என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லாரி மோதல்"

    • நிலை தடுமாறி சாலையின் நடுவே இருந்த தடுப்புக்கட்டையில்பயங்கர சத்தத்துடன் மோதியது.
    • சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது.

    கடலூர்:

    புதுவையில் இருந்து சேலத்திற்கு பண்ருட்டி வழியாக லாரி ஒன்றுஇரும்பு லோடு ஏற்றிக்கொண்டு நேற்று இரவு சென்று கொண்டிருந்தது. அந்த லாரி பண்ருட்டி திருவதிகை யூனியன் அலுவலகம் அருகே வந்த போது நிலை தடுமாறி சாலையின் நடுவே இருந்த தடுப்புக்கட்டையில்பயங்கர சத்தத்துடன் மோதியது. அதிஷ்டவசமாக லாரி டிரைவர், எதிரே வந்த வாகன ஓட்டிகள் காயமின்றி தப்பினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது. இரவு ரோந்து பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் சம்பவத்துக்கு விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்து இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×