என் மலர்
கடலூர்
- தி.மு.க. செயலாளர் ராஜா மற்றும்தி.மு.க. நிர்வாகிகள் காரில் சென்று கொண்டிருந்தனர்.
- தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
கடலூர்:
கடலூர் மாநகர தி.மு.க.செயலாளராக ராஜா இருந்து வருகிறார். இவரது மனைவி கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா ஆவார். இந்த நிலையில் நேற்று இரவு கடலூரில் இருந்து திருச்சி நோக்கி மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா மற்றும்தி.மு.க. நிர்வாகிகள் காரில் சென்று கொண்டிருந்தனர். திருச்சி தேசிய நெடுஞ் சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று லாரி ஒன்று எதிர்பாராமல் மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா சென்ற கார் மீது பலத்த சத்தத்துடன் மோதியது. இந்த விபத்தில் மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா மற்றும் நிர்வாகிகள் காருக்குள் சிக்கிக்கொண்டனர்.
அப்போது இவர்களுடன் மற்றொரு காரில் வந்ததி.மு.க. நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்து காரில் இருந்த ராஜா மற்றும் நிர்வாகிகளை சென்று பார்த்த போது அனைவரும் லேசான காயத்துடன் தப்பியது தெரிய வந்தது.. இந்த விபத்தில் கார் முழுவதும் சேதம் அடைந்து உருக்குலைந்தது. இதனைத் தொடர்ந்து மேயர் கணவர் தி.மு.க. செயலாளர் ராஜா மற்றும் நிர்வாகிகள் கடலூருக்கு இன்று அதிகாலை வந்தனர். பின்னர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இத்தகவல் அறிந்த கடலூர் மாவட்டதி.மு.க. நிர்வாகிகள் மாநகராட்சி மேயர் கணவர் ராஜாவை நேரில் சந்தித்து உடல்நலன் விசாரித்து வருகின்றனர். திருச்சி மாவட்ட போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
- ராமகிருஷ்ணன் மோட்டார் சைக்கிளில் எடுத்துக் கொண்டு விற்பனை செய்வதற்காக பண்ருட்டிக்கு வந்துகொண்டிருந்தார்.
- சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.
கடலூர்:
பண்ருட்டி அடுத்த மாளிகம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (65), பலா விவசாயி, இவர் தனது நிலத்தில் அறுவடை செய்யப்பட்ட பலாப்பழங்களை இன்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் எடுத்துக் கொண்டு விற்பனை செய்வ தற்காக பண்ருட்டிக்கு வந்துகொண்டிருந்தார். பண்ருட்டி சென்னை சாலை பணிக்கன் குப்பம்அ ருகே வந்து கொண்டி ருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த விவசாயி ராமகிருஷ்ணன் 108 ஆம்புலன்ஸ் மூலம் பண்ருட்டி அரசு ஆஸ்ப த்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இது பற்றி தகவல் அறிந்த காடாம்புலியூர் போலீஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து அடையாளம் தெரியாத வாகனத்தை தேடி வருகின்றனர்.
- சந்திரவாணன் மற்றும் சஞ்சய் குமாரை வலைவீசி தேடி வருகின்றனர்.
- மதியம் 1 மணி அளவில் கோர்ட்டில் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
கடலூர்:
கடலூர் தாழங்குடாவை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் சாந்தியின் கணவர் மதியழகன் கடந்த 27- ந்தேதி தேர்தல் முன்விரோத தகராறு மற்றும் பழிக்கு பழி சம்பவமாக பட்டப்பகலில் கடலூர் மஞ்சக்குப்பம் சண்முகம் பிள்ளை தெருவில் ஒரு கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்தனர்.
இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் 25 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் மாசிலாமணி, பிரகலாதன், ராஜேந்திரன், ராமலிங்கம் ஆகியோர் சிதம்பரம் மற்றும் பண்ருட்டி கோர்ட்டில் சரண் அடைந்தனர். இதில் 23 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் தலைமறைவாக உள்ள சந்திரவாணன் மற்றும் சஞ்சய் குமாரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த நிலையில் கைது செய்யப்பட்ட ராஜேந்திரன் மற்றும் ராமலிங்கம் ஆகியோரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கடலூர்2-வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் புதுநகர் போலீசார் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட்டு (பொறுப்பு) வனஜா இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து இன்று மதியம் 1 மணி அளவில் கோர்ட்டில் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டார். அதன் பேரில் ராஜேந்திரன் மற்றும் ராமலிங்கத்தை போலீசார் காவலில் எடுத்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். விசாரணை முடிந்து இன்று மதியம் 1 மணி அளவில் மீண்டும் கோர்ட்டில் ஒப்படைக்க உள்ளனர்.
