search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் கொடியேற்று விழா

    • பெரியநாயகி அம்மன் சன்னதியில் விமர்சியாக நடைபெற்றது.
    • மங்கள வாத்தியத்துடன் வேத மந்திரம் முழங்க கொடியேற்று விழா நடைபெற்றது.

    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரி ப்புலியூரில் பிரசித்தி பெற்ற பாடலீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் தொடர்ந்து வருடந்தோறும் ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு பெரியநாயகி அம்மன் சன்னதியில் 10 நாட்கள் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெறும். இந்த நிலையில் இன்று 13-ந் தேதி (வியாழக்கிழமை) ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு கொடியேற்று விழா பெரியநாயகி அம்மன் சன்னதியில் விமர்சியாக நடைபெற்றது .இதனை முன்னிட்டு காலையில் பாடலீஸ்வரர் மற்றும் பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் மங்கள வாத்தியத்துடன் வேத மந்திரம் முழங்க கொடியேற்று விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இதனை தொடர்ந்து தினந்தோறும் காலை, மாலை பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாரதனை நடைபெறுகிறது. பின்னர் சாமி வீதி உலா நடைபெற உள்ளது. முக்கிய விழாவான ஆடிப்பூரத் திருவிழா வருகிற ஜூலை 22-ந்தேதி பெரிய நாயகி அம்மன் சன்னதியில் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. அன்று காலை அம்மனுக்கு வாசனை திரவியங்கள் மற்றும் அபிஷேகப் பொருட்கள் கொண்டு மகா அபிஷேகம் நடைபெற்று வளையலணி திருவிழா விமர்சையாக நடைபெற உள்ளது. அன்றைய தினம் அம்மனுக்கு மாங்கல்ய பொருள்களான மஞ்சள், மஞ்சள் கயிறு, வளையல் குங்குமம் உள்ளிட்டவை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். விழாவி ற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சிவா மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர். பூஜைக்கான ஏற்பாடுகளை நாகராஜ் குருக்கள் தலைமையில் ராகேஷ் குருக்கள் உள்ளிட்ட பலர் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×