என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரத்தக் கொடையாளர்"

    • ரத்ததானம் செய்வதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது.
    • தமிழ்நாடு 99 சதவீதம் தன்னார்வமுடன் ரத்த தானம் செய்பவர்களில் முதலிடம் வகிக்கின்றது.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உலக ரத்த கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு தன்னார்வ இரத்தக் கொடையாளர்களை பாராட்டி கலெக்டர் அருண் தம்புராஜ் பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். உலக ரத்த கொடையா ளர்கள் தினத்தை முன்னிட்டு ரத்த தானம் செய்வதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. உலக ரத்த கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு 2022 ஜனவரி முதல் 2022 டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில் கடலூர் மாவட்டத்திலுள்ள அரசு ரத்த வங்கிகளில் 3 முறை அல்லது அதற்கு மேலும் தன்னார்வமாக ரத்த தானம் வழங்கிய ஆண் கொடையாளர்கள் மற்றும் 2 முறை அல்லது அதற்கு மேலும் தன்னார்வமாக இரத்த தானம் வழங்கிய பெண் கொடையாளர்கள் என மொத்தம் 68 தன்னார்வ ரத்தக் கொடையாளர்களுக்கு மாவட்ட கலெக்டர் பாராட்டுச் சான்றிதழை வழங்கினார்.

    உலக சுகாதார நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் - 14 உலக இரத்த கொடையாளர் தினத்தை முன்னிட்டு மையக்கருத்தினை வெளியிட்டு வருகின்றது. அதன் தொடர்ச்சியாக இவ்வாண்டின் மையக்க ருத்தாக "தொடர்ந்து குருதி, பிளாஸ்மா கொடுப்போம் வாழ்வை பகிர்ந்து கொள்வோம்;" என்ற கருத்தினை வெளியிட்டு ள்ளது. தொடர்ந்து பல ஆண்டுகளாக இந்திய அளவில் தமிழ்நாடு 99 சதவீதம் தன்னார்வமுடன் ரத்த தானம் செய்பவர்களில் முதலிடம் வகிக்கின்றது. கடலூர் மாவட்டத்தில் ஜனவரி-2022 முதல் டிசம்பர்-2022 வரை ரத்த வங்கிகள் மூலம் மொத்தம் 19,155 யூனிட் ரத்தம் கொடையாளர்களிடமிருந்து பெறப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் நலப்பணிகள் இணை இயக்குநர் டாக்டர் சாரா செலின் பால் , சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் டாக்டர். மீரா , மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகின் மாவட்ட திட்ட மேலாளர் செல்வம் , மாவட்ட குருதி பரிமாற்றுக்குழும அலுவலர் டாக்டர். குமார் , இரத்த மைய மருத்துவ அலுவலர்கள், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகின் மாவட்ட மேற்பார்வையாளர் கதிரவன் மற்றும் தன்னார்வ ரத்த கொடையாளர்கள் கலந்து கொண்டனர்.

    ×