என் மலர்
கடலூர்
- சண்முகம் தலைமை தபால் நிலையம் எதிரே உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வந்தார்.
- நேற்று நள்ளிரவு ஆட்டோ ஸ்டாண்ட் அருகே சண்முகம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடலூர்:
கடலூர் அடுத்த மேல்பட்டாம்பாக்கத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி மகன் சண்முகம் (45). ஆட்டோ டிரைவர். இவர், கடலூர் தலைமை தபால் நிலையம் எதிரே உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வந்தார். மேலும் அவர் தனது குடும்பத்தை பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வீட்டுக்கு செல்லாமல் அந்த பகுதியிலேயே படுத்து உறங்குவார். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு ஆட்டோ ஸ்டாண்ட் அருகே சண்முகம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, சண்முகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சண்முகம் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குடிநீர் இணைப்பு குழாய்களில் பித்தளையிலான கான்கள் பொருத்தப்பட்டிருந்து.
- அனைவரது வீடுகளில் இருந்த கான்கள் காணாமல் போனது தெரியவந்தது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த கோடங்குடி கிராமத்தில் புதிய காலனி, பழைய காலனியில் உளள 300-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கும் கடந்த 2015-ஆம் ஆண்டு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது. இந்த குழாய்களின் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த குடிநீர் இணைப்பு குழாய்களில் பித்தளையிலான கான்கள் பொருத்தப்பட்டிருந்து. இந்த இணைப்புகள் அனைத்தும் அவரவர் வீடுகளின் வாசலில் இருக்கும்.
இந்நிலையில், இன்று காலையில் குடிநீர் விநியோகிக்கப்பட்டது. அப்போது அனைத்து வீடுகளில் இருந்த குழாய்களில் இருந்து நீர் வெளியானது. இதனால் குழாய் அருகில் சென்று பார்த்த போது குடிநீர் குழாய் இணைப்பில் போடப்பட்டிருந்த பித்தளை கானை காணவில்லை. இதனை அக்கம் பக்க வீட்டில் இருந்தவர்களிடம் கூறும் போது, அனைவரது வீடுகளில் இருந்த கான்கள் காணாமல் போனது தெரியவந்தது. குடிநீர் குழாயில் இருந்த பித்தளை கான்களை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நேற்று இரவு திருடிச் சென்றுள்ளனர். இதனையடுத்து கோடங்குடி கிராம மக்கள் மாரியம்மன் கோவில் அருகில் ஒன்று கூடி இது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
- நெல்லிக்குப்பம் ரோடு குறவன்பாளையம் அருகில் உள்ள தனியார் ரைஸ் மில்லில் அதிகாரிகள் அதிரடியாக சோதனையிட்டனர்.
- ரைஸ் மில்லின் உரிமையாளர் தாட்சாயணியிடம் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்தனர்.
கடலூர்:
ரேஷன் கடைகளின் மூலம் வழங்கப்படும் இலவச அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கடலூர் மாவட்ட உணவு பொருட்கள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது.
இதனையடுத்து கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலர் உதயகுமார், தனி தாசில்தார் பூபாலச்சந்திரன், பறக்கும் படை அரவிந்தன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன், ஏழுமலை மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது நெல்லிக்குப்பம் ரோடு குறவன்பாளையம் அருகில் உள்ள தனியார் ரைஸ் மில்லில் அதிரடியாக சோதனையிட்டனர். இதில் 1600 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்ததை கண்டறிந்தனர். இதையடுத்து ரைஸ் மில்லின் உரிமையாளர் தாட்சாயணியிடம் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்தனர். மேலும், பதுக்கி வைத்திருந்த 1600 கிலோ ரேஷன் அரிசியினை பறிமுதல் செய்தனர்.
