என் மலர்
உள்ளூர் செய்திகள்

பண்ருட்டி அருகே மதில் சுவரில் மோதி முதியவர் பலி
- பண்ருட்டி அருகே மதில் சுவரில் மோதி முதியவர் பலியானார்.
- தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
கடலூர்:
பண்ருட்டி தாலுகா காடாம்புலியூர் பி.ஆண்டிகுப்பத்தை சேர்ந்தவர் கமலக்கண்ணன் (வயது 57). இவர் நேற்றிரவு 10 மணிக்கு மாம்பட்டு வினித் கார்டன் எதிரே மெயின் ரோட்டில் தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறி வினித் கார்டன் எதிரே உள்ள பள்ளத்தில் விழுந்து, மதில் சுவரில் மோதி சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிர் இழந்தார்.
இது பற்றி தகவலறிந்த காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரை பாண்டியன் வழக்கு பதிவு செய்து கமலக்கண்ணன் உடலை கைப்பற்றி பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்.
Next Story






