என் மலர்tooltip icon

    கடலூர்

    • இப்பகுதி 24 மணி நேரமும் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியாக இருந்து வருகின்றது.
    • மாலை 6 மணிக்கு மேல் இந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.

    கடலூர்:

    கடலூர் மஞ்சக்குப்பம் வேணுகோபாலபுரம் பகுதியில் வேணுகோபாலபுரம் வடக்கு, தெற்கு, சுதர்சனம் தெரு, மெயின் ரோடு ஆகிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் வணிக வளாகங்கள், கடைகள், பள்ளிக்கூடங்கள் இருந்து வருவதால் 24 மணி நேரமும் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியாக இருந்து வருகின்றது. இந்த நிலையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக உள்ள நிலையில் தெரு மின்விளக்குகள் எரியவில்லை. இதன் காரணமாக மாலை 6 மணிக்கு மேல் இந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இரவு 10 மணிக்கு மேல் அடையாளம் தெரியாத புதுப்புது நபர்கள் மின்விளக்கு எரியாமல் இருளில் உள்ளதால் அதிக அளவில் வந்து செல்கின்றனர். இதன் காரணமாக பொதுமக்கள் தங்கள் வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள், கடைகள் போன்றவற்றை அடைத்து விட்டு வெளியில் வருவதற்கு அச்சப்பட்டு வருகின்றனர்.

    மேலும் கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடைகள் மற்றும் வீடுகளில் தொடர் கொள்ளை சம்பவம் நடைபெற்று வந்த நிலையில் அடிப்படை தேவையான தெரு மின்விளக்குகள் இல்லாத நிலையில், இந்த பகுதிகளில் கொள்ளை சம்பவம் நடைபெற்று விடுவோமா? என்ற அச்சத்தில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இரவு நேரங்களில் வெளியில் வர முடியாத சூழ்நிலை காரணமாக யாருக்கேனும் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டாலும், அசம்பாவிதம் நடைபெற்றாலும் ஒருவருக்கொருவர் உதவி செய்ய முடியாத அவல நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். இது தொடர்பாக கடலூர் மாநகராட்சி அதிகாரிகளும் பலமுறை புகார் அளித்தும் அடிப்படை தேவையான தெரு மின்விளக்குகள் சரியான முறையில் பொருத்தப்ப டாததால் பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு அனைத்து சாத்தியக்கூறுகளும் இருந்து வருகின்றன என பொதுமக்கள் குமறி வருகின்றனர்.

    ஆனால் மாநகராட்சி ஊழியர்களோ எதை பற்றியும் அச்சப்படாமல் பொதுமக்கள் புகார் அளித்தால் நாங்கள் என்ன செய்ய முடியும் என்ற அலட்சியமான பதில்களை எப்போதும் தெரிவித்து வருவதால் இது சம்பந்தமாக யார் நடவடிக்கை எடுப்பார்கள் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரு மின்விளக்குகள் உடனடியாக பொருத்தி குற்ற சம்பவங்கள் நடைபெ றாமலும், விபத்துக்கள் ஏற்படாத வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இந்த சம்பவங்களால் அந்த பகுதி

    • ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் விதிமீறல்கள் என தெரிவிக்கப்பட்டு பணியா ளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது
    • 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    கடலூர்:

    தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் பயிர் கடன்கள் வழங்கப்படும் போது எம்.எல்.ஏ, எம்.பி தேர்தல் நேரங்களில் உறுப்பினர்களுக்கு அதிக அளவில் கடன் கொடுக்கும் வகையில் பல விதிமுறைகள் அதிகாரி களால் வாய்மொழியாக தளர்த்தப்படுகிறது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் விதிமீறல்கள் என தெரிவிக்கப்பட்டு பணியா ளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. ஆகையால் சங்க செயலாளர்கள் மற்றும் பணியாளர்கள் மீது எடுக்கப்ப ட்டுள்ள அனைத்து நடவடி க்கைகளையும் முழுமையாக விலக்கிக் கொள்ள வேண்டும். கடன் தள்ளுபடி அனுமதி க்கப்பட்ட பயிர் கடன், நகை கடன், மகளிர் சுய உதவி குழு கடன்கள் அனைத்திற்கும் உரிய தொகையை வட்டி இழப்பின்றி அனைத்து சங்கங்களுக்கும் வரவு வைக்கப்பட்டு சங்கங்களுக்கு ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை தீர்வு காணப்பட வேண்டும்.