- திருமணம் முடிந்து ரகுபதி வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்லாமல் அந்த பகுதியில் மரம் வெட்டும் கூலி வேலை செய்து வந்தார்.
- செல்வராஜ் கீழே கிடந்த மரக்கட்டையை எடுத்து ரகுபதியை சரமாரி தாக்கினார்.
திட்டக்குடி:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த நிதிநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் ரகுபதி (வயது 35) பி.இ. படித்து விட்டு வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். கடந்த 7 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்வதற்காக வெளிநாட்டில் இருந்து சொந்த ஊரான நிதிநத்தம் வந்தார். பின்னர் அதே பகுதியை சேர்ந்த சத்யா என்ற பெண்ணை ரகுபதி திருமணம் செய்து கொண்டார்.
திருமணம் முடிந்து ரகுபதி வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்லாமல் அந்த பகுதியில் மரம் வெட்டும் கூலி வேலை செய்து வந்தார். தற்போது இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ரகுபதிக்கு முன்னதாகவே மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் ரகுபதி தினமும் மது குடித்துவிட்டு வந்து மனைவி சத்யாவை அடித்து துன்புறுத்தியுள்ளார்.
நேற்று வழக்கம் போல் மது குடித்துவிட்டு வந்து சத்யாவை மதுபோதையில் தாக்கி உள்ளார். ரகுபதி தாக்கியதில் வலி தாங்க முடியாமல் சத்யா அலறினார். இதனால் இவர்களது வீட்டின் அருகில் உள்ள வீட்டில் வசிக்கும் சத்யாவின் தாய் சசிகலா (50) மகளின் அலறல் சத்தம் கேட்டு ரகுபதி வீட்டிற்கு ஓடி வந்து ஏன் என் மகளை அடித்து துன்புறுத்துகிறாய்? என்ன பிரச்சனை? என்று ரகுபதியிடம் கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ரகுபதி மதுபோதையில் அங்கு கீழே கிடந்த செங்கலை எடுத்து மாமியார் சசிகலாவை முகத்தில் கொடூரமாக தாக்கியுள்ளார். இதில் பற்கள் உடைந்து பலத்த காயம் அடைந்த சசிகலாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் அறிந்து அங்கு வந்த ரகுபதியின் மாமனார் செல்வராஜ் (55) தொடர்ந்து குடித்துவிட்டு வந்து பிரச்சனை செய்து வருகிறாயே என்று கேட்டபோது ரகுபதிக்கும் செல்வராஜிக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.
இந்த தகராறு வாக்குவாதமாக மாறி இருவரும் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர். அப்போது செல்வராஜ் கீழே கிடந்த மரக்கட்டையை எடுத்து ரகுபதியை சரமாரி தாக்கினார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரகுபதி கீழே விழுந்து பரிதாபமாக இறந்தார். இதைபார்த்த அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து ஆலங்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த ஆலங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ரகுபதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து ரகுபதியின் தாய் சகுந்தலா ஆவினங்குடி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் ரகுபதி மாமனார் செல்வராஜை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் சம்பவ இடத்திற்கு வந்து நேரில் விசாரணை நடத்தி வருகிறார். மதுபோதையில் மகளை அடித்து துன்புறுத்திய மருமகனை மாமனார் கட்டையால் அடித்து கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சிதம்பரம் அடுத்த கொத்தட்டை மெயின் ரோட்டில் சென்ற போது, எதிரில் வந்த டிப்பர் லாரி கார் மீது மோதியது.
- இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே டிரைவர் சத்தியசீலன் உயிரிழந்தார்.
