என் மலர்
கடலூர்
- தேசிய நெடுஞ்சாலையில் தனியார் ஓட்டல் அருகில் டெம்போ டிராவளர் வாகனம் சாலையில் தாறுமாறாக வந்தது.
- குடிபோதையில் வாகனத்தை ஓட்டி வந்தது தெரியவந்தது.
கடலூர்:
கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராமன், மாவட்டத்தில் கடைகோடி பகுதிகளான வேப்பூர், ராமநத்தம், சிறுபாக்கம் ஆகிய இடங்களில் நேற்று இரவு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.அப்போது சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தனியார் ஓட்டல் அருகில் டெம்போ டிராவளர் வாகனம் சாலையில் தாறுமாறாக வந்தது. இந்த வாகனத்தை பின் தொடர்ந்த போலீஸ் சூப்பிரண்டு, சிறிது தூரத்தில் வாகனத்தை மடக்கி பிடித்தார்.
வாகனத்தை ஓட்டி வந்த வேப்பூர் அடுத்த பெரியநெசலூர் பாலு மகன் வெற்றிவேல் (வயது 38). குடிபோதையில் வாகனத்தை ஓட்டி வந்தது தெரியவந்தது. இதையடுத்து வாகனத்தை பறிமுதல் செய்து வேப்பூர் போலீஸ் நிலையத்தில் ஓப்படைத்தார். மேலும், குடிபோதையில் வாகனத்தை தாறுமாறாக ஓட்டிவந்த வெற்றிவேல் மீது வழக்கு பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டார்.
- இவர் பி.எஸ்.சி. நர்சிங் முடித்து சென்னை குன்றத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்தார்
- கடந்த 9 -ந் தேதி விடுப்பில் வந்து வீட்டில் இருந்து வந்த சிநேகாவை காணவில்லை
கடலூர்:
பண்ருட்டி அடுத்த அன்னங்காரன்குப்பம் தெற்கு தெருவை சேர்ந்தவர் தனசேகர். இவரது மகள் சிநேகா (22). இவர் பி.எஸ்.சி.நர்சிங் முடித்து சென்னை குன்றத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்தார். கடந்த 9 -ந் தேதி விடுப்பில் வந்து வீட்டில் இருந்து வந்த சிநேகாவை காணவில்லை. அக்கம்,பக்கம், உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து முத்தாண்டி க்குப்பம் போலீசில் சிநேகாவின் தந்தை தனசேகர் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிநேகாவை தேடி வருகின்றனர்.
- கடலூர் அடுத்த நடுவீரப்பட்டு பாலூர் சன்னியாசிப்பேட்டை ஊர் இளைஞர்களுக்கும், குயிலாப்பாளையம் காலனி இளைஞர்களுக்கும் முன்விரோத தகராறு இருந்து வந்தது.
- இதனால் அங்கு இருந்த ஏராளமான பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு வீட்டுக்குள் ஓடினர்
கடலூர்:
கடலூர் அடுத்த நடுவீரப்பட்டு பாலூர் சன்னியாசிப்பேட்டை ஊர் இளைஞர்களுக்கும், குயிலாப்பாளையம் காலனி இளைஞர்களுக்கும் முன்விரோத தகராறு இருந்து வந்தது.
தாக்குதல்
இந்த நிலையில் நேற்று இரவு திடீரென்று ஒரு கும்பல் சன்னியாசி பேட்டை ஊர் பகுதியில் கத்தி மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் சென்று சரமாரியாக கற்கள் மற்றும் உருட்டு கட்டைகளை வீசினார்கள். இதனால் அங்கு இருந்த ஏராளமான பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு வீட்டுக்குள் ஓடினர். இதில் வீட்டின் ஓடுகள், டிராக்டர் கண்ணாடி, ஜன்னல் கண்ணாடி உடைந்து சேதம் அடைந்ததோடு , பா.ம.க. பேனர் கிழிக்கப்பட்டன.
இத் தகவல் அறிந்த பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா, நடுவீரப்பட்டு போலீசார் மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது பா.ம.க. மாவட்ட தலைவர்கள் தடா. தட்சிணாமூர்த்தி, நவீன் பிரதாப் மற்றும் பா.ம.க.நிர்வாகிகள் பொதுமக்கள் ஏராள மானோர் அப்பகுதியில் திரண்டனர்.
