search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் மாநகராட்சி சார்பில்  தேவனாம்பட்டினம் சில்வர் கடற்கரையில் தூய்மை பணி
    X

    கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் தூய்மை செய்யும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி நேரில் ஆய்வு செய்து பார்வையிட்டார்.

    கடலூர் மாநகராட்சி சார்பில் தேவனாம்பட்டினம் சில்வர் கடற்கரையில் தூய்மை பணி

    • பொதுமக்கள்அதிகமாக வந்து செல்வதால் தேவனாம்பட்டினம் கடற்கரையில் அதிக அளவில் குப்பை அதிகரித்து வந்தது.
    • இன்று காலையில் கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரை பகுதியில் தூய்மை செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்

    கடலூர்:-

    கடலூரில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு முழு ஆண்டு தேர்வு முடிந்து தற்போது கோடை விடுமுறை தொடங்கியதை முன்னிட்டு தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் தங்கள் பிள்ளைகளுடன் கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரைக்கு நேரில் வந்து செல்கின்றனர். இதன் காரணமாக தற்போது அதிக அளவில் பொதுமக்கள் வந்து செல்வதால் தேவனாம்பட்டினம் கடற்கரையில் வழக்கத்தை விட அதிக அளவில் குப்பை அதிகரித்து வந்தன.

    இந்த நிலையில் கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா உத்தரவின் பேரில் மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலும் சுகாதார ஆய்வாளர் அப்துல் ஜாஃபர் முன்னிலையிலும் தூய்மை பணியாளர்கள் இன்று காலையில் கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரை பகுதியில் தூய்மை செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இதில் மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து பாதுகாப்பாக குப்பைகள் சேகரிக்கப்பட்டு கடலூர் வசந்தராயன் பாளையம் பகுதிக்கு கொண்டு சென்றனர். மேலும் ஏற்கனவே விடுமுறை நாட்களிலும் , விழா நாட்களிலும் டன் கணக்கில் குவிந்திருந்த குப்பைகளை மாநகராட்சி துப்புரவு ஊழியர்கள் மேயர் சுந்தரி ராஜா அறிவுறுத்தலின்பேரில் உடனடியாக அகற்றி சுத்தமாக வைத்து நடவடிக்கை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கதாகும்.

    Next Story
    ×