கடலூர்:
நாகை மாவட்டம் தரங்கம்பாடியை அடுத்த கீழ்பெரும்பள்ளம் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் சத்தியசீலன் (வயது 38). இவர் சொந்தமாக டிராவல்ஸ் வைத்து கார் ஓட்டி வருகிறார். சென்னையில் இருந்து ஒரு குடும்பத்தை சேர்ந்த 5 பேரை ஏற்றிக்கொண்டு சீர்காழி அடுத்த அக்கரைப்பேட்டைக்கு நேற்று இரவு கிளம்பினார். சிதம்பரம் அடுத்த கொத்தட்டை மெயின் ரோட்டில் சென்ற போது, எதிரில் வந்த டிப்பர் லாரி கார் மீது மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே டிரைவர் சத்தியசீலன் உயிரிழந்தார். காரில் வந்த 5 பேர் படுகாயமடைந்தனர்.
அவ்வழியே சென்றவர்கள் விபத்துக்குள்ளானவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே விக்ராந்த் (6), நிகல்யா (3) ஆகிய 2 குழந்தைகள் இறந்தனர். படுகாயமடைந்த 3 பேருக்கும் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், விபத்தை ஏற்படுத்திய லாரியை சிதம்பரம் போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த விபத்து குறித்து புதுச்சத்திரம் இன்ஸ்பெக்டர் வினதா தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடலூர் - சிதம்பரம் சாலையில் பெட்ரோல் பங்க் எதிரில் தனியார் ஜவுளிக் கடை இயங்கி வருகிறது.
- கடை நிர்வாகிகள் அதிகாரியிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
கடலூர்:
கடலூர் - சிதம்பரம் சாலையில் பெட்ரோல் பங்க் எதிரில் தனியார் ஜவுளிக் கடை இயங்கி வருகிறது. இந்த கடை மாநகராட்சிக்கு வரி பாக்கி செலுத்தாமல் இருந்து வந்தது. மாநகராட்சி சார்பில் வரிபாக்கி செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் வரி பாக்கி செலுத்தாத நிலையில் இன்று காலை மாநகராட்சி வருவாய் ஆய்வாளர்கள் அசோகன், பாஸ்கரன் மற்றும் ஊழியர்கள் தனியார் ஜவுளிக்கடைக்கு நேரில் சென்றனர். பின்னர் சீல் வைக்க முயன்றனர். தற்போது அங்கு வந்த கடை நிர்வாகிகள் அதிகாரியிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது வரிப்பாக்கி செலுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர். ஆனால் மாநகராட்சி அதிகாரிகள் இன்று குறிப்பிட்ட தொகை வரிபாக்கி செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் கடைக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என திட்டவட்டமாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.
- கடலூர் செம்மண்டலம் வழியாக லாரி ஒன்று வந்து கொண்டி ருந்தது.
- லாரி கண்ணாடி விரிசல் அடைந்து உடைந்தது.
கடலூர்:
கடலூர் கம்மியம் பேட்டை, செம்மண்டலம் உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் அடையாளம் தெரி யாத மர்ம நபர்கள் அடிக்கடி அவ்வழியாக செல்லும் லாரி உள்ளிட்ட பல்வேறு வாகனங்களை வழிமறித்து டிரைவர்களை மிரட்டி பணம் பறித்து வந்தனர். மேலும் கடலூர் குண்டு சால சாலையில் பாழடைந்து உள்ள வீட்டு வசதி வாரியம் அடுக்குமாடி கட்டிடத்தில் தினந்தோறும் கஞ்சா மற்றும் மது குடிப்பது உள்ளிட்ட பல்வேறு சட்ட விரோத செயல்களில் ஈடு பட்டு வருவதால் அவ்வழி யாக செல்லும் பெண்களி டம் தவறாக நடப்பது, பணம் பறிப்பது உள்ளிட்ட பல்வேறு செயல்களில் தொடர்ந்து பலர் ஈடுபட்டு வருகின்றனர். இதன் கார ணமாக பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலை கடலூர் செம்மண்டலம் வழியாக லாரி ஒன்று வந்து கொண்டி ருந்தது. அப்போது 2 நபர்கள் குடிபோதையில் லாரியை வழிமறித்தனர். பின்னர் லாரி டிரைவரை சரமாரியாக தாக்கி மிரட்டி பணம் பறிக்க முயன்றனர். அப்போது லாரி டிரைவர் தன்னிடம் பணம் இல்லை என கூறிக் கொண்டிருந்த போது, ஆத்திரமடைந்த 2 நபர்கள் லாரி கண்ணாடியை தாக்கினார்கள். இதில் லாரி கண்ணாடி விரிசல் அடைந்து உடைந்தது. இதனைப் பார்த்த பொது மக்கள் அதிர்ச்சிடைந்து 2 வாலிபர்களை மடக்கி பிடித்தனர். பின்னர் கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 பேரை பிடித்து வந்து விசாரணை நடத்தி னர். இதில் அவர்கள் கடலூர் எஸ்.என்.சாவடி யை சேர்ந்த விக்கி (வயது 24), கடலூர் குப்பன்குளம் ராமகிருஷ்ணன் (35) என்பது தெரியவந்தது. இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து2 பேரையும் கைது செய்தனர். மேலும் குண்டு சாலை வீட்டு வசதி குடியிருப்பு பகுதிகளில் அடிக்கடி போலீசார் சோதனை செய்து சட்ட விரோத செயலை தடுத்து நிறுத்தி கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் நடை பெறாமல் தடுக்கும் நட வடிக்கையில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி யில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
- வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலமாக ரூ.9 ஆயிரம் மானியமாக வழங்கப்படுகிறது.
- கைரேகை ஏதும் பெறப்படவில்லை. ஆனால், கணக்கில் இருந்த பணம் எடுக்கப்பட்டுள்ளது
கடலூர்:
தமிழகத்தில் பிரதம மந்திரி தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் கழிவறை கட்டும் பணி நடந்துவருகிறது. இதற்கு வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலமாக ரூ.9 ஆயிரம் மானியமாக வழங்கப்படுகிறது. அதன்படி கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஒன்றியம் கீழ்மாம்பட்டு ஊராட்சியில் 19 பேர் கழி வறை கட்டியுள்ளனர். இதில் ரத்தினாம்பாள், ஜெக தாம்பாள், கலியமூர்த்தி ஆகிய 3 பேருக்கு மானியத் தொகை வழங்கப்பட்டது. பல்லவன் கிராமப்புற வங்கியில் இருந்த பயனாளி களின் வங்கி கணக்கில் மானியத் தொகை செலுத் தப்பட்டது. இதில் ஜெகதாம் பாள், கலியமூர்த்தி ஆகியோ ரின் வீட்டிற்கு சென்ற வங்கி ஊழியர்கள், பயோ மெட்ரிக் எந்திரத்தில் கைரேகை பெற்றுள்ளனர். சிறிது நேரத்தில் வந்து பணம் தருவதாக கூறிச் சென்றுள்ளனர். பின்னர் யாரும் வந்து தரவில்லை.
அதேசமயம் ரத்தினாம் பாளிடம் கைரேகை ஏதும் பெறப்படவில்லை. ஆனால், கணக்கில் இருந்த பணம் எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட 3 பேரும் பல்லவன் கிராம வங்கிக்கு சென்று, நடந்த சம்பவத்தை மேனேஜரிடம் கூறியுள்ளனர். இது தொடர் பாக விசாரிப்பதாக அவர் கூறியுள்ளார். மேலும், இது தொடர் பாக பாதிக்கப்பட்ட நபர்கள் கடலூர் கலெக்ட ருக்கும் புகார் மனு அனுப்பி யுள்ளனர். இந்த சம்பவம் பண்ருட்டி மற்றும் சுற்று வட்டார பகுதி மக்களி டையே காட்டுத் தீ போல பரவியது. இதனால் தங்கள் வங்கி கணக்கில் பணம் உள்ளதா என்பதை உறுதி செய்ய பொதுமக்கள் வங்கிக்கு செல்கின்றனர். இதனால் பண்ருட்டி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- மோட்டார் சைக்கிளை நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர்.