30 பேர் மீது வழக்கு
பின்னர் போலீசாரை முற்றுகையிட்டு சம்பந்த ப்பட்ட குற்றவாளிகள் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என தெரிவித்தனர். இதுகுறித்து நடுவீரப்பட்டு போலீசார் சன்னியாசிபேட்டையை சேர்ந்த மோகன் கொடுத்த புகாரின் பேரில் குயிலாப் பாளையம் காலனியை சேர்ந்த பிரதாப், சந்துரு உள்பட 30 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் பிரதாப் (24), சந்துரு (22) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் சன்னியாசிப்பேட்டை மற்றும் குயிலாபாளையம் பகுதியில் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
- மகாவீர் ஜெயந்தி தினம் வருகிற 4- ந்தேதி கொண்டாடப்படுகிறது.
- கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபானக் கடைகள்(டாஸ்மாக்), அரசு மதுபானக்கூடங்கள், பார்கள் மூடப்பட வேண்டும்
கடலூர்:
கடலூர் கலெக்டர் பாலசுப்ரமணியம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது-
மகாவீர் ஜெயந்தி தினம் வருகிற 4- ந்தேதி கொண்டாடப்படுகிறது. எனவே அன்று ஒரு நாள் கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபானக் கடைகள்(டாஸ்மாக்), அரசு மதுபானக்கூடங்கள், பார்கள் மூடப்பட வேண்டும். அன்று மதுபானக் கடைகளை திறந்து மதுபானங்கள் விற்றாலோ, அரசு மதுபானக்கூடங்கள் மற்றும் மதுபானக்கூடங்களில் மதுபானங்கள் விற்றாலோ சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர்கள் மற்றும் பார்உரிமையாளர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் . இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- இறைவன் தானாகவே விரும்பிவந்து எழுந்தருளி தலங்கள் மிகவும் சிறப்புக்குரியவை.
- பக்தர்கள் உண்டியல்காணிக்கை செலுத்துவதற்காக, சுமார் 6அடிஉயரத்தில் 4 பிரமாண்டமான உண்டியல் வைக்கப்பட்டுள்ளது
கடலூர்:
இறைவன் தானாகவே விரும்பிவந்து எழுந்தருளி தலங்கள் மிகவும் சிறப்புக்குரியவை.அப்படிசிவபெருமான்விரும்பிஎழுந்தருளிபிரசித்திப்பெற்றதுதிருவதிகை வீரட்டானேஸ்வரர்கோவில். இங்கு அருள்பாலிக்கும் வீரட்டானேஸ்வரரை தரிசிக்கும் பக்தர்கள் உண்டியல்காணிக்கை செலுத்துவதற்காக, சுமார் 6அடிஉயரத்தில் 4 பிரமாண்டமான உண்டியல் வைக்கப்பட்டுள்ளது.
சாமியை தரிசனம் செய்து விட்டு, வெளியே வரும் வழியில் தான் காணிக்கைஉண்டியல் வைக்கப்பட்டுள்ளது.இந்த காணிக்கை உண்டியல்கள் திறப்பு கோவில் நிர்வாகத்தினர், கிராம பொதுமக்கள், கட்டளைதாரர்கள் முன்னிலையில் இன்று காலை நடந்தது
- கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.
- பா.ம.க. கொடிக்கம்பத்தை உடைத்தது யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் சாவடியில் சாலை ஓரத்தில் பா.ம.க. கொடி கம்பம் உள்ளது. நேற்று இரவு இங்கிருந்த கொடி கம்பம் மர்மநபர்களால் உடைக்கப்பட்டு சாலையில் விழுந்து கிடந்தது. இதனை பார்த்த பா.ம.க.வினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்து ஏராளமானோர் அப்பகுதியில் திரண்டனர்.
இத்தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். பா.ம.க. கொடிக்கம்பத்தை உடைத்தது யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பா.ம.க. கொடிக்கம்பம் உடைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கடந்த 22-ந்தேதி குற்ற வழக்குகளில் ஈடுபட்ட 6 சிறுவர்கள் தப்பித்து சென்றனர்.
