என் மலர்
கடலூர்
- இதில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட சிறுவர்களும் தூக்கி வீசப்பட்டனர்.
- 2 பேரும் பிளஸ்-2 படித்து வருகிறார்கள் என்பது தெரியவந்தது.
கடலூர்:
பண்ருட்டி கும்பகோணம் சாலையில் பணிக்கன்குப்பம் சாலையில் போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே 2 சிறுவர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்களை நிறுத்த போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் முயற்சித்தார். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிளில் வந்த சிறுவர்கள் சப்-இன்ஸ்பெக்டர் மீது மோதினார்கள். இதில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட சிறுவர்களும் தூக்கி வீசப்பட்டனர். இதில் சப்-இன்ஸ்பெக்ட ர் சிவக்குமார், மோட்டார் சைக்கிளில் வந்த 2 சிறுவர்களும் பலத்த காயம டைந்தனர். அங்கு பணியில் இருந்த போக்குவரத்து போலீசார் 3 பேரையும் மீட்டு பண்ருட்டி அரசு மருத்துமனைக்கு சிகி ச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனு ப்பிவை க்கப்பட்டுள்ளனர். இது குறித்து பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் மோட்டார் சைக்கிளில் வந்த சிறுவர்கள் 2 பேரும் பிளஸ்-2 படித்து வருகிறார்கள் என்பது தெரியவந்தது. இவர்கள் போக்குவரத்து போலீசாருக்கு பயந்து வேகமாக சென்றதால் விபத்து ஏற்பட்டதா? அல்லது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை சிறுவர்கள் கொலை செய்ய முயற்சித்தார்களா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் பண்ருட்டி பகுதியே பரபரப்பாக காணப்படுகிறது.
- காடாம்புலியூரில் அனுமதி இன்றி கள் இறக்கியவர் கைது செய்யப்பட்டார்.
- போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரை பாண்டியன் மற்றும் போலீசார் பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர் வேலன் குப்பம் பகுதியில் தீவிர மதுவிலக்கு சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது வேலன் குப்பம் வடக்கு தெருவை சேர்ந்த விக்ரம் (22) என்பவர் அவருக்கு சொந்தமான நிலத்தில் உள்ள பனை மரத்தில் இருந்து கள் இறக்கி விற்பனை செய்தது தெரியவந்தது. உடனடியாக விக்ரமை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பண்ருட்டியில் லாட்டரி சீட்டு விற்றவர் கைது செய்யப்பட்டார்.
- அவர் அங்கு செட்டிபாளையம் யுவராஜ் (39)என தெரிய வந்தது.
கடலூர்:
பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் .அப்போது பண்ருட்டிபோலீஸ்லைன்5 -வது தெருவில் செல்போனில் லாட்டரி டிக்கெட் விற்பனை செய்தஒருவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர். அவர் அங்கு செட்டிபாளையம் யுவராஜ் (39)என தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்தனர்.
- திட்டக்குடி அருகே 120 லிட்டர் கள்ளச் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
- போலீசாரை பார்த்ததும் இருசக்கர வாகனத்தை அப்படியே விட்டுவிட்டு தப்பி ஓட்டம் பிடித்தார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த கொரக்கவாடி கிராமம் அருகில் கோ.குடிகாடு பகுதியில் சேலம் மாவட்டத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த மர்ம நபர் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசாரை பார்த்ததும் இருசக்கர வாகனத்தை அப்படியே விட்டுவிட்டு தப்பி ஓட்டம் பிடித்தார்.அப்போது ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் துரத்தி பிடிக்கும் முயற்சி செய்யும்போது கீழே தள்ளிவிட்டு மீண்டும் ஓட்ட பிடித்தார். ஆனால் போலீசார் லேசான காயத்துடன் விடாமல் துரத்தி பிடித்து விசாரணை செய்தனர்.
அப்போது 4லாரி டியூப்களில் 120 லிட்டர் கள்ளச்சாராயம் இருசக்கர வாகனத்தில் கடத்தி வந்தது தெரியவந்தது. அவரை கைது செய்தனர். அவர் சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்த இராமசேசபுரம் பகுதியைச் சேர்ந்த அருள் (34) என்பது தெரிய வந்தது. அவரை ராமநத்தம் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்து இருசக்கர வாகனம் மற்றும் 120 லிட்டர் கள்ள சாராயத்தை பறிமுதல் செய்தனர். வாலிபர் அருளை சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் துரத்தி பிடித்ததில் ராமநத்தம் சப்-இன்ஸ்கபெக்டர் கலியமூர்த்தி, போலீசார் ஆனந்த ரட்சகன், ஜெயபிரகாஷ் ஆகிய3 போலீசாருக்கு சிறு காயம் ஏற்பட்டது. அவர் கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- இதை நினைவுகூரும் வகையில் குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்படுகிறது.