- முக்கிய திருவிழாவான தீமிதி திருவிழா நேற்று மாலை நடைபெறறது.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வேண்டுதல் நிறைவேறவும் நேர்த்திக்கடனுக்காகவும் தீமிதித்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகையில் தர்மராஜா கோவில் உள்ளது. இது மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் உள்ள திரவுபதி அம்மனுக்கு ஆண்டுதோறும் ஆனி மாதம் பிரம்மோற்சவ திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு பிரம்மோற்சவ திருவிழா கடந்த 19-ம் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து தினமும் மூலவர், உற்சவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இரவு வீதி உலா காட்சி ஆகியவை நடைபெற்று வந்தது. இதன் முக்கிய திருவிழாவான தீமிதி திருவிழா நேற்று மாலை நடைபெறறது. இதில் ஏராளமான பெண்கள் குழந்தைகள் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வேண்டுதல் நிறைவேறவும் நேர்த்திக்கடனுக்காகவும் தீமிதித்தனர்.இதற்கான ஏற்பாடுகளை தர்மகர்த்தாக்கள் கிராம பொதுமக்கள் இளைஞர்கள் சிறப்பாக செய்தனர்.
- மரவள்ளி பயிரிட்டுள்ள வயல்களை களஆய்வு மேற்கொன்டனர்.
- முறையான நீர்மேலாண்மை, களை நிர்வாகம் செய்து வயலினை சுற்றி சுத்தமாக வைத்து கொள்ளவேண்டும்.
கள்ளக்குறிச்சி:
ரிஷிவந்தியம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளிப்பட்டு, சித்தேரிபட்டு, வேளானந்தல், சிங்காரப்பேட்டை, சூளாங்குறிச்சி, ஆகிய வருவாய் கிராமத்தில் 1200 ஏக்கர் பரப்பளவு மரவள்ளி பயிர் நடவு தோட்டத்தில் செம்பேன் பாதிப்புக்கு உள்ளான வயலினை ரிஷிவந்தியம் வட்டார, தோட்டகலை உதவி இயக்குனர் முருகன், தோட்டகலை அலுவலர் ஷோபனா, உதவி தோட்டக்கலை அலுவலர் ராஜேஷ் ஆகியோர் கொண்ட குழுவினர் ரிஷிவந்தியம் சுற்றுவட்டார மரவள்ளி பயிரிட்டுள்ள வயல்களை களஆய்வு மேற்கொன்டனர். இந்த ஆய்வில் நமது மாவட்டத்தில் கடந்த 2 மாதமாக தொடர்ந்து அனல் காற்றுடன் கூடிய அதிகப்படியான வெப்பம் நிலவுவதாலும் மரவள்ளி பயிரில் செம்பேன் பூச்சிகளின் தாக்குதல் இருப்பது தெரிய வந்தது. பலத்த மழைபெய்து வரும்போது பூச்சிகளின் தாக்குதல் தானாகவே குறைந்துவரும் இருப்பினும் முறையான நீர்மேலாண்மை, களை நிர்வாகம் செய்து வயலினை சுற்றி சுத்தமாக வைத்து கொள்ளு ம்பட்சத்தில் செம்பேன் பூச்சிகளின் பாதிப்பு குறையும் இல்லையென்றால் செம்பேன் பூச்சி பாதிப்பு ஆரம்ப கட்டத்தில் இருக்கும் போது இரசாயண பூச்சி மருந்துகளான 1 லிட்டர் தண்ணிருக்கு நனையும் கந்தகம் தூள் 3 கிராம் (அ) டைகோபால் 2 மில்லி வீதம் 15 நாட்கள் இடைவெளியில் 2 முறை தெளித்து பூச்சிகளை கட்டுபடுத்தலாம். பூச்சியின் தாக்குதல் அதிகமாக இருக்கும் பட்சத்தில் 1 லிட்டர் தண்ணிருக்கு பெனசோகன் 2 மில்லி அல்லது ப்ரோபெர்கைட் 2 மில்லி என்ற வீதத்தில் 15 நாட்கள் இடைவெளியில் 2 முறை தெளித்து பூச்சிகளை கட்டுபடுத்தி மகசூலை அதிகபடுத்தலாம் என இக்குழுவினர் விவசாயி களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர். மேலும் விவரங்கள் அறிய ரிஷிவந்தியம் வட்டாரம் அந்த அந்த பகுதி உதவி தோட்டகலை அலுவ லர்களை அணுகுமாறு கேட்டுகொண்டுள்ளனர்.