- இந்த நிலையில் போலீசார் தீவிர தேடுதலில் ஈடுபட்டு சிறுவர்களை பிடித்தனர்.இந்த நிலையி
கடலூர்:
கடலூர் சாவடியில் அரசினர் கூர்நோக்கு இல்லம் செயல்பட்டு வருகின்றது. கடந்த 22-ந்தேதி குற்ற வழக்குகளில் ஈடுபட்ட 6 சிறுவர்கள் தப்பித்து சென்றனர். இந்த நிலையில் போலீசார் தீவிர தேடுதலில் ஈடுபட்டு சிறுவர்களை பிடித்தனர்.இந்த நிலையில் மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் இன்று காலை கடலூர் அரசினர் கூர்நோக்கு இல்லத்திற்கு நேரில் வருகை தந்தார். பின்னர் அங்கிருந்த சிறுவர்களை அழைத்து விசாரணை செய்தார்.
மேலும் தப்பித்து சென்று பிடிபட்ட சிறுவர்களிடமும் தீவிர விசாரணை நடத்தினார். அப்போது கடலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அரவிந்தன் மற்றும் பலர் உடனிருந்தனர்.
- ராம்குமார் (வயது 32). சம்ப வத்தன்று ராம்குமார் தனது பாட்டி வேதவள்ளி இறந்து விட்டதை தொடர்ந்து அடக்கம் செய்து விட்டு தனது உறவிர்களுடன் நடந்து வந்து கொண்டி ருந்தார்.
- இதில் காயம் அடைந்த ராம்குமார் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கடலூர்:
கடலூர் வழிசோதனை பாளையம் சேர்ந்தவர் ராம்குமார் (வயது 32). சம்ப வத்தன்று ராம்குமார் தனது பாட்டி வேதவள்ளி இறந்து விட்டதை தொடர்ந்து அடக்கம் செய்து விட்டு தனது உறவினர்களுடன் நடந்து வந்து கொண்டி ருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த 3 பேர் குடி போதையில் திடீரென்று ராம்குமார் மற்றும் அவரது சகோதரர் கண்ணன் ஆகியோரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த ராம்குமார் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் அதே பகுதியை சேர்ந்த புஷ்பராஜ், கிருஷ்ணமூர்த்தி, கிருஷ்ண ராஜ் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
- மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் புதுமைப்பெண் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
- தற்போதுவரை இத்திட் டத்தின் வாயிலாக முதற்கட்ட மாக 4008 மாணவிகளும், 2-ம் கட்டமாக 1956 என 5964 மாணவிகள் பயன டைந்துள்ளனர்
கடலூர்:
:கடலூர் கலெக்டர் பால சுப்ரமணியம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறி யிருப்பதாவது-
தமிழ்நாடு முதல்- அமைச்சர் உயர்கல்வி பயி லும் அரசு பள்ளி மாணவி களின் சேர்க்கை விகிதம் மிக குறைவாக இருப்பதை அதிகரிக்கவும், பொருளா தாரத்தில் பின்தங்கிய சூழ்நிலையில் உள்ள மாணவி களுக்கு உயர்கல்வியை ஊக்குவிக்கும் விதமாக, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலமாக உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் புதுமைப்பெண் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
இத்திட்டத்தின் வாயி லாக மாணவிகளுக்கு உயர் கல்வி வழங்குவதால், பாலின சமத்துவத்தை ஏற்படுத்துதல், குழந்தை திருமணத்தை தடுத்தல், பெண் குழந்தைகளின் கல்வி இடைநிற்றல் விகி தத்தை குறைத்தல், குடும்பச் சூழ்நிலை மற்றும் வறுமை காரணமாக மேற்படிப்பு படிக்க இயலாத மாணவி களுக்கு பொருளாதார ரீதியாக உதவுதல், மேலும் பெண்களின் சமூக மற்றும் பொருளாதார பாது காப்பை உறுதி செய்தல் போன்றவற்றின் மூலம் நல்ல சமுதாயத்தை உரு வாக்க வழிவகை செய்யப்படு கிறது. கடலூர் மாவட்டத்தில் தற்போதுவரை இத்திட் டத்தின் வாயிலாக முதற்கட்ட மாக 4008 மாணவிகளும், 2-ம் கட்டமாக 1956 என 5964 மாணவிகள் பயன டைந்துள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அருட்செல்வர் கலையரங்கில் நடைபெற்றது. இதற்கு சைபர் குற்ற இன்ஸ்பெக்டர்கவிதா தலைமை தாங்கினார்.