- ஓசன்னா வாழ்த்து பாடல்களை பாடியபடி குருத்தோலைகளை ஏந்தியபடி நகரின் முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்தனர்.
கடலூர்:
ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு எருசலேம் நகரு க்குள் கழுதை மேல் அமர்ந்துவரும்போது மக்கள் தங்கள் கைகளில் குருத்தோலைகளை பிடித்து வாழ்த்து பா டல்களை பாடினர். இதை நினைவுகூரும் வகையில் குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி குருத்தோ லை பவனி நடைபெறும். அதன்படி குருத்தோலை ஞாயிறான இன்று காலை கடலூர் கார்மேல் அன்னை ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. தொடர்ந்து கூட்டு திருப்பலியும் நடைபெற்றது. பின்னர் குருத் தோலைகளை ஏந்தியபடி கிறிஸ்தவர்கள் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று மீண்டும் தேவாயலத்தை வந்தடைந்தனர். இதில் ஏ ராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் கடலூர் ஆற்காடுலுத்தரன் திருச்சபை மற்றும் கடலூர் செம்மண்டலம், திருதிரிப்புலியூர், முதுநகர், நெல்லிக்குப்பம் மேல்ப ட்டாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை, ஆராதனை நடந்தது. தொடர்ந்து கிறிஸ்த வர்கள் ஓசன்னா வாழ்த்து பாடல்களை பாடியபடி குருத்தோலைகளை ஏந்தியபடி நகரின் முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்தனர்.
- கடலூர் பஸ் நிலையத்தில் வாலிபரிடம் நகை திருடப்பட்டது.
- அப்போது ஒரு வாலிபர் ஆனந்தராஜா பாக்கெட்டில் இருந்த செல்போனை பறித்துக் கொண்டு ஓடினார்
கடலூர், :
கடலூர் மாவட்டம் புவனகிரி கொத்தட்டைைய சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 40). சம்பவத்தன்று பிரகாஷ் தனது உறவினர் திருமணத்திற்கு சென்று விட்டு, தனது வீட்டிற்கு செல்வதற்காக கடலூர் பஸ் நிலையத்தில் அமர்ந்திருந்தார். அப்போது திடீரென்று பிரகாஷ் தூங்கிவிட்டார். தூக்கத்திலிருந்து விழித்து பார்த்தபோது அவர் அணிந்திருந்த 4 கிராம் தங்க மோதிரம், செல் மற்றும் அரசு ஆவண கார்டு அனைத்தையும் மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. இதன் மதிப்பு சுமார் 25 ஆயிரம் ஆகும். இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் பிரகாஷ்கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பஸ் நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவை சோதனை செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் கடலூர் எம்.புதூரை சேர்ந்த ஆனந்தராஜா (வயது 33) என்பவர் தூங்கி கொண்டு இருந்தார். அப்போது ஒரு வாலிபர் ஆனந்தராஜா பாக்கெட்டில் இருந்த செல்போனை பறித்துக் கொண்டு ஓடினார். இதில் திடீரென்று விழித்துக் கொண்ட ஆனந்தராஜா அந்த வாலிபரை பின்தொ டர்ந்து திருடன் திருடன் என கத்திக்கொண்டு துரத்தினார். ஆனால் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 20 நாட்களுக்கு மேலாக பூட்டி கிடக்கும் கட்டணக் கழிப்பறையை திறக்காததை கண்டித்தும், இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக மார்க்கெட் வளாகத்தில் குடிநீர் வழங்கப்படாததை கண்டித்தும்ஆர்ப்பாட்டம் நடந்தது,
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில், தினசரி காய்கறி மார்க்கெட் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடலூர்:
விருத்தாசலம் காட்டுக்கூடலூர் ரோட்டில் அமைந்துள்ள தினசரி காய்கறி மார்க்கெட்டில் 20 நாட்களுக்கு மேலாக பூட்டி கிடக்கும் கட்டணக் கழிப்பறையை திறக்காததை கண்டித்தும், இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக மார்க்கெட் வளாகத்தில் குடிநீர் வழங்கப்படாததை கண்டித்தும், மார்க்கெட் அருகில் சாலை விரிவாக்கத்தின் போது தோண்டப்பட்டு இடத்தில் போடப்பட்ட கழிவுநீர் கால்வாயை சீரமைக்காததை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில், தினசரி காய்கறி மார்க்கெட் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- ஆஷிக் மகன் பக்கிம்அஸ்லாம் (வயது 25). ஐஸ்கிரீம் கடை நடத்தி வருகிறா
