைலான் கயிற்றால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது பற்றி அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் புதுப்பேட்டை போலீசாருக்கு தகவல்கொடுத்தனர். புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இதுகுறித்து வழக்கு பதிவு செய்து இவர் எதற்காக தூக்குபோட்டு இறந்தார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அதிர்ச்சி அடைந்து நபரிடம் இருந்த பெட்ரோல் கேனை பறிமுதல் செய்தனர்.
    • கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி ஆட்டோ வேலுவை அழைத்து சென்றனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு இன்று காலை வாலிபர் ஒருவர் நேரில் சென்றார்.

    பின்னர் தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் கேனை எடுத்து தன் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அதிர்ச்சி அடைந்து அந்த நபரிடம் இருந்த பெட்ரோல் கேனை பறிமுதல் செய்தனர். பின்னர் போலீசார் அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர்.

    இதில் அவர் கடலூரை சேர்ந்த ஆட்டோ வேலு என்பதும், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகியாக இருப்பதும் தெரியவந்தது. இவர் ஒரு பெண்ணிடம் சுமார் 2 லட்சம் ரூபாய் பணத்தை வழங்கி உள்ளார். அந்த பணத்தை திருப்பி கேட்டு உள்ளார். ஆனால் அதற்கு அந்த பெண் பணம் தர மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆகையால் சம்பந்தப்பட்ட பெண்ணிடம் இருந்து பணத்தை பெற்று தர வேண்டும் என தெரிவித்தார்.

    இதனை தொடர்ந்து கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி ஆட்டோ வேலுவை அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

    ×