- ஓ.பி.ஆர்.கல்வி நிறுவனங்களின் செயலாளரும் தாளாளருமான டாக்டர். இரா.செல்வராஜ் முன்னிலை வகித்தார்.
கடலூர்:
வடலூர் ஓ.பி.ஆர். நினைவு செவிலியர் கல்லூரி மாணவிகள் பங்கேற்ற சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம் அருட்செல்வர் கலையரங்கில் நடைபெற்றது. இதற்கு சைபர் குற்ற இன்ஸ்பெக்டர்கவிதா தலைமை தாங்கினார். ஓ.பி.ஆர்.கல்வி நிறுவனங்களின் செயலாளரும் தாளாளருமான டாக்டர். இரா.செல்வராஜ் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியை ஓ.பி.ஆர். நினைவு கல்வி நிறுவனங்களின் நிர்வாக அலுவலர் லதா ராஜாவெங்கடேசன் ஒருங்கிணைந்து விளக்கவுரையாற்றினார். இதில் உதவிப் பேராசிரியர்கள் மலர்விழி, நித்தியபிரியா, மங்கலம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து கடலூரில் நடைபெற்ற சைபர் குற்ற கருத்தரங்கில் பங்கேற்ற, வடலூர் ஓ.பி.ஆர். நினைவு செவிலியர் கல்லூரி மற்றும் செவிலியர் பயிற்சிப் பள்ளி மாணவிகளான சந்தோஷிகா, செல்வராணி, நந்தினி, கனிமொழி, கார்மேல் நிர்மல் ரோஷி, லாவன்யாஸ்ரீ, மரியா பாஷ்டினா ஆகியோர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
- ஆச்சி என்கிற நிவேதா (வயது 28). இவர் கடந்த 25-ந்தேதி பகல் 11 மணி அளவில் வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
- இவர் கணவர் பல இடங்களில் இவரைத் தேடியும் எங்கும் கிடைக்காதால் பண்ருட்டி போலீசில் புகார் கொடுத்தார்.
கடலூர்:
பண்ருட்டி அடுத்த மேல் கவரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சுபாஷ் சந்திர போஸ். இவரது மனைவி ஆச்சி என்கிற நிவேதா (வயது 28). இவர் கடந்த 25-ந்தேதி பகல் 11 மணி அளவில் வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் இவரைத் தேடியும் எங்கும் கிடைக்காதால் பண்ருட்டி போலீசில் புகார் கொடுத்தார். இது குறித்து பண்ருட்டி போலீசார் கண்ணன் வழக்கு பதிவு செய்து காணாமல் போன நிவேதாவை தேடி வருகின்றனர்.
- புவனகிரி பகுதியில் உள்ள வெவ்வேறு இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டாட்டா ஏசி உள்ளிட்ட 407 வாகனத்தில் பேட்டரி திருடியவர் கைது செய்யட்டார்.
- வாகனத்தில் இருந்து பேட்டரி திருடிய போது ரோந்து போலீசாரிடம் கையும் களவுமாக பிடிப்பட்டார்.
கடலூர்:
புவனகிரி பகுதியில் உள்ள வெவ்வேறு இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டாட்டா ஏசி உள்ளிட்ட 407 வாகனத்தில் பேட்டரி திருடியவர் கைது செய்யப்பட்டார். வனகிரி அடுத்த பரங்கிப்பேட்டை வண்ணாரபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி மகன் கலைச்செல்வம் (வயது 46). இவர் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் இருந்து பேட்டரி திருடிய போது ரோந்து போலீசாரிடம் கையும் களவுமாக பிடிப்பட்டார்.
இவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்த போது புவனகிரி பகுதியில் உள்ள இரண்டு வாகனங்களில் பேட்டரி திருடியது தெரிய வந்தது. மேலும், இவர் பல்வேறு பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் 407 வாகனங்களில் இருந்து பேட்டரியை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து வழக்கு பதிவு செய்து கலைச்செல்வத்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.






