என் மலர்tooltip icon

    கடலூர்

    • கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட அனைத்து மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் இந்த விலைவாசி உயர்வை சரிசெய்ய முடியாமல் திண்டாடி வந்தனர்.
    • கடலூரில் 1 கிலோ தக்காளி 20 ரூபாய்க்கு விற்பனை செய்ததும் அரங்கேறியது.

    கடலூர்:

    தமிழகம் முழுவதும் சில நாட்களுக்கு முன்பு தக்காளி விலை யாரும் எதிர்பாராத வகையில் கிடுகிடுவென அதிகரித்தது. இதனால் இல்லத்தரசிகள் அனைவரும் என்ன செய்வதென ெதரியாமல் திண்டாடி வந்தனர். இதனையடுத்து தக்காளி விலை உயர்வை தொடர்ந்து பழங்கள், காய்கறிகள் உள்பட அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்தது. இதனால் குறிப்பாக கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட அனைத்து மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் இந்த விலைவாசி உயர்வை சரிசெய்ய முடியாமல் திண்டாடி வந்தனர். தக்காளி விலையை கட்டுப்படுத்த கடலூரில் 1 கிலோ தக்காளி 20 ரூபாய்க்கு விற்பனை செய்ததும் அரங்கேறியது. கடலூரில் மாவட்டத்தில் இன்று காய்கறிகளின் விலைபட்டியல் வருமாறு:-

    மிளகாய் ரூ. 80, வெங்காயம் ரூ. 24, தக்காளி ரூ. 88, உருளை ரூ.20, பல்லாரி ரூ.26, சின்ன வெங்காயம் ரூ. 90, கேரட் ரூ. 46, பீன்ஸ் ரூ. 95, கோஸ் ரூ.20, சவுசவ் ரூ.26, பீட்ரூட் ரூ. 35, இஞ்சி ரூ.255, முள்ளங்கி ரூ. 22, கத்தரிக்காய் ரூ.50, வெண்டை ரூ.30, கோஸ் ரூ.20, குடைமிளகாய் ரூ.65, பஜ்ஜிமிளகாய் ரூ.60, காளிபிளவர் ரூ. 30, நூக்கோல் ரூ. 80, அவரைக்காய் ரூ.40, மாங்காய் ரூ.22, கருணைகிழங்கு ரூ.50, முருங்கை ரூ. 35, சேம்பு ரூ. 45, பிடிகருணை ரூ. 40, பாகற்காய் ரூ. 50, புடலை ரூ. 20, சுரக்காய் ரூ. 20, சுவிட்கான் ரூ. 22.

    • செந்தில் குமாருக்கு மனைவி மற்றும் 8 வயதில் ஜெயஸ்ரீ என்ற மகள் இருந்தார்.
    • மணலில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி எதிர்பாராத விதமாக அங்கு இருந்த தண்ணீரில் விழுந்தார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி ராமநத்தம் அருகே தட்சூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில் குமார். ஆட்டோ டிரைவர். இவருக்கு மனைவி மற்றும் 8 வயதில் ஜெயஸ்ரீ என்ற மகள் இருந்தார். ஜெயஸ்ரீ அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 2-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று செந்தில் குமார் மற்றும் இவரது மனைவி வேலைக்காக வெளியில் சென்றுவிட்டனர். இதனையடுத்து வேலைக்கு சென்ற செந்தில்குமார் மனைவி வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டிலிருந்த மகள் ஜெயஸ்ரீயை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பல இடங்களில் தேடினார். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

    செந்தில்குமார் அதே பகுதியில் புதியதாக வீடு ஒன்று கட்டிவருகிறார். உடனே அங்கு சென்று ஜெயஸ்ரீயை தேடினார். அப்போது அந்த வீட்டில்கழிவு நீர் தொட்டி கட்டி அதில் தண்ணீர் நிரப்பப்பட்டு இருந்தது. வீட்டின் அருகே வேலைக்காக மணல் கொட்டி வைக்கப்பட்டு இருந்தது. அந்த மணலில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி எதிர்பாராத விதமாக அங்கு இருந்த தண்ணீரில் விழுந்து கிடந்தார்.