- 100 கிராம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் வைத்திருந்தது தெரிய வந்தது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்ன தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடு பட்டனர். அப்போது ெரயில் நிலையம் பஸ் நிறுத்தம் அருகே வேகமாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விசா ரணை மேற்கொண்டனர். அதில் வந்த 3 பேரும் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறினர். இதனை அடுத்து அவர்களை சோதனை செய்தபோது அவர்களிடம் சுமார் 100 கிராம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் வைத்திருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து நடந்த விசாரணையில் அவர்கள் குறிஞ்சிப்பாடி சுப்புராயர் கோவில் பகுதியைச் சார்ந்த ராஜா, சக்கரவர்த்தி மற்றும் வாசுதேவன் என தெரிய வந்தது.
இதையடுத்து தொடர்ந்து நடந்த சோதனையில் அலமேலு நகர் பகுதியில் பாலாஜி என்பவரது வீட்டிற்கு அருகே சந்தேகப்ப டும்படி நின்று கொண்டிருந்த 4 பேரை பிடித்து விசாரணை செய்ய போலீசார் சென்றனர். அப்போது 2 பேர் அங்கிருந்து தப்பி ஓடினர். மற்ற 2 பேரை பிடித்து விசாரித்தபோது அவர்கள் பாட்டை வீதியை சார்ந்த பாலமுருகன், அம்பேத்கர் நகரைச் ேசர்ந்த ஆல்பர்ட் எட்வின் என தெரிய வந்தது. அவர்களிடமிருந்து 110 கிராம் கஞ்சா, 11 ஆயிரத்து நூறு ரூபாய் ரொக்கம் ஆகியவை கைப்பற்ற ப்பட்டன. பின்னர் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 3 மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.
- பலத்த இடி மின்னலுடன் மழை பெய்து வந்ததால் சீதோசன மாற்றம் ஏற்படுகிறது.
- கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 5 மணி நேரம் மின்தடை ஏற்பட்டு மக்கள் கடும் பாதிப்படைந்தனர்.
கடலூர்:
தமிழ்நாட்டில் நடப்பு ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உக்கிரமாக இருந்து வந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கடந்த பல நாட்களாக வெப்ப சலனம் காரணமாக 102 முதல் 104 டிகிரி வெயில் அளவு பதிவாகி மக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றிலுமாக முடக்கியது.
இந்த ஆண்டு கடலூர் மாவட்டத்தில் கடும் வெப்ப சலனம் காரணமாக அனல் காற்று மற்றும் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக பொதுமக்கள் நடமாட்டம் குறைந்து வந்த நிலையில் அடிக்கடி பலத்த இடி மின்னலுடன் மழை பெய்து வந்ததால் சீதோசன மாற்றம் ஏற்பட்டு பல்வேறு நோய்களால் பொதுமக்கள் பாதிப்படைந்து வந்தனர். தற்போது தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்ததாலும், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 5 நாட்களுக்கு மழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
கடலூர் மாவட்டத்தில் நேற்று மாலையில் கருமேகம் சூழ்ந்து லேசான தூறலுடன் ஆரம்பித்து இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழையானது கடலூர் ,நெல்லிக்குப்பம், பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாச்சலம், சிதம்பரம், ஸ்ரீமுஷ்ணம் ,சேத்தியாத்தோப்பு, பரங்கிப்பேட்டை, புவனகிரி ,குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் விடிய விடிய தொடர்ந்து பெய்து வந்ததால் மிகுந்த குளிர் காற்று வீசி வந்தது. இது மட்டும் இன்றி கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 5 மணி நேரம் மின்தடை ஏற்பட்டு மக்கள் கடும் பாதிப்படைந்தனர். மழை பெய்ததால் மாவட்டம் முழுவதும் விவசாய பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதோடு அறுவடை செய்யப்பட்ட நெற்பயிர்களை பாதுகாப்பாக வைக்கும் பணிகளிலும் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டடரில் வருமாறு:-
வேப்பூர் - 60.0,. மீ-மாத்தூர் - 60.0, காட்டுமயிலூர் - 50.0, கடலூர் - 49.4, வானமாதேவி - 45.0, தொழுதூர் - 45.0,கீழ்செருவாய் - 42.0,விரு த்தாசலம் - 41.0,கலெக்டர் அலுவலகம் - 37.8, குப்பநத்தம் - 37.2,பெல்லாந்துறை - 31.8, லக்கூர் - 28.6,ஸ்ரீமுஷ்ணம் - 23.2, எஸ்.ஆர்.சி.குடிதாங்கி - 22.0, சேத்தியாதோப்பு - 20.2,பரங்கிப்பேட்டை - 11.2,பண்ருட்டி - 10.0,லால்பேட்டை - 10.0,காட்டுமன்னா ர்கோயில் - 9.4, சிதம்பரம் - 7.8,அண்ணா மலை நகர் - 7.0, புவனகிரி - 6.0, குறிஞ்சிப்பாடி - 6.0,வடக்குத்து - 5.2, கொத்தவாச்சேரி - 3.௦ மாவட்டத்தில் மொத்தம் 668.80 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளது.