- தமிழ்நாடு குடிமை பொருள் வழங்கல் துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
- வாராவாரம் குடிமை பொருள் வழங்கல் துறையின் இணையதளத்தில் பதிவிட வேண்டும்.
கடலூர்:
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை கடுமையாக ஏறி வருகிறது. இதையடுத்து மளிகை, பருப்பு வகைகள், கோதுமை, காய்கறி போன்றவைகளை பதுக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு குடிமை பொருள் வழங்கல் துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதன்படி, துவரம் பருப்பு, கடலை பருப்பு, பாசி பருப்பு, கோதுமை போன்றவைகளின் வணிகர்கள் தங்களிடம் உள்ள இருப்பு விவரங்களை அரசின் இணையதளத்தில் பதிவிட வேண்டும். வாராவாரம் வெள்ளிக்கிழமை இதனை பதிவிட வேண்டும்.
குடிமை பொருள் வழங்கல் துறையினரால் ஆய்வு மேற்கொள்ளப்படும் போது, இதில் வித்தியாசம் வரக்கூடாது. இதனை மீறி யாரேனும் பதுக்கி அதிக விலைக்கு விற்க முயற்சித்தால் அவர்களின் மீது 1955-ம் ஆண்டு வெளியிடப்பட்ட உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு உணவு பொருள் வியாபாரிகள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினரும், கடலூர் மாவட்ட சேம்பர் ஆப் காமர்சின் இணை செயலாளருமான என். செல்லபாண்டியன் கூறியதாவது;-
நாடு முழுவதும் பொதுமக்களின் உணவுத் தேவை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அதே சமயம் விளைச்சல் குறைவதால், பொருட்களின் பற்றாக்குறை உருவாகிறது. இதனால் வியாபாரிகள் அனைவரும் தங்களிடம் உள்ள பருப்பு வகைகள் மற்றும் கோதுமையின் இருப்பு விபரத்தை வாராவாரம் குடிமை பொருள் வழங்கல் துறையின் இணையதளத்தில் பதிவிட வேண்டும். கடந்த ஆண்டு எண்ணெய் தட்டுப்பாடு நிலவியபோது, தங்களிடம் உள்ள இருப்புகளை பதிவு செய்ததை போல இதனையும் பதிவு செய்ய வேண்டும். எனவே, மொத்த வியாபாரிகள், மில் உரிமையாளர்கள் மற்றும் பெரு மற்றும் சிறு வணிகர்கள் இதனை பின்பற்றி அரசின் விதிகளை பின்பற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்த உத்தரவு வரும் மார்ச் மாதம் 2024-ம் ஆண்டு வரையில் நீடிக்கும்.
மேலும், எதிர்வரும் மாதங்களில் பண்டிகைகள் அதிகளவில் வரும் என்பதால் அரசு இது போன்ற நடவடிக்கைகளை எடுக்கிறது. இதற்கு வியாபாரிகள் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும். மேலும், இது தொடர்பாக தங்களுக்கு ஏதேனும் தகவல் வேண்டுமெனில், கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள குடிமை பொருள் வழங்கல் துறை அதிகாரிகளை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
- பஞ்சமி தினத்தன்று சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம்.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கடலூர்:
திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் வராகி அம்மனுக்கு பஞ்சமி தினத்தன்று சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். தேய்பிறை பஞ்சமி தினமான நேற்று பஞ்சமி தின சிறப்பு வழிபாடு நடந்தது.
இதனை முன்னிட்டு வராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை விசேஷ பூஜை சிறப்பு அலங்காரம் ஆகியவை செய்யப் பட்டு மகா தீபாரதனை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முடிவில் பக்தர்களுக்கு அருள் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை உற்சவ தாரர்கள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்தனர்.