    தவணை தவறிய நகைக்கடன் மீது ஏல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதில் ஏற்பட்டுள்ழ இழப்பு தொகைக்கு சங்க செயலாளர் மற்றும் பணியாளர்கள் பொறுப்பாக்கப்பட்டு ஓய்வு கால நிதி பயனை நிறுத்தி வைக்கும் நடவடிக்கையை உடனடியாக கைவிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் மாரிமுத்து, மண்டல இணைச் செயலாளர் சீனிவாசன், மாவட்டத் துணைத் தலைவர்கள் சாந்தகுமார், தாமோதரன், இணைச்செயலாளர்கள் வாசகி, உமா மகேஸ்வரி, மகளிர் அணி செயலாளர் லட்சுமி நாராயணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழுப்புரம் மாவட்ட செயலாளர் பாண்டுரங்கன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். இதில் நிர்வாகிகள் மற்றும் கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ளகோஷம் எழுப்பினார்கள். முடிவில் ஒன்றிய செயலாளர் ஜெயச்சந்திரன் நன்றி கூறினார்.

    • மாணவியின் தந்தைக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
    • மாணவியின் உறவினர்கள் பள்ளிக்கு வெளியில் சோகமாக நின்று கொண்டிருந்தனர்.

    கடலூர்:

    தமிழகத்தில் பிளஸ்-2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மாதம் 13-ந் தேதி தொடங்கி இன்று முடிவடைந்தது.கடலூர் மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். இன்று கடைசி தேர்வு என்பதால் மாணவ-மாணவிகள் தீவிரமாக படித்து காலை முதல் மதியம் வரை தேர்வு எழுதி முடித்தனர். இதில் கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கிரிஜா என்ற பிளஸ் 2 மாணவி வேதியியல் பாடம் தேர்வு எழுதினார். அவரது உறவினர்கள் பள்ளிக்கு வெளியில் சோகமாக நின்று கொண்டிருந்தனர்.

    அவர்களிடம் விசாரித்த போது மாணவி கிரிஜாவின் தந்தை பழைய வண்டிப்பாளையத்தை சேர்ந்த பொம்மை செய்யும் தொழிலாளி ஞானவேல் (வயது 45) திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டு, கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி ஞானவேல் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த அதிர்ச்சிக்குரிய செய்தி தெரிந்தும், மாணவி கிரிஜா இன்று பிளஸ்-2 கடைசி தேர்வு என்பதால் நேரில் வந்து தேர்வு எழுதினார் என்ற விஷயம் தெரியவந்தது.

    தனது தந்தை இறந்தாலும் கல்வியின் முக்கியத்துவத்தை அறிந்து மாணவி இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்கு வந்து தேர்வு எழுதியதை அறிந்த பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் மாணவி கிரிஜாவுக்கு ஆறுதல் கூறி தேர்வு எழுத ஊக்கமளித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    • கடலூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் இன்று காலை முதல் நேரில் வந்து தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்து செல்கின்றனர்.
    • இலங்கையனூர் ஊராட்சியில் 500க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் குடும்பம் வசித்து வருகின்றனர்

    ,கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்று வருகின்றது. இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் இன்று காலை முதல் நேரில் வந்து தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்து செல்கின்றனர். இந்த நிலையில் இன்று காலை சுமார் 50க்கும் மேற்பட்ட பெண்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது-

    கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட இலங்கையனூர் ஊராட்சியில் 500க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் குடும்பம் வசித்து வருகின்றனர். எங்கள் கிராமத்தில் 35 ஆண்டுகளாக வீடு இல்லாமல் நூற்றுக்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் குடும்பங்கள் வசித்து வருகின்றோம். இது தொடர்பாக கிராம பொதுமக்கள் இலவச மனை பட்டா கேட்டு பலமுறை மனு அளித்து உள்ள நிலையில் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகையால் எங்கள் கிராமத்தில் மக்களுக்கு இலவச மனை பட்டா வழங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு கூறப்பட்டு இருந்தது.

