search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்   சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
    X

    தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.

    12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

    • ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் விதிமீறல்கள் என தெரிவிக்கப்பட்டு பணியா ளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது
    • 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    கடலூர்:

    தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் பயிர் கடன்கள் வழங்கப்படும் போது எம்.எல்.ஏ, எம்.பி தேர்தல் நேரங்களில் உறுப்பினர்களுக்கு அதிக அளவில் கடன் கொடுக்கும் வகையில் பல விதிமுறைகள் அதிகாரி களால் வாய்மொழியாக தளர்த்தப்படுகிறது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் விதிமீறல்கள் என தெரிவிக்கப்பட்டு பணியா ளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. ஆகையால் சங்க செயலாளர்கள் மற்றும் பணியாளர்கள் மீது எடுக்கப்ப ட்டுள்ள அனைத்து நடவடி க்கைகளையும் முழுமையாக விலக்கிக் கொள்ள வேண்டும். கடன் தள்ளுபடி அனுமதி க்கப்பட்ட பயிர் கடன், நகை கடன், மகளிர் சுய உதவி குழு கடன்கள் அனைத்திற்கும் உரிய தொகையை வட்டி இழப்பின்றி அனைத்து சங்கங்களுக்கும் வரவு வைக்கப்பட்டு சங்கங்களுக்கு ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை தீர்வு காணப்பட வேண்டும்.

    தவணை தவறிய நகைக்கடன் மீது ஏல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதில் ஏற்பட்டுள்ழ இழப்பு தொகைக்கு சங்க செயலாளர் மற்றும் பணியாளர்கள் பொறுப்பாக்கப்பட்டு ஓய்வு கால நிதி பயனை நிறுத்தி வைக்கும் நடவடிக்கையை உடனடியாக கைவிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் மாரிமுத்து, மண்டல இணைச் செயலாளர் சீனிவாசன், மாவட்டத் துணைத் தலைவர்கள் சாந்தகுமார், தாமோதரன், இணைச்செயலாளர்கள் வாசகி, உமா மகேஸ்வரி, மகளிர் அணி செயலாளர் லட்சுமி நாராயணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழுப்புரம் மாவட்ட செயலாளர் பாண்டுரங்கன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். இதில் நிர்வாகிகள் மற்றும் கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ளகோஷம் எழுப்பினார்கள். முடிவில் ஒன்றிய செயலாளர் ஜெயச்சந்திரன் நன்றி கூறினார்.

    Next Story
    ×