- அதிகாரிகள் சரியான முறையில் நடவடிக்கை எடுக்கவில்லை என தொடர்ந்து குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
- உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
கடலூர்:
கடலூர் அடுத்த நடுவீரப்பட்டு எஸ். புதுக்கு ப்பத்தில் குட்டையாண்டி குளம் உள்ளது. இந்தக் குளம் தனி நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் சரியான முறையில் நடவடிக்கை எடுக்கவில்லை என தொடர்ந்து குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இந்நிலையில் இன்று காலை எஸ்.புதுக்குப்பம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நடுவீரப்பட்டு - சத்திரம் சாலையில் திடீரென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோஷங்களை எழுப்பினர்.
தகவல் அறிந்த நடுவீரப்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பண்ருட்டி தாசில்தார் ஆனந்தி மற்றும் வருவாய் துறையினரும் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அளவீடு செய்து குளத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதற்கு பதில் அளித்த தாசில்தார் ஆனந்தி உங்கள் கோரிக்கைகள் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதனை தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் காரணமாக ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
- ராஜதுரை ( வயது 34 ) என்பவரை கைது செய்து விசாரித்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
- 3 மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படு த்தப்பட்டது.
கடலூர்:
பண்ருட்டி அடுத்த வரிசாங்குப்பம்ரங்கநாதன்எமகன்செல்வன். இவர் கடந்த 30-ந் தேதி பண்ருட்டி 4 முனை சந்திப்பு அருகே உள்ள காய்கறி கடையில் காய்கறி வாங்குவதற்காக தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு காய்கறி வாங்கிவிட்டு திரும்பி வந்து பார்க்கும்போது தனது மோட்டார் சைக்கிள் திருடு போனது தெரியவந்தது. இது சம்பந்தமாக பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் செல்வம் அளித்த புகாரின் பேரில் பண்ருட்டி குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெ க்டர் தங்கவேல் மற்றும் போலீசார் ஆனந்த், ராஜி, அன்பரசன், கணேசமூர்த்தி, ஹரிஹரன் ஆகியோர் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. யை ஆய்வு செய்து கொட்டிகோனா ன்குப்பத்தை சேர்ந்த பரமசிவன் மகன் ராஜதுரை ( வயது 34 ) என்பவரை கைது செய்து விசாரித்து அவரிடம் இருந்து திருட்டு போன மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
அவரிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் குறிஞ்சிப்பாடி மாரிய ம்மன் கோவில் அருகே 2 மோட்டார் சைக்கிள் திருடியதையும் ஒப்புக்கொண்டார்.அவரிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படு த்தப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
- மாவட்ட செயலாளர்கள் கலந்தாய்வு கூட்டத்தில் அன்புமணி எச்சரிக்கை
- மாவட்ட செயலாளர்கள் கலந்தாய்வு கூட்டத்தில் அன்புமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடலூர்:
என்.எல்.சி. நிறுவன சுரங்கப்பணிகளினால் நெய்வேலியைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துவதுடன், நிலத்தடி நீர், சுற்றுச்சூழல், விவசாயம் ஆகியவை பெரும் பாதிப்பு ஏற்படுவதாக பா.ம.க.சார்பில் குற்றம்சாட்டி, இதற்காக நடைபயணம், கருத்தரங்கம், ஆர்ப்பாட்டங்கள் என பல கட்ட எதிர்ப்புகளை தெ ரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், டாக்டர்.அன்புமணிராமதாஸ் ஒருங்கிணைந்த கடலுார் மாவட்ட செயலாளர்கள் நெய்வேலி கோ.ஜெகன், கடலுார் முத்துகிருஷ்ணன், விரு த்தாசலம் கார்த்திகேயன், புவனகிரி செல்வ.மகேஷ் ஆகியோரை சென்னைக்கு நேரில் அழைத்து ஆலோசனை செய்து. மாவட்ட செயலாளர்களுடன் சென்றி ருந்த விவசாயிகளிடம் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்தார். அப்போது என்.எல்.சி சுரங்க நிர்வாகத்தினர் அவ்வப்போது மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினரோடு நிலம் கையகப்படுத்தும் முயற்சியில் ஈடுபவதாக தெரிவித்தனர். அதற்கு அன்புமணிராமதாஸ் இது போன்று செயல்களில் என்.எல்.சி. ஈடுபவதை நிறுத்திக் கொள்ள வேண்டுமென்றும், இதனை மீறி செயல்பட்டால், தானே நேரில் வந்து போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபட நேரிடும் எனவும், இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால், கடலுார் மாவட்ட நிர்வாகம் தான் பொறுப்பு எனக்கூறியும், இது குறித்து மாவட்ட கலெக்டருக்கும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தெரிவிக்கவும் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக ஒருங்கிணைந்தபா.ம.க. மாவட்ட செயலாளர்கள் மாவட்டகலெக்டரையும், போலீஸ் சூப்பிரண்டையும் சந்தித்து அன்புமணியின் கோரிக்கையை வலியுறுத்த உள்ளனர். இதில் கடலுார் வடக்கு மாவட்ட வன்னியர் சங்க தலைவர் ராஜேந்திரன், பொருளாளர் கார்த்திகேயன், என்ஜினீயர் வீர.அரவிந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- கடலூர் மாவட்டத்தில் 146 டாஸ்மாக் கடைகள் இருந்து வந்த நிலையில் தமிழகம் முழுவதும் 500 கடையில் மூடப்பட்ட நிலையில் கடலூர் மாவட்டத்தில் 11 கடைகள் மூடப்பட்டன.