    இதை பார்த்த ஜெயஸ்ரீயின் தாய் அருகில் இருந்தவர்களின் உதவியுடன் ஜெயஸ்ரீயை மீட்டு தண்ணீரில் விழுந்ததால் மயக்கத்தில் இருக்கலாம் என்று ராமநத்தம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு ஜெயஸ்ரீயை பரிசோதித்த டாக்டர் ஜெயஸ்ரீ ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ராமநத்தம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஜெயஸ்ரீ உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிகிச்சை பெற்று வந்த ரகுபதி நேற்று முன்தினம் இரவு இறந்தார்.
    • சாரங்கபாணி, ராஜாமணி, அனிதா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் நெய்வேலி அடுத்த வடக்குத்து கிராமத்தில் வசிப்பவர் விஸ்வநாதன். இவரது தம்பி சாரங்கபாணி. இவ்விரு குடும்பத்தாருக்கு இடையே சில தினங்களுக்கு முன்பாக ஏற்பட்ட தகராறில், விஸ்வநாதன், அவரது மனைவி கஸ்தூரி, மகன் ரகுபதி, மருமகள் வைதேகி ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இவர்கள் குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பான புகாரின் பேரில் சாரங்கபாணி, அவரது மனைவி ராஜாமணி, மகன்கள் உதயசூரியன், ரஞ்சினிகுமார், மருமகள்கள் அனிதா, பரிமளா ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியல் சிகிச்சை பெற்று வந்த ரகுபதி (எலக்ட்ரீசியன்) நேற்று முன்தினம் இரவு இறந்தார். இதனைத் தொடர்ந்து போலீசார், இந்த வழக்கினை கொலை வழக்காக மாற்றினர். இந்த வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்ய வலியுறுத்தி ரகுபதியின் உறவினர்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் குற்றவாளிகளை விரைவில் கைது செய்வதாக உறுதியளித்தனர்.

    அதன்படி, சாரங்கபாணி, ராஜாமணி, அனிதா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள உதயசூரியன், ரஞ்சினிகுமார், பரிமளா ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். தலைமறைவாக உள்ளவர்களின் செல்போன் எண்ணின் டவர்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். நெய்வேலி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சாரங்கபாணி உறவினர் வீடுகளில் இரவு நேரங்களில் நெய்வேலி போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். அவர்கள் நெய்வேலியை விட்டு தப்பிச் செல்லமுடியாதவாறு போலீசார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • வீராணம் ஏரிக்கு வடவாறு வழியாக விநாடிக்கு 175 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
    • சென்னை குடிநீருக்கு நேற்று மட்டும் 50 கனஅடி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் தினந்தோறும் 30 கன அடி தண்ணீர் அனுப்பப்படுகிறது.

    காட்டுமன்னார்கோவில்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் லால்பேட்டையில் உள்ளது வீராணம் ஏரி. இது கடலூர் மாவட்ட மிகப்பெரிய நீராதாரம் ஆகும்.

    இந்த ஏரி மூலம் கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பகுதிகளான காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், புவனகிரி, வட்டங்களில் 44 ஆயிரத்து 856 ஏக்கர் பாசனம் பெறுகிறது. ஏரியின் முழு கொள்ளளவு 47.50 அடி ஆகும். இந்த வீராணம் ஏரியில் இருந்து தொடர்ந்து சென்னை குடிநீருக்கு தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் கடும் வெயிலால் ஏரிக்கு தண்ணீர் வரத்து இல்லாததால் ஏரியில் நீர் மட்டம் குறைந்தது.

    இதனையடுத்து கடந்த சில நாட்களாக டெல்டா மாவட்டத்தில் மழை மற்றும் மேட்டூர் தண்ணீர் கொள்ளிடம் ஆறு வழியாக கீழணைக்கு வருகிறது. வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரத்து வந்து கொண்டிருக்கிறது. இதனால் ஏரியின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. தற்போது ஏரியின் நீர் மட்டம் 42.50 அடியாக உள்ளது.