    • மாவட்ட முழுவதும் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா உள்ளிட்டவைகள் விற்பனை செய்யப்படுகிறதா? எனஆய்வு மேற்கொண்டனர்.
    • நேற்று ஒரே நாளில் 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 34 பேர்களை கைது செய்தனர்

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி, விருத்தாச்சலம், நெய்வேலி, சிதம்பரம், சேத்தியாதோப்பு, திட்டக்குடி ஆகிய 7 உட்கோட்டங்களில் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா, கஞ்சா உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்கும் நடவடிக்கையாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் தீவிர சோதனை ஈடுபட்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

    அதன்படி கடலூர் மாவட்டம் முழுவதும் அந்தந்த ேபாலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட போலீசார் மாவட்ட முழுவதும் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா உள்ளிட்டவைகள் விற்பனை செய்யப்படுகிறதா? எனஆய்வு மேற்கொண்டனர். இதில் கடலூர் மாவட்டம் முழுவதும் செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா விற்பனை செய்ததாக நேற்று ஒரே நாளில் 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 34 பேர்களை கைது செய்தனர். மேலும் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • ரங்கநாதபுரம் நடு காலணியை சேர்ந்தவர் சிவக்கொழுந்து. இவரது தாயார் நேற்று இறந்து போனார்
    • ர்மாற்றுப் பாதையில் செல்ல வேண்டுமானால் 2 கிலோ மீட்டருக்கு மேல் சுற்றிச் செல்ல வேண்டும் என்றும், இதனால் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது,

    கடலூர்:

    குறிஞ்சிப்பாடி அடுத்த ரங்கநாதபுரம் நடு காலணியை சேர்ந்தவர் சிவக்கொழுந்து. இவரது தாயார் நேற்று இறந்து போனார். அதனைத் தொடர்ந்து இவரது உடலை அடக்கம் செய்ய தனியார் நிலங்களுக்கு இடையே உள்ள வண்டிப்பாதை வழியாக அடக்கம் செய்ய உடலை எடுத்துச் செல்ல ஏற்பாடுகள் நடந்தன ஆனால் இந்த வழியாக செல்லக்கூடாது என சிலர் வேலி அமைத்ததாக தகவல் கிடைத்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. தகவல் அறிந்த குறிஞ்சிப்பாடி போலீசார் மற்றும் தாசில்தார் சுரேஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இருதரப்பினரும் பிடிவாதம் பிடிக்கவே அரசு அதிகாரிகள் செய்வ தறியாது திகைத்தனர்.

    ரங்கநாதபுரம் நடு காலணியை சேர்ந்தவர் சிவக்கொழுந்து. இவரது தாயார் நேற்று இறந்து போனார்மாற்றுப் பாதையில் செல்ல வேண்டுமானால் 2 கிலோ மீட்டருக்கு மேல் சுற்றிச் செல்ல வேண்டும் என்றும், இதனால் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் தாங்கள் வழக்கமாக பயன்படுத்தும் வண்டிப்பாதையை திறந்து விடக் கோரி நடு காலனி மக்கள் வேண்டுகோள் விடுத்தனர். முடிவு ஏற்படாத நிலையில் அப்பகுதி மக்கள் வேலியை உடைத்து விட்டு வழக்கமாக செல்லும் வண்டிப் பாதையை பயன்படுத்தி மூதாட்டியின் உடலை சுடுகாட்டில் அடக்கம் செய்தனர். இதனை அடுத்து அப்பகுதியில் தொடர்ந்து பதட்டம் நீடித்து வருகிறது. 

    • கைது செய்யப்பட்டு போக்சோவில் சிறையில் அடைக்கப்பட்டார்.
    • பெற்றோர்கள் புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த தொரப்பாடியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 30). கொத்தனார், இவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை தனியாக அழைத்துச் சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு போக்சோவில் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த மணிகண்டன் நேற்று முன் தினம் இரவு வீட்டில் இருந்த அதே சிறுமியை கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமியின் பெற்றோர்கள் புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை தேடி வருகின்றனர்.

    • இன்ஸ்பெக்டர் குணபாலன் தலைமையில் போலீசார் விரைந்து சென்றனர்.
    • 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    சிதம்பரம் அடுத்த பி. முட்லூர் பகுதியில் ஒரு கும்பல் சீட்டு விளையாடிக் கொண்டிருந்ததாக பரங்கி ப்பேட்டை இன்ஸ்பெக்டர் குணபாலனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் குணபாலன் தலைமையில் போலீசார் விரைந்து சென்றனர். அப்போது அங்கு சீட்டு விளையாடிக் கொண்டிருந்த 10 பேர் கொண்ட கும்பல் தங்களது மோட்டார் சைக்கிளை சம்பவ இடத்திலேயே விட்டு விட்டு அனைவரும் தப்பித்து ஓடினார்கள்.