- டாஸ்மாக் கடைகளில் விலை பட்டியல் பலகை வைத்து அரசு விதிகளுக்கு உட்பட்டு மது பாட்டில்கள் விற்பனை செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது.
கடலூர்:
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகமாக வாங்கி வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வந்தன.
மேலும் மதுவால் தமிழகம் சீரழிந்து வருகிறது என அனைத்து கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இந்த நிலையில் டாஸ்மாக் கடைகளில் விலை பட்டியல் பலகை வைக்க வேண்டும் என அரசு அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது. கடலூர் மாவட்டத்தில் 146 டாஸ்மாக் கடைகள் இருந்து வந்த நிலையில் தமிழகம் முழுவதும் 500 கடையில் மூடப்பட்ட நிலையில் கடலூர் மாவட்டத்தில் 11 கடைகள் மூடப்பட்டன.
கடலூர் மாவட்டம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் விலை பட்டியல் பலகை வைத்து அரசு விதிகளுக்கு உட்பட்டு மது பாட்டில்கள் விற்பனை செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது. கடலூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் விலை பட்டியல் பலகை வைக்கப்பட்டுள்ளதா? கூடுதல் விலைக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்பதனை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் அருண் தம்புராஜ் அதிரடியாக உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி நேற்று மாலை கடலூர் பஸ் நிலையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு தலைமையில் கோட்ட கலால் அலுவலர் மகேஷ் மற்றும் அதிகாரிகள் திடீரென்று நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது டாஸ்மாக் கடைகளில் மது விலை குறித்து விலைப்பட்டியல் பலகை வைக்கப்பட்டுள்ளதா? அங்கு பணிபுரியும் விற்பனையாளர்கள் கூடுதல் விலைக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்கிறார்களா? என்பதை அதிரடியாக சோதனை செய்தனர்.
மேலும் அங்கு திரண்டு இருந்த மது பிரியர்கள் மற்றும் போதையில் இருந்த மது பிரியர்களிடம் அதிகாரிகள் கூடுதல் விலைக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என விசாரணை நடத்தினர். அப்போது அங்கு இருந்த மதுபிரியர்கள், மது பாட்டில் வாங்குவதற்கு காத்துக் கொண்டிருக்கிறோம். இன்னும் சற்று நேரத்தில் கூட்டம் அதிகரித்து காணப்படும். இது போன்ற சமயத்தில் நேரத்தை வீணாக்காதீர்கள் நாங்கள் மதுபாட்டில் உடனடியாக வாங்கிச் செல்ல வேண்டும். கூடுதல் விலைக்கு மது பாட்டில் விற்பனை செய்யப்படுவதை திருத்த போகிறீர்களா? என தொடர்ந்து கேள்வி எழுப்பி அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தினர். மீண்டும் அதிகாரிகள் விசாரணை தொடர முயன்றபோது நாங்கள் உடனடியாக மது பாட்டில்கள் வாங்க வேண்டும் எங்களை தொந்தரவு செய்யாதீர்கள் என தெரிவித்தனர். அப்போது மனக்குமுறலுடன் அவர்கள் நலனுக்காக தானே விசாரணை செய்ய வந்தோம். ஆனால் இங்கு தலைகீழாக அனைத்து செயல்களும் உள்ளன என அதிகாரிகள் கூறிக் கொண்டு சென்றனர்.
- கடந்த சில தினங்களாக தக்காளியின் விலை 88 ரூபாய் முதல் 92 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
- சாம்பார் வெங்காயம், இஞ்சி உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் கடுமையாக உயர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
கடலூர்:
இந்தியாவில் தக்காளி விலை கடுமையாக உயர்ந்த காரணத்தினால் அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் சென்னை பகுதியில் 130 ரூபாய் வரை தக்காளி விலை விற்பனை செய்யப்பட்டு வந்ததால் அரசு தானாக முன்வந்து ரேஷன் கடைகளில் 60 ரூபாய்க்கு தக்காளி விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு தற்போது விற்பனை நடைபெற்று வருகின்றது. மேலும் கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு வடமாநில பகுதிகளில் தொடர் மழை காரணமாக தக்காளியின் விலை அதிகரித்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தக்காளியின் விலை 88 ரூபாய் முதல் 92 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதில் மொத்த வியாபாரம் மற்றும் சில்லறை வியாபார கடைகளில் மாறுபட்ட விலையில் தக்காளி விலை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இது மட்டுமின்றி சாம்பார் வெங்காயம், இஞ்சி உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் கடுமையாக உயர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிப்படைந்து வருவதோடு தக்காளியை மட்டும் மிக குறைவாக வாங்கி சென்றனர்.
இந்த நிலையில் இன்று காலை கடலூர் முதுநகர் சாலக்கரை பகுதியில் ராஜேஷ் என்கின்ற வியாபாரி அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுப்பது போல் ஒரு கிலோ தக்காளி 20 ரூபாய் என அறிவித்து தக்காளி விற்பனையை தொடங்கினார். இதனை பார்த்த இல்லத்தரசிகள் மற்றும் பொதுமக்கள் திரண்டு வந்து கடையில் போட்டி போட்டுக் கொண்டு கிலோ 20 ரூபாய்க்கு தக்காளியை வாங்கி சென்றனர். மேலும் ஒரு நபருக்கு ஒரு கிலோ என்ற அடிப்படையில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த தகவல் காட்டு தீ போல் பரவியதால் பொதுமக்கள் ஏராளமானோர் கடை முன்பு திரண்டு தக்காளி வாங்கி சென்றனர். இது குறித்து வியாபாரி ராஜேஷ் கூறுகையில்,
வட மாநில பகுதியில் தொடர் மழை காரணமாக தக்காளி விளைச்சல் குறைந்த காரணத்தினால் கடுமையாக விலை உயர்ந்து உள்ளது. இதன் காரணமாக தினந்தோறும் பொதுமக்கள் 50 கிராம், 100 கிராம் என்ற அளவிற்கு மட்டுமே தக்காளி வாங்கி பயன்படுத்தக்கூடிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். வட மாநிலத்தில் இருந்து ஒரு கிலோ 60 ரூபாய்க்கு தக்காளி வாங்கிக்கொண்டு இங்கு 20 ரூபாய்க்கு சேவை நோக்கத்துடன் மக்களுக்கு விற்பனை செய்து உள்ளேன். இன்று காலை 600 கிலோ தக்காளி வரவழைத்த நிலையில் பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கியதால் தீர்ந்து விட்டன. மேலும் வியாபாரிகள் பொதுநலத்துடன் இதுபோன்று விலை ஏற்றத்தின் போது விலையை குறைத்து கொடுத்து உதவ வேண்டும் என்றார்.
இந்த நிலையில் கடலூர் பகுதியில் ஒரு கிலோ தக்காளி 20 ரூபாய்க்கு விற்பனையான சம்பவம் பொதுமக்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.