    வீராணம் ஏரிக்கு வடவாறு வழியாக விநாடிக்கு 175 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சென்னை குடிநீருக்கு நேற்று மட்டும் 50 கனஅடி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் தினந்தோறும் 30 கன அடி தண்ணீர் அனுப்பப்படுகிறது. இந்த ஏரியில் இருந்து அதனை சுற்றியுள்ள விவசாய பாசன வசதிக்கு தண்ணீர் திறப்பது பற்றி விவசாயிகள் கூட்டம் நடத்தி அவர்கள் தெரிவித்த பின்னர் தண்ணீர் திறக்கப்படும் என அதிகாரிகள் கூறினர். மேட்டூரில் இருந்து தண்ணீர் வரத்து வீராணம் ஏரிக்கு வந்து கொண்டிருப்பதால் இன்னும் சில நாட்களில் ஏரியின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டிவிடும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

    • கடலூர் திமுக எம்எல்ஏ ஐயப்பனும் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    • கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராமன் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார்.

    கடலூர் அருகே திமுக நிர்வாகியின் இல்ல நிகழ்ச்சியில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    கடலூர் மாவட்டம் அருகே நல்லூத்தூர் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது.

    நிகழ்ச்சியில் கடலூர் திமுக எம்எல்ஏ ஐயப்பனும் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    பெட்ரோல் குண்டு வெடித்ததில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    சம்பவம் குறித்து தகவல் தெரியவந்ததை அடுத்து, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராமன் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார்.

    பெட்ரோல் குண்டு வீசியது யார் என்பது தொடர்பான விவரங்களை காவல் துறையினர் சேகரித்து வருகின்றனர்.

    • தனியார் பஸ் ஓட்டிய டிரைவருக்கு அபராதம் விதித்து எச்சரித்து செய்து அனுப்பினர்.
    • கடலூருக்கு வரும் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி சோதனை செய்து வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் புதுவை மாநிலத்திலிருந்து மது கடத்தல், மது போதையில் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட ஒழுக்கீனமான செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சில நாட்களுக்கு கடலூர் பஸ் நிலையத்தில் தனியார் பஸ் டிரைவர்கள் மது போதையில் ஓட்டுகிறார்களா என சோதனை செய்து மது போதையில் தனியார் பஸ் ஓட்டிய டிரைவருக்கு அபராதம் விதித்து எச்சரித்து செய்து அனுப்பினர். இதனையடுத்து கடலூரில் மதுபோதையில் ஏ.டியம் எந்திரத்தை வாலிபர் ஒருவர் இரவில் உடைத்த சம்பவமும் நடைபெற்றது. புதுவை மாநிலத்திலிருந்து மது அருந்தி வருவதும், மது கடத்தல் சம்பவமும் அதிக அளவில் நடந்து வருகிறது. இதனால் மஞ்சக்குப்பம் ஆல்பேட்டை செக்போஸ்ட் அருகே உள்ள சோதனை சாவடியில் 24 மணிநேரமும் போலீசார் புதுவையிலிருந்து கடலூருக்கு வரும் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி சோதனை செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று அதிகாலையில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் ஆல்பேட்டை சோதனை சாவடிக்கு சென்று அங்கு திடீரென்று ஆய்வு செய்தார்.ஆய்வில் அங்கு பணியில் இருந்த போலீசார்கள் சரியான முறையில் சோதனை செய்கின்றார்களா அல்லது சரியான முறையில் அவர்கள் பணிகளை செய்யாமல் இருக்கிறார்களா என்று ஆய்வு செய்தார். பின்னர் பணியில் இருந்த போலீசார்களிடம் மது கடத்தல், மது போதையில் வாகனங்களை ஓட்டுதல், அளவுக்கு அதிகமாக விபத்து ஏற்படும் விதத்தில் லோடுகளை ஏற்றி வருவது, ஒழுங்கீனமான முறையில் மோட்டார் சைக்கிளில் செல்லும் வாலி பர்கள் உள்ளிட்ட அனைத்து பொதுமக்களின் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் செயல்க ளை யாரேனும் செய்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

    • தொடர்ந்து பெய்த திடீர் மழையால், வெயிலின் தாக்கம் குறைந்து குளிர் காற்று வீசியது.
    • இந்த மழை விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் இருந்தது