- குழந்தைகளுக்கு தண்ணீர் இல்லாமல் அவதி அடைந்து வந்தனர்.
- குடிநீரை அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு உபயோகிக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.
கடலூர்:
கடலூர் மாநகராட்சி 34 -வது வார்டு பாலன் காலனியில் இயங்கி வரும் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு தண்ணீர் இல்லாமல் அவதி அடைந்து வந்தனர். கடலூர் மாநகராட்சி சார்பில் தற்போது குடிநீர் போர் போடப்பட்டுள்ளது. இந்த குடிநீர் பைப்பை கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் நேரில் சென்று பார்வையிட்டு உடனடியாக இந்த குடிநீரை அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு உபயோகிக்க வேண்டும் என அறிவுறுத்தினர். இதில் நிர்வாகிகள் சொக்கு, சரண், கருணையாளன், ராம்ஜி ஆகியோர் உடன் இருந்தனர்.
- சாம்பார் வெங்காயம் விலை தற்போது 160 ரூபாய்க்கு உயர்ந்து விற்பனையாகி வருகின்றது.
- கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சாம்பார் வெங்காயம் வரத்து இல்லாததால் பல கடைகளில் சாம்பார் வெங்காயம் விற்பனை செய்யவில்லை.
கடலூர்:
இந்தியா முழுவதும் கடந்த சில தினங்களாக வரலாறு காணாத வகையில் தொடர் மழை பெய்து வருவதால் காய்கறி வரத்து குறைந்து அதிக விலைக்கு விற்பனையாகி வருகின்றது.
இதன் காரணமாக தமிழகத்தில் தக்காளி, சாம்பார் வெங்காயம் (சின்ன வெங்காயம்), இஞ்சி உள்ளிட்ட பல்வேறு காய்கறி விலைகள் கடுமையாக உயர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தக்காளியின் விலை 80 ரூபாய் முதல் 92 ரூபாய் வரை விற்பனையாகி வந்த நிலையில், கடந்த சில தினங்களாக சற்று குறைந்த விலைக்கு தக்காளி விற்பனையாகி வந்தது.
ஆனால் இன்று மீண்டும் மொத்த விற்பனை கடையில் 90 ரூபாய்க்கும், சில்லறை கடைகளில் 100 ரூபாய்க்கும் தக்காளி விலை விற்பனையாகி வருகின்றது. இது மட்டுமின்றி சாம்பார் வெங்காயம் விலை தற்போது 160 ரூபாய்க்கு உயர்ந்து விற்பனையாகி வருகின்றது. ஆனால் கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சாம்பார் வெங்காயம் வரத்து இல்லாததால் பல கடைகளில் சாம்பார் வெங்காயம் விற்பனை செய்யவில்லை.
மேலும் ஒரு சில மொத்த வியாபார கடைகளில் சாம்பார் வெங்காயம் 160 ரூபாய்க்கும், 260 முதல் 280 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்த இஞ்சியின் விலை 300 ரூபாய்க்கு விற்பனையாகி வருவதால் இல்லத்தரசிகள், பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்து காய்கறிகள் வாங்க முடியாத நிலையில் இருந்து வருகின்றனர். இது மட்டும் இன்றி தங்களுக்கு தேவையான காய்கறிகளை மிக குறைந்த கிராமில் வாங்கி செல்வதையும், காய்கறிகள் வாங்கும் விலையை காட்டிலும் அதற்கு மாறாக இறைச்சிகள் வாங்கி செல்வதையும் காண முடிகிறது. தொடர் மழை குறைந்து காய்கறிகளின் வரத்து சீரான பிறகு காய்கறி விலை குறைந்து விற்பனை செய்யப்படும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.






