என் மலர்
உள்ளூர் செய்திகள்

பண்ருட்டி அருகே கல்லூரி மாணவன் மீது தாக்குதல்
- பணிக்கன்குப்பம் கிழக்கு தெருவில் உள்ள பழைய வீட்டிற்கு சென்றுள்ளார்.
- ஆத்திரமடைந்த அவர்கள் ரீகனை மண்வெட்டியால் தாக்கினர்.
கடலூர்:
பண்ருட்டி அடுத்த பணிக்கண்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ராயப்பன், மைக்கேல்லூர்து சாமி இருவரும் அண்ணன், தம்பிகள். இவர்களுக்குள் வீட்டு மனை சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்தது. நேற்று மாலை ராயப்பன் மகன் லூர்து மரிய ரீகன் (வயது 18). கல்லூரி மாணவர். பணிக்கன்குப்பம் கிழக்கு தெருவில் உள்ள பழைய வீட்டிற்கு சென்று ள்ளார். அங்கு இவரது வீட்டிலிருந்த குடிநீர் குழாயை மைக்கேல்லூர்து சாமி மற்றும் அவரது மகன்கள் சேதப்படு த்தியதாக கூறப்படுகிறது.
இதனை ரீகன் தட்டி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் ரீகனை மண்வெட்டியால் தாக்கினர். இதனால் படுகாயம் அடைந்த ரீகன் பண்ருட்டி அரசு ஆஸ்ப த்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