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி, ஆவினங்குடி, பெண்ணாடம் சுற்று வட்டார பகுதி மக்கள் வெயிலினால் அவதியடைந்து வந்தனர். குருவை சாகுபடி செய்த விவசாயிகள் பாசன நீர் பற்றாக்குறையால் பயிர்கள் வாடுவதை கண்டு வேதனை அடைந்து வந்தனர். இந்நிலையில், திட்டக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் கரு மேகங்கள் சூழ்ந்தது. தொடர்ந்து பெய்த திடீர் மழையால், வெயிலின் தாக்கம் குறைந்து குளிர் காற்று வீசியது. இதில் மகிழ்ச்சியடைந்த பொதுமக்கள் மழையில் நனைந்தபடி சென்றனர். மேலும், இந்த மழை விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் இருந்தது. அதே நேரத்தில் திட்டக்குடி, விருத்தாசலம் சாலை, திட்டக்குடி பஸ் நிலையம் ஆகிய இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. குறிப்பாக திட்டக்குடி பஸ் நிலையத்தில் தேங்கி நிற்கும் மழை நீருடன் சாக்கடை நீர் கலக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன், பொதுமக்கள் இதில் நடந்து செல்லவேண்டியுள்ளது.

    மழை பெய்தாலே திட்டக்குடி பஸ் நிலையத்தில் இந்நிலை தொடர்கிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது. கடலூர் மாவட்டம் திட்டக்குடி, ஆவினங்குடி, பெண்ணாடம் சுற்று வட்டார பகுதி மக்கள் வெயிலினால் அவதியடைந்து வந்தனர். குருவை சாகுபடி செய்த விவசாயிகள் பாசன நீர் பற்றாக்குறையால் பயிர்கள் வாடுவதை கண்டு வேதனை அடைந்து வந்தனர். இந்நிலையில், திட்டக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் கரு மேகங்கள் சூழ்ந்தது. தொடர்ந்து பெய்த திடீர் மழையால், வெயிலின் தாக்கம் குறைந்து குளிர் காற்று வீசியது.

    இதில் மகிழ்ச்சியடைந்த பொதுமக்கள் மழையில் நனைந்தபடி சென்றனர். மேலும், இந்த மழை விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் இருந்தது. அதே நேரத்தில் திட்டக்குடி, விருத்தாசலம் சாலை, திட்டக்குடி பஸ் நிலையம் ஆகிய இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. குறிப்பாக திட்டக்குடி பஸ் நிலையத்தில் தேங்கி நிற்கும் மழை நீருடன் சாக்கடை நீர் கலக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன், பொதுமக்கள் இதில் நடந்து  செல்ல வேண்டியுள்ளது. மழை பெய்தாலே திட்டக்குடி பஸ் நிலையத்தில் இந்நிலை தொடர்கிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது.

    • கொள்ளையடித்த நகை, கார் ஆகியவற்றை பறிமுதல் செய்து கொள்ளையர்களை சிறையில் அடைத்தனர்.
    • டி.எஸ்.பி. சபியுல்லா, இன்ஸ்பெக்டர் நந்தகுமார் ஆகியோர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் புதுப்பேட்டை அடுத்த ஒறையூர் கிராமத்தில் வங்கி காசாளர் ஒருவர்வீட்டினுள் புகுந்தகொள்ளையர்கள் நகைகளை கொள்ளை யடித்துக் கொண்டு வீட்டி லிருந்த ரூ10 லட்சம் மதிப்பி லான புத்தம் புதிய காரை திருடிசென்றனர். இந்த வழக்கு சம்பந்தமாக சென்னைவரைசென்றுசி.சி.டி.வி கேமராக்களை பார்த்து குற்றவாளிகளை கண்டுபிடித்து திருவண்ணா மலை போலீசாருடன் சேர்ந்து குற்றவாளிகளை கைது செய்து கொள்ளை யடித்த நகை, கார் ஆகிய வற்றை பறிமுதல் செய்து கொள்ளையர்களை சிறை யில் அடைத்தனர்.