    இதனை தொடர்ந்து போலீசார் அந்த நபர்களை விரட்டி சென்று பிடிக்க முயன்ற போது யாரும் சிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து அங்கிருந்த 10 மோட்டார் சைக்கிள், 13 ஆயிரத்து 230 பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். இது குறித்து பரங்கிப்பேட்டை போலீசார் 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மனைவி பிரிந்து சென்ற வேதனையால் டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.
    • இந்த நிலையில் மகேந்திரன் மன உளைச்சலில் இருந்து வந்தார்.

    கடலூர்:

    கடலூர் செம்மண்டல த்தை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 37) .டிரைவர். இவருக்கு திருமணம் ஆகி 8 வருடம் ஆகிறது. குழந்தை இல்லாததால் கடந்த 3வருடமாக மனைவி பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் மகேந்திரன் மன உளைச்சலில் இருந்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொ ண்டார். இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.
    • பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த திருவாமூர் சமத்துவ புரத்தை சேர்ந்தவர் தர்மசீலன் (வயது 25), கூலி தொழிலாளி. இவர் நேற்று இரவு 11 மணிக்கு பண்ருட்டியிலிருந்து சேலம் மெயின் ரோட்டில். தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். கொளப்பாக்கம் பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டு இருந்த போது முன்னால் சென்ற டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட வாலிபர் தர்மசீலன் 108 ஆம்புலன்ஸ் மூலம் பண்ரு ட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்து வமனைக்கு கொண்டு செல்லப்பட்ட தர்மசீலன் சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிரி ழந்தார். இது குறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இதில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட சிறுவர்களும் தூக்கி வீசப்பட்டனர்.
    • 2 பேரும் பிளஸ்-2 படித்து வருகிறார்கள் என்பது தெரியவந்தது.

    கடலூர்:

    பண்ருட்டி கும்பகோணம் சாலையில் பணிக்கன்குப்பம் சாலையில் போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே 2 சிறுவர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்களை நிறுத்த போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் முயற்சித்தார். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிளில் வந்த சிறுவர்கள் சப்-இன்ஸ்பெக்டர் மீது மோதினார்கள். இதில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட சிறுவர்களும் தூக்கி வீசப்பட்டனர். இதில் சப்-இன்ஸ்பெக்ட ர் சிவக்குமார், மோட்டார் சைக்கிளில் வந்த 2 சிறுவர்களும் பலத்த காயம டைந்தனர். அங்கு பணியில் இருந்த போக்குவரத்து போலீசார் 3 பேரையும் மீட்டு பண்ருட்டி அரசு மருத்துமனைக்கு சிகி ச்சைக்காக அனுமதித்தனர்.

    அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனு ப்பிவை க்கப்பட்டுள்ளனர். இது குறித்து பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் மோட்டார் சைக்கிளில் வந்த சிறுவர்கள் 2 பேரும் பிளஸ்-2 படித்து வருகிறார்கள் என்பது தெரியவந்தது. இவர்கள் போக்குவரத்து போலீசாருக்கு பயந்து வேகமாக சென்றதால் விபத்து ஏற்பட்டதா? அல்லது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை சிறுவர்கள் கொலை செய்ய முயற்சித்தார்களா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் பண்ருட்டி பகுதியே பரபரப்பாக காணப்படுகிறது.

    • காடாம்புலியூரில் அனுமதி இன்றி கள் இறக்கியவர் கைது செய்யப்பட்டார்.
    • போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரை பாண்டியன் மற்றும் போலீசார் பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர் வேலன் குப்பம் பகுதியில் தீவிர மதுவிலக்கு சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது வேலன் குப்பம் வடக்கு தெருவை சேர்ந்த விக்ரம் (22) என்பவர் அவருக்கு சொந்தமான நிலத்தில் உள்ள பனை மரத்தில் இருந்து கள் இறக்கி விற்பனை செய்தது தெரியவந்தது. உடனடியாக விக்ரமை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×