- மகேஸ்வரி (22) என்பவரை பக்கிம் அஸ்லாம் காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அம்பல த்தாடிமடத் தெருவைச் சேர்ந்தவர் ஆஷிக் மகன் பக்கிம்அஸ்லாம் (வயது 25). ஐஸ்கிரீம் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு வேலைக்காக சென்ற கொத்தங்குடித் தெருவைச் சேர்ந்த சீனிவாசன் மகள் மகேஸ்வரி (22) என்பவரை பக்கிம் அஸ்லாம் காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதில் கர்ப்பமான மகேஸ்வரி, தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்திய போது வீட்டில் வந்து கேட்குமாறு தெரிவித்துள்ளார், வீட்டில் சென்று கேட்ட போது பக்கிம் அஸ்லாம் தந்தை ஆஷிக் மறுப்பு தெரிவித்தார். இருந்தபோதிலும் மகேஸ்வரி 8 மாத கர்ப்பிணையாக இருந்த போது இஸ்லாமியராக மாற வேண்டும் என தெரிவித்தனர். மகேஸ்வரி இஸ்லாமியராக மதம் மாறி, அவருக்கு ஆயிஷா என்ற பெயரும் வைக்கப்பட்டு கடந்த 01.01.2023 அன்று சிதம்பரம் லப்பை தெருவில் உள்ள பள்ளிவாசலில் நிக்கா நடைபெற்றதாக கூறப்படுகிறது இதையடுத்து ஜனவரி 16-ந்தேதி மகேஸ்வரி என்கிற ஆயிஷாவுக்கு ஆண் குழந்தை பெற்றெ டுத்தார். இதனையடுத்து ஆயிஷாவின் கணவர் பக்கிங் அஸ்லாம் தலைமறைவானார். தனது கணவரை அவரது தந்தை மறைத்து வைத்திருப்பதாகவும், கணவருடன் தன்னை சேர்த்து வைக்குமாறும் சிதம்பரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகார் மீது மகளிர் போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்காததால், திருமணம் நடைபெற்ற லப்பை தெரு பள்ளிவாசல் முன்பு நீதி கேட்டு ஆயிஷா 3 மாத கைக்குழந்தை, உறவினர்களுடன் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும், உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்ததை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிஷா மற்றும் உறவினர்களை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
- தமிழகம் முழுவதும் கடந்த 15 நாட்களுக்கு மேலாக கோடை வெயில் மக்களை சுட்டெரித்து வருகிறது
- கோடை வெயிலில் எவ்வாறு பணி செய்ய வேண்டும் எனவும் உடல் நிலையை பேணி காப்பது குறித்தும் விழிப்புணர்வு கருத்துக்களை போலீசாருக்கு கூறினார்
கடலூர்:
தமிழகம் முழுவதும் கடந்த 15 நாட்களுக்கு மேலாக கோடை வெயில் மக்களை சுட்டெரித்து வருகிறது. இதனை பொருட்படுத்தாமல் கடமையை செவ்வென செய்யும் போலீசாருக்கு, உடல் வெப்பத்தை தணித்து, உடல்நிலையை காக்கும் விதமாக விருத்தாசலம் பாலக்கரை சந்திப்பில் போக்குவரத்து போலீசாருக்கு, விருத்தாசலம் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆரோ க்கியராஜ் கோடை வெயிலை தணிக்கும் தொப்பிகளை அணிவித்தும், உடல் உஷ்ணத்தை தவிர்க்கும் வகையில் பழச்சாறு மற்றும் தர்பூசணி பழங்களை வழங்கினார்.
மேலும் கோடை வெயிலில் எவ்வாறு பணி செய்ய வேண்டும் எனவும் உடல் நிலையை பேணி காப்பது குறித்தும் விழிப்புணர்வு கருத்துக்களை போலீசாருக்கு கூறினார். இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து இன்ஸ்பெ க்டர் வெங்கடேசன் மற்றும் விருத்தாசலம் நகர போக்குவரத்து போலீசார் கலந்து கொண்டனர்.கழ்ச்சி
- தேசிய நெடுஞ்சாலையில் தனியார் ஓட்டல் அருகில் டெம்போ டிராவளர் வாகனம் சாலையில் தாறுமாறாக வந்தது.
- குடிபோதையில் வாகனத்தை ஓட்டி வந்தது தெரியவந்தது.
கடலூர்:
கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராமன், மாவட்டத்தில் கடைகோடி பகுதிகளான வேப்பூர், ராமநத்தம், சிறுபாக்கம் ஆகிய இடங்களில் நேற்று இரவு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.அப்போது சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தனியார் ஓட்டல் அருகில் டெம்போ டிராவளர் வாகனம் சாலையில் தாறுமாறாக வந்தது. இந்த வாகனத்தை பின் தொடர்ந்த போலீஸ் சூப்பிரண்டு, சிறிது தூரத்தில் வாகனத்தை மடக்கி பிடித்தார்.
வாகனத்தை ஓட்டி வந்த வேப்பூர் அடுத்த பெரியநெசலூர் பாலு மகன் வெற்றிவேல் (வயது 38). குடிபோதையில் வாகனத்தை ஓட்டி வந்தது தெரியவந்தது. இதையடுத்து வாகனத்தை பறிமுதல் செய்து வேப்பூர் போலீஸ் நிலையத்தில் ஓப்படைத்தார். மேலும், குடிபோதையில் வாகனத்தை தாறுமாறாக ஓட்டிவந்த வெற்றிவேல் மீது வழக்கு பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டார்.
- இவர் பி.எஸ்.சி. நர்சிங் முடித்து சென்னை குன்றத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்தார்
- கடந்த 9 -ந் தேதி விடுப்பில் வந்து வீட்டில் இருந்து வந்த சிநேகாவை காணவில்லை
கடலூர்:
பண்ருட்டி அடுத்த அன்னங்காரன்குப்பம் தெற்கு தெருவை சேர்ந்தவர் தனசேகர். இவரது மகள் சிநேகா (22). இவர் பி.எஸ்.சி.நர்சிங் முடித்து சென்னை குன்றத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்தார். கடந்த 9 -ந் தேதி விடுப்பில் வந்து வீட்டில் இருந்து வந்த சிநேகாவை காணவில்லை. அக்கம்,பக்கம், உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து முத்தாண்டி க்குப்பம் போலீசில் சிநேகாவின் தந்தை தனசேகர் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிநேகாவை தேடி வருகின்றனர்.
- கடலூர் அடுத்த நடுவீரப்பட்டு பாலூர் சன்னியாசிப்பேட்டை ஊர் இளைஞர்களுக்கும், குயிலாப்பாளையம் காலனி இளைஞர்களுக்கும் முன்விரோத தகராறு இருந்து வந்தது.
- இதனால் அங்கு இருந்த ஏராளமான பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு வீட்டுக்குள் ஓடினர்
கடலூர்:
கடலூர் அடுத்த நடுவீரப்பட்டு பாலூர் சன்னியாசிப்பேட்டை ஊர் இளைஞர்களுக்கும், குயிலாப்பாளையம் காலனி இளைஞர்களுக்கும் முன்விரோத தகராறு இருந்து வந்தது.
தாக்குதல்
இந்த நிலையில் நேற்று இரவு திடீரென்று ஒரு கும்பல் சன்னியாசி பேட்டை ஊர் பகுதியில் கத்தி மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் சென்று சரமாரியாக கற்கள் மற்றும் உருட்டு கட்டைகளை வீசினார்கள். இதனால் அங்கு இருந்த ஏராளமான பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு வீட்டுக்குள் ஓடினர். இதில் வீட்டின் ஓடுகள், டிராக்டர் கண்ணாடி, ஜன்னல் கண்ணாடி உடைந்து சேதம் அடைந்ததோடு , பா.ம.க. பேனர் கிழிக்கப்பட்டன.
இத் தகவல் அறிந்த பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா, நடுவீரப்பட்டு போலீசார் மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது பா.ம.க. மாவட்ட தலைவர்கள் தடா. தட்சிணாமூர்த்தி, நவீன் பிரதாப் மற்றும் பா.ம.க.நிர்வாகிகள் பொதுமக்கள் ஏராள மானோர் அப்பகுதியில் திரண்டனர்.
30 பேர் மீது வழக்கு
பின்னர் போலீசாரை முற்றுகையிட்டு சம்பந்த ப்பட்ட குற்றவாளிகள் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என தெரிவித்தனர். இதுகுறித்து நடுவீரப்பட்டு போலீசார் சன்னியாசிபேட்டையை சேர்ந்த மோகன் கொடுத்த புகாரின் பேரில் குயிலாப் பாளையம் காலனியை சேர்ந்த பிரதாப், சந்துரு உள்பட 30 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் பிரதாப் (24), சந்துரு (22) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் சன்னியாசிப்பேட்டை மற்றும் குயிலாபாளையம் பகுதியில் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.