    இந்த வழக்கில் தேடப் பட்டு வந்தகள்ளக்குறிச்சி மாவட்டம்கூவாகம் மேற்கு தெரு மாரி என்ற மாரி முத்து (30), விழுப்புரம் மாவட்டம் வானூர் கேணிப்பட்டு மாரி யம்மன் கோவில் தெரு சுந்தரகிருஷ்ணன் (26)ஆகிய இருவரையும் தனிப்படை போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்து பண்ருட்டி அழைத்து வந்தனர்.இவர்களி டம் பண்ருட்டி டி.எஸ்.பி. சபியுல்லா, புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் ஆகியோர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோவில் மண்டபத்தில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
    • போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    கடலூர்:

    குள்ளஞ்சாவடி அருகே இடங்கொண்டான்பட்டு கிராமத்தில் கன்னியம்மன் கோவில் உள்ளது. இக்கோ வில் பூசாரி சுரேஷ், நேற்று முன்தினம் இரவு வழிபாடு முடித்து கோவிலை பூட்டிக் கொண்டு சென்றார். நேற்று காலை கோவிலை திறந்து உள்ளே சென்றார். அப்போது கோவில் மண்ட பத்தில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது தொடர்பாக ஊர் பிரமுகர்களுக்கு தகவல் கொடுத்தார். தொடர்ந்து ஊர் பிரமுகர்கள் குள்ளஞ் சாவடி போலீசாருக்கு தகவல் கொடுத்து நேற்று காலை 10 மணியளவில் புகாரளித்தனர்.

    புகாரின் மீது குள்ளஞ் சாவடி போலீசார் நட வடிக்கை ஏதும் எடுக்க வில்லை. இன்ஸ்பெக்டரோ, சப்- இன்ஸ்பெக்டரோ கோவிலுக்கு வந்து விசா ரணை நடத்தவில்லை. இது தொடர்பாக போலீசாரை கேட்டால், புகார் கொடுத்து விட்டீர்கள் அல்லவா? கொள்ளையர்களை பிடித்தால் கூறுவோம் என்று பதில் கூறுவதாக ஊர் பிரமுகர்கள் புலம்புகின்றனர். மேலும், இந்த கோவிலின் கும்பாபிஷேகம் கடந்த ஆண்டு செப்டம்பரில் நடை பெற்றது. அது முதல் கோவி லின் உண்டியல் திறக்கப்பட வில்லை. இதனால் பக்தர்கள் செலுத்திய காணிக்கை ரூ.1 லட்சத்திற்கு மேல் உண்டி யலில் இருந்திருக்கும் என்றும் ஊர் பிரமுகர்கள் கூறினர். எனவே, கோவில் உண்டி யலை உடைத்து கொள்ளை யடித்தவர்களை பிடிக்க குள்ளஞ்சாவடி போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    • பணிக்கன்குப்பம் கிழக்கு தெருவில் உள்ள பழைய வீட்டிற்கு சென்றுள்ளார்.
    • ஆத்திரமடைந்த அவர்கள் ரீகனை மண்வெட்டியால் தாக்கினர்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த பணிக்கண்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ராயப்பன், மைக்கேல்லூர்து சாமி இருவரும் அண்ணன், தம்பிகள். இவர்களுக்குள் வீட்டு மனை சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்தது. நேற்று மாலை ராயப்பன் மகன் லூர்து மரிய ரீகன் (வயது 18). கல்லூரி மாணவர். பணிக்கன்குப்பம் கிழக்கு தெருவில் உள்ள பழைய வீட்டிற்கு சென்று ள்ளார். அங்கு இவரது வீட்டிலிருந்த குடிநீர் குழாயை மைக்கேல்லூர்து சாமி மற்றும் அவரது மகன்கள் சேதப்படு த்தியதாக கூறப்படுகிறது.

    இதனை ரீகன் தட்டி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் ரீகனை மண்வெட்டியால் தாக்கினர். இதனால் படுகாயம் அடைந்த ரீகன் பண்ருட்டி அரசு ஆஸ்ப த்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பஸ்கள் உரிய ஆவணங்களுடன் இயக்கப்படுகிறதா? ஓட்டுனர் உரிமம் மற்றும் ஏர் ஹாரன், குடிபோதையில் வாகனங்கள் இயக்கப்படுகிறதா?
    • போலீசார் அபராதம் விதிக்கப்படும் என்று கூறினர்.

    கடலூர்:

    போக்குவரத்து விதிகளை மீறி செயல்படும் பஸ்கள் மற்றும் வாகனங்கள் குறித்து சோதனை மேற்கொள்ள கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவிட்டார். இதையடுத்து கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு அறிவுறுத்தலின்பேரில் , போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அமர்நாத் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் மற்றும் போலீசார் இன்று காலை கடலூர் பஸ் நிலையத்தில் அதிரடி சோதனை மேற்கொ ண்டனர்.

