என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் மாவட்டத்தில் இடி மின்னலுடன் பலத்த மழை
    X

    கடலூர் மாவட்டத்தில் இடி மின்னலுடன் பலத்த மழை

    • பலத்த இடி மின்னலுடன் மழை பெய்து வந்ததால் சீதோசன மாற்றம் ஏற்படுகிறது.
    • கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 5 மணி நேரம் மின்தடை ஏற்பட்டு மக்கள் கடும் பாதிப்படைந்தனர்.

    கடலூர்:

    தமிழ்நாட்டில் நடப்பு ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உக்கிரமாக இருந்து வந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கடந்த பல நாட்களாக வெப்ப சலனம் காரணமாக 102 முதல் 104 டிகிரி வெயில் அளவு பதிவாகி மக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றிலுமாக முடக்கியது.

    இந்த ஆண்டு கடலூர் மாவட்டத்தில் கடும் வெப்ப சலனம் காரணமாக அனல் காற்று மற்றும் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக பொதுமக்கள் நடமாட்டம் குறைந்து வந்த நிலையில் அடிக்கடி பலத்த இடி மின்னலுடன் மழை பெய்து வந்ததால் சீதோசன மாற்றம் ஏற்பட்டு பல்வேறு நோய்களால் பொதுமக்கள் பாதிப்படைந்து வந்தனர். தற்போது தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்ததாலும், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 5 நாட்களுக்கு மழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

    கடலூர் மாவட்டத்தில் நேற்று மாலையில் கருமேகம் சூழ்ந்து லேசான தூறலுடன் ஆரம்பித்து இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழையானது கடலூர் ,நெல்லிக்குப்பம், பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாச்சலம், சிதம்பரம், ஸ்ரீமுஷ்ணம் ,சேத்தியாத்தோப்பு, பரங்கிப்பேட்டை, புவனகிரி ,குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் விடிய விடிய தொடர்ந்து பெய்து வந்ததால் மிகுந்த குளிர் காற்று வீசி வந்தது. இது மட்டும் இன்றி கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 5 மணி நேரம் மின்தடை ஏற்பட்டு மக்கள் கடும் பாதிப்படைந்தனர். மழை பெய்ததால் மாவட்டம் முழுவதும் விவசாய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதோடு அறுவடை செய்யப்பட்ட நெற்பயிர்களை பாதுகாப்பாக வைக்கும் பணிகளிலும் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டடரில் வருமாறு:-

    வேப்பூர் - 60.0,. மீ-மாத்தூர் - 60.0, காட்டுமயிலூர் - 50.0, கடலூர் - 49.4, வானமாதேவி - 45.0, தொழுதூர் - 45.0,கீழ்செருவாய் - 42.0,விரு த்தாசலம் - 41.0,கலெக்டர் அலுவலகம் - 37.8, குப்பநத்தம் - 37.2,பெல்லாந்துறை - 31.8, லக்கூர் - 28.6,ஸ்ரீமுஷ்ணம் - 23.2, எஸ்.ஆர்.சி.குடிதாங்கி - 22.0, சேத்தியாதோப்பு - 20.2,பரங்கிப்பேட்டை - 11.2,பண்ருட்டி - 10.0,லால்பேட்டை - 10.0,காட்டுமன்னா ர்கோயில் - 9.4, சிதம்பரம் - 7.8,அண்ணா மலை நகர் - 7.0, புவனகிரி - 6.0, குறிஞ்சிப்பாடி - 6.0,வடக்குத்து - 5.2, கொத்தவாச்சேரி - 3.௦ மாவட்டத்தில் மொத்தம் 668.80 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளது.

    Next Story
    ×