என் மலர்
உள்ளூர் செய்திகள்

இரட்டிப்பு பணம் தருவதாக மோசடி: நிதி நிறுவன இயக்குனர் மனைவி உள்பட மேலும் 2 பேர் கைது
- விழுப்புரம் மாவட்டம், திருவண்ணாமலை மாவட்டம், புதுவை மாநிலம் என 7 ஆயிரம் பேர் பணம் கட்டிவந்துள்ளனர்.
- 9 பேரை சேர்த்து மொத்தம் ரூ.55 லட்சம் பணத்தை கட்டியுள்ளனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் விநாயக புரத்தைச் சேர்ந்த மாயக் கிருஷ்ணன் அவரது மனைவி பிரபாவதி மற்றும் மஞ்சுளா, கவுதம், மதி வாணன், முருகன், வீரமணி, செந்தில்குமார், அன்பு ஆகியோர் சேர்ந்து கடந்த 2021 -ம் ஆண்டு த கிரேட் இந்தியா மார்கெட்டிங் கம்பெனி என்ற தனியார் நிதி நிறுவனம் ஒன்றை தொடங்கி நடத்தி வந்தனர். அதில் ரூ.50 ஆயிரம் செலுத்தினால் 10 மாதத்தில் ரூ.90 ஆயிரம் வழங்கப்படும்.ரூ.2லட்சம் செலுத்தினால் ரூ.3.60 லட்சம் வழங்கப்படும் என்று ஆசை வார்த்தைகளை கூறினர். இதனை நம்பி விழுப்புரம் மாவட்டம், திருவண்ணாமலை மாவட்டம், புதுவை மாநிலம் என 7 ஆயிரம் பேர் பணம் கட்டிவந்துள்ளனர். இதனை நம்பிய திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள வேளாந்தாங்கல் கிராமத்தை ேசர்ந்த மன்னுலிங்கம் அவருக்கு தெரிந்த 9 பேரை சேர்த்து மொத்தம் ரூ.55 லட்சம் பணத்தை கட்டியுள்ளனர்.
இதற்காக வாரந் தோறும் திண்டிவனத்தில் உள்ள அலுவலகத்தில் நடை பெறும் கூட்டத்தில் பங்கேற்று இந்த தவணைகளை செலுத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் மாயா கிருஷ்ணன் நடத்தி வந்த அலுவலகம் கடந்த நவம்பர் மாதம் திடீரென பூட்டப் பட்டது. அதன் பின்னர் நிதி நிறுவன உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் உள்பட 9 பேரும் தலைமறைவாகி விட்டனர். அப்போது தான் இரட்டிப்பு பணம் தருவகதாகக்கூறி ஆசை வார்த்தைகளை கூறி பல கோடி மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இது குறித்து மன்னு லிங்கம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதாவிடம் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்த போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவிட்டார். அதன்படி போலீசார் நடத்திய விசாரணையில், இவர்களைப் போன்று சுமார் 7 ஆயிரம் பேரிடம் ரூ.85 கோடி வரை பெற்றுக் கொண்டு தலைமறை வாகிவிட்டது தெரியவந்தது. இது குறித்து மாயா கிருஷ்ணன் உள்ளிட்ட 9 பேர் மீதும் விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் நிதி நிறுவன ஊழியர்கள் வீரமணி, செந்தில் குமார் ஆகியோரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
இதனிடையே தலைமறை வாக இருந்த நிதிநிறுவன நிர்வாக இயக்குனர் மாய கிருஷ்ணன் மனைவி பிரபா வதி (36)மாயகிருஷ்னன் சகோதர் அன்பு (50) இரு வரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 2பேரும் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்டு சிறையில் அடைக் கப்பட்டனர். மேலும் நிதிநிறு வன மேலான் இயக்குனர். மாயகிருஷ்ணன் உள்ளிட்ட மற்ற 5 பேரை தேடி தனிப்படை போலீசார் சென்னை சென்றுள்ளனர். அவர்களும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.