    அப்போது பஸ்கள் உரிய ஆவணங்களுடன் இயக்கப்படுகிறதா? ஓட்டுனர் உரிமம் மற்றும் ஏர் ஹாரன், குடிபோதையில் வாகனங்கள் இயக்கப்ப டுகிறதா? ஆகியவை குறித்து சோதனை மேற்கொண்டனர். அப்போது ஏராளமான பஸ்களில் ஏர் ஹாரன் பயன்படுத்துவது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அந்த டிரைவர்களை அழைத்து, இன்னும் ஒரு வார காலத்துக்குள் அனைத்து ஏர் ஹாரன்களையும் அப்புறப்படுத்த வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்தனர் இல்லை என்றால் அவை பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்று கூறினர். இந்த சம்பவத்தால் கடலூர் பஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

    • கடந்த வாரத்தை தொடர்ந்து ஞாயிற்றுகிழமையான இன்றும் கடலூர் துறைமுகத்தில் மீன்கள் வரத்து சற்று குறைவாக காணப்பட்டது.
    • வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் மீன்கள் வரத்து அதிக அளவில் இருக்கும்.

    கடலூர்:

    கடலூர் துறைமுகத்தில் இருந்து தினந்தோறும் 100-க்கும் மேற்பட்ட விசை மற்றும் பைபர் படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க சென்று வருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் இருந்து வந்ததால் மீன்களின் விலை அதிகரித்து விற்பனை செய்யப்பட்டு வந்தன. இதனைத் தொடர்ந்து ஜூன் 15-ந் தேதி முதல் மீனவர்கள் மீன் பிடித்து வந்த நிலையில் ஞாயிற்றுக் கிழமைகளில் வழக்கத்தை விட அதிக அளவில் பொது மக்களின் கூட்டம் அதிகரித்து மீன்களை போட்டி போட்டு வாங்கி செல்கின்றனர்.

    கடந்த வாரத்தை தொடர்ந்து ஞாயிற்றுகிழமையான இன்றும் கடலூர் துறைமுகத்தில் மீன்கள் வரத்து சற்று குறைவாக காணப்பட்டது. வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் மீன்கள் வரத்து அதிக அளவில் இருக்கும். இந்நிலையில் மீன் வரத்து தொடர்ந்து குறைவு காரணமாக கடலூர் துறைமுகத்தில் மீன்கள் விலை உயர்ந்து விற்கப்பட்டது. வழக்கமாக ஒரு கிலோ 250 முதல் 350 ரூபாய் வரை விற்கப்படும் பாறை மீன் இன்று 450 முதல் 500 ரூபாய் வரை விற்கப்பட்டது.

    சங்கரா மீன் வழக்கமாக 200 முதல் 250 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று 400 முதல் 450 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ரூபாய் 150-க்கு விற்கப்பட்ட ஓரவகை மீன் 350 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வச்சிரா மீன் 800 ரூபாய்க்கும், வவ்வால் மீன் 500 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. பன்னி சாத்தான் மீன் வழக்கமாக 300 முதல் 350 ரூபாய்க்கு விற்கப்படும். ஆனால் இன்று 500 ரூபாய்க்கு விற்கப்பட்டது. 600 முதல் 700 ரூபாய்க்கு விற்கப்பட்ட வஞ்சிரம் மீன் இன்று ஆயிரம் முதல் 1200 ரூபாய்க்கு விற்கப்பட்டது. அதலை மீன் ஒரு கிலோ 500 க்கு விற்கப்பட்டது. இதே போல் நெத்திலி மீன் 250 ரூபாய்க்கும், கனவா வகை மீன் 200 ரூபாய்க்கும், கானாங்கத்தை மீன் ஒரு கிலோ 150 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. விலை அதிகமாக விற்பனை நடந்தாலும் மீன்கள் வாங்க கடலூர் துறைமுகத்தில் பொதுமக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது விலையை பொருட்படுத்தாமல் பொதுமக்கள் மீன்களை வாங்கிச் சென்றனர்.

    ×