பண்ருட்டி அருகே கொத்தனார் தூக்கு போட்டு தற்கொலை

மணி (25), கொத்தனார். திருமணம் ஆகாதவர். மணி (25), இவர் திருத்துறையூர் - கயப்பாக்கம் செல்லும் சாலையில் உள்ள புளிய மரம் ஒன்றில் நைலான் கயிற்றால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து இவர் எதற்காக தூக்குபோட்டு இறந்தார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பண்ருட்டி அருகே  கொத்தனார் தூக்கு போட்டு தற்கொலை
Published on

கடலூர்:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த திருத்துறையூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் துளசிங்கம் மகன் மணி (25), கொத்தனார். திருமணம் ஆகாதவர். இவர் திருத்துறையூர் - கயப்பாக்கம் செல்லும் சாலையில் உள்ள புளிய மரம் ஒன்றில் நைலான் கயிற்றால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது பற்றி அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் புதுப்பேட்டை போலீசாருக்கு தகவல்கொடுத்தனர். புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இதுகுறித்து வழக்கு பதிவு செய்து இவர் எதற்காக தூக்குபோட்டு இறந்தார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com