என் மலர்
உள்ளூர் செய்திகள்

குள்ளஞ்சாவடி அருகே கோவில் உண்டியலை உடைத்து திருட்டு
- கோவில் மண்டபத்தில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
- போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கடலூர்:
குள்ளஞ்சாவடி அருகே இடங்கொண்டான்பட்டு கிராமத்தில் கன்னியம்மன் கோவில் உள்ளது. இக்கோ வில் பூசாரி சுரேஷ், நேற்று முன்தினம் இரவு வழிபாடு முடித்து கோவிலை பூட்டிக் கொண்டு சென்றார். நேற்று காலை கோவிலை திறந்து உள்ளே சென்றார். அப்போது கோவில் மண்ட பத்தில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது தொடர்பாக ஊர் பிரமுகர்களுக்கு தகவல் கொடுத்தார். தொடர்ந்து ஊர் பிரமுகர்கள் குள்ளஞ் சாவடி போலீசாருக்கு தகவல் கொடுத்து நேற்று காலை 10 மணியளவில் புகாரளித்தனர்.
புகாரின் மீது குள்ளஞ் சாவடி போலீசார் நட வடிக்கை ஏதும் எடுக்க வில்லை. இன்ஸ்பெக்டரோ, சப்- இன்ஸ்பெக்டரோ கோவிலுக்கு வந்து விசா ரணை நடத்தவில்லை. இது தொடர்பாக போலீசாரை கேட்டால், புகார் கொடுத்து விட்டீர்கள் அல்லவா? கொள்ளையர்களை பிடித்தால் கூறுவோம் என்று பதில் கூறுவதாக ஊர் பிரமுகர்கள் புலம்புகின்றனர். மேலும், இந்த கோவிலின் கும்பாபிஷேகம் கடந்த ஆண்டு செப்டம்பரில் நடை பெற்றது. அது முதல் கோவி லின் உண்டியல் திறக்கப்பட வில்லை. இதனால் பக்தர்கள் செலுத்திய காணிக்கை ரூ.1 லட்சத்திற்கு மேல் உண்டி யலில் இருந்திருக்கும் என்றும் ஊர் பிரமுகர்கள் கூறினர். எனவே, கோவில் உண்டி யலை உடைத்து கொள்ளை யடித்தவர்களை பிடிக்க குள்ளஞ்சாவடி